Monday, June 12, 2023

DIVINE TEMPLE FLOWERS OF CHAMPAK TREE - அழகு கோவில் பூமரம் செண்பகம்

 

செண்பகம் CHAMPAK TREE
MICHELIA CHAMPACA



மனதை மயக்கும் ரம்மியமான செண்பகப் பூக்களின் வாசைன
ஹம்மிஸ்பேர்ட்ங்என்னும் சிறு பறவைகளையும் பட்டாம்பூச்சிகளையும் சுண்டி இழுக்கின்றன. ஹம்மிங் பேர்ட்ஸ்எழுப்பும் இனிமையான இசை அதன் குரல் எனத்தான் நாம் நினைக்கிறோம். அது உண்மையான குரல் அல்ல அது.  அதன் சிறகுகள் படபடக்கும் ஒசைதான்.  அவ்வளவு இனிமையாக இருக்கும் அந்த படபடப்பு இசை.

08. செண்பக மரம்

(CHAMPAK TREE)

தாவரவியல் பெயர்: மைக்கேலியா சம்பகா  (MICHELIA CHAMPACA)

தாவரக்குடும்பம் பெயர்: மெக்னோலியேசி (MAGNOLIACEAE)

தாயகம்: இந்தியா

நிறைய வாசகர்கள், இந்த மரங்களின் விதை மற்றும் கன்றுகள் எங்கு கிடைக்கும் என்றும் கேட்கிறார்கள். செண்பகம், பவளமல்லி நந்தியாவட்டம் போன்ற செடிகள்  அருகில் உள்ள நர்சரிகளில் கிடைக்கும். இவற்றை தற்போது இகாமர்ஸ் நிறுவனங்கள் கூட விற்பனை செய்கின்றனர். இண்டியாமார்ட் மாதிரி நம்ம ஊர் இகாமர்ஸ் நிறுவனவங்களில்  தேடுங்கள் கிடைக்கும். 

சின்னமான் பட்டைகளுக்குப் பதில்

சின்னமான் பட்டைகளுக்குப் பதிலாக சீனாக்காரர்கள் செண்பகமரப் பட்டைகளை கலந்து விற்கிறார்கள். கலப்படம்தான். இரண்டுக்கும்  வித்தியாசம் தெரியாது. உடல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் பிரசவம் ஆன பெண்களுக்கு பலவீனத்தைப் போக்கவும் பட்டைக் கஷாயத்தை  மருந்தாகவும் கொடுக்கிறார்கள். இதற்குப் பதிலாக இலைக் கஷாயத்தையும் கொடுக்கிறார்கள். இலைச்சாறுகூட குடற்புழுக்களை நீக்கும் மருந்தாகிறது.

புத்தர் பெருமான் போதி மரத்தடியில் ஞானம் பெற்றது நமக்குத் தெரியும் அதுபோல அடுத்து ஒரு புத்தர் வரப்போவதாக திபெத்திய மக்கள் நம்புகிறார்கள். அப்படி வரப்போகும் புத்தர் வெள்ளை நிறமாகப் பூக்கும் செண்பக மரத்தடியில்தான் அவர் ஞானம் பெறுவார் என்றும் திபேத்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

பெரும்பாலும் செண்பகப் பூக்கள் தங்கநிற மஞ்சள் நிறம், தங்கநிற ஆஞ்சு நிறம் மற்றும் சந்தன நிறம் கலந்த வெண்மை நிறத்திலும் இருக்கும்.

1.செண்பக மரத்தின் பல மொழிப் பெயர்கள்

1.1. தமிழ்: செண்பகம் (SHENBAGAM)

1.2. பொதுப் பெயர்கள்: ஜாய் பெர்பியூம் ட்ரீ, எல்லோ ஜேடி ஆர்கிட் ட்ரீஃப்ராக்ரண்ட் ஹிமாலயன் சம்பகா (JOY PERFUME TREE, YELLOW JEDI ORCHID TREE, FRAGRANT HIMALAYAN CHAMPACA)

1.3. பிலிப்பைனிஸ்: டிசம்பகா சம்பகா, சம்பகித்தா, யலாங் யலாங் (DISAMPAKA CHAMPACA, SAMPAKITHA, YALONG YALONG)

பூஜைக்கான பூக்கள்

இந்த மரத்தின் சொந்த ஊர், இந்தியா, மாலத்தீவுகள், பங்ளாதேஷ், சைனா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேப்பாளம், தாய்லாந்து, மற்றும் வியட்நாம்.

செண்பக மரங்கள் 50 மீட்டர் வரை கூட உயரமாக வளரும்.  மரத்தின் குறுக்களவு 6 அடி இருக்குமாறு பெரியதாக அடிமரம் பருத்து வளரும்.  ஜுன்  முதல் செப்டெம்பர் வரை பூக்கும். 

செண்பக மரங்களை பெரும்பாலும் கோவில்களிலும், தனியார் தோட்டங்களிலும் வளர்க்கிறார்கள்.  திருப்பதி, வெங்கடேங்வரர் கோயில் வளாகத்தில் உட்புறம் பல செண்பக மரங்கள் உள்ளன.  கோவில்களில் அலங்காரம்  செய்யவும், திருமண வீடுகளிலும், பூஜைகளிலும் அலங்காரம் செய்ய இந்தப் பூக்கள் பயனாகின்றன, பெண்கள் ஒற்றைப்பூவாக வைத்துக் கொள்ளுகிறார்கள். ஒரே ஒரு பூ அறையில் இருந்தால் கூட அறைமுழுக்க வாசைன பின்னி எடுக்கும

ஜாய் வாசனைத் தைலம்

ஒரு காலத்தில் செண்பகப் பூக்களிலிருந்து கூந்தல் தைலங்களும், மசாஜ் எண்ணெய்களும் தயாரித்து விற்பனை செய்தார்கள்.  ஒரு பிரன்ச்சுக்கார பேஷன் டிசைனiர். ஜாய் என்ற பெயரில் வாசனைத் தைலம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார், அந்த ஜாய்தைலம், உலகம் முழுக்க உயர்ந்த தரம் கொண்ட பெர்பியூம் ஆகக் கொண்டாடினார்கள்.  இது நடந்தது 19ம் நூற்றாண்டில்.

செண்பகம் பூவின் வாசம், ஸ்ரீலங்காவில் இருக்கும் ஒருவகை புனுகுவின் வாசனைபோல உள்ளது என்று சொல்லுகிறார்கள்.  இதன் மரம் தரமானது: கட்டுமானப்பணி, மேஜை நாற்காலி, போன்ற மர்சசாமான்கள், பெட்டிகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.  ஆழ்ந்த அழகான காவிநிறமாக இருக்கும், வெட்டி எடுத்த இதன் மரங்கள்.  இதனைத் தெய்வீகமான சக்தி உள்ள மரமாகக் கருதுவதால், இதனை வெட்டுவதற்கு யாரும்  தயங்குவார்கள்.

செண்பக மரங்களை, சாலை ஒரங்கள், நர்சரிகளில், நிழல்தர, கோவில்களில், வீடுகளில், வேலிகளில் என எங்கும் வளர்க்கலாம்.  வெப்பமான மற்றும்  மிதவெப்பமான இடங்களில் வளரும்.  இதற்கு தட்டுப்பாடில்லாத சூரிய ஒளியும், கட்டுப்பாடு இல்லாத தண்ணீரும் வேண்டும்.

இமய மலையின் கிழக்குப் பகுதியில், சுமார் 3000 அடி உயரம் உள்ள இடங்கள், அசாம், பர்மா, மேற்குமலைத்தொடர்ச்சி மற்றும் தென்னிந்தியாவின் பல இடங்களில், செண்பக மரங்கள் வளர்ந்துள்ளன.

ஹம்மிங் பேர்ட்ஸ்

மனதை மயக்கும் ரம்மியமான செண்பகப் பூக்களின் வாசைன ஹம்மிஸ்பேர்ட்ங்என்னும் சிறு பறவைகளையும் பட்டாம்பூச்சிகளையும் சுண்டி இழுக்கின்றன. ஹம்மிங் பேர்ட்ஸ்எழுப்பும் இனிமையான இசை அதன் குரல் எனத்தான் நாம் நினைக்கிறோம். அது உண்மையான குரல் அல்ல அது.  அதன் சிறகுகள் படபடக்கும் ஒசைதான்.  அவ்வளவு இனிமையாக இருக்கும் அந்த படபடப்பு இசை.  அது மட்டுமல்ல குறைந்த பட்சமாக அதுதன் சிறகுகளை ஒரு செகண்டில் 12 முறை படபடக்குமாம்.  அதிகபட்சமாக 80 தடவை படபடக்கும்.  உலகிலேயே மிகவும்  சிறிய பறவை இதுதான். 

பீ ஹம்மிங் பெர்ட் அல்லது ஹெலினா ம்மிங் பேர்ட் என்பவை மிகவும் சிறியவை. ஆண் பறவையின் எடை 1.95 கிராமும்பெண்பறவை 2.6 கிராமும் இருக்கும்.  இது தேனீக்களைவிட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.  இவைதான் பறவைகளில் மிக வேகமாகப் பறக்கும் ஸ்விப்ட் என்றும்  சொல்லுகிறார்கள்.  இந்த பீ ஹம்மிங் பேர்ட் பிரேசில் நாட்டை சொந்தமாகக் கொண்டது.

விதைகள் / செடிகள்

விதைகள், போத்துகள், விண்பதியன்கள் ஆகிய முறைகள்  மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  பழங்களைத் தின்னும் பறவைகளும் விதைகளை புதிய இடங்களில் விதைத்து புதிய மரங்கள் உருவாக்க உதவுகின்றன.

ஜெயின் மற்றும் இந்து கோயல்களில் பூஜைகளில் செண்பகப் பூக்களை பயன்படுத்துவது ஐதீகம்.

பெரும்பாலான நர்சரிகளில் செண்பக மரக்கன்றுகள் கிடைக்கும்.  வாங்கி நடவு செய்யுங்கள்.  அதுதான்  சுலபம்.  இல்லையெனில் கிளைகளை  போத்துக்களை வெட்டி நடவு செய்யுங்கள்.

ஹம்மிங் பேர்ட்ஸ்

ஹம்மிங் பேர்ட்ஸ், ஒரே இடத்தில் ஹெலிகாப்டர் மாதிரி பறந்துபடி தேன்குடிக்க முடியும்.  சட்டென்று உயரே எம்பிப் பறக்க முடியும்.  கீழே இறங்கிப் பறக்கவும் முடியும்.  பின்புறமும் பறக்க முடியும்.  ஹம்மிங் பேர்ட்ஸ்ன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 1260 வறை துடிக்குமாம்.  வேலை மெனக்கிட்டு எண்ணியிருக்கிறார்கள், பாருங்கள்.

ஹெலிகாப்டர் மரம் என்ற பெயரில் ஒரு மரம் உள்ளது.  அதன் பெயர் தணக்கு மரம்.  அந்த மரம் பறக்குமா என்று கேட்காதீர்கள். அதைவிட அழகாய் பறக்கும். பறப்பது அதன் விதைகளஹம்மிங் பேர்ட்ஸ்களை ஹெலிகாப்டர் பறவை என அழைக்கலாம்.

PLEASE POST YOUR COMMENTS, REGARDS - GNANASURIA BAHAVAN (AUTHOR)

88888888888888888888888888888888888888888

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...