Thursday, June 29, 2023

DRAGON BLOOD PREMIUM HERB OF GREEKS 165. கிரேக்கரின் சஞ்சீவி மூலிகை டிராகன் பிளட் ட்ரீ

கிரேக்கரின் சஞ்சீவி மூலிகை
டிராகன் பிளட் ட்ரீ

(DRAGON BLOOD TREE)

வாட்ஸ்அப் சமூக வலைத் தளங்களில் ரொம்ப நாளாய் புகைப்படமாக உலா வந்து மிரட்டிக் கொண்டிருந்த மரம் இது. ஆனால் இது என்ன மரம் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. ஒரு வழியாய் இந்தத் தகவல்கள் சிக்கின. நன்றி மாதா பிதா கூகிள் தெய்வம்’.

இன்ட்டர்நெட்என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். தமிழில் வலைத் தளம். உலகத்தையே இன்று உள்ளங் கையில் அடக்கி விட்டது. ஆச்சரியம் ! இன்னும் 30 ஆண்டுகளுக்கு இதன் அரசாட்சி தொடரும் இன்று கணிக்கிறார்கள் வல்லுநர்கள்.

ஒரு மணித்துளியில் நடக்கும் விற்பனை இருபதாயிரத்தை தாண்டிவிட்டது. எல்லாம் இ காமர்ஸ்ஸின்மகிமைதான் கண்ணா என்கிறார் ஜேக் மா. யார் இந்த ஜேக்மா ? இன்று உலகத்தின் பணக்காரரர்களை வரிசையாக உட்காரவைத்தால், இவரை முன் வரிசையில் மைக்ரோசாட் சுல்தான் பில்கேட்ஸ்பக்கத்தில் உட்கார வைக்க வேண்டும். அலிபாபாவின் சி ஈ ஓ ஜேக் மா.

நாம் மறுபடியும் டிராகன் பிளட் மரத்திற்கு வருவோம்.

ஒரு காலத்தில் லேடன் என்ற சக்தி வாய்ந்த டிராகன் பாம்பு இருந்தது. அதற்கு 1000 தலைகள். ஓவ்வொரு தலையும் ஒவ்வொரு குரலில் பேசும். செவ்வாய் கிரகக் கடவுள் ஒரு பொறுப்பை அந்த பாம்பிடம் ஒப்படைத்தார். தெய்வீகமான மூன்று தங்க ஆப்பிள் பழங்களைத் தந்து பாதுகாக்கச் சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்தது. ஒரு நாள் ஹெர்குலஸ் என்ற வீரன் வந்தான். டிராகன் என்ற மாயப் பாம்புடன் சண்டை போட்டு அதனைத் தன் வாளால் வதம் செய்தான்.

அந்த டிராகனின் ரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. அந்த ரத்தத்திலிருந்து ஒரு மரம் முளைத்து எழுந்தது. அதுதான் இந்த டிராகன் பாம்பு ரத்த மரம். என்று அழைக்கபபடும் டிராகன் பிளட் ட்ரீ.  

அகில உலக அளவில் பிரபலமான ஞானி சாக்ரடீஸ் மருந்து தயாரி;க்க பயன்படுத்திய மரம் இது.

கடந்த காலத்தில் ஞானிகள் அனைவருக்கும் வைத்தியமும் தெரிந்திருக்கும்;. அரிஸ்டாடிலின் மாணவரான அலக்சாண்டருக்கும் மருத்துவம் தெரியும்.

அது போல அரிஸ்டாடிலின் குருநாதர் சாக்ரடீசும் வைத்திய நிபுணர். சாக்ரடீஸ் அவருடைய காலத்தில் தனது மருத்துவத்தில் டிராகன் பிளட்டை பயன்படுத்தி இருக்கிறார்.

அவர் காலத்தில் இதன் பெயர் எம்ஜோலோ (EMJOLO). ஆனால் இப்பகுதியின் பூர்வக் குடிகள் இதனை சின்னபார் (CINNABAR)என்று அழைக்கிறார்கள்.

டிராகன் ரத்தத்தில் லிப்ஸ்டிக்

வித்தியாசமான உருவ அமைப்பு கொண்ட 10 மரங்கள் என ஒரு பட்டியல் போட்டால் அதில் ஒரு மரமாக கண்டிப்பாக வரும் இந்த டிராகன் பிளட்’.

இந்த மரத்திலிருந்து வடியும் ஒரு வகை மரப்பால்தான் (RESIN) டிராகன் பிளட் (DRAGON BLOOD). இதனை அந்த நாட்களில் கம்பளித் துணிகள் மற்றும் மண் பானைகளுக்கு  சாயம் ஏற்றவும், பெண்கள் உதட்டுச் சாயமாகவும் பயன்படுத்தினர்.

உள்ளங்கால் அரிப்பு முதல் உச்சந்தலை எரிச்சல் வரை

சடங்குகள், சம்பிரதாயங்கள், தகரத்தை  தங்கமாக்கும் ரசவாதம், ஆகிய எல்லாவற்றிற்கும் தேவை இது. உள்ளங்கால் அரிப்பு முதல் உச்சந்தலை எரிச்சல் வரை கொண்டுவா டிராகன் பிளட்’  என்பார்கள் சொகோத்ராதீவு மக்கள்.    

