கிழக்குத் தொடர்ச்சி மலை மரம் மடையன் சாம்பிராணி |
மடையன் சாம்பிராணி ஒரு இருபது மரங்கள் கல்ராயன் மலைப்
பகுதிகளில் இருக்கும் என்கிறார்கள், கிழக்கு தொடர்ச்சி
மலைப் பகுதியில் அருகி வரும் மரம், தேனீக்களும், பறவைகளும் மொய்க்கும் மரம், யார் இதற்கு இந்தப் பெயர்
வைத்தார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள். ! இல்லை என்றால் எனக்கு
மண்டை வெடித்துவிடும். இந்த மரத்தின் தேனும், மகரந்தமும் குறிப்பாக டிரைகோனா இர்ரிடிபென்னிசஸ் எனும் தேனீக்களுக்கு பிடித்தமான
உணவு.
தமிழ்:
கொடபாலை,
மடையன்
சாம்பிராணி, கொலவு (KODA PALAI, MADAYAN SAMBIRANI, KOLAVU)
பொதுப்
பெயர்கள்: மலபார் மகோகணி (MALABAR MAHAGANI)
தாவரவியல் பெயர்: கிஞ்சியோடெண்ட்ரான்
பின்னேட்டம் (KINGEODENDRON PINNATUM)
தாவரக்
குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)
தாயகம்:
இந்தியா
பிற
தாவரவியல் பெயர்கள்:
பிரியோரியா
பின்னோட்டா (PRIRIA PIANATA)
ஹார்ட்விக்கியா
பின்னேட்டா (HARDWIKIA
PINNATA)
மடையன்
சாம்பிராணி மரத்தின் பலமொழிப் பெயர்கள்
கன்னடா:
சவ்
பயிணி, என்னி மரா, என்ன மரா (
CHOU PAINI, ENNE MARA, YENNA
MARA)
மலையாளம்:
கொடப்பலா (KODAPALA)
ஆங்கிலம்:
மலபார்
மகோகனி (MALABAR MAHOGANY)
மலையாளம்:
சுக்கன்னபயின், சுராலி, என்னபயின், கியாவு,
கொடப்பலா, குலவு, மடையன் சம்ரண்ணி,
மலபார்
மகோகனி,
ஷுராலி (CHUKKENNA PAYIN, CHURALI,
ENNAPAYIN, KIYAVU, KODAPALA, KULAVU, MADAYAN SAMRANNI, MALABAR MAHOGANY,
SHURALI)
மடையன் சாம்பிராணி, வேடிக்கையான பெயர்கொண்ட தமிழ்
மரம்,
கிழக்கு தொடர்ச்சி மலைக்கு சொந்தமான மரம், தேனீக்கள்
மற்றும் பறவைகளுக்கு பிடித்தமான மரம், இந்தியாவின்
மிக முக்கியமான மூலிகை மரம், நாம் பாதுகாக்கவேண்டிய முக்கிய மூலிகைகளில்
ஒன்று இது என்கிறார்கள், வனத்துறையின் மூத்த வல்லுநர்கள்
சில மரங்களில்தான்
குருவிகள் அதிகம் கொட்டமடிக்கும், சில மரங்களில் அதிகம் கூடுகட்டும்,
சில பழங்களையும்,
விழுங்கும், சில அதிக பூச்சிளையும், சில தேன்குடிக்க வரும் தேனீக்களையும் சுவாகா செய்யும்
இப்படி
எல்லா காரியங்களுக்கும் இடம் கொடுக்கும் மரம்தான் இந்த மடயன் சாம்பிராணி மரம்..
வாலடிச்
சிவப்பு புல்புல், நீண்டவால் கீச்சாங் குருவி,
நீலவால் தேனி பிடிச்சான், அகண்டவாய் மீன்கொத்தி
ஆகிய பறவைகள் எப்போதும் இந்த மரத்தைச் சுற்றிசுற்றி வரும்.
தமிழில்
எதற்காக இப்படி ஒரு பெயரை வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த பெயர் வைத்ததற்கான பொருத்தமான காரணம்
கண்டிப்பாய் இருக்கும்.
அற்புதமான
மூலிகை மரம்
தமிழில் ‘கொடப்பாலை’என்றும்
அழைக்கப்படுவதால், பண்டைய தமிழகத்தின் பாலை
நிலத்துக்கு உரிய மரம் என்பதும் தெரிகிறது.
மடையன் சாம்பிராணி, இந்தியாவின்
மிக முக்கியமான மூலிகை மரம். அழிந்துவரும் மூலிகை மரங்களில் ஒன்று என இதனை
அறிவித்துள்ளார்கள்.
சமீபத்தில்
கூட வனத்துறை அறுவலர் டாக்டர் மனோஜ்குமார்
சர்க்கார் என்பவர் பொதுக்கூட்டம் ஒன்றில் மடையன் சாம்பிராணி
பாதுகாத்து பராமரிக்க வேண்டிய மரம் என்று பொது மக்களுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
இந்த
மரங்கள் ‘களக்காடு
–
முண்டந்துறை டைகர் ரிசர்வ் வனத்தில்
உள்ளன.
ஆறு மூலிகைகள்
கீழ்கண்ட
ஆறு மூலிகை மரங்களையும், பாதுகாக்க வேண்டிய மரங்கள் மற்றும் தாவரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பூவரசு
- ஹில்டிகார்டியா பாப்புலிபோலியா-
(HILDEGARDIA POPULIFOLIA)
காட்டுக்
கொரண்டி,
காட்டுக்
கொய்யா - யூஐினியா சிங்கம்பாட்டியானா (EUGENIA SINGAMPATTIANA)
காந்தப்பனை,
வரிக்கமுகு, மலைப் பாக்கு மரம்
- பென்டிக்கியா கண்டம்பன்னா (BENTINCKIA CONDAPANNA)
அமிர்த
பழம்
- ஜானகியா
அரயால்பத்ரா, டிகால்பிஸ் அரயால்பத்ரா (JANAKIA ARAYALPATHRA,
DACALEPIS ARAYALPATHRA)
மரஉறி,
அகந்தெல்லி - (MARAURI, AGA NELLI)
- ஆன்டியாரிஸ் டாக்சிகேரியா (ANTIARIS TOXICARIA)
சிறுகுறிஞ்சான்
- (GYMNEMA SYLVESTRE)
கிஞ்சியோ
டெண்ட்ரான் பின்னேட்டம் (KINGEODENDRON PINNATUM)
–மடையன்
சாம்பிராணி.
அசோக
மரத்திற்கு ஒரு மாற்று-
பெண்களின்
மாதவிடாய்ப் பிரச்சினைகள், கருப்பை தொடர்பான நோய்கள்
ஆகியவற்றை குணப்படுத்துவதில் முதல் நிலையில் இருப்பது அசோக மரம். இதன் தாவரவியல் பொயர் சராகா அசோகா (SARACA ASOKA).
அசோக
மரத்திற்கு சமமான மருத்துவ குணங்களைக் கொண்டது நமது மடையன்
சாம்பிராணி
மரம்.
ஆயுர்வேத
மருந்துகள் தயாரிப்பு
சில
ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில், அசோக
மரத்திற்குப் பதிலாக மடையன் சாம்பிராணி
மரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
நம்மிடையே
இருக்கும் மூலிகை வளங்களை இன்னும் நாம சரிவர பயன்படுத்தவில்லை. அதற்கு முக்கியமான காரணம்,
நமது
பாராம்பரிய மரங்கள் மற்றும் இதர தாவரங்களைப் பற்றிய போதுமான தகவல்கள் நம்மிடம்
இல்லை.
சிலவற்றை
நாம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி விட்டதால்,
அவை
எல்லாம் அழிந்துபோகும் நிலைக்கு வந்து விட்டன.
சித்த
மருத்துவம்
நமது
இயற்கை வளங்களில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி மருத்துகள் தயாரித்தால் நமது
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை உலகுக்கே விநியோகம் செய்யலாம்.
மருத்துவப்
பண்புகள்
இதில்
உள்ள பினால்கள், பிளேவளாய்டுகள்,
கிளைகோசைட்கள்,
டிடர்பைன்கள் (PHENOLS, FLAVANOIDS, GLYCOSSIDES, DITERPINES)
போன்றவை
இந்த மரத்திற்கு மருத்துவப் பண்புகளை தருகின்றன.
உடல்
பருமனாகும் நோய் மற்றும் சக்கரை நோயை குணப்படுத்தும் சக்தியும் இதில் உள்ளது.
யானைகளுக்கு
சிகிச்சை
யானைகளுக்கு ஏற்படும் காயங்கள்,
மற்றும்
புண்களை ஆற்றவும் இதன இலைகள் மற்றும் பட்டைகள் பயனாகிறது.
இதன்
மரங்கள் சிவப்பாகவும், செங்காவி நிறத்திலும் இருக்கும். நடுத்தரமான அளவு உறுதியான தன்மையுடைய மரங்கள். இதற்கு ஏற்றவாறு மரச்சாமான்களை இதில்
செய்யலாம்.
இந்த
மரங்கள்,
1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நன்கு வளரும். விதைகள் மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.
FOR FURTHER READING
1.
WWW.THE.HINDU.COM “DETAILING OPPORTUNITIES AVAILABLE IN LIFE”
2.
KINGEODENDRON
PINNATUM – A PHARMACOLOGICALLY EFFECTIVE ALTERNATIVE TO SARACA ASOCA IN AN
AYURVEDIC PREPARATION.(WWW.SCIENCE DIRECT.COM)
3.
KINGEO
DENDRON PINNATUM -/INDIA BIODIVERSITY PORTAL.
4.
WWW.IMED PUB.COM-“KINGEODENDON PINNATUM”
5.
I LOVE TO SEE YOUR
COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment