வேலிக்கல்லில் படர்ந்திருக்கும் டிராகன் பழச்செடிகள் |
அழகான
கொடிமரத்தின் டிராகன்
பழங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு வாக்கில் வியட்நாமில் முதலில்
வீட்டுத் தோட்டங்களில் அது காலடி எடுத்து வைத்தது. இன்று ஆசியாவிலேயே அதிக அளவில்
சாகுபடி செய்யும் நாடாக உள்ளது. அங்கு டிராகன் பழ சாகுபடி எப்படியிருக்கிறது எனப் பார்க்க்லாம்.
பலவிதமான பெயர்கள் (DIFFERENT
NAMES)
டிராகன்
ஃபுரூட்,
டிராகன் பேர்ள் ஃப்ரூட், பிட்டாஹயா, ஸ்ட்ராபெர்ரி
பீயர், நைட் ப்ளூமிங் செரியஸ், பெல்லி ஆஃப்
தெ நைட், சிண்ட்ரெல்லா பிளாண்ட் (DRAGON FRUIT,
DRAGAN PEARL FRUIT, PITAHAYA, STRAWBERRY PEAR, NIGHT BLOOMING CEREUS, BELLY OF
THE NIGHT, CINDRELLA PLANT)
வீட்டுத்
தோட்ட பழங்கள் (HOME GARDEN FRUITS)
வியட்நாமில்
டிராகன் பழங்கள் 1980 ஆண்டு வரை வீட்டுத்தோட்ட பழங்களாகவே
இருந்து அதன் பின்னர்தான் அது வியாபார ரீதியான பழமாக பரவ ஆரம்பித்தது.
டிராகன்
பழங்களின் தாயகம் (HOME OF DRAGON FRUIT)
மெக்சிகோ
மற்றும் கொலம்பியாவை தாயகமாகக் .கொண்ட அழகான கொடிகளாலான டிராகன்
பழங்களில் இரண்டு ரகங்கள்
பிரபலமாக உள்ளன.
வெள்ளை
மற்றும் சிவப்பு தசை ரகங்கள் (WHITE & RED FLESHED)
ஒன்று
வெண்ணிற தசையும் சிவப்பு அல்லது ஊதா நிற மேல்தோலையும் கொண்டது. இரண்டாவது சிவப்பு தசையும் சிவப்பு அல்லது ஊதா நிற மேல்தோலையும் கொண்டது.
முதல்
ரகம்
95 சதவிகிதமும் இரண்டாவது வகை 5 சதவிகிதமும் இங்கு
பயிரிடப்படுகிறது.
இவற்றின்
தாவரவியல் பெயர் ஹைலோசெரியஸ் அண்டேடஸ் (HYLOGEREUS UNDATUS)
வீரிய
ஒட்டு ரகங்கள் (HYBRID VARITIES)
வியட்நாமின்
பல்வேறு பகுதிகளுக்கும் மண் தன்மைக்கும் ஏற்ப இருபதுக்கும் மேற்பட்ட பல புதிய ரகங்களை
இங்கு பாதுகாத்து பரமரித்து வருகிறார்கள். நாற்பதுக்கும் மேற்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள் இங்கு புழக்கத்தில்
உள்ளன.
டிராகன்
பழ ஆராய்ச்சி நிலையம் (RESEARCH STATION)
இங்கு
இருக்கும் சதர்ன் ஹார்டிகல்ச்சுரல் ரிசர்ச்
இன்ஸ்ட்டியூட் (SOUTHERN HORTICULTURAL RESEARCH INSTITUTE) இதுபற்றிய
ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது.
ஏழுமாத
பழ சீசன் (HARVEST SEASON)
வியட்நாமில்
ஓர் ஆண்டில் ஏழு மாதங்களுக்கு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையும் டிராகன் பழங்கள் அங்காடிகளில்
விற்பனை ஆகின்றன. ஆனாலும் மே முதல் ஆகஸ்ட் வரை அதிகம்
விற்பனை ஆகின்றன.
ஒரு
லட்சம் டன் பழ உற்பத்தி (INCREASED FRUIT PRODUCTION)
2000
ஆண்டில் 5512 எக்டராக இருந்த டிராகன் பழ சாகுபடி
பரப்பு தற்போது 55419 எக்டராக உயர்ந்துள்ளது. இந்த அதிகப்படியான பரப்பளவில் 2018 ஆண்டு ஒரு லட்சத்து
74 ஆயிரத்து 242 டன் உற்பத்தி செய்தது
மூன்று
முக்கிய டிராகன் பழ மாநிலங்கள் (THREE DRAGON STATES)
பின் துவான், டியன் ஜியாங் , லாங் அன் (BINHTHUAN, TIEN GIANG, LONG AN) ஆகிய மாநிலங்களில் 87.44 சதவிகித பரப்பில் டிராகன் பழப்பயிர் சாகுபடி ஆகிறது. மீதம் உள்ள பரப்பு தெற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் குறைவான பரப்பில் பரந்துள்ளது.
