Monday, June 12, 2023

DRAGON FRUITS' SCOPE FOR EXPORT டிராகன் பழங்கள் ஏற்றுமதி வாய்ப்புகள்

 

டிராகன்  பழங்கள்   ஏற்றுமதிக்கு  தயார்

ஒரு சமயம் லண்டனில் ஒரு சூப்பர் மார்கெட்டுக்குப் போயிருந்தேன். அங்கு 120 இந்திய ரூபாய்க்கு, ஒரு முருங்கக்காய் வாங்கினேன். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் என் தோட்டத்திலிருந்து வாட்டசாட்டமான அம்பது அறுபது காய்களை ஒரு காய் ஒரு ரூபாய் என்று விற்றேன்.

இதை என் மகனிடம் சொன்னேன். அதுதான் எக்ஸ்போர்ட்டின் மகிமை என்றான். உள்ளூரில் ஒரு ரூபாய்க்கு விற்றால் வெளிநாட்டில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்கிறார்கள்.

இந்தப் பதிவில் டிராகன் பழங்களுக்கு வெளி நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதா ? இல்லையா ? என்று பார்க்கலாம்.  

 இந்தியாவின் முதல் ஏற்றுமதி (FIRST EXPORT)

மகாராஸ்ட்ராவில் தாடசார்  என்ற கிராமத்திலிருந்து டிராகன் பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். இதுதான் இந்தியாவிலிருந்து செய்முதல் டிராகன் பழங்கள் ஏற்றுமதி.

தாட்சார் கிராமம் (THATCHER VILLAGE)

இந்த தாட்சார் கிராமம் மகாராஸ்ட்ராவில் சாங்க்லி என்ற மாவட்டத்தில் உள்ளது.

அப்பெடா (APEDA)

மகாராஸ்ட்ராவின் அப்பெடாவின் (APEDA) அங்கீகரிக்கப்பட்ட கே பி என்ற ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம் இந்த ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அப்பெடா (APEDA) என்பதன் விரிவாக்கம் அக்ரிகல்ச்சுரல் அண்ட் புராசெஸ்டு ஃஃபுட் புராடக்ட்ஸ் (AGRICULTURAL AND PROCESSED FOOD PRODUCTS EXPORT DEVELOPMENT AUTHORITY).

அப்பெடா’ வை தொடர்பு கொள்ளுவது எப்படி என்னென்ன உதவிகள் அவர்களிடமிருந்து கிடைக்கும் என்பது பற்றி எல்லாம் இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.

இந்திய அரசின் அமைச்சக அறிவிப்பு (ANNOUNCEMENT FROM GOVT. OF INDIA)

நார்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் (FIBRE & MINERAL CONTENT)நிறைந்த டிராகன் பழங்கள் ஏற்றுமதி என்பது இந்திய வேளண்மையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார், இந்திய அரசின் வியாபார மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர்.

 டிராகன் பழம் எனும் கமலம் (DRAGON ALIAS KAMALAM)

உலகம் முழுக்க டிராகன் ஃப்ரூட் என்று அழைக்கப்படும் இதற்கு இந்தியாவில் வைத்திருக்கும் பெயர் கமலம்.

இந்தியாவில் டிராகன் பழங்கள் வீட்டுத் தோட்டங்களில் 1990 ம் ஆண்டு அறிமுகம் ஆனது.

இந்திய மாநிலங்களில் டிராகன் பழம் (DRAGON FRUIT IN INDIAN STATES)

தற்போது இந்திய மாநிலங்களில் பல மாநிலங்கள் டிராகன்பழ சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, குஜராத், ஒரிசா, வெஸ்ட்பெங்கால், ஆந்திரப்பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் டிராகன் பழ சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியா முழுக்க தோராயமாக 3000 முதல் 4000 எக்டர் பரப்பில் டிராகன் பழங்கள் சாகுபடியில் உள்ளன. இந்தியாவிலிருந்து கிட்ட்த்தட்ட 12000 டன் பழங்கள் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி ஆகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் டிராகன் பழங்களை பெர்சியன் கல்ஃப் கண்ட்ரிஸ், ஈரோப்பியன் யூனியன், மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளன.    

சர்வதேச அளவில் வரவேற்பு (POSITIVE RESPONSE IN THE MARKET)

ஊதா நிற டிராகன் பழங்களுக்கு மார்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

சர்வ தேச அளவில் விற்பனை ஆகும் (எக்சாட்டிக்) பழங்களிலேயே அதிக வரவேற்புடையது டிராகன் பழங்கள்தான்.

இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக ஐந்து இடங்களில் இருந்து டிராகன் பழங்களை வெளியில் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

அவற்றில் ஏறத்தாழ 91% டிராகன் பழங்கள் கல்கத்தா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக பெங்களூரில் இருந்து விமானம் மூலமாக பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது.

இந்தியாவில் டிராகன்பழ தேவை (LOCAL NEED) 

இந்தியாவில் டிராகன்பழ தேவை எவ்வளவு இருக்கிறதுநாம் டிராகன் பழங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோமா ?

இந்தியாவில் நமது உள்ளூர் தேவைகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் வருகிறது. அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. 

இறக்குமதி செய்த அளவு (QUANTUM OF IMPORT)

முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு 327 டன் டிராகன் பழங்களை நாம் இறக்குமதி செய்தோம். 2019 ஆம் ஆண்டில் 9162 டன்னை இறக்குமதி செய்தோம்..2020 ஆம் ஆண்டு 11,911 டன்னும் 2021 ஆம் ஆண்டு 15,491 டன்னும் இறக்குமதி செய்தோம். சமீபத்தில் இறக்குமதி செய்த பழங்களின் மதிப்பு சுமார் 100 கோடி. 

இந்தியாவில் டிராகன் பழ உற்பத்தி (OUR  DRAGON FRUITS PRODUCTION)

இந்தியாவில் டிராகன் பழங்கள் போதுமான அளவில் தற்போது உற்பத்தி ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியா முழுக்க,  நாம் 3000 க்டர் நிலப்பரப்பில் மட்டுமே டிராகன் பழங்களை சாகுபடி செய்கிறோம். நமது உள்ளூர் தேவைகளுக்கு கூட நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதுதான் இன்றைய சூழல். 

நாம் இறக்குமதி செய்யும் நாடுகள் (OUR IMPORTING COUNTRIES)

நாம் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் இருந்து நமது தேவைக்கு டிராகன் பழங்களை இறக்குமதி செய்கிறோம். 

உங்களில் யாராவது டிராகன் பழம் சாகுபடி செய்கிறீர்களா ? ஏற்றுமதி செய்கிறீர்களா ? யாருக்கு நாம் ஏற்றுமதி செய்யலாம் ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...