Monday, June 19, 2023

ENDANGERED TREE SPECIES MOUNTAIN PERSIMON 49. அருகிவரும் மரவகை வக்கணி

  

அருகிவரும் மரவகை
வக்கணி

வக்கணி வெப்ப மண்டலத்திற்குரிய மரம், அழிந்துபோன வப்பகுதிகளில் மீண்டும் வனங்களை உருவாக்க ஏற்றது, சர்வதேச அளவில் கட்டை மரமாகவும், மூலிகை மரமாகவும் அறிமுகமாகி உள்ளது, அழிந்துவிடும் மரவகை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய மரம்.

தமிழ்ப் பெயர்கள்: வக்கணி, க்கநாட்டான் (VAKKANI, VAKKANATTAN)

பொதுப் பெயர்: கர்ஐன் (GURJAN)

தாவரவியல் பெயர்: டிப்டிரோகார்பஸ் அலேட்டஸ் (DIPTEROCARPUS ALATUS)

தாவரக் குடும்பமம் பெயர்: டிப்டிரோகார்பேசி (DIPTEROCARPACEAE)

தாயகம்: இந்தியா

ஆங்கிலம்: மவுண்டெய்ன் பெர்சிமான் (MOUNTAIN PERSIMON)

வக்கணி, வெப்ப மண்டலத்திற்குரியது.  அடர்ந்த காடுகளில் இருக்கும் பசுமை மாறாத மரம்.  அழிந்துபோன வப்பகுதிகளில் மீண்டும் வனங்களை உருவாக்க ஏற்றது.  ஆற்றங்கரைகளில் அழகாய் வளரும். பெட்டிகள் செய்ய ஏற்ற மரம். 

மரங்களை ஒட்டுவதற்கு, படகுகளில் தேய்மானத்தை ஓட்டைகளை சரிசெய்ய, மருந்துகள் தயாரிக்க, பிசின் தரும்.  மூட்டு வலி உட்பட பல் நோய்களைக் கட்டுப்படுத்தும். மருத்துவக்குணம் மிக்க பட்டைகள் தரும் மரம், அழிந்துவிடும் மரவகை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய மரம்.

தாயகம் மற்றும் பரவியிருக்கும் இடங்கள்

இந்தியா உட்பட பங்களாதேஷ், கம்போடியா, மியான்மர், ஸ்ரீலங்கா,,தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆகிய நாடுகளை தாயகமாகக் கொண்டது வக்கணி மரம்.  இந்தியாவில் அத்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் மேற்கு வங்காளத்தில் இந்த மரங்கள் வளர்ந்துள்ளன.

தற்போது அழிந்துவரும் மரவகையாக (ENDANGERED TREE SPECIES) அறிவிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச அளவில் கட்டை மரமாகவும்> (TIMBER WOOD) மூலிகை மரமாகவும் அறிமுகமாகி உள்ளது இந்த மரம். கடந்த 300 ஆண்டுகளில் 30 %  குறைந்துள்ளது என கண்டுபிடித்துள்ளார்கள். 

நடுத்தரமான கடின கட்டை தரும்   

வணிக ரீதியில் வக்கணி ஒரு கட்டை மரம்.  நடுத்தரமான தரம் உடைய கடின மரம்.  இந்த மரத்தின் வாணிபப் பெயர் கெருங் (KERUNG).  இதன் கட்டைகளை கட்டுமான வேலைகள், ஒட்டுப்பலகைகள், வாட்டர் புரூப் கூடைகள் (WATER PROOF BASKETS) மற்றும் படகுகள் செய்யப் பயனாகிறது.

மருந்து தரும் பிசின் (MEDICINAL USES OF RESINS)   

இந்த மரத்திலிருந்து எடுக்கும் பிசின் பலவகைகளில் உபயோகமாகிறது.  பெயிண்ட், பாலிஷ், அரக்கு, பிரிண்டிங் இங்க் மற்றும் மருந்துகள் தயாரிக்கிறார்கள்.  அத்துடன் படகுகளில் ஏற்படும் சந்துகள் மற்றும் ஒட்டைகளை அடைப்பதற்கும் இதன் பிசின் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

கட்டை மரமாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மருத்துவ மரமும் கூட.  இதன் பட்டைகள் மற்றும் பிசின் பாரம்பரிய மருத்துவதில்  பயன்படுத்தகிறார்கள்.  இதன் பட்டைச் சாற்றை டானிக் காக சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலியை குணப்படுத்த முடியும்.  இதன் பிசினில் தயாரிக்கும் மருத்தினை மேகவெட்டை நோயினைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

விவசாயத்திற்காக வெட்டப்படும் மரங்கள் (DEFORESTITION FOR AGRICULTURE)

வக்கணி மரங்கள் பெருமளவு வெட்டப்படுவது விவசாயம் செய்வதற்குத்தான் என்கிறார்கள்.  காடுகளாக இருக்கும் மரங்களை வெட்டி அவற்றை கழனிகளாக மாற்றுகிறார்கள்.  அதுபோக வணிகரீதியில் பிசின், மற்றும் கட்டை மரத்திற்காகவும் (FOR RESIN & TIMBER)  இந்த மரங்கள் அதிகம் வெட்டப்படுகின்றன.   

