Monday, June 12, 2023

DRAGON FRUITS’ IN NATIVE SOIL MEXICO தாய்மண் மெக்சிகோவில் டிராகன் பழங்கள்

 

மெக்சிகன் விவசாயி குடும்பத்துடன்
டிராகன் பழத்தோட்டத்தில்

மெக்சிகோவின் அங்காடிகளில்  பரவலாக டிராகன் பழங்களை  நுகர்வோர் விரும்பி வாங்குகிறார்கள். மெக்சிகோவின் தென்பகுதி மாநிலம் சியாபாஸ் (CHIAPAS)என்ற பகுதி மக்கள்தான் டிராகன்பழ சாகுபடியின் முன்னோடிகள் என்று சொல்லுகிறார்கள்.

சியாபாஸ் இயற்கையாக பரவும் பகுதி (CHIYAPASS NATURAL SPREADING AREA)

சியாபாஸ் பகுதியில் இயற்கையாக பரவும் இந்தத்



தாவரவகையை கர்கோமா என்ற கிராமத்துக்காரர். அவர் தனது  பண்ணையில் 10000 டிராகன் பழச்செடிகளை வைத்திருக்கிறார்.

விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம் (FARMERS’ CAPE OF GOOD HOPE)

மிகவும் குறைவான மழை பெறும் பகுதி சியாபாஸ் பகுதி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பயிராக  உள்ளது இந்த டிராகன் பழங்கள் என்கிறார் விவசாய தகவல் துறை அதிகாரி கார்டோவா.

வறட்சியிலும் வளமை தரும் பயிர் (TOLERATES DROUGHT)

1998 ஆம் ஆண்டிலிருந்தே மிகவும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்து வருகிறது இந்த சியாபாஸ் பகுதி.

இப்படிபட்ட .மோசமான சூழலில் இங்கு டிராகன் பழ சாகுபடி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது.

டக்ட்ஸ்லா குட்டிரெஸ், கிரிஸ்டோபால் டி லாஸ் கசாஸ் (TUXTLA GUTIERREZ, CRISTOBAL DE LAS CASAS) இப்படி வாயில் நுழையாத பெயருடைய நகரங்களில் தடுக்கி விழுந்தால் ஒரு டிராகன் பழக்கடையில்தான் விழுவீர்கள்.

பழமாக வேண்டுமா ? பழச்சாறு, ஜாம், ஜெல்லி பாப்சிகிள், ஐஸ்கிரீம் என்ன வேண்டும் ? எல்லாம் கிடைக்கும் இங்கு.

அமெரிக்காவில் டிராகன் பழங்கள் (DRAGON FRUITS  IN AMERICA)

அமெரிக்காவில், கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, ஹவாய் ஆகிய  மூன்று   மாநிலங்களில் மட்டுமே டிராகன் பழங்கள் சாகுபடி ஆகிறது.

மெக்சிகோவுக்கு சொந்தமானது (NATIVE TO MEXICO)

டிராகன் பழப் பயிர் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது என்கிறார்கள்.

உண்மையாக இதன் சொந்த மண் என்பது உறுதியாக சொல்ல முடியவில்லை.

பித்தாஹயா என்பது இதன் ஸ்பேனிஷ் மற்றும் மெக்சிகன் பெயர், பித்தாயா ரோஜா என்பது இதன் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க பெயர்,

மஞ்சள்  நிற வணிக ரகம் (YELLOW SKINNED COMMERCIAL VARIETY)

செலினிசெரியஸ் மெகலாந்தஸ் (SELENECEREUS MEGALANTHUS) எனும் மஞ்சள் வெள்ளை ரகமும் வணிக ரீதியில் சாகுபடி செய்யப்படுகிறது.

வாசம் அதிகம் உள்ள ரகம் (MOST SCENTED VARIETY)

சாகுபடி செய்யும் ரகங்களில் ஆழமான ஊதா நிற தசை உள்ள டிராகன் பழங்களின் வாசம் அற்புதமாக உள்ளது என்கிறார்கள்.

இதன் பழங்களில் உள்ள விதைகள் ஏறத்தாழ கிவி பழங்களின்  விதைகளைப்போலவே உள்ளன.

மாறிவரும் பருவநிலைச் சூழலில் வழக்கமாக பயிரிடும் பயிர்களைவிட டிராகன் பழப்பயிர்தான் பொருத்தமாக உள்ளது என்கிறார்கள், மெக்சிகோவில் மொத்தம் 20 டிராகன் பழப்பயிர் ரகங்கள் உள்ளன.

 நம்மிடையே உள்ள டிராகன் பழ ரகங்களில் அதிக இனிப்பும், அதிக சாறும் உடைய ரகம் மஞ்சள் டிராகன்தான், அதுபற்றி தனியாக ஒரு பதிவில் பார்க்கலாம்.

மெக்சிகோவில் உள்ள டிராகன் பழ ரகங்கள் பற்றி கூடுதலான தகவல் ஏதும் உங்களுக்கு தெரியுமா ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...