Tuesday, June 20, 2023

EASTERN GHAT’S FRUIT TREE ALPHONSEA 54. கருக்கரம்பை கிழக்கு தொடர்ச்சி மலைப் பழ மரம்

மலைப்பழ மரம் கருக்கரம்பை


தமிழில்கருக்கரம்பைஎன்றால், ஆங்கிலத்தில், அல்போன்சியா முரட்டுப் பழமரம் என்று அா்த்தம். தென்னிந்தியாவில், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கு சொந்தமான மரம். ஆண்டியாக்சிடெண்டுகள் நிறைந்தது. இந்த பழங்கள், குறிப்பாக மலையாளி பழங்குடிகளின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது.

பொதுப்பெயர்: அல்போன்சோ ஃபுரூட் ட்ரீ (ALPHONSEA FRUIT TREE)

தாவரவியல் பெயர்: அல்போன்சோ ஸ்கெலிரோகார்ப்பா (ALPHONSEA SCLEROCARPA)

தாவரக்குடும்பம்: அன்னோனேசியே (ANNONACEAE)

சீத்தா பழ குடும்பம்

தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவிற்கு சொந்தமானது, சீத்தா பழ குடும்பம்அனோனேசி” (ANNONACEAE) அல்லது  ”சுகா் ஆப்பிள்” (SUGAR APPLE) குடும்பத்தைச் சேர்ந்தது இந்த கருக்கரம்பை மரம்.

வெள்ளி மலை, கல்ராயன் மலை

தமிழ்நாட்டிற்கு சொந்தமான கருக்கரம்பை மரம், கிழக்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளி மலை மற்றும் கல்ராயன் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றனகடல் மட்டத்திலிருந்து 680 முதல் 740 மீட்டா் உயரமான பகுதிகளில் வளரும் மரம்.

ஆண்டி அக்ஸிடெண்ட்டுகள்

கருக்கரம்பை பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள், பற்றிய ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன, இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த பழமரம், பட்டைகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவும் மருந்துகள் பற்றிய முடிவுகள் எடுக்க முடியும் எனத் தெரிகிறது.

கல்ராயன் மலைப்பகுதி மரம்

கருக்கரம்பை ஒரு பிரபலமான மரம் அல்லஆனால் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிற்கு சொந்த மரமாகக் கருதப்படுகிறதுகுறிப்பாக கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கல்ராயன் மலைப் பகுதிக்கு உரிய மரம் இது.

சேலம் மாவட்டத்தின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியையும், விழுப்புரம் மவட்ட்த்தின் மத்திய மற்றும்  கிழக்குப் பகுதியையும், திருவண்ணாமலையின்  வடக்குப்பகுதியின் ஒரு சிறிய பகுதியையும் உள்ளடக்கியது கல்ராயன் மலைப்பகுதி.

கருக்கரம்பை மரத்தினை அழித்துவரும், அருகி வரும் மரமாக (ENDEMIC TREE) தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் அறிவித்துள்ளார்கள்.

மலைவாழ் மக்களின் உணவு முறை

கல்ராயன் மலைப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் வசிக்கும் மலையாளி எனும் பழங்குடி மக்கள், 84 வகையான தாவரங்களை பயன்படுத்துகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தாவரங்களின் இலை, பூ, காய், தண்டு, கனி, விதைகள், கிழங்கு, வேர்கள் ஆகியவற்றை உணவாக மலையாளி மலைவாழ் மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

இந்தியாவின் தாவர வகைகள்

இந்தியாவில் மொத்தம் 12,600 தாவரவகைகள் இருக்கின்றன, இது உலகில் உள்ள மொத்த தாவரங்களில் 8 சதவிகிதம் என கணக்கிட்டுள்ளார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 60 முதல் 70 சதவிகித மக்கள் வனப்பகுதிகளில் வசிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, அந்த மக்கள் தங்கள் அன்றாடத்  தேவைக்கு வனப்பொருட்களைத் தான்  நம்பியிருக்கிறார்கள் என்பது குறிப்படத் தக்கது.

தாவரங்களை நம்பியிருக்கும் மலைவாழ் மக்கள்.

தங்களுக்குத் தேவையான உணவு, வீடுகட்ட தேவைப்படும் உத்தரங்கள், மற்றும் கூரை, வீட்டிற்குத் தேவைப்படும் தட்டுமுட்டுச் சாமான்கள், இதர வீட்டு உபயோகக் கருவிகள், விவசாயக் கருவிகள், கலாச்சார மற்றும் சமயச் சடங்குகள், வீடுகளை அலங்கரிக்க, பேய்பிசாசுகள் போன்ற துஷ்ட ஆவிகளை விரட்ட என்று பல வகைகளில் மரங்கள் மற்றும் இதர தாவரங்களை நம்பியிருக்கிறார்கள் மலைவாழ் மக்கள்.

கருக்கரம்பை சிறிய மரங்கள்

கருக்கரம்பை மரங்கள் 10 முதல் 15 மீட்டா் உயரம் வளரும் சிறுமரங்கள், சாதாரணமாக 6 முதல் 8 மி.மீ. நீளமான காம்பில், ஒன்றின் மேல் ஒன்றாக குறித்த இடைவெளியில் அமைந்த ஈட்டி வடிவ இலைகளை உடையவைகாடுகளில் தாழ்வான தலைப்பகுதியை உடைய மரங்களாக வளரும். .

இருபாலின பூக்கள்

பசுமையும் மஞ்சளும் கலவையான நிறத்தில் அமைந்த இருபாலினத்தில், அமைந்த சிறு காம்புடன் கூடிய அல்லது இலைகளின் எதிர்ப்புறமாக அமைந்த பூங்கொத்துக்களாக (CYMES) மார்ச் முதல் மே மாதம் வரை பூக்கும்.

கருக்கரம்பை பழங்கள்

மஞ்சள் நிறத்தில், 5 முதல் 8 மி.மீ நீளமுள்ள காம்பில், 6 விதைகளையுடைய, 3 முதல் 5 பழங்கள் கொத்தாக காய்க்கும், ஏப்ரல் மாதங்களுக்குப் பிறகு பழங்களாக முதிர்ச்சி அடையும்.

தமிழ்நாடு மற்றும் கேரளா

கேரளாவில், மலப்புரம், மலபார், தமிழ்நாட்டில், கோயம்புத்தூா், தா்மபுரி, திண்டுக்கல், மதுரை நீலகிரி, சேலம், தேனி, திருநெல்வேலி, திருவண்ணமலை, வேலுார் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நிறைய மரங்களைப் பார்க்கலாம்.

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் கருக்கரம்பை

அழகா் மலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, பச்சைமலை, போதமலை, சித்தேரி மலை, சிறுமலை, ஏலகிரி, தா்மபுரி மலை, பிரான் மலை, தீர்த்த மலை, செஞ்சி மலை, மற்றும் ஐவ்வாது மலைகளிலும் இந்த மரங்கள் உள்ளன.

மேற்குத் தொடா்ச்சி மலையில் தெற்கு சகாயத்திரி, திருநெல்வேலி மலைப்பகுதிகள், மற்றும் அகத்தியா் மலைப் பகுதிகளும் இந்த  மரங்கள் பரவியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கருக்கரம்பை

தலக்கோனா மலைகள் உதயகிரி மலைகள், சேஷாசலம் மலைகள், விசாகப் பட்டினம், விஐயநகரம், மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்கள் மற்றும் சா்வதேச அளவில்இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் மியான்மா் பகுதிகளிலும் இந்தமரங்கள் பரவியுள்ளன.

வேண்டுகோள்

மியாவாக்கி சிறுவனம் அமைப்பவா்கள், மரம் நடும் மர ஆா்வலா்கள், தங்கள் பகுதியில் கருக்கரம்பை மரங்கள் இருந்தால், அவற்றை தங்கள் பணிகளில், இந்த மரங்களையும் சோ்த்துக் கொள்ளுமாறு, கேட்டுக் கொள்ளுகிறேன்.

கொசுறு

ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியளர்கள் இது போன்ற பிரபலமாகாத மரங்களை ஆய்வு செய்யும்போது பல புதிய, அரிய பல பயனுள்ள தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

FOR FURTHER READING

WWW.FLORA.PENNISULA –  ALPHONSEA SCLEROCARPA

WWW.FLOWEROFINDIA.NET - ALPHONSEA SCLEROCARPA – HARD – FRUIT ALPHONSEA – WWW.RESEARCHGATE.NET- ETHNOBOTANICAL SURVEY ON WILD EDIBLE PLANTS OF KALRAYAN HILLS, SALEM DISTRICT, TAMIL NADU, INDIA

WWW.INDIABIODIVERSITY.ORG – ALPHONSEA SCLEROCARPA..

WWW.VJPPT.ORG – ANTIOXIDANT  ACTIVITY OF ALPHONSO SCLEROCARPA

WWW.EN.M.WIKIPEDIA.ORG – ALPHONSEA SCLERO CARPA

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...