பேறு காலத்திற்குப் பின்னால் வரும் காய்ச்சல், நரம்புவலி, மூட்டுவலி, ஈரல் சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தவும் வக்கணியில் மருந்துகள் தயாரிக்கிறார்கள்.

வக்கணி மரத்தின் பிற மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: வக்கணி, வக்க நாட்டான் (VAKKANI, VANGA NATTAN)

இந்தி: கர்ஜன் (GURJAN)

கன்னடா: எண்ணமரா (ENNE MARA)

சமஸ்கிருதம்:அஸ்வகர்னா (ASWAKARNA)

பிரென்ச்: கெருங், குருவென் (KERUNG, KURUVEN)

லாவோஸ்: மாய் யாங் (MOY YAANG)

தாய்லாந்து: யாங் நா (YAANG)

வியட்நாம்: டாவ் நூக் (DAAV NUK)

பரவியிருக்கும் இடங்கள்

தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், ஆகிய இடங்களில் உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் பசுமை மாறாக் காடுகள் மற்றும் கலவையாகக் காணப்படும் அடர்த்தியான காடுகளிலும் இந்த மரங்கள் பரவலாக வளர்ந்துள்ளன.     

விதைகள் மூலம் சுலபமாக கன்றுகளை உருவாக்கலாம்.  அவை 4 முதல் 7 நாட்களுக்குள் முளைக்கும்.  விதைகள் முளைப்புத்திறனை சீக்கிரமாக இழந்துவிடும்.  மரங்களை வெட்டி விட்டபின் அதிலிருந்து முளைக்கும் போத்துக்களை வெட்டி நடலாம்.

பரவலான மண் வகைகளில் வளரும்      

45 முதல் 55 மீட்டர் வரை உயரமாக வளரும் மரம்.  வண்டல்.  ஓடைக்கரைகள், ஆற்றங்கரைகள், பள்ளத்தாக்குகள், துப்பு நிலங்கள்> ஆகியவை இதற்கு ஏற்ற சூழல்கள்.  இ மரங்களாக இருக்கும்போது அடர்த்தியான நிழலைக்கூட இது பல ஆண்டுகள் தாங்கி வளரும்.    

ணற்சாரியான, கடினத்தன்மை குறைந்தமண், நடுத்தரமான கடினத்தன்மை கொண்ட இருமண்பாடான மண், கடினத்தன்மை கொண்ட களிமண்> போன்றவற்றிலும், பரவலான மண்வகைகளில் வளரும்.  ஆனால் வடிகால் வசதி வேண்டும்.   

வக்கணி மரம், வியாபார ரீதியாக அப்பிடாங் (APIDONG) என்ற பெயரிலும்> சியன் மகோகனி (ASIAN MAHAGONY) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.  ஆனால் இதன மரம் மகோகனி மரத்தைவிட கொஞ்சம் தரம் கம்மிதான்.  இதற்கு முக்கியக் காரணம் இந்த மரத்தில் இருக்கும் அதிகப்படியான ரெசின் எனும் பிசின்.

வக்கணி மரத்திற்கு நல்ல வடிகால் வசதி உள்ள மண் வேண்டும்.  நெருப்பு மற்றம் காற்றினைத் தாங்காது.  ஆனால் வெள்ளத்தைத் தாங்கும்.

இந்த மரங்கள்> மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் விதைப் பிடிக்கும்.  விதைகள் காற்றின் மூலமாகப் பரப்பப்படுகிறது.

FOR FURTHER READING

WWW.INNOVAREACADEMICS.IN – “INTERNATIONAL JOURNAL OF PHARMACY AND PHARMACEUTICAL SCIENCES.

WWW.TUCNREDLIST.ORG –“DIPTERO CARPUS ALATUS”

WWW.EN.WIKIPEDIA.ORG –“DTPTERO CARPUS ALATUS”

WWW.WOOD.DATABASE.COM –“THE WOOD DATA BASE” – KERUNG –

WWW.ECOCROP.FAO/ “DIPTEROCARPUS ALATUS”

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

                   

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...