Thursday, June 1, 2023

DHARMAPURI DISTRICT RIVER VANIYARU தர்மபுரி மாவட்ட ஆறு வாணியாறு

வாணியாறு


இது தென்பண்ணையின் துணை ஆறு. சேர்வராயன் மலையில் ஏற்காட்டுக்கு அருகில் பிறக்கிறது இந்த ஆறு. இந்த ஆற்றின் நீர் வடி பகுதியில் பரப்பு 260.51 சதுர கிலோமீட்டர். இந்த ஆறு 55 கிலோமீட்டர் பயணித்து தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் உள்ள பூங்கரன்பட்டி காப்பு காட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றுடன் கலக்கிறது.

தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறு (TRIBUTARY OF THENPENNAI)

சேர்வராயன் மலை தொடரின் அழகிய சுற்றுலாத்தலம் ஏற்காடு. ருகில்தான் உள்ளது வாணியார் பிறப்பிடம். ஏற்காட்டைத் தாண்டி ஓடும் வாணியாறு வெங்கட் சமுத்திர சமவெளியை அடைகிறது. அதைத் தாண்டி அரூரையும் கடந்து, பாம்பாற்றுடன் கலந்து, சிறிது தூரத்தில் இது பெண்ணை ஆற்றுடன் கலக்கிறது. ஆக வாணி ஆறு பாம்பாறு மற்றும் பெண்ணை ஆற்றின் துணை ஆறு என்றும் இதனை சொல்லலாம்.

சேர்வராயன் மலையின் ஆறுகள் (RIVERS OF SHEVAROY HILLS)

தொப்பூர்ஆறு சரபங்காறு மற்றும் வாணிஆறு ஆகிய அழகிய மூன்று ஆறுகளும் சேர்வராயன் மலையின் ஆறுகள். சேர்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி. ஆக இந்த மூன்று ஆறுகளும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடருக்கு சொந்தமான ஆறுகள் என்றும் சொல்லலாம். 

பழங்குடி மக்கள் (PLACE OF TRIBES)

இந்த மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 4000 முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது இங்கு இன்னும் கூட பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். சேர்வராயன் மலைச்சரிவுகளின் தென்பகுதி முழுக்க செங்குத்தான மலைகளால் ஆனது. அதனால் அவற்றில் ஆறுகள் பிறக்கும் சாத்திய கூறுகள் மிகவும் குறைவு. வட சரிவுகளில் மட்டுமே ஆறுகள் பிறக்கின்றன. ஆனால் கூட இந்த ஆறுகள் மழைக்காலத்தில் மட்டுமே ண்ணீரைப் பார்க்கின்றன.

அடர்ந்த காடுகள் (DENSE FORESTS)

சேர்வராயன் மலைப்பகுதியில் இன்னும் கூட அடர்ந்த காடுகள் உள்ளன அதனால் 1859,1860 ஆம் ஆண்டு வாக்கில் சேலம் மாவட்டத்தில் ரயில் பாதை அமைப்பதற்காக இங்கிருந்த மிகவும் பழமையான மரங்களை எல்லாம் வெட்டி அழித்து விட்டார்கள். 

வாணியாறு அணைக்கட்டு (VAANIYARU DAM)

வாணி ஆற்று அணை, வாணி ஆற்றின் குறுக்காக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இது முள்ளிக்காடு என்ற கிராமத்தில் உள்ளது. முள்ளிக்காடு வெங்கடசமுத்திரம் என்ற ஊரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

பாசன வசதி (IRRIGATION SUPPORT)

இந்த மண்அணை 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 418 மில்லியன் கனஅடி. இந்த அணையின் மூலம் 10,517 ஏக்கர்  நிலம் பாசனம் பெறுகிறது. இந்த அணையின் ஆழம் 65 அடி. இதன் வலது இடது கால்வாய் மூலமாக 1238.98 நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பயனடையும் கிராமங்கள் (VILLAGES BENEFITED)

மலையனூர், கோழிமூக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், தாதம்பட்டி, ஆலாபுரம், கவுண்டம்பட்டி, ஆதனூர், வெங்கடசமுத்திரம் மெனசி பூதநத்தம் தென்கரைக்கோட்டை ஜமுனஹள்ளி, ஆகிய கிராமங்கள் இந்த அணையின் வலது இடது கால்வாய்களால் பயனடைகின்றன. 

வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள், உங்களுக்குத்தெரியுன் நான் தமிழகத்தின் ஆறுகளைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழ்ழுதிக் கொண்டிருக்கிறேன். ஆறுகள் பற்றிய புகைப்படங்கள் இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள், எனது வாட்ஸ்அப் எண் உங்களுக்குத் தெரியும் (+918526195370). வெளிநாட்டில் வசிப்பவர்களும் அனுப்பி வைக்கலாம்.

Note: After reading, kindly post your comments at the end of the article.

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...