‘லைட்டிங்க் டெக்னிக்’ – (LIGHTING TECHNIQUE)
ஒரு ஆச்சரியமான
செய்தி.
ஆண்டு முழுவதும் டிராகன் பழ சாகுபடியைத் தொடர இதனைக் கையாளுகிறார்கள்.
இரவு
நேரத்தில் விளக்கு வைக்கும் இந்த்த் தொழில் நுட்பத்தை ‘லைட்டிங்க் டெக்னிக்’ என்கிறார்கள்.
இடைப்
பருவத்திலும் பூக்கும் (OFF SEASON FLOWERING)
ஆஃப்சீசன்
என்று சொல்லப்படும் இடைப்பருவத்தில் பூக்களைப்பூக்க வைப்பதற்கு இந்த ‘லைட்டிங்க் டெக்னிக்’ ஐ பயன்படுத்துகிறார்கள்.
பருவ
நிலையை வைத்து அதற்கு ஏற்றபடி இரவு நேரத்தில் டிராகன் பழ சாகுபடி செய்யும் வயல்களில்
விளக்குகளின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்.
பூக்கள்
பூக்க தூண்டுகிறார்கள் (LIGHT INDUCE FLOWERING )
எத்தனை
மணி நேரம் அந்த விளக்குகள் எரிய வேண்டும்
என்பதையும் தீர்மானிக்கிறார்கள்.
இந்த ‘லைட்டிங்க் டெக்னிக்’ மூலமாக டிராகன் பழமரக் கொடிகளில்
பூக்கள் பூக்க தூண்டுகிறார்கள்.
இந்த
தொழில் நுட்பத்தை கையாளுவதால் ஆண்டு முழுவதும் டிராகன் பழக்கொடிகள் காய்த்து பழங்களைத்
தருகின்றன.
அதிக
ஏற்றுமதி (MORE EXPORT)
வியட்நாமில்
உற்பத்தி ஆகும் டிராகன் பழங்களில் 80 சதவிகித்தை
ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் இந்த நாட்டின் ஏற்றுமதி
55 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
மீதமுள்ள 20 சத பழங்களை மட்டுமே உள் நாட்டு உபயோகத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
அதிக
இறக்குமதி செய்யும் சீனா (CHINA IMPORTS)
2016
ம் ஆண்டில் டிராகன் பழ ஏற்றுமதியினால் மட்டும் 895 மில்லியன் யு எஸ் டாலரை சம்பாதித்துள்ளது, வியட்நாம்.
வியட்நாமின்
மொத்த டிராகன் பழ உற்பத்தியில் 90 சதவிகித பழங்களை இறக்குமதி
செய்தது சீனா.
பத்து
சதவிகித பழங்களை இறக்குமதி செய்த நாடுகள்
அமெரிக்கா மற்றும் தாய்லாந்து.
கிராமங்களில்
கூலி அதிகம் (HIGH LABOUR COST)
தற்போது
நகரங்களைவிட கிராமங்களில் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு அதிக கூலி கிடைக்கிறது, காரணம் டிராகன் பழ சாகுபடி.
இதனால்
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக
குறைந்துள்ளது என்கிறார்கள்.
கிவி
பழங்களுக்கு சம்மான அந்தஸ்து (EQUAL TO KIWI)
கிவி
பழங்களுக்கு சமமானது இந்த டிராகன் பழங்கள் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
கிவி
பழங்களை பழங்களின் ராஜா என்று சொல்லுகிறார்கள்.
டிராகன்
பழங்களைக்கூட விடவில்லை கொரோனா (CORONA AFFECTED DRAGON TOO)
கொரோனா
வந்த பிறகு இதன் ஏற்றுமதி கடுமையாக பாதித்தது. இதன் விளைவாக சாய்கான் என்னும் பகுதியில் ஏ பி சி பேக்கரி என்னும் ஒரு தனியார்
நிறுவனம் டிராகன் பழங்களை வைத்து ஒரு ஃப்ரூட் பிரட் உற்பத்தி செய்யும் ஃபேக்டரியை (DIRAGAN
FRUIT BREAD FACTORY) தொடங்கியிருக்கிறார்கள்.
