புளிமாங்காய் |
புளிமாங்காய் > தமிழில் புளிச்சக்காய் என்றும் சொல்லும் இந்த
மரம் வீட்டுத் தோட்டங்களில் நடுவதற்கு ஏற்றது, காய்கள் பலா மரம் போல
மரத்திலும்> மரத்தின் கிளைகளிலும் காய்க்கும்> புளிமாங்காய் காயினை பிரதானமாக> காய்கறி மற்றும் பழங்களைப்போல பயன்படுத்தினாலும்> அதன் மருத்துவ குணங்களைப் பட்டியலிட்டால்> அது முக்கியத்துவம்
வாய்ந்த மூலிகையாகவும் உள்ளது புரியும்> இத்த மரத்தின்
கட்டைகள்> பெரும்பாலான மரச்சாமான்கள் செய்யவும்
பயன்படுத்தலாம். மொத்தத்தில் இது ஒரு பலவகை
பயன் தரும் மரம்.
பொதுப் பெயர்கள்:
பிலிம்பி> கூகூம்பர் ட்ரீ(BILIMBI,
CUCUMBER TREE)
தாவரவியல் பெயர்:
அவெர்ஹோயா பிலம்பி (AVERRHOA
BILIMBI)
தாவரக் குடும்பம்
பெயர்: ஆக்சாலிடேசி (OXALIDACEAE)
தாயகம்:
பல மொழிப் பெயர்கள்: (VERNACULAR NAMES)
தமிழ்: புளிமா
புளிமாங்காய்> விளி> புளிச்சக்காய் மரம் (P PULIMA, PULIMANGAI, VILI, PULICHAKAI MARAM)
இந்தி: பிளிம்பி (BILIMBI)
மணிப்புரி: ஹீனாஜம் (HINAJAM)
மராத்தி: பிளாம்பி (BILAM BI)
மலையாளம்: விலும்பி (VILUMBI)
தெலுங்கு: கொம்ம
ரேக்கு (KOMMA REKKU)
கன்னடா: பெலாம்பு (BELAMBU)
கொங்கணி: பிம்புல் (BIMBUL)
அர்nஐன்னொ: பெப்பினோ டி
இண்டியாஸ் (PEPINO
D INDIAS)
பிரேசில்: லுனா வோ டி
சீனா (LUNA VO DI SINA)
கம்போடியா: டிரலாங்
டாங் (TRALON TANG)
கிபறபா: கேமியாஸ் (CAMIYOS)
nஐர்மனி: பிளம்பிபாம் (BILAMBIBOM)
ஹெய்ட்டி:
மளிம்ப்ளின் (MALIMBLIN)
இந்தோனேசியா:
பாலிம்பிங் (BALIMBING)
ஜமெய்கா: பிம்ளிங்
பிளம் (BIMBLING PLUM)
மலேசியா: பெலிம்பிக்
அசாம்(BELIMBIC
ASAM)
மியான்மர்: ஷயாம் (SHAYAM)
பிலிப்பைன்ஸ்: ஈபா (IPAA)
தாய்லாந்து: காலிங்
பிரிங் (CALING PIRING)
புளிச்சக்காய் அல்லது
புளிமாங்காய்
‘பிளிம்பி’ என்று சொல்லப்படும்
இந்த மரத்தின் தமிழ்ப் பெயர் புளிச்சக்காய் அல்லது புளிமாங்காய். 5 முதல் 10 மீட்டர் வரை உயரமாக
வளரும் மரம். இதன் பழங்கள் 3 – 4 அங்குல நீளம்
உள்ளவையாக இருக்கும். பார்ப்பதற்கு ‘மினி சைஸ்’ வெள்ளரிக்காய் மாதிரி
இருக்கும்: ஆதனால் தான் இதன் பெயர் கூகூம்பர் ட்ரீ என்றும் சொல்லுகிறார்கள். இந்த பெயரில் நிறைய மரங்கள் இருப்பதால் நாம் புளிமாங்காய் என்றே அழைப்போம்.
