Monday, June 12, 2023

DELIGHTFUL FLOWERS OF KALYANAMURUNGAI - அழகுப் பூமரம் கல்யாணமுருங்கை

கல்யாணமுருங்கை INDIAN CORAL TREE
Erythrina indica


சூடுகொட்டை மரம்

எனது பள்ளிப்பருவத்தில், சூடுகொட்டை மரம் என்ற பெயரிலேயே  இதைத்  தெரியும்குறும்புக்கார சிறவர்கள் பாக்கெட்டுக்களில், ஐந்தாறு கல்யாணமுருங்கைக் கொட்டைகள் இருக்கும்அதன் பெயர் சூடுகொட்டை;   சூடுகொட்டையை தரையில் தேய்த்து, நமது உடலில் எந்தப்பகுதியில் வைத்தாலும், நெருப்பில் சூடு வைத்த மாதிரி இருக்கும்இந்த சூடு கொட்டையினால் பள்ளிக்கூடத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்; சில சமயம் ஆசிரியர்கள்,  ‘செக்யூரிட்டி  செக்கப்மாதிரி, பையன்களின் பாக்கெட்டுக்களை சோதனையிடுவர்; அதையும் மீறி மாணவர்கள் ரகசியமாக சூடு கொட்டையை எடுத்துச்செல்வர்.

13. அழகுப் பூமரம் கல்யாணமுருங்கை

DELIGHTFUL FLOWERS OF KALYANAMURUNGAI 

ஜப்பானின் டீகோ மரம்

இதன் பூக்கள் இரத்த சிகப்பு நிறத்தில், பெரிய  பூக்களாக, இலைகளே இல்லாமல், மரம் முழுவதும் பூக்களால் அலங்காரம்  செய்ததுபோல்  இருக்கும்இந்த  மரங்களின் மீது காகங்கள் அதிகம் அமர்ந்து, நீண்ட நேரம் செலவு செய்யும்இந்தப் பூவில் காகங்கள், தேன் குடிப்பதாக சொல்வர்அது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.

டீகோ மரம் என்றால் ஜப்பான் மொழியில் கல்யாணமுருங்கை மரம் என்று பொருள்.

எங்கள் ஊருக்கு புயல் வருமா ? வராதா ? அதிகமாய் வருமா ? குறைவாய் வருமா ? எல்லாம் எங்களுக்கு டீகோ பூக்கள்தான் சொல்லும். டீகோ பூக்கள் உரிசன் (இளங் கோடை) பட்டத்தில்தான் பூக்கும். அதிகமா பூத்தா நிறைய புயல் வரும். குறைவா பூத்ததுன்னா புயல் குறைவா வரும். அதனால டீகோன்னா எங்களுக்கு சாமி மாதிரி. எங்க ஒக்கினாவா தீவில அரசு மரமா 1967 ம் ஆண்டு  அரசாங்கம் அறிவிச்சிருக்கு’ ‘டீகோன்னா ஜப்பான் மொழியில்; கல்யாணமுருங்கை மரம்

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். டைபூன் என்னும் சுழல் காற்றை அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வில்லை. நாங்கள் நினைப்பது அது டூரிஸ்ட்களுக்கு தொல்லையாக இருக்கக் கூடாது. அது கடல் நீர் வெபபமடைவதைத் தடுக்கும். அதனால் பவழம் (CORAL) மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களுக்கு அது ரொம்ப நல்லது.; சமீபத்தில் 1945 ல் டீகோ அதிகம் பூத்தது. எங்கள் தீவு அதிக பாதிப்பினை அடைந்தது என்கிறார்கள்.

1. பலமொழிப் பெயர்கள் 

1.1. பொதுப்பெயர்: (INDIAN CORAL TREE)

1.2. தமிழ்: கல்யாணமுருங்கை (KALYANAMURUNGAI) 

1.3. இந்தி: பங்காரா (PANKARA)

1.4. மணிப்புரி: குரா (KURA)

டீகோ பூக்கள் பூத்தன.

நமக்கு ஜனகன மாதிரி அவர்களுக்கு ஷிமா உட்டா’. அந்தப் பாட்டு கூட டீகோ பூவையும் டைபூன்இயற்கை சீற்றத்தையும் தொடர்புபடுத்தியதுதான். டீபோ நொ ஹானா கா சாகி, கசி வோ யோபி அரஷி கா கீதா (THE DEIGO FLOWERS BLOOMED, THEY CALLED THE WIND, A STORM CAME).. டீகோ பூக்கள் பூத்தது, அவை காற்றை வா என அழைத்தது, அது புயலாய் வந்ததுஇப்படித்தான் அந்த தேசிய கீதம் தொடங்குகிறது. 

மாப்பிள்ளை முருக்குஎன்பதை நாம் கேள்விப்படிருக்கிறோம்; கல்யாணமுருங்கை என்பது இதுதான் புதுப்பெயர்; காக்கா பூ மரம், சூடு கொட்டை மரம், தீவன மரம் எல்லாம் இதன் கூடுதலான  பெயர்கள். பலவகையான பயன்பாடுகளை இது தந்தாலும், பிரதானமாக இது ஒரு தீவன மரம்; கிராமங்களில், கல்யாணமுருங்கை மரம் எந்த வீட்டில் இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக ஆடுகள் இருக்கும்;   ஆடுகள் இதன் தழைகளை அல்வா போல ரசித்து ருசித்து சாப்பிடும்.

கல்யாணமுருங்கை மரங்களில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன்  மரத்தில் முள் இருப்பது, கரிய நிறத்தில் சிறு சிறு முட்கள் இருப்பது ஒருவகைமுட்களே இல்லாதது ஒரு வகை; காப்பித் தோட்டத்தில் நிழலுக்காக வளர்ப்பது இதுஇன்னொரு வகையை மிளகுக்கொடி ஏற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்; இந்த மரத்தை அழகு மரமாகவும்  பயன்படுத்துவர்.  இது 15  முதல் 17 மீட்டர் வரை உயரம் வளரும்.

வெள்ளை பூக்கள்

இந்தியாவின் சில பகுதிகளில்  வெள்ளை நிற பூக்களையுடைய மரங்கள் உள்ளன. இதன் நெற்றுக்கள் அதிக பட்சமாக அரை அடி அல்லது ஒரு அடி வரை இருக்கும்கறுப்பு நிறத்தில் இருக்கும்இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த ஒரு கவர்ச்சிகரமான நிறத்தில், இருக்கும் இதன் விதைகள்விதைகளைப் பார்ப்பதற்கு பெரிய, பெரும்பயறு போல  இருக்கும். இதன் தழைகளில்  புரதம் 16.37 சதம்மாவுப் பொருட்கள்  37.12 சதம், மற்றும் கொழுப்பு  சத்து  5.38 சதமும்  அடங்கியுள்ளதுஆடுகள் மாடுகள் என்று அனைத்து விதமான கால்நடைகளுக்கும்  தீவனமாக அளிக்கலாம்.

இம்மரம் வலுவில்லாதது; சரிவர எரியாது; ஆனால், தீக்குச்சிகள் செய்யலாம்பெட்டிகள் செய்யலாம்இதர தட்டு முட்டு சாமான்கள் செய்யலாம்காகிதக்குழம்பு  தயாரிக்கலாம்;   படகுகள், தோணிகள்கட்டுமரங்கள் செய்யலாம்.

இந்த மரங்கள் கிராமங்களில், வயல்களில் வேலியாகவும், குளம் மற்றும்  குட்டை, ஏரிக்கரைகளில், வீட்டுத் தோட்டங்களில் வளர்ந்திருக்கும். 

நகரங்களில் அழகு மரமாக, வீடுகளின் முகப்பில், தோட்டத்தில், சாலை ஓரங்களில், பூங்காக்களில், பெரும் கட்டிட வளாகத்துக்குள் இதனை  நட்டும்  வளர்க்கலாம்.

