Monday, June 12, 2023

DIVINE TEMPLE FLOWERS OF NANTHIYARVATTAI TREE - அழகு கோயில் பூமரம் நந்தியார்வட்டை

நந்தியார்வட்டை - PINWHEEL FLOWER TREE
Tabernaemontana divaricata



வீட்டில் முகப்பில் வாசலின் பக்கங்களில், ஜன்னலோரம், நடுவதற்கு ஏற்ற மரம்.  அதிலும் குறிப்பாக இடவசதி நெருக்கடியான நகர்ப்புறங்களில், நடுவதற்கு ஏற்ற மரம்.  நகரத்தின் வாகனப்புகை, புழுதி, எரி பொருள் நாற்றம், வாகனச் சத்தம், வெயில், பனி, மழை போன்ற இயற்கை நிகழ்வுகள், அத்தனையும் வடிகட்டி, சுத்தமான சூழலை மட்டுமே நமக்குத் தரும் அற்புதமான மரம்.

09. நந்தியார்வட்டை

(PIN WHEEL FLOWER)

தாவரவியல் பெயர்: டேபர்னேமொண்டானா டைவரிட்டா (TABERNAEMONTANA DIVARICATA)

தாவரக் குடும்பம் பெயர்: அப்போசயனேசி (APOCYANACEAE)

தாயகம்: இந்தியா

1.பல மொழிப்பெயர்கள்:

1.1. தமிழ்: நந்தியார்வட்டை, (NANTHIYARVATTAI)

1.2. இந்தி: சந்தினி, தகர் (SANDINI, DHAGAR)

1.3. கன்னடா: நந்திபட்டாலு (NANDIBATTALU)

1.4. குஐராத்தி: சாகர்  (SAGAR)

1.6. மலையாளம்: நந்தியார் வட்டம் (NANTHIYARVATTAM)

1.7. சிங்கனம்: வாது சுக்கா (VADHU SUKKA)

1.8. தெலுங்கு: நந்திவர்தனம் (NANDIVARDANAM)

1.7. பொதுப் பெயர்கள்: கார்னேன் ஆப் இந்தியா, கிரேப் ஜாஸ்மின், மூன்பீம், பின் வீல் பிளவர், ஈஸ்ட் இண்டியா ரோஸ்பே, நீரோஸ் கிரவுன் (CARNATION OF INDIA, CRAPE JASMINE, MOON BEAM, PIN WHEEL FLOWER, EAST INDIA ROSEBAY, NEROS CROWN )

நந்திபத்திரி, நந்தியா வர்த்தம், சுயோதனன் மாலை போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. 

கோவில் பூக்கள்

இந்தியா முழுவதும் பரவலாக, பூஜை புனஸ்காரங்களில் பயன்படுத்தும் மலர் நந்தியார்வட்டை. கோவில்களில் வளர்க்கப்படும், முக்கிய பூமரங்களில் நந்தியார் வட்டையும் ஒன்று.  பல கோவில்களில் அந்த சந்தி எந்த நேரத்திலும் நடைபெறும் பூஜைகளில், கண்டிப்பாய் இடம் பெறும் பூ நத்தியார் வட்டை.  இன்னொன்று ஆண்டு முழுவதும் பூக்கும்.  இலைகள் மற்றும் பூக்கள் இரண்டுமே பளிச்சென்று காட்சி தரும்: பளிச்சென்ற பச்சை நிறத்தில் இலைகள் மற்றும் கொப்புகளை உடைத்தால் வெள்ளை நிறப்பால் பொங்கும்.  நந்தியார் வட்டை ஒரு குறுமரம்.  அதிகபட்சமாக 2 மீட்டர் உயரம் கோணல் மாணலான மரமாக வளரும் சிறுமரம்.

நோய்களை குணப்படுத்தும்

நந்தியார்வட்டை குறிப்பிடும்படியான மூலிகை மரம். பல நாடுகளில் தங்களது பாரம்பரிய வைத்திய முறைகளில் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.  குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, மலாய் பீடபூமி, இந்தோனேசியா மற்றும் அம்பான் தீவுகளில் மருத்துவ முறைகளில் இதனை இன்றும் உபயோகப் படுத்துகிறார்கள்.  நந்தியார் வட்டையின் வேர், பட்டை, இலைகள், பூக்கள் என அனைத்து பாகங்களும் மருந்துகள் தயாரிக்க உபயோகமாகிறது.

கண்நோய்கள், கேன்சர், தோல் சம்மந்தமான தோய்கள், வயிற்றுப்போக்கு, போன்றவற்றை குணப்படுத்த நந்தியார்வட்டை பயன்படுகிறது. இதன் பாலை, காயங்களின் மீது, புண்களின் மீது தடவ குணமாகும்.

பூக்களை கசக்கி அதிலிருந்து எடுக்கும் சாற்றினை சொட்டு மருந்தாக கண்களில் விட கண் நோய்கள் சுகப்படும்.

நந்தியார்வட்டையின் இலைச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நெற்றியில் தடவ கண்வலி குணமாகும். தோலின் மீது ஏற்படும் சொறி. சிரங்குகள், போன்றவற்றில், நந்தியார்வட்டையின் பூக்களின் சாற்றினைத் தடவி வர அவை அனைத்தும் விரைந்து குணமாகும்.

நந்தியார்வட்டை குடிநீரை 10 மில்லி அளவில் ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் குறைவாக சிறுநீர் போகும் நோய்  குணமாகும்.  இதற்கு 50 கிராம் நந்தியார்வட்டை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.  அத்துடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள்.  பின்னர் அதனை குளிர வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தலாம்.

நந்தியார்வட்டையை  மனச்சோர்வினை சரிசெய்யும் மருந்தாக  பயன்படுத்தலாம்.  இதற்கு நந்தியார்வட்டை வேரை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு நாளைக்கு மூன்று வேளையும்  வேளைக்கு ஒன்று என மெல்ல வேண்டும்.  சாற்றினை விழுங்கக் கூடாது.  துப்பிவிட வேண்டும். மனச்சோர்வு சரியாகும்.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ முறைகளை ஒரு மருத்துவரின் சிபாரிசுப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  இவை அனைத்தும் பல்வேறு புத்தகங்களில், வலைத்தங்களில் திரட்டப்பட்ட செய்திகள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

வயிற்றில் உள்ள அஸ்காரிஸ் புழுத் தொல்லைக்கு அற்புதமான மருந்து நந்தியார் வட்டை. இதன் வேரினை எடுத்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.  தேவையான அளவு அதனை இடித்து, அரைத்து பசைபோல் ஆக்கிக் கொன்ளுங்கள்.  இந்த நந்தியார்வட்டை வேர்ப்பசையை ஒரு நாளைக்கு ஒரு முறை என 3 கிராம் சாப்பிட அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்டஸ் (ASCARIS LUMBRICOIDES) என்னும் இந்த புழுக்களின், தொல்லை தீரும்.

குச்சிகளை வெட்டி நடலாம்

நமது பகுதிகளில், புதிய மரங்களை உருவாக்குவதற்கு ஒரே வழி, கிளைக்குச்சிகளை சுமார் ஒரு அடி நீளமுள்ள குச்சிகளாக வெட்டி மேட்டுப்பாத்திகளில் நட்டு, செடியாக தழைத்த பின்னால் எடுத்து வேறு இடங்களில் நடலாம்.  பதியன் போட்டும் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  நமது தட்ப வெப்ப சூழலில் நந்தியார்வட்டை விதை பிடிப்பதில்லை.

வீட்டில் முகப்பில் வாசலின் பக்கங்களில், ஜன்னலோரம், நடுவதற்கு ஏற்ற மரம்.  அதிலும் குறிப்பாக இடவசதி நெருக்கடியான நகர்ப்புறங்களில், நடுவதற்கு ஏற்ற மரம்.  நகரத்தின் வாகனப்புகை, புழுதி, எரி பொருள் நாற்றம், வாகனச் சத்தம், வெயில், பனி, மழை போன்ற இயற்கை நிகழ்வுகள், அத்தனையும் வடிகட்டி, சுத்தமான சூழலை மட்டுமே நமக்குத் தரும் அற்புதமான மரம்.

தமிழ் இலக்கியத்தில் கூட இதன் மருத்துவ குணங்கள் பற்றி சொல்லும் பாடல்கள் உள்ளன.

      “காசம் படலங் கரும்பாவைத்

  தோமெனப்

  பேசு விழி நோய் கடமைப் பேர்ப்பதன்றி

  யோசை தரு

  தந்தி போலே தெறிந்துச் சாறுமண்டை

  நோயகற்று

  நந்தியா வட்டப் பூ நன்று

கண்சம்மந்தமான நோய்களைத் தீர்க்தகும் குணம் கொண்டது நந்தியார்வட்டைப் பூஎன்கிறது, இந்தப் பாடல்.

கண்பூ சரி ஆகும்

நந்தியார்வட்டை பூ வில் ஒற்றை அடுக்கு, இரட்டை அடுக்கு என இரண்டு வகைகள் உண்டு.  ஒற்றை அடுக்கு வகையில் இதழ்கள் ஒற்றை வரிசையாக இருக்கும்.  இரட்டை அடுக்கில் இதழ்கள்  இரண்டு அடுக்கு இருக்கும்.

சிலருக்கு எப்போதும் கண்எரிச்சல் இருக்கும்.  அதற்கு, இதன் பூக்கள் நல்ல மருந்து.  கண்களை மூடிக்கொண்டு, இமைகளுக்கு மேலாக இதன் பூக்கள் படுமாறு சிறிது நோரம் ஒத்தடம் கொடுத்தால் கண்எரிச்சல், சூடு, ஆகியவை காணாமல் போய்விடும்.

நந்தியார்வட்டைப் பூவையும், தேள்கொடுக்கு செடி இலைகளையும் சேர்த்து கசக்கினால் சாறு வடியும்.  இந்த சாற்றினை பூவிழுந்த கண்களில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் விட்டுவந்தால் கண்பூசரியாகும்.

நந்தியாவட்டைப் பூக்கள் 50 கிராம், களாப்பூக்கள் 50 கிராம் இரண்டையும் ஒரு பாட்டிலில் போட்டு, அதில் நல்லெண்ணெயை ஊற்றி 20 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.  பின்னர் எண்ணெயை மட்டும் வடித்து தனியாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  காலை மாலை இருவேளையும் ஒரு துளி என கண்களில் விட்டு வந்தால், கண் சதை வளர்ச்சி, கண்படல நோய், பார்வை மத்தம் போன்ற கண்நோய்கள் குணமாகும்.

நந்தியார்வட்டை வேர்க்கஷாயம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கடுப்புக்கு நல்ல மருந்து.  வயிற்றில் இருக்கும் புழுக்களை வெளியேற்றும்.  இதன் வேரை வாயில் வைத்து மென்று துப்பிவிட பல்வலி குணம் ஆகும்.

சிலர் எப்போதும் சிந்த கண்களுடன் இருப்பார்கள்.  அப்படி செவ்வரி ஒடிய கண்களுக்கு நந்தியார்வட்டைப் பூக்கள் செவ்விய மருந்து.  இதன் பூச்சாற்றினை சமபங்கு தாய்ப்பால் சேர்த்து ஒரிறு துளிகள் கண்களில் விட கண்சிவப்பு மாயமாக மறையும்.

இந்த மருத்துவ முறைகளை கையாள வேண்டும் எனில் ஒரு தகுதியான மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

PLEASE POST YOUR COMMENTS, REGARDS - GNANASURIA BAHAVAN D (AUTHOR)

88888888888888888888888888888888888888888

 

 

No comments:

HOW TO ENHANCE PULICAT ECO SYSTEMS - பழவேற்காடு ஏரியின் சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று ஆலோசனைகள்

  கடிதம்  2 பழவேற்காடு ஏரியின்   சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று  ஆலோசனைகள் ! DR.P.SATHYASELAVAM, DR.SELVAM அன்பின் இனிய   நண்பர...