Monday, June 19, 2023

COSMETIC TREE OF TAMILNADU ORANGE JASMINE 47. தமிழ் வாசனை மரம் வெங்காரை

தமிழ் வாசனை மரம்
வெங்காரை


வெங்காரை, ஆண்டு முழுவதும் பூக்கும், காய்க்கும், பழுக்கும், மரம், இந்தியா, சைனா, மியான்மர், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவியுள்ள மரம், வீட்டு முகப்பு, தோட்ட முகப்பு, சாலை முகப்பு, அனைத்திற்கும் அழகூட்டும் அற்புதமான அலங்கார அழகு மரம், இதன் இலைகள், பூக்கள், மரக்கட்டைகள், வேர்க்கட்டைகள்  இப்படி இந்த மரத்தை அடி முதல் முடிவரை அனைத்து பாகங்களிலும் வாசனை கூடிய அழகு சாதனப்பொருட்களை வியாபார ரீதியாக தயாரிக்கிறார்கள், தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பரவி இருக்கும் தமிழ் வாசனை மரம்.

தமிழ்ப் பெயர் :-- வெங்காரை, காட்டுகறிவேப்பிலை, கடற்கொஞ்சி (VENGKARAI, KATTUKARIVEPPILAI, KADARKONJI)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :--   ஆரஞ்சு ஜேஸ்மின், சைனிஸ் பாக்ஸ் (ORANGE JASMINE, CHINESE BOX)

தாவரவியல் பெயர்  :--    முராயா பேனிகுலேடா (MURRAYA PANICULATA)

தாவரக்குடும்பம்  :--   ரூடேசி  (RUTACEAE)

மரத்தின் வகை  :--  அலங்கார அழகுமரம்

தாயகம்: தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா

பல மொழிப்பெயர்கள்:

இந்தி: காமினி (KAMINI)

மணிப்புரி: காமினி (KAMINI)

தெலுங்கு: நாககொலுங்கு (NAGAKOLUNGU)

மராத்தி: குன்டி (KUNTI)

கன்னடா: காடு (KADU)

மலையாளம்: மாரமுல்லா (MARAMULLA)

நேப்பாளி: காமினிபூல் (KAMINIPOOL)

மீசோ: முங்க்டி (MUNGTI)

பரவியிருக்கும் இடங்கள்

இந்த வெங்காரை மரங்கள் இந்தியா, சைனா, மியான்மர், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வெங்காரை மரங்களைப் பார்க்கலாம். ஆந்திராவில் சித்தூர், விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும், கர்நாடகாவில் கோலார்  மாவட்டத்திலும், கேரளவில் அனைத்து மாவட்டங்களிலும், மகாராஷ்ட்ராவில் எல்லா மாவட்டங்களிலும் இந்த மரங்கள் பரவி உள்ளன.

மரத்தின் பயன்கள்:--

தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும்,  கால்நடைகளுக்கு தீவனமாகும்   நறுமணம் மிக்க இலைகளைத் தரும் மரம். கரும்பச்சை இலைகள் செறிந்து, வெண்ணிறத்தில், பளிச்சென்று வெள்ளைப் பூக்களை  முழுவதும் ஆண்டு முழுவதும் பூக்களை போர்த்தியபடி நின்று வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்.

உறுதியான மரங்கள்

இதன் மரங்கள் உறுதியானவை, கடைசல் வேலைகள் செய்யலாம், சிற்பங்கள் செய்யலாம், மரச் சாமான்கள் செய்யலாம், மரப்பொடி அழகு சாதனப் பொருட்கள் தாரிக்க உதவுகிறது.

ஆண்டு முழுவதும் பூக்கும்

ஆண்டு முழுவதும் பூக்கும், காய்க்கும், பழுக்கும், ஆயினும் மார்ச் ஏப்ரல், மற்றும் ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் அதிகம் பூக்கும். பார்க்க மல்லிகை போல வெள்ளை வெளேரென இருக்கும்.

தேனீக்களும், பழந்தின்னி பறவைகளும் (FRUGIVORUS BIRDS) எப்போதும் இந்த வெங்காரை மரத்தை சுற்றிச்சுற்றி வரும், பழங்கள், காய்கள், பூக்கள், இலைகள், தண்டுகள் இவற்றை மட்டுமே சாப்பிடும் பறவைகள் மற்றும் சைவப்பிராணிகளை, சைவப் பறவாய்களை ஆங்கிலத்தில் ஃபுரூகிவோரஸ் (FRUGIVORUS) என்கிறார்கள்.

வெங்காரை பழங்கள்

வெங்காரையின் கனிகள் கவர்ச்சிகரமானவை, பார்த்ததும் பறித்து சாப்பிடவேண்டும் எனத் தூண்டும் நிறம், சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறப் பழங்கள், சிறிய கோலிக்குண்டுகள் மாதிரி, 12 முதல் 14 மி.மீ அளவில் இருக்கும்.

அங்கு வேண்டாத விருந்தாளி

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இயற்கையாக பரவிக் கிடக்கிறது, குயின்ஸ்லாந்தின் தென் கிழக்குப்பகுதியில் வெங்காரை என்று சொன்னால் பின்னங்கால் பிடரியில் பட பயந்து ஓடுகிறார்கள், இங்கு நாம் சீமைக்கருவையை பார்த்து பயப்படுவது மாதிரி. பசுஃபிக் தீவுகளிலும் இதே நிலைதான்.

அழகு சாதனப்பொருட்கள்

இதன் இலைகள், பூக்கள், மரக்கட்டைகள், வேர்க்கட்டைகள்  இப்படி இந்த மரத்தை அடி முதல் முடிவரை அனைத்து பாகங்களிலும் வாசனை கூடிய அழகு சாதனப்பொருட்களை வியாபார ரீதியாக தயாரிக்கிறார்கள்.

தாணகா பவுடர் வாங்குங்கள்

இப்போது நிறையபேர் பர்மாவிலிருந்து வரும் தாணகா பவுடரை (TANAKA POWDER) வாங்கி தங்கள் மனங்கவர்ந்தவர்களுக்கு பரிசாக தருகிறார்கள்நமது முகத்தை பொலிவுடன் காட்டுவதில் முன்னோடியான  பவுடர் தாணகா. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை சிவப்பழகு மற்றும் வெள்ளழகு கிரீம்கள் அத்தனையும் தாணகா விடம் பிச்சை வாங்க வேண்டும்.

தாணக்கா பவுடர், கிரீம் ஆகியவற்றை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே இரண்டாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இது ஏறத்தாழ சந்தனக்கட்டையை இழைத்தால் வரும் வாசனையே வருகிறது என்றார்கள்

கொசுறு:

நமது முகத்தை வசீகரமாக வைத்துக்கொள்ள நமது வீட்டுத்தோட்டத்தில் ஒரு ஐந்து சென்ட் இடத்தில் அடர்வனம் வைத்து  நாமே தயாரிக்கலாம் தாணகா பவுடர், ஒரு பிசினஸ் கூட தொடங்கலாம் ! அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது !

FOR FURTHER READING

WWW.EN.M.WIKIPEDIA / MURRAYA PANICULATA

WWW.FLOWERSOFINDIA.NET / MURRAYA PANICULATA

WWW.TA.M.WICTIONARY.ORG / MURRAYA PANICULATA – KOLKATA

WWW.INDIABIODIVERSITY.ORG / MURRAYA PANICULATA

WWW.SITES.GOOGLE.COM / MURRAYA PANICULATA

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...