ஒரு கிலோ எடையில் சுமார், 2,000. விதைகள் இருக்கும்இதன் முளைப்புத்திறன் 50 முதல் 60 சதம்;   விதைகளை நீரில் ஒரு நாள் ஊற வைத்து விதைத்தால்நன்கு முளைக்கும். ஆறுஅடி நீளமுள்ள  போத்துக்களையும் வெட்டி நடலாம்.

தீவனத்திற்காக  நடும்போது, நெருக்கி நட்டு, அவ்வப்போது தழைகளை அரக்கி, கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

இதன் இலைகள் மூன்றிலைகளைக் கொண்டு  கொத்து கொத்தாக வளரும்; இந்த மூன்று இலைகளும் மும்மூர்த்திகளை  குறிப்பதாக சொல்வர்; வலப்பக்கம் உள்ள இலை சிவபெருமானையும், நடுப்பக்கம் உள்ள இலை பிரம்மாவையும், இடப் பக்கம் உள்ள இலை விஷ்ணுவையும் குறிக்கும்.

ஆடுமாடுகளுக்கென உருவாக்கும் மரத் தோப்புகளிலும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அழகு தரும் மரமாகவும் வளர்க்கலாம்.

விதைச் சேகரிப்பு: அக்டோபர் முதல் நவம்பர் வரை.

தாயகம்: இந்தியா, ஆப்ரிக்காவின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகள், வடக்கு ஆஸ்திரேலியா, இந்துமாக் கடலின் தீவுகள், மேற்கு பசிபிக் கடற் பகுதி மற்றும் பீஜித் தீவின் கீழைப் பகுதிகள்.

சில சிறப்புச் செய்திகள்

நொதிக்க வைத்த இறைச்சியை மூடுவதற்காக இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள், வியட்நாம் நாட்டில்.

மருத்துவம்:

இதன் பட்டையை அரைத்து கூழாக்கி கைகால் மூட்டுக்களில் தடவ ருமாட்டிசம்என்று சொல்லப்படும் மூட்டுவலி குணமாகும். இதன் இலைகளிலிருந்து தயார் செய்யப்படும் டிகாக்ஷன்ஐ குடித்துவர மூட்டுவலியும் வீக்கமும் குணமாகும்.

இதன் இலை மற்றும் பூக்களிலிருந்து தயார்செய்யும் மருந்துப் பொருட்கள் ஈரல் சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

இதன் இலைச்சாறு வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும். இலைகளை கீரையைப்போல சமைத்து சாப்பிடுவதால் ரத்தத்தில் கேடுதரும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். இதன் இலைகளில் தேநீர் தயாரித்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

உடல் எடையைக் குறைக்கும்

க.மு. பட்டைக் குடிநீரை தினசரி குடித்து வந்தால் ஆச்சரியப்படும்படியாக உடல் எடையைக் குறைக்கும். இதன் பட்டையைத் தூள் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, போதுமான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினசரி ஒரு கப் குடித்துவர விரவாக உங்கள் உடல் எடை குறைவதைக் காணலாம்.

இதன் இலைச் சாற்றை காதுகளில்விட காதுவலி பூரணடாக குணமாகும். இலை மற்றும் பட்டைச்சாறு பெண்களின் கருப்பையை வலுவுடையதாக மாற்றும்.

க.மு. இலைகள் மற்றும் மற்றும் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதன் மூலம் உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களைக் கழுவி சுத்தம் செய்ய, அவை விரைவாக குணமாகும்.

இவை தவிர ஆண்மைப் பெருக்கியாகவும், ஈரல் மற்றும் மண்ணீரல் பிரச்சினைகள், நாளபட்ட புண்கள், தசை மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள், மூளை ஆரோக்கியம் ஆகியவற்றிற்கும் க.மு. அற்புதமான மூலிகை.

PLEASE POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

8888888888888888888888888888888888

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...