திவிதிவி மரம் தோல் தொழிலின் அதிர்ஷ்ட தேவதை |
(DHIVI
DHIVI TREE, LIBIDIA CORIYARIA, FABACEAE )
தாவரவியல்
பெயர் : லிபிடிபியா கொரியேரியா (LIBIDIA CORIYERIA)
பொதுப்பெயர்
/ ஆங்கிலப் பெயர் : திவிதிவி (DHIVIDHIVI)
தாவரக்குடும்பம் : ஃபேபேசியே (FABACEAE)
மரத்தின்
வகை :
அலங்கார அழகுமரம்
தோல்
பதனிட ரசாயனங்கள் வரும் வரைக்கும் தோல் பதனிடும் நாடுகளின் அதிர்ஷ்ட தேவதையாக
இருந்தது திவிதிவி மரம்.
குராகாவ்
என்னும் புதிய ஐரோப்பிய நாட்டு அரசின் தேசிய மரம் திவிதிவி. சில ஆண்டுகளுக்கு
முன்னர் வரை குராகாவ் நெதர்லாண்டஸ் நாட்டின் ஒரு பகுதி. நெதர்லேண்டஸ் என்பது
நான்கு தீவு நாடுகளின் கூட்டு.
அவை
நெதர்லேண்டஸ், குராகாவ், அரூபா, மற்றும் மார்ட்டன். இந்த நான்கும் 2010 ம் ஆண்டு முதல் தனிக் குடித்தனம் போய்விட்டன. நான்கும்
நான்கு தனி நாடுகளாகிவிட்டன.
திவிதிவி
நெற்றுக்கள் மத்திய
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
அதேபோல அரூபா நாட்டிலும் திவிதிவி மரம் பிரபலம்.
கொலம்பியா நாட்டில் ‘திவிதிவி மரத்திற்கு மூன்றுநாள் திருவிழா எடுக்கிறார்கள். அதற்கு
திவிதிவி ஃபெஸ்ட்டிவல் (DHIVI DHIVI FESTIVAL) என்று
பெயர்.
மத்திய
அமெரிக்காவில் பல நூறு ஆண்டுகளாக தோல் பதனிட திவிதிவிதான் பயன்படுத்தினார்கள். வெனிசுலாவும்
கம்போடியாவும் போட்டி பொட்டுக் கொண்டு திவிதிவி நெற்றுக்களை மத்திய அமெரிக்காவுக்கு
ஏற்றுமதி செய்தன.
இந்தியா
கூட தனது தேவை போக மிகுதியை ஏற்றுமதி செய்தது. 1950 க்குப் பின்னால் இதற்கு மாற்று வந்ததனால் திவிதிவியை அம்போ என எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.
திவிதிவி மரத்தின் பயன்கள் :
தழை,
விளைநிலங்களுக்கு தழை உரமாக இலைகளைத் தரும் மரம்.
நெற்றுக்
கனிகளிலிருந்து கருப்பு மை தயாரிக்கலாம்.
பூக்கள்
தேனீக்களுக்கு மிகவும் விருப்பமான பூ தேன்
நிறைய தருவதால்.
பட்டை டேனின் நிறைந்தது.
மரம்,
காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும்.
ஆற்றோரம் நின்று மண்அரிப்பை தடுக்கும்.
வேளாண் கருவிகள் செய்யலாம்.
இலைகள், கிளைகள், மரம், அடுப்பெரிக்க விறகாகும்.
தான் இருக்கும் இட்த்தில் தூசியினை வடிகட்டி காற்றை
தூய்மைப்படுத்தும்.
மரத்தின்
தாயகம்: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ்
ஏற்ற
மண் :
களி மண், மணல்சாரி, வடிகால் வசதி உள்ள மண்
நடவுப் பொருள் : விதை ஃ நாற்று ஃ வேர்க்குச்சி
மரம்
எங்கு வரும் ? :
சாமி
சத்தியமா இது ஆர்கானிக்
சிறு
மரம், 10 - 15 மீட்டர் உயரம் வளரும்.
இதன் தலைப் பகுதி வட்ட
வடிவமாக இருக்கும். பைசா நகர்க் கோபுரம் மாதிரி எல்லா மரமும் சாய்ந்தே வளரும். தோல்
பதனிட இந்தியா உட்பட நிறைய நாடுகளில் 1950 வரை திவிதிவி வளர்த்தார்கள். நாலரை முதல் எட்டு புள்ளி ஏழு வரை கார
அமிலநிலை உள்ள மண்ணில் நன்கு வளரும்.
15 முதல் 28
சென்டிகிரேட் வெப்ப நிலை உள்ள பகுதிகளில் நன்றாக வளரும்.“ இது
ஆர்கானிக், சாமி சத்தியமா இது ஆர்கானிக்” என்று விளம்பரங்கள் கூவிக்கூவி விற்பனை செய்யும் காலம் இது. இயற்கைக்கு கொடி
பிடிக்கும் காலம் இது.
இந்தியாவின்
பழைய சோற்றுக்கு அமெரிக்காவில் டாலர்
அந்தஸ்து கிடைத்துள்ளது. திவிதிவி மரத்திற்கு மீண்டும் ஒரு பொற்காலம் வராமலா
போகும் ?
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment