Monday, June 12, 2023

DRAGON FRUIT CULTIVATION IN INDONESIA இந்தோனேசியாவில் டிராகன் பழ சாகுபடி

 

ஜாவா பன்யுவாங்கி
டிராகன் பழத்தோட்டம்

உலக நாடுகளில் கிட்டத்தட்ட 22 நாடுகளில் டிராகன் பழங்களை சாகுபடி செய்கிறார்கள். டிராகன் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தோனேஷியா முன்னணியின் வரிசையில் உள்ள ஒரு நாடு. இந்தோனேசிய நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் டிராகன் பழ சாகுபடி செய்கிறார்கள்எப்படி செய்கிறார்கள், எந்த ரகங்களை சாகுபடி செய்கிறார்கள் ? எவ்வளவு ஏற்றுமதி செய்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.  

டிராகன் உற்பத்தி செய்யும் நாடுகள் (TROPICAL & SUB TROPICAL COUNTRIES)

1. வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் 22 நாடுகள் டிராகன் பழங்களை உற்பத்தி செய்கின்றன.

2. அவை ஆஸ்திரேலியா, கம்போடியா, சைனா, இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், நிகராகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், ஸ்ரீலங்கா, தைவான், தாய்லாந்து, அமெரிக்கா, வியட்னாம் ஆகியவை.

ஐந்து தீவுகளின் அமோக உற்பத்தி (INDONESIAN ISLANDS)

பாலி, போர்னியோ, ஜாவா, சுலாவேசி, சுமத்ரா ஆகிய இந்தோனேசிய தீவுகள் டிராகன் பழ சாகுபடிக்கு பெயர்போனவை.

இந்தோனேசியாவுடன் விவசாய வணிகம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது  ஆஸ்திரேலியா.

இந்தோனேசியாவின் பருவநிலை (SUITS INDONESIAN CLIMATE)

இந்தோனேசியாவின் கடலோரப்பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இருக்கின்றன.

மணல்சாரி மண் மற்றும் அமில மண் (SANDY & ACIDIC SOILS)

டிராகன் பழப்பயிர் மணற்சாரியான நிலத்திலும், அமிலத்தன்மை உள்ள நிலங்களிலும், களிவகையிலும்  நன்கு வளர்கின்றன.

களிமந்தன் மாநிலம் (KALIMANTHAN STATE IN INDONESIA)

இந்தோனேசியாவிலேயே அதிக டிராகன் பழங்களை பீட்வகை மண்ணில் உற்பத்தி  செய்யும் பகுதி மத்திய களிமந்தன் மாநிலம்.

அதிக உற்பத்தி என்றால் அது கிழக்கு ஜாவா மாநிலத்தில் உள்ள பன்யுவாங்கி மாவட்டம்தான்.

கொடித்துண்டுகள் (DRAGON VINE CUTTINGS)

1. மற்ற நாடுகளைப் போலவே இங்கும் கொடித் துண்டுகள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

2. கிளைத் துண்டுகளை முதிர்ந்த, ஆரோக்கியமான, கரும்பச்சை நிற  கொடிகளிலிருந்து 20 முதல் 30 சென்ட்டிமீட்டர் நீளத்திற்கு வெட்டி எடுக்க வேண்டும்.

3. வெட்டி எடுத்த கொடித் துண்டுகளை சிறிய பாலித்தீன் பைகளிலோ அல்லது நாற்றங்கால்களிலோ நட்டு வைத்திருந்து பின்னர் நடவு வயலில் நடலாம்.

4. இதுதான் வேகமாக சுலபமாக சிக்கனமாக செய்யக்கூடிய முறைஇதன் விதைகளும் பயன்படுத்தப்படுகின்றது. அது கொஞ்சம் சிக்கலான வேலை.

காங்கிரீட் கம்பங்கள் (SUPPORTING CONCRETE PILLARS)

1. கொடிகளை ஏற்றிவிட 6 அடி கங்கிரீட் கம்பங்களை பயன்படுத்துகிறார்கள்.

