சைனிஸ் பிரிஞ்சி சூழல் நட்பு மரம் |
சைனிஸ் பிரிஞ்சி மரம், ஆசிய நாடுகளுக்கு சொந்தமான
மரம், பிரபலமான அழகு மரம், முழு சூரிய வெளிச்சத்தில் முழுசாய்
பூக்கும் மரம், கவாத்து தேவைப்படாத எளிமையான மரம், காற்று மாசுவினை கட்டுப்படுத்தும்
சூழல் நட்பு மரம், சுமார் அரை டஜன் நோய்களை குணப்படுத்த உதவும்
மூலிகை மரம்,
தமிழ்ப்பெயர்: சைனீஸ் பிரிஞ்சி மரம்,
ஜேப்பனீஸ் பிரிஞ்சி மரம் (CHINESE FRINGE TREE, JAPANESE FRINGE TREE)
பொதுப்பெயர்: சைனீஸ் பிரிஞ்சி மரம்
(CHINESE FRINGE TREE)
தாவரவியல் பெயர்: சியோனேந்தஸ் ரெட்யூசஸ் ;(CHIONANTHUS
RETUSUS)
தாயகம்: சைனா,
ஐப்பான், கொரியா, டைவான்
தாவரக்குடும்பம்: ஒலியேசி (OLEACEAE)
தாவரவியல் பெயர்: சியோனேந்தஸ் ரெட்யூசஸ் (CHIONANTHUS RETUSUS)
தாயகம்: சைனா, ஜப்பான்,
கொரியா, டைவான் (CHINA, JAPAN, KOREA, TIWAN)
தாவரக்குடும்பம்: ஓலியேசி (OLEACEAE)
சைனீஸ் பிரிஞ்சி மரம் முழுக்க
ஆசிய நாடுகளுக்கு சொந்தமான மரம், சைனா ஜப்பான்,
கொரியா, டைவான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மரம்.
நோய்களை குணப்படுத்தலாம்
இதன் பட்டைச் சாறு மற்றும் வேர்களைப் பயன்படுத்தி, காய்ச்சல், மஞ்சள் காமாலை, பித்தப்பையில் ஏற்படும் கட்டிகள்,
ஹெப்படைட்டிஸ், ஒற்றைத் தலைவலி, மலேரியா காய்ச்சல், மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள்,
மற்றும் ஈரல் சம்மந்தமான
நோய்களையும் குணப்படுத்த முடியும் என்கிறார்கள்.
அமெரிக்காவின் அழகுமரம்.
சைனிஸ் பிரிஞ்சி மரம் ஒரு பிரலமான அழகு மரம். செடியாகவும் இல்லாமல் பெரிய மரமாகவும் இல்லாதது. ஒரு அழகு மரத்திற்கான
எல்லா பண்புகளையும் பெற்ற மரம்.
இந்த மரத்தின் சிறப்பு இதன் பூக்கள்,
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வீடுகளிலும், பொது
இடங்களிலும் அழகு மரமாக வளர்க்கிறார்கள்.
நடுத்தரமான சிறிய மரங்கள்
சைனிஸ் பிரிஞ்சி மரங்கள் சிறியவை, அல்லது நடுத்தரமானவை. நல்ல சூழலில் இருபது மீட்டர் உயரம் கூட வளரும்.
இதன் இலைகள்> தனி இலைகள் 3 முதல் 12 செ.மீ நீளம் இருக்கும். அதிகபட்சமாக 5 செ.மீ அகலம் இருக்கும்.
பூக்கள் கொத்தாகப் பூக்கும்.
பூங்கொத்துக்கள் 3 முதல் 12 செ.மீ நீளம் வரை இருக்கும்,
பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
மார்ச் முதல் ஜூPன் வரையான நான்கு மாதங்களில் பூக்கின்றன. ஜூPன் முதல் நவம்பர் வரையான ஆறு மாதங்களில் காய்த்து கனிகளாகின்றன.
இலை உதிர்வில் கவர்ச்சி
வட அமெரிக்காவில் அழகுமரம் என்றால், பெரும்பாலான மரங்களின் இலைகள் கவர்ச்சிகரமாக இருக்கும்.
சில மரங்களில் பூக்கள் கவர்ச்சிகரமாக இருக்கும். சில, பல அடிமரங்களை உடைய மரமாக (MULTI-STEMMED) வளரும்.
மான்களின் அல்வா
பல மரங்களில்,
அதன் பட்டைகளே அழகாக இருக்கும். இந்த மரத்தின் இலைகள், இலை உதிரும்
பருவத்தில் அழகான மஞ்சள் நிறமாக மாறும்.
மற்ற பருவங்களில் பளிச்சென்ற பச்சை நிறமாக இருக்கும்.
