Monday, June 19, 2023

ELEPHANT APPLE UVA TREE 41. ஆனை ஆப்பிள் உவா மரம்

ஆனை ஆப்பிள் உவா மரம்


உவா மரத்தின் பழங்கள் என்றால் யானைகளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி, அதனால்தான் அவா (அறிவியல் வாத்தியார்கள்) ‘ஆனைஆப்பிள்என்று பெயர் வைத்திருக்கிறார்கள், யானைகள் மட்டுமல்ல காட்டு விலங்குகள் அத்தனையும்  சாப்பிடலாம்,  நாம் இந்த மரத்தை  இதன் அழகான வாசமான பூக்களுக்காக வளர்க்கலாம், பழங்களில், பூக்களில், பட்டைகளில், இலைகளில் செய்யும் மருந்துகளுக்காக வளர்க்கலாம், சோப்புகள் செய்ய வளர்க்கலாம், அழகு சாதனப் பொருட்கள் செய்ய வளர்க்கலாம், இதன் கட்டைகளை வீடுகள் கட்ட வளர்க்கலாம், மொத்தத்தில் இது ஒரு பலநோக்கு மரம்.    

தமிழ்: உவா (UVA)

பொதுப் பெயர்: எலிபெண்ட் ஆப்பிள் (ELEPHANT APPLE)

தாவரவியல் பெயர்: டில்லினியா இண்டிகா (DILLENIA INDICA)

தாவரக் குடும்பம் பெயர்: டில்லனியேசி (DILLENIACEAE)

தாயகம்: இந்தியா

பிறமொழிப் பெயர்கள்

இந்தி: சால்டா (CHALTA)

பெங்காலி: சால்டா (CHALTA)

மராத்தி: கர்மால் (KARMOL)

மலையாளம்: சில்டா (CHILTA)

தெலுங்கு: உவா (UVA)

யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது      

உவா மரத்துப் பழங்களின் ஒடுகள் கடினமானவை.  புதிய பழங்களை சுலபமாக சாப்பிட வேண்டும் என்றால் அது யானை போன்ற பெரிய விலங்குகளால்தான் சாப்பிட முடியும்.  பழங்கள்   நன்கு கனிந்தால் குரங்குகள், ணில்கள், எலிகள் போன்றவை கடித்து  சாப்பிடும். 

மேற்கு வங்காளத்தில் இருக்கும் புலிகள் சரணாலயத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அதற்குக் காரணம் உவா மரத்தின் பழங்கள்தான் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்.

தாயகம் மற்றும் பரவியிருக்கும் நாடுகள்

தென்கிழக்கு ஆசியாவில், இந்தியா, பங்ளாதேஷ், ஸ்ரீலங்கா, சைனாவின் தென்மேற்குப் பகுதி, தாய்லாந்து, மலேஷியா மற்றும் இந்தோனேசியா ஆகியநாடுகளைச் சொந்த மண்ணாகக் கொண்டது உவா மரம்.

இந்திய மரம்      

இந்த மரம் சியாவில் பலநாடுகளில் பரவியுள்ளன. சீனா, ஸ்ரீலங்காநேப்பாளம், பூட்டான், மியான்மர், தாய்லாந்துலாவோஸ்வியட்நாம, மலேசியா,  இந்தோனேசியா,  மற்றும் பிலிப்பைன்ஸ்.

மனதை மயக்கும் அழகான நறுமம் மிக்க பூக்களுக்காக இந்த மரங்களை> சொந்த மற்றும் பொது இடங்களிலும் உவா மரத்தை வளர்க்கிறார்கள்.  ஆனால் ருசியான பழங்கள்> இதில் தயாரிக்கும் மருந்துகள், சோப்புகள் போன்ற அழகு சாதனப் பொருட்கள்> தயாரிக்க உதவுகின்றன. 