2. இந்த கம்பங்களை 2 அடி    நிலத்தடியில் இருக்குமாறு புதைக்க வேண்டும்.

3. கம்பத்தின் உச்சியில் ஒரு வட்ட வடிவமான மோட்டர் சைக்கிள் டயர்களை பெரும்பாலும் பொருத்துகிறார்கள்.

4. நான்கடி உயரம் வரை கம்பத்தை துணையாகக் கொண்டு வளரும் கொடிகள் உச்சியை அடைந்தவுடன் அவை வளைந்து கீழ் இறங்குமாறு செய்ய வேண்டும்.

5. ஒரு நீரூற்றிலிருந்து பொங்கி வழியும் நீரைப்போல இதன் கொடிகள் கம்பத்தின் உச்சியிலிருந்து இறங்கும்.

6.ஒவ்வொரு கம்பத்தைச்சுற்றிலும் நான்கு கொடிகளை நட வேண்டும்.

7.கொடிகளை நட்ட பிறகு அவற்றை கம்பத்துடன் இணைத்து கட்ட வேண்டும்.

8.இந்த முறையை வியட்நாம் டிரெல்லிஸ் சிஸ்டம் என்று சொல்லுகிறார்கள்.

ஆண்டு முழுக்க அறுவடை (HARVEST ROUND THE YEAR )

டிராகன் பழங்கள் இந்தோனேசியாவில் ஆண்டு முழுவதும் அறுவடை ஆகிறது. ஆனாலும் அதிக உற்பத்தி என்பது நவம்பர் முதல் மார்ச் வரை ஐந்து மாதங்கள்தான்.

முக்கிய ரகங்கள் (PROMINENT VARITIES)

1. சிவப்புத்தோல் சிவப்புத்தசை உள்ளரகம், ஹைலோசெரியஸ் மொனோகாந்தஸ்,

2. சிவப்புத் தோல் ஊதா தசை உள்ள ரகம்  ஹைலோசெரியஸ் கோஸ்டாரிசென்சிஸ் (HYLOCEREUS MONOCANTHUS, HYLOSEREUS COSTARICENSIS).

அறிமுகம் செய்யப்பட்ட பயிர்

1. இந்தோனேசியவைப் பொறுத்தவரை டிராகன் பழம் 2000ம்  ஆண்டில்  அறிமுகம் செய்யப்பட்ட பயிர்

2. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் பெரும்பாலும் உள்ளூர் அங்காடிகளிலேயே விற்று விடுகிறார்கள்.

3. ஒரு சிறிய அளவைத்தான் ஏற்றுமதி செய்கிறார்கள்.

4. பூச்சி நோய்கள்தான் இங்கு டிராகன் பழச்சாகுபடியை எதிர்நோக்கி இருக்கும் முக்கிய பிரச்சினை.

5. இவர்கள் பார்த்து பயப்படும்படியான நோய் கேங்கர் (STEM CANKER). இந்த கேங்கர் நோய். இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் டிராகன் பழப்பயிரை அழித்துவிட்டது.

6. ஆனாலும் சர்வதேச ஏற்றுமதி தரத்தினை பரமரிக்க இந்தோனேசிய அரசு பல்வேறு  நடைமுறைகளை தற்போது கையாளுகிறது.

இந்தோனேசியாவில் பாலி போர்னியோ, ஜாவா, சுலாவேசி, சுமத்ரா ஆகிய தீவுகளிலும், களிமந்தன் மாநிலம் மற்றும் ஜாவா மாநிலத்தில் பன்யூவாங்கி மாவட்டத்திலும் டிராகன் பழ பயிர்கள் சாகுபடி செய்வது பற்றி எல்லாம்  பார்த்தோம். 

இந்தோனேஷியா நாட்டில் டிராகன் பழ சாகுபடி செய்வதில் புதியதாக உங்களுக்கு செய்திகள் ஏதும் தெரியுமா தெரிந்தால் எனக்கு பகிருங்கள்.

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...