இதற்கு
ஒரு பெரிய ‘டிமாண்ட்’ உருவாகி உள்ளது.
அதனால் ஒரு நபருக்கு ஒரு சமயத்தில் ஐந்து துண்டு பிரட்டுகள் மட்டுமே
கொடுக்கிறார்கள்.
இந்த
ஃபேக்டரி மூலமாக நாள் ஒன்றுக்கு இருபதினாயிரம் பழ ரொட்டி துண்டுகளை தயார் செய்கிறார்கள்.
வைத்து
விற்பனை செய்யலாம் (GOOD KEEPING
QUALITY)
ஊதா நிற
தசை உடைய டிராகன் பழங்கள்தான் அதிக தரம், அதிக நாட்கள்
வைத்திருந்தாலும் கெடாத தன்மை, பழங்களின் அழகான தோற்றம்,
நோய்களை தாங்கும் திறன்,
ஆகியவற்றை கொண்ட ரகத்தின் பெயர் எல் டி 5 (LD5).
அதனால்
எல் டி ஐந்து ரகத்தை பயிரிட வியட்நாம் விவசாயிகள் விரும்புகிறார்கள்.
சிவப்பு
தசை டிராகன் பழங்களை வியட்நாமில் எல் டி 1 (L D
1)
ரகங்கள் என்று சொல்லுகிறார்கள்.
டிராகன்
பழ சாகுபடி பிரச்சினைகள் (PROBLEMS FACING ITS CULTIVATION)
மின்சார
தட்டுப்பாடு, பாசன வசதிகள், தண்ணீர்
பற்றாக்குறை, தொடர்ந்து நிலவும் கடுமையான வறட்சி, ரசாயன பொருட்களை பயன்படுத்தல் ஆகியவை டிராகன் பழ சாகுபடியை எதிர் கொள்ளும்
முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
பாதுகாப்பான
பழங்கள் காய்கறிகள் (SAFE FRUIT & VEGETABLES)
டிராகன்
பழங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரசாயனங்கள் பயன்படுத்தாத பழங்களையே விரும்புகிறார்கள். ஆர்கானிக்
பழங்களுக்கு நல்ல் வரவேற்பு இருக்கும் என்கிறார்கள்.
அப்படிப்பட்ட
பழங்கள் கிடைக்காததால் ஏதாவதொன்றை வாங்கிக்கொண்டு போகிறார்கள்.
இது எல்லா
விவசாய விளை பொருட்களுக்கும் குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்களுக்குப் பொருந்தும்.
உடல்
ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான உணவு என்பது மிக முக்கியமான அம்சம், உலகம் முழுவதுமே இந்த உணர்வு தற்போது அதிகரித்து வருகிறது.
ரசாயனங்கள்
பயன்படுத்தாத பழங்கள் (NO CHEMICAL FRUITS)
பூச்சி
மருந்துகள் மற்றும் இதர ரசாயனங்கள் பயன்படுத்தாத பழங்கள் வேண்டும் என இறக்குமதி செய்யும்
நாடுகள் நெருக்குகின்றன.
வியட்நாம்
விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அறுவடைக்குப்பின் கையாளும் தொழில் நுட்பத்தில்
கவனம் செலுத்துவதில்லை.
இதனால்
ஏற்றுமதி செய்யும் பழங்கள் அதிக அளவு கெட்டுப்போகின்றன. இதனால் வியட்நாம் பழங்கள் என்றால் தரம் குறைந்தவை என்ற அவப்பெயரும் உள்ளது.
சாகுபடிப்
பிரச்சினைகள் (PROBLEMS IN CROPPING)
டிராகன்
பழ சாகுபடியை, விற்பனையை, அதன் ஏற்றுமதியை
மேம்படுத்துவதற்கான சில அமைப்புகள் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.
மெக்சிகோ
மற்றும் கொலம்பியாவுக்கு சொந்தமான டிராகன் கள்ளிஇனப் பழப்பயிரில் வியட்நாமில் சாகபடி செய்யும் ரகங்கள், சாகுபடி நுட்பங்கள், அறுவடை,
ஏற்றுமதி என்றெல்லாம் பார்த்தோம். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
டிராகன்பழப்பயிர் சாகுபடி உங்கள் பகுதிக்கு வந்து விட்டதா ? விவசாயிகள் நல்ல லாபம் எடுக்கிறார்களா ?
GNANASURIA BAHAVAN D
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment