Monday, June 12, 2023

DRAGON FRUITS HOW TO HARVEST டிராகன் பழங்களை அறுவடை செய்வது எப்படி ?

 

அறுவடைக்குத்  தயாராக இருக்கும்
டிராகன் பழங்கள்

நமக்கு புதியதாக அறிமிகமாயிருக்கும் டிராகன்பழக்கொடிகள் எப்போது பூக்கும், பூத்த பிறகு எவ்வளவு நாள் கழித்து காய்க்கும், காய்த்து எவ்வளவு நாளில் முதிர்ச்சி அடையும், எப்போது எப்படி அறுவடை செய்யலாம், எப்போது சாப்பிடலாம்,  இவைபற்றி எல்லம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எட்டு மாதங்களில் பூக்கும் (FLOWRING)

டிராகன் பழச் செடிகளை நட்ட 6 மாதம் முதல் 8 மாதங்களில் பூத்து காய்க்க தொடங்கும்.

பூக்கள் பூத்துக் காய்த்த பின்னர் சுமார் ஒரு மாதத்தில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும்.

பழுக்கும்போது பசுமை நிறம் மாறும் (COLOUR WILL CHANGE)

காய்கள் பழமாக மாறும்போது சிவப்பகவோ, ஊதா நிறமாகவோ, மஞ்சள் நிறமாகவோ ரகத்திற்கேற்ப மாறி விடும்.

ஆனால் பழங்களின் மேலிருக்கும் மற்றும் நுனியில் இருக்கும் இலைகள் மட்டும் பழங்கள் கனிந்த பின்னும் பச்சை நிறத்திலேயே இருக்கும்.

மற்ற பழங்களைப் போலவே கைகளினால் அழுத்திப்பார்த்து பழுத்திருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்கலாம்.

திருகி அறுவடை செய்யலாம் (HAND PLUCKING IS EASY)

டிராகன் பழங்கள் நீளமான காம்புகளில் காய்க்கின்றன. இந்த பழங்களை முதிர்ந்த பின்னால் கைகளினால் சுலபமாக திருகி  அறுவடை செய்யலாம்.

இரண்டு அல்லது மூன்று முறை திருகியும் பழங்கள் வரவில்லை என்றால் பழங்கள் சரியாக பழுக்கவில்லை என்று அர்த்தம். ஒன்றிரண்டு நாட்கள் செடியிலேயே இருக்கவேண்டும்.

அல்லது காம்புகளை கத்தியினால் அறுத்தும் அறுவடை செய்யலாம்.

பழங்களை அழுத்திப் பாருங்கள் (FEEL THE FRUITS)

பழங்களின் மாறிய நிறம் மற்றும் அதன் மிருதுத் தன்மையும் பார்த்து அதன் பின்னர் அறுவடை செய்ய வேண்டும்.

பழங்களை விரலால் அழுத்தி பார்த்தால் பழுத்த பழங்கள்மெத்தென இருக்கும்.

அதிகம் கனிந்த பழங்கள் உதிரும் (OVER RIPED FRUITS)

அளவுக்கு அதிகமாக கனிந்த பழங்கள் செடியிலிருந்து தானாக உதிர்ந்துவிடும். கைகளினால் அழுத்தினால் ரொம்பவும் அழுந்தும்.

மஞ்சள் ரக பழத்தில் முள் இருக்கும் (YELLOW FRUITS BEAR THORNS)

மஞ்சள் ரக பழங்களின்மீது சிறிய கூர்மையான முட்கள் இருக்கும், துணி துவைக்கும்பிரஷ்போன்றவற்றால் துடைத்து  அந்த முட்களை எளிதாக நீக்கலாம்.

சிவப்பு மற்றும் ஊதா ரகங்களை அறுவடை செய்யும்போது முட்கள் பற்றி கவலப்பட வேண்டாம், முட்கள் இருக்காது.

பழங்களின் நுனியில் மிச்சசொச்சமாக இருக்கும் பூவினை சுலபமாக கைகளால் உடைத்து எடுக்கலாம்.

புதிய பழங்களை சாப்பிடலாம் (FRESH FRUITS CAN BE CONSUMED)

அறுவடை செய்த பழங்களை சுத்தமான தண்ணீரில் கழுவிவிட்டு கூர்மையான கத்தியினால் சிறுசிறு துண்டுகளாக தோல் இல்லமல் வெட்டி எடுக்கலாம்.

சிப்லாக்கில் போட்டு வைக்கலாம் (COUL BE KEPT IN ZIP LOCKS)

வெட்டிய பழத்துண்டுகளை ஒரு பிளாஷ்டிக்  ‘சிப்லாக்கில் போட்டு மூன்று முதல்  நான்கு  நாட்களுக்கு வைத்திருக்கலாம்.

வெட்டாத பழங்களை ரெஃப்ரிஜெரேட்டரில் மூன்று நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம்.

டிராகன் பழங்கள் 6 முதல் 8 மாதங்களில் பூத்து காய்க்கும் என்பது சரியா ? பூக்கள் பூத்த பிறகு ஒரே மாத்தில் அறுவடைக்கு வரும் என்பது சரியா ?

AGRI GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...