புளிமாங்காய் காய்கள் பலா மரம்
போல மரத்திலும்> மரத்தின் கிளைகளிலும் காய்க்கும்: கொத்துக்
கொத்தாய்க் காய்க்கும். இதன் காய்கள்
புளிப்பு சுவையாக இருக்கும்: காய்கள் மிகுந்த சதைப்பற்று உடையதாக இருக்கும்: சாறு
நிறைந்திருக்கும்.
வீட்டுத் தோட்ட மரம்
வீட்டுத்
தோட்டங்களில் நடுவதற்கு ஏற்ற கையடக்கமான இந்த மரத்தை தென்னந்
தோப்புகளிலும் நடலாம். அங்ககச் சத்துக்கள்
உடைய வடிகால் வசதி கொண்ட> ஈரச் செழிப்புடன்
கூடிய நிலங்களிலும் வளர்க்கலாம். நட்ட பின் ஏழாம்
ஆண்டு வாக்கில் காய்க்கத் தொடங்கும்: இதை சாகுபடி செய்ய வேண்டுமானால் நிறைய
தண்ணீர் வேண்டும்.
தாய்லாந்து மற்றும்
சிங்கப்பூரிலும் புளிமாங்காய் மிகவும் பிரபலமானது:
பிலிப்பைன்ஸ்> பங்களாதேஷ், மியான்மர்> ஸ்ரீலங்கா> மற்றும் இந்தியா ஆகிய
இடங்களில் புளிமாங்காய் அதிகம் பரவியுள்ளது: இதன்
தாயகம் ‘மொலுக்காய்’ என்ற இடம்.
வெப்ப மண்டலப்
பகுதிகளில் வளரும் மரம் என்றாலும்> இதற்கு ஆண்டு
முழுவதும் பரவலாக மழை பெய்ய வேண்டும்.
இதன் புளிப்புச் சுவை
உலகம் முழுவதும் பிரபலமானது, : உடல்
ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
மூலிகை
மரம்.
இதனை சாப்படுவதால்
சளித் தொல்லை சரியாகும். உடல் சூட்டினைத் தணிக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைப் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். உடல் வலிக்கு
நிவாரணம் தரும். இருமலை குணப்படுத்தும். மூட்டுவலி> கீல் வாதம்
மற்றும்: அக்கியை குணப்படுத்தும்.
புளிமாங்காயிலிருந்து எடுக்கும் ஜூஸ் குடித்தால் சுறுசுறுப்பும்
புத்துணர்ச்சியும் தரும். காய்களை மாங்காயைப்
பயன்படுத்துவதைப்போல பல வழிகளில் சமையலிலும் பச்சையாகவும்
உபயோகப்படுத்தலாம்.
புளிமாங்காய் காயினை பிரதானமாக> காய்கறி மற்றும் பழங்களைப்போல பயன்படுத்தினாலும்> அதன் மருத்துவ குணங்களைப் பட்டியலிட்டால்> அது முக்கியத்துவம்
வாய்ந்த மூலிகையாகவும் உள்ளது புரியும்.
பாலியல் நோய்களுக்கு> சிகிச்சை
தோலின் மீது ஏற்படும்
அரிப்பினை குணப்படுத்த> இதன் இலைகளைக்
கூழாக்கி> அந்த இடங்களில் தடவ வேண்டும்: மலேஷிpயாவில்> பாலியல் தொடர்பான நோய்களுக்கு> இதன் இலைகள் மூலம்
சிகிச்சை அளிக்கிறார்கள்:
ஜன்னி, தோஷம் மற்றும்
இருமலுக்கு சிகிச்சை தரவும் இதன் இலைகள் பயனாகின்றன: ஊறுகாய் போட ஊறவைத்த புளிமாங்காய் காய்களைக் கூழாக்கி
உடலில் பூச காய்ச்சல் போன இடம் தெரியாது. காய்களிலிருந்து தயாரிக்கும் மணப்பாகுவும் (FRUIT
SYRUPP)
உடல் ஜுரPத்தை குணமாக்கும். எருவாயில் ஏற்படும் ரத்தப்போக்கையும் இதன் காய்கள் சரி
செய்யும்.