இலைகளின் அடிப்புறம்,
வெளிர் பச்சை நிறமாக இருக்கும். இதன் இலைகள் மான்களுக்கு
அல்வா மாதிரி.
ஆண்பெண் பூக்கள்
பூக்கள் நுனிக்கிளைகளில் பூக்கும்.
அவை கொத்தாக பூக்கும். வெண்மை
நிறத்தில் பூக்கும். துளிர்விடும்
பருவத்தில் பூக்கும். கொஞ்சம் தாமதமாகப்
பூக்கும்.
ஆண் பெண் பூக்கள் தனித்தனியானவை.
ஆண் பூக்கள் கொஞ்சம் பெரியவை.
மெலிதான வாசம் வீசும். இருபால்
பூக்களும் இருக்கும். ஆண் பெண் மரங்கள் இரண்டும் தனித்தனி.
கருநீலப் பழங்கள்
மரத்தின் பழங்கள் கருநீல நிறமாக இருக்கும். கோடை காலத்தில் பழுக்கும். இலைகள் காட்டுயிர்களுக்கு உணவாகும். பறவைகள் பழங்களை விரும்பி சாப்பிடும். இதர வன உயிர்களும் சாப்பிடும்.
பனிக்கட்டி நிறமான பூக்கள்
இதன் தாவரவியல் பெயர் சியோனேந்தஸ் ரெட்யூசஸ் (CHIONANTHUS RETUSUS), இதில் “சியோ”
என்றால் கிரேக்க மொழியில் பனிக்கட்டி (CHIO)> ஆந்தோஸ் (ANTHOS) என்றால் பூக்கள்.
இதன் பூக்களைப் பார்க்க பனிக்கட்டி போலவே தெரியும். முழுமையாகப் பூத்திருக்கும் சமயம் அத்தனை அழகாய் அம்சமாய்> அற்புதமாய் இருக்கும்.
எங்கும் நடலாம்
அழகுபடுத்த நினைக்கும் அத்தனை இடங்களிலும் நடலாம். வீட்டுத் தோட்டங்கள், பொது
அலுவலகங்கள், பேக்டரிகள்,
தொழிலகங்கள், புல்தரைகள்> பூங்காக்கள், ஒடைக்கரைகள், ஏரிக்கரைகள் என அனைத்து இடங்களிலும் நடலாம்.
வறட்சியைத் தாங்காது
சுமாரான ஈரப்பசை உள்ள மண்வகைகள்> வடிகால் வசதி உள்ள மண்கண்டம்> ஒரளவு நிழலாக உள்ள இடங்கள்> நாள் முழுவதும் வெயிலும், வெளிச்சமும் உள்ள பகுதிகள், எங்கும் நன்கு வளரும்.
நிறைய சூரிய வெளிச்சம் கிடைக்கும் பகுதிகளில் நிறைய பூக்கும். ஆனால் ஆழமான மண்கண்டம், நல்ல ஈரப்பசை, ஊட்டச்சத்துக்கள்
அடங்கிய அமிலத்தன்மை உடைய நிலப்பகுதிகள், மிகவும் பொருத்தமான இடங்கள். தொடர்ந்து நிலவும் வறட்சியை இது தாங்காது.
கவாத்து தேவைப்படாது
இந்த மரத்திற்கு அதிகமான பராமரிப்பு வேலைகள் தேவைப்படாது. முக்கியமாக தேவைப்படும் கவாத்து (PRUNING) இதற்கு தேவைப்படாது. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுவைத் தாங்கி வளரும் தன்மையுடையது.
அமெரிக்க
மரம்
“சியோனேந்தஸ்”
மரவகையில் அமெரிக்காவிற்கு சொந்தமான ஒரு மரமும்
உள்ளது. அந்த மரத்தின் தாவரவியல் பெயர், சியோனேந்தஸ்
விர்ஜீPனிகஸ் (CHIONANTHUS
VIRGINICUS) இந்த மரத்தை விட எல்லா வகையிலும்
மேம்பட்டதாக உள்ளது, இந்த சீனமரம். அதனால்தான் வட அமெரிக்கா முழுவதும் இந்த சைனீஸ் பிரிஞ்சி மரத்தை அழகுமரமாக பயன்படுத்துகிறார்கள்.
சும்மா ஆடுமா அமெரிக்கா
குடுமி ?
FOR
FURTHER READING
WWW.EN.WIKIPEDIA.ORG / CHIONANTHUS RETUSUS
WWW.EFLORA.ORG/FLORA OF CHINA - CHIONANTHUS RETUSUS.
WWW.MISSOURI BOTANICAL GARDEN.ORG / CHIONANTHUS
RETUSUS.
WWW.PLANTS.CES.NCSU.EDU./ CHIONANTHUS
RETUSUS
WWW.GARDENIA.NET / CHIONANTHUS RETUSUS
A REQUEST
I LOVE TO
SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment