Monday, June 19, 2023

ENDANGERED TREE SPECIES CEYLON CHERRY 48. அழிந்துவரும் மரவகை முட்டைநாரி கோங்கு

அழிந்துவரும் மரவகை
முட்டைநாரி கோங்கு


முட்டைநாரி கோங்கு,
 தமிழ்நாட்டில், ஏறத்தாழ எட்டொன்பது  மாவட்டங்களிலும்  நமது வடகிழக்கு மாநிலங்களிலும் பிரபலமாக உள்ள மரம், இந்த மரம் குறித்தத் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை.  ஆனால் இந்த மரம் அழிந்து வரும் மரவகை என ஸ்ரீலங்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது, மேஜை நாற்காலி வகையான மரச்சாமான்கள்>,பெட்டிகள், சட்டங்கள் தயாரிப்பு மற்றும் விறகாகவும் அதிக அளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.   

தமிழ்ப் பெயர்கள்: ஆட்டன்ரி கோங்கு, முட்டைநாரி கோங்கு, பாலன்கச்சி (ATTANRIKONGU, MUTTAINARI KONGU, PALANKACCHI)

பொதுப் பெயர்கள்: சிலோன் செர்ரி (CEYLON CHERRY)

தாவரவியல் பெயர்: புரூனஸ் செய்லானிகா (PRUNUS CEYLANICA)

தாவரக்குடும்பம் பெயர்: ரோசேசி (ROSACEAE)

பல மொழிப் பெயர்கள்:

மலையாளம்: அட்டநாரி போங்கு, இரட்டாணி, முட்டக்கோன், நாய்கம்பகம்,நாய்ம்பகம், ரெட்டியான் (ATTANRIPONGU, IRATTANI, MUTTAKKON, NAIKAMBAGAM, NAITHAMBAGAM, RETTIYAN )

மராத்தி: டாகா, கவுலா, கோகல் (DHAKA, KAULA, KOGAL)

மிசோ: ராஃபிர், ரூஃபிர் (RAHPHIR, RUPHIR)

பரவியிருக்கும் இடங்கள்      

தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரிசேலம்,தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.  கேரளாவில் இடுக்கி, கண்ணூர், ,காசர்கோடு, கொல்லம்,  பாக்காடு, திருவனந்தபுரம்> திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. 

கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களிலும் இந்த மரம் பரவலாகக் காணப்படுகிறது.  அசாம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த மரங்கள் பிரபலமாக உள்ளன  என்று சொல்லுகிறார்கள்.

இந்தவகை மரங்கள்: (PRUNUS FAMILY TREES)    

மரங்களையும், சிறு மரங்களையும் உடையது புரூனஸ் என்னும் தாவரக் குடும்பம்.  இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தெரிந்த பழவகை மரங்கள்.  செர்ரி, பிளம், பீச், நெக்டரின், ஆப்ரிகாட்,  மற்றும் வாதாம்கொட்டை எல்லாமே இந்த புரூனஸ் வகையறாதான்.  இந்தத் தாவரக் குழுவில் சுமார் 430 வகையான தாவரவகைகள் உள்ளன.

மரங்களும் பட்டைகளும்

முட்டைநாரி கோங்கு மரங்கள் பெரிய மரங்களாக வளரும்.  அதிகபட்ச உயரமாக 70 முதல் 80 அடி உயரம்வரை வளரும்;.  மரத்தின் பட்டைகள் சாம்பல் நிறமாக இருக்கும்.  பட்டைகள் தானாக பெரும் செதில்களாக உறிந்து உதிரும்.  உட்புறப் பட்டை பாதாம் கொட்டை மாதிரி வாசம் வீசும். 

அழிந்து வரும் மரவகை    

இந்த மரம் குறித்தத் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை.  ஆனால் இந்த மரம் அழிந்து வரும் மரவகை என ஸ்ரீலங்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனால் இது நிச்சயமாக ஒரு பயனுள்ள மரமாக இருக்க வேண்டும்.  அதிகமான உபயோகத்தினால் இந்த மரம் விரைவாக அழிக்கப் பட்டிருக்கும்.   

இதன் மரக்கட்டைகள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக இருக்கும்.  சுமாரான தரம் உடைய மரம்தான் என்கிறார்கள்.  ஆனால் அதிக அளவில் இவற்றை மேஜை நாற்காலி வகையான மரச்சாமான்கள், பெட்டிகள், சட்டங்கள் தயாரிப்பு மற்றும் விறகாகவும் அதிக அளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வேண்டுகோள்

இதுபோன்ற அதிக அறிமுகம் இல்லாத மரங்களை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளுகிறேன். அப்போதுதான் உபயோகமான தகவல் நிறைய கிடைக்கும்.

FOR FURTHER READING

WWW.RESEARCHGATE.NET / PRUNUS CEYLAMCA: AN ENDANGERED SPECIES COLLECTED AFTER EIGHT DECODES FROM WEST BENGAL.

WWW.INDIABIODIVERSITY.ORG  / “PRUNUS CEYLANICA”

WWW.FLOWERSOFINDIA.NET / PRUNUS CEYLAMCA

WWW.POWO.SCIENCE.KEW.ORG / PRUNUS CEYLAMCA

WWW.SITES.GOOGLE.COM / PRUNUS CEYLAMCA

WWW.FLICKR.COM / PRUNUS CEYLAMCA (330 WORDS)

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...