பெரிய பூக்கள்

உவா பசுமை மாறாத நடுத்தரமான மரம்.  அதிகபட்சமாக 30 மீட்டர் வரை உயரமாக வளரும்.  15 முதல் 20 செ.மீ. குறுக்களவு இருக்குமாறு பெரிய பூக்களாகப் பூக்கும்> இதழ்கள் வெண்மையாகவும்> மஞ்சள்நிற மகந்தங்களையும் உடையதாக இருக்கும்.

தேக்கு மரக்காடுகளில் உவா மரங்கள்

வெப்ப மண்டலப் பகுதிகளில் எல்லாம் இந்த மரம் சகஐமாக வளர்ந்துள்ளது.  ஜாவாவில் தேக்குமரக் காடுகளின் ஊடாக உவா மரங்கள் நிரம்ப காணப்படுகின்றன.

பழங்கள் வாசமாக இருக்கும்.  இவற்றை பச்சையாகவும்> சமைத்தும் சாப்பிடலாம்.  பழங்களை பல்வேறு வனவிலங்குகள் விரும்பி சாப்பிட்டலும் யானைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.  அதனால் தான் இதனை ஆங்கிலத்தில் எலி பெண்ட் ஆப்பிள் என்கிறார்கள். 

உவா பழங்களைச் சாப்பிடும் யானைகள்

இந்த பழங்களைச் சாப்பிடும் யானைகள் மற்றும் இதர பிராணிகள்தான் தங்கள் கழிவின் மூலம் இந்த மரங்களை பல இடங்களிலும் பரப்புகின்றன.  இது புளிப்புச் சுவை உள்ள பழம் என்றாலும்> அசப்பில் ஆப்பிள் காய்போல இருக்கும். அதாவது கனியாத காய்போல இருக்கும்.

இந்தப் பழங்களை காய்றிபோல சமைக்கிறார்கள்.  புளிக்க வைத்து வினிகர்  யார் செய்கிறார்கள்.  பிரிசர்வேட்டிவ்  சேர்த்து இதன் பழங்களை சேமித்து வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.

மருந்துகள் தயாரிப்பு

உவா பழங்களை உடலுக்கு உரமூட்டும் டானிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.  இது நல்ல மலமிளக்கிக்கான மருந்தாகவும் உபயோகமாகிறது.  இதன் பழத்தசையை சக்கரையுடன் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் இருமலைக் கட்டுப்படுத்;தலாம். 

உவா மரத்தின் பட்டைகள் மற்றும் இலைகள்> மருந்துகள் தயாரிப்பதில் துவர்ப்பியா (ASTRINSENT) பயனாகிறது.  இதன் பட்டைச் சாற்றுடன் நீர் சேர்த்துக் கொப்பளிக்க வாயில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருவதைக் கட்டுப்படுத்தலாம்.

அழகு சாதனப் பொருட்கள்

இதன் பழங்களைத் தண்ணீரில் போட்டு உரசி சோப்பு தயாரிக்கலாம்.  இதனை தலைமுடியில் போட்டு ஷேம்பு மற்றும் சீயக்காய் மாதிரி தோய்த்து சுத்தப்படுத்தலாம்.  அது மட்டுமல்ல முடி உதிர்வதைத் தடுத்து சொட்டை ஆவதைத் தடுக்கலாம்.

நெருப்பினால் பாதிக்காத செங்கற்கள்

உவாவின் உலர்ந்த இலைகளைப் பயன்படுத்தி தந்தத்தால் செய்த பொருட்களை பளபளப்பாக்கலாம்.  இந்த மரங்களின் சாம்பலை மண் கலவையுடன் சேர்த்து செங்கல் தயாரிக்கிறார்கள்.  அந்த செங்கற்கள் நெருப்பினால் பாதிக்காது.

துப்பாக்கிக் கட்டைகள்

இந்த மரத்தின் மேற்புறக் கட்டைகள் (SAP WOOD) வெளிரான நிறத்தில் இருக்கும்.  கட்டைகள் கொஞ்சம் மிருதுவாக இருக்கும்.  இவற்றைக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள்.