புளிமாங்காய் ஆண்டு முழுவதும்
கிடைக்கும்
இத்த மரத்தின்
கட்டைகள்> பெரும்பாலான மரச்சாமான்கள் செய்யவும்
பயன்படுத்தலாம்.
புளிமாங்காய் டாபி> பிளிம்பி ஸ்குவாஷ், புளிமாங்காய் கறி> புளிமாங்காய் ஒயின் ஆகியவை இதன் காயிலிருந்து தயாரிக்கும் பிரபலமான உணவுப்
பொருட்கள்.
அறுவடை செய்த புளிமாங்காய் காய்களை
குளிர்ச்சியான சேமிப்புக் கிடங்குகளில் 2 முதல் 3 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்: புளிச்சக்
காய்களை உலரவைத்து வத்தல் போட்டும் வைத்துக் கொள்ளலாம்: தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். புளிமாங்காய் காய்கள் ஆண்டு
முழுவதும் கிடைக்கும். ஆன்லைன் மார்கெட்டுகளில்
கூட வாங்கலாம்.
மரங்களில் பறித்த
காய்களை அப்படியே பச்சையாக சாப்பிடக் கூடாது. அதிகம் காய்த்தால் வத்தல்
போட்டு வைத்துக் கொள்ளலாம். புளிச்சக் காய்களை
சர்க்கரைக் கரைசலில் போட்டு வைத்தும் சேமித்து வைக்கலாம்.
விதைகள் மற்றும்
கிளைகள்
விதைகள் மற்றும்
கிளைகள் மூலம் புதிய கன்றுகளை வளர்த்தெடுக்கலாம். வெது வெதுப்பான வெப்ப மண்டலப் பகுதிகள் ஏற்றவை: கடல் மட்டத்திற்கு மேல் 1200 மீட்டர் உயரம் வரை
வளரும். பகல் நேர வெப்ப நிலை 23 முதல் 30 செ.கி. வரை
இருந்தால் நன்கு வளரும்.
பூக்கள் பெரியவை: 2.5 செ.மீ வரை நீளமாக
இருக்கும்: கவர்ச்சிகரமான ஊதா நிறம் கலந்த செந்நிறப் பூக்களாக மலரும். அநேகமாய் கிளை நுனிகளில் கொத்துக் கொத்தாகப் பூக்கும். ஒரு பூங்கொத்தில் அதிகபட்சம் 60 பூக்கள் வரை பூக்கும்.
மூலிகை
சிகிச்சையே முதல் கட்ட சிகிச்சை
மூலிகைகளைக் கூட
இன்று ஆன்லைனில் வாங்கலாம். அப்படிப்பட்ட
இன்டர்நெட் யுகம். இந்த காலகட்டத்தில் கூட> உலக அளவில் 80 சதவித மக்கள் மூலிகை
சிகிச்சையே பெறுகிறார்கள்: இந்தியாவில் மொத்தம் 7000 தாவரவகை மூலிகைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன:
அவற்றில் ஒன்றுதான் நமது புளிமாங்காய்.
WWW.DOCUMENTS.COM
– ANTILMMPHOMA ACTIVITY OF AVERRHOA BHMBI FRUIT EXTRACT IN SWISS ALBINO MICE –
WWW.AYURWIKI.ORG/
‘AVERRHOA BILIMBI’
WWW.GLOSBE.COM/
“AVERRHOA BILIMBI”.
WWW.OLYFOODS.NET/
“ AVERRHOA BILIMBI”
WWW.WHATISCALLED.COM
/ BILIMBI IN TAMIL (661 words)
PLEASE
PST A COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)
9999999999999999999999999999
No comments:
Post a Comment