கிரேக்கர்கள், ரோமானியர்கள், மற்றும் அரேபிய மக்களின் சளி ஜூரம், வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண், தொண்டைப்புண், பேதி, சீதபேதி- இப்படி பாதி நோய்களுக்கு சஞ்சீவி மூலிகை டிராகன் பிளட்தான்.

உங்கள் பற்பசையில் டிராகன் பிலட் இருக்கா ?

பதினெட்டாம் நுற்றாண்டில் இப்பகுதி மக்களுக்கு பற்பசை இந்த டிராகன் பிளட்தான். உங்கள் பற்பசையில் உப்பிருக்கிறதாஎன்று யாரும் அன்று யாரும் கேட்கவில்லை.

34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அரேபியாவிலிருந்து பிரிந்த ஒரு தீவுதான் சொகோத்ரரா. இந்தத் தீவின் தாவரங்கள் மற்றும் பிராணிகள் எல்லாமே டிராகன் பிளட் மாதிரிதான். எல்லாமே வித்தியாசமான ஜந்துக்கள். இதுவும் அந்தத் தீவுக்கு சொந்தமான ஒரு வித்தியாசம்தான்.   

கடுமையான வறட்சி, கிரானைட் பாறைகளினால் ஆன  மண் கண்டம் உடைய மலைப்பகுதி இவை எல்லாம் எங்கு இருக்கிறதோ அங்கு  இந்த மரமும் இருக்கும். மரத்தின் தலைப் பகுதி குடைபோல இருப்பதனால் அதன் நிழல் அடிப்பகுதியில் நீர் ஆவியாவதைத் தடுத்து ஈரம் காக்கிறது. மரத்தின் அடியில் வளரும் இதன் கன்றுகளுக்கு சாதகமான சூழலை வழங்குகிறது.

கால்நடைகளுக்கு தீவனம் தர, கயிறு திரிக்க, பிசின் எடுக்க, தேனிப் பெட்டிகள் செய்ய, மருந்துகள் தயாரிக்க என்று பல வகைகளில் பயனாகிறது  அழிந்து வரும் மரங்களில் ஒன்று இது.

பொதுப் பெயர்: டிராகன் பிளட் ட்ரீ (DRAGON BLOOD TREE)

தாவரவியல் பெயர்: டிரசீனா சின்னபாரி (DRACENA CINNABARI)

தாவரக் குடும்பம்: அஸ்பராகேசியே (DRAGON BLOOD TREE)

பூமி பிடித்திருக்கும் பச்சைக் குடை

பூமி, செங்குத்தாக பிடித்திருக்கும் பச்சைக் குடை மரம் இது.

லேசாய்க் கீறினால் கூட ரத்தச் சிவப்பாய் மரப்பால் வடிக்கும். அதனால்தான் இதன் பெயர் டிராகன் பிளட் ட்ரீ. டிராகனின் ரத்தம் இது போலத்தான் இருக்குமாம்.

பனை மரத்தைப் போல இது ஒரு விதையிலை மரம். ஆனாலும் இந்த பனைக்கு கிளையுண்டு. கிளைகள் இரண்டிரண்டாய் ஒழுங்காகப் பிரியும். படத்தைப் பாருங்கள்.

இரண்டு மூக்கு வேண்டும் வாசனை பிடிக்க

மரத்தின் கிளைச் சிம்புகளின் நுனிகளில் மட்டுமே இலைகள் தென்படும்; மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இலைகள் முதிர்ந்து உதிரும்.

வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் பூக்கும் இந்த பூக்களின் வாசைன பிடிக்க இரண்டு மூக்கு வேண்டும். அப்படி ஒரு வாசைன.

பூவாகி காயாகி கனியாகி பறவைகளுக்கும் வன விலங்குகளுக்கும் விருந்து வைக்க 5 மாதங்கள் பிடிக்கும்.

பசுமை நிறக் காய்கள் கருப்பு நிறமாகக் கனிந்து பின் ஆரஞ்சு கலந்த அழகான சிவப்பு நிறம் அடையும்.

மருத்துவம்

கருச்சிதைவு செய்ய கைகண்ட மருந்து

இதன் பிசின் வாய் மற்றும் தொண்டைப் புண்ணை குணப்படுத்தும்.

பல் ஈறுகளின் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த பற்பசைகளில் உபயோகமாகிறது.

வேர்கlள் முடக்குவாதத்தை (RHEUMATOID ARTHROIDS) குணப்படுத்தும்.

இலைகள் வாயுக்களை நீக்கும் மருந்து.

பருவக்கால மாற்றம்

மாறி வரும் பருவ நிலையில் இந்த மரங்களின் தலைப் பகுதி முழுக்குடையாய் வளர்வதில்லை என்கிறார்கள். கால் குடையாய் அரைக்குடையாய் முக்கால் குடையாய் வளரும்போல.

ஒரு 50 ஆண்டுகளில், தற்போது இருக்கும் மரங்களில் அநேகமாய் 45 சத மரங்களை இழக்க நேரிடும் என்று பயமுறுத்துகிறார்கள் தாவரவியல் நிபுணர்கள்.

எது எப்படி இருந்தாலும் சொக்காத்தா தீவின் அடையாள மரம் டிராகன் பிளட். அடுத்தத் தலைமுறை பார்க்க பரவசப்பட பயன்படுத்த பாதுகாக்க வேண்டிய மரம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...