இதன் கட்டைகள் ஒரளவு வீடுகள் கட்ட பயன்படுத்துகிறார்கள்.  துப்பாக்கிக் கட்டைகள் (GUN STOCKS) செய்கிறார்கள்.  நடுத்தரமான அளவு உறுதியான இந்த மரங்களை தண்ணீரிலேயே அமிழ்த்தி வைத்திருந்தால் கூட மூன்று ஆண்டுகள் வரை முழுசாய் உழைக்கும்.

வடிகால் வசதி போதும்

வடிகால் வசதி உள்ள மண் இதற்கு ஏற்றது.  இருமண்பாடான மணல்சாரி நிலத்திலும் வளரும். கொஞ்சம் அமிலத்தன்மை உடைய.  ஊட்டம் நிறைந்த மண் இதற்குப் பிடித்தமானது.  கார அமிலநிலை 5.5 முதல் 7.00 வரை உள்ள மண்வகைகள் இதற்கு மிகவும் பொருத்தமானவை. 

காமில நிலை 8 வரை இருந்தால் கூட தாங்கி வளரும்.  மிதமான வெப்பமண்டலப் பகுதிகளில் மற்றும் கடல்மட்டத்திலிருந்து.  1100 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் கூட நன்றாக வளரும்.  இந்த மரங்களுக்கு பளிச் சென்ற சூரிய வெளிச்சம் வேண்டும்.  ஆனால் இளஞ்செடிகள் அடர்த்தியான நிழலைக்கூட தாங்கி வளரும்.

முதிராத இளம் போத்துக்கள்

புதிய மரங்களை உருவாக்க அதிகம் தேவைப்படுபவை இதன் விதைகள் தான்.  முதிராத இளம் போத்துக்களை (SEMI – RIPE - CUTTINGS) வெட்டியும் நடலாம்.

உவா மரத்தின் தாவரவியல் பெயர் டில்லெனியா இண்டிகா.  இந்த டில்லனியா பிரிவில் சுமார் 100 தாவர வகைகள் உள்ளன.  இவற்றில் எட்டு தாவர வகைகள் மட்டுமே நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டவை என ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பயன்கள்

பழங்குடிகள் மிசோரம் மாநிலத்தில்,  மஞ்சள்காமாலை நோயை குணப்படுத்தவும், அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் சக்கரை நோயை,  குணப்படுத்தவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். 

இந்தப் பழத்தில் இருக்கும் வழுவழுப்பான திரவத்தை, தலையில் பொடுகு வராமல் இருக்க உபயோகப்படுத்துகிறார்கள்.  சில பழங்குடிகள், இதன் பூக்கஷாயத்தை வயிற்றுக் கடுப்பு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

கொசுறு

மிசோரம் மாநிலத்தில் உவா மரத்தின்  இலைகள். பட்டைகள். மற்றும் பழங்களிலிருந்து எடுக்கும் சாற்றினை ஒன்றாகக் கலந்து, புற்று நோயை குணப்படுத்த மருந்தாகக் தருகிறார்கள்.

FOR FURTHER READING

WWW.TANDFONLINE.COM – DILLENIA SPECIES – A REVIEW OF THE TRADITIONAL USES, ACTIVE CONSTITUENTS AND PHARMACOLOGICOL PROPERTIES FROM THE CLINICAL STUDIES”

WWW.EN.M.WIKIPEDIA.ORG. ‘DILLENIA INDICA’

WWW.TROPICAL.THEFERNS. INFO / – ‘DILLENIA INDICA’ – USEFUL TROPICAL PLANTS.

WWW.FLOWERSOF INDIA.NET / ELEPHANT APPLE - ‘DILLENIA INDICA’

WWW.INDIABIODIVERSITY.ORG. / DILLENIA INDIA L./SPECIES

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...