Monday, June 19, 2023

COSMETIC AND HERBAL TREE YLANAG YLANG 42. அழகு சாதன மருந்து மரம் கருமுகை

 

அழகு சாதன மருந்து மரம்
கருமுகை

கருமுகை ஒருவகையான  மனோரஞ்சிதப் பூ வகை, ஆனால் இதன் பெயர் மர மனோரஞ்சிதம், நமக்குத் தெரிந்த மனோரஞ்சிதம் கொடி வகை அல்ல இதுசீத்தா பழ வகையைச் சேர்ந்தது, சிறிய மரமாக 12 மீட்டர் உயரமாக வளரும். இதன் தழை நிலங்களுக்கு உரமாகிறது. சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும். வாசனைத் திரவியங்கள் தயாரிப்புத் தொழிலில் அதிகம் பயனாகிறது. பாலுணர்வுத் தூண்டியாகவும், நறுமண அழகு சாதன பொருட்களும், மருந்துப் பொருட்களும், தயார் செய்ய உபயோகமாகிறது.

தமிழ்ப்பெயர்: கருமுகை, மர மனோரஞ்சிதம், காட்டு சம்பங்கி (KARUMUGAI, MARA MANORANJITHAM, KATTUSAMPANGI)

பொதுப்பெயர்  ஆங்கிலப் பெயர் : யலாங் யலாங்  (YLANG YLANG)

மரத்தின் தமிழ்ப் பெயர் : கருமுகை (KARUMUGAI)

தாவரவியல் பெயர் :    கேனாங்கா ஓடோரேட்டா (GANANGA ODORATA)

தாவரக்குடும்பம் : அனோனேசி (ANNONACEAE)

மரத்தின் வகை : அலங்கார அழகுமரம்

பலமொழிப் பெயர்கள்

மராத்தி: சாப்பி (CHAPE)

தெலுங்கு: அபூர்வ சம்பகாமி, சேட்டுசம்பங்கி, கானங்கா, காமண்டா மரா  (ABURVA CHAMPAGA, CHETTU SAMPINGI,KANANGA, KAMANDA MARA)

கன்னடா: அபூர்வ சம்பகா, காட்டி சம்பங்கி (ABURVA CHAMPAGA, KATTE SAMPANGI)

தாயகம்: பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, நியூகினியா, சாலமன் தீவுகள், ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகியவை.

வேகமாக வளரும் மரம்

சீத்தா பழ குடும்பத்தைதைச் சேர்ந்த மரம் இது, அதிகபட்சமாக 12 மீட்டர் அல்லது 39 மீட்டர் வரை உயரமாக வளரும். இதன் பூக்கள் சீத்தா மரங்களின் பூக்கள் மாதிரியே இருக்கும். பச்சை, வெள்ளை, மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். சட்டென்று இலைகளுக்கும் பூக்களுக்கும் வித்தியாசம் தெரியாது. இது அனோனேசி குடும்பப் பண்புகள்.

பரவியிருக்கும் இடங்கள்

இந்தியாவில் ஆந்திரா, பீகார், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.

உலக நாடுகளில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வட அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்காவில் பரவியுள்ளது.

 அலங்கார அழகுமரம் 

இதன் தழைகள் விளை நிலங்களுக்கு தொழு உரமாகும். பச்சை இலைகளின் சந்துக்களில் பசும் பொன் நிறத்தில் பளிச்சென்று பச்சை சாயை உடைய மஞ்சள் பூக்களை தந்து, வீட்டு முகப்ப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்.

பூக்கள் : தேனீக்களுக்கு, பச்சை மஞ்சள் நிற மலர்க் கோப்பையில்  தேன் தரும். வாசனைத் தைலம், முகப்பவுடர், வாசனை திரவியங்கள், மற்றும் நறுமண அழகுசாதனப் பொருட்கள் செய்யலாம், மருத்துவப் பயனும்  உடையது.

 மணமக்களின் படுக்கையை அலங்கரிக்கும்

புதிதாக  திருமணமானவர்களுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்வது என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். சமூகத்திற்கு சமூகம் வேறுபடும். மணமக்களின் படுக்கையை பூக்களால் அலங்காரம் செய்வது என்பது இந்தியாவில் உள்ள பரவலான ஒரு வழக்கம். ஆனால் இந்தோனேசிய  நாட்டில் மணமக்களின் படுக்கையை அலங்கரிக்கச் கருமுகைப் பூக்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

மரத்தின் பயன்கள் :

தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும்;   பச்சை இலைகளின், சந்துக்களில், பசும்பொன் நிறத்தில், பளிச்சென்று பச்சை சாயையுடைய மஞ்சள்பூக்களைத் தந்துவீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு மரம்.

மருத்துவப் பயன்

 மருத்துவப்பயன் பூக்களிலிருந்து வாசனை எண்ணெய் இறக்குகிறார்கள். இது  ரத்த அழுத்தத்தை குறைக்கும் காய்ச்சலையும் குணப்படுத்தும். பசுமையான பூக்கூழ் ஆஸ்துமாவையும் உலர்ந்த பூக்கள் மலேரியாவையும், தோலின் மீது ஏற்படும் எரிச்சலையும் கட்டுப்படுத்துகிறது. பாலியல் உணர்வுத் தூண்டியாகவும், ஆண்மை பெருக்கியாகவும், பாலியல் ரீதியான மன நோய்களையும், தோல் சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் உள்ளது.

பூக்கள் தேனீக்களுக்கு தேன் தருவதோடு, வாசனைத் தைலம், முகப் பவுடர், வாசனைத் திரவியங்கள், மற்றும் நறுமண அழகுசாதனப் பொருள்களும் செய்ய கச்சாப் பொருளாக உள்ளது.

மகாசர் எண்ணை ஐரோப்பாவின் பிரபலம்

1800 முதல் 1900 வரையான காலகட்டத்தில், ஐரோப்பாவின் பிரபலமான எண்ணெய் மகாசர் எண்ணை (MACASSAR OIL). மேற்கு ஐரோப்பிய இளைஞர்கள் எல்லோரும் தங்கள் தலைமுடிக்கு இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இதில் சேர்க்கப்பட்ட முக்கியமான எண்ணை இந்த கருமுகையில் எடுத்த எண்ணைதான்.

 இந்த மகாசர் தலைமுடி எண்ணெயை பிரபலப் படுத்தியவர் யார் தெரியுமா ? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் ! அவர் அடிப்படையில் ஒரு ஐரோப்பிய முடிதிருத்தும் தொழிலாளி. சாதாரண தொழிலாளி இல்லை. ஒரு புத்திசாலி தொழிலாளி. அவர் பெயர் அலெக்சாண்டர் ரவ்லண்ட்.

மனதை மயக்கும் அற்புதமான இந்த கருமருது எண்ணெயை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். இந்த கருமுகை எண்ணெயோடு வேறு சில எண்ணெய் வகைகளை சேர்த்தார். புதியதொரு எண்ணையை உருவாக்கினார். அதற்கு மசாகர் எண்ணெய்  என்று பெயர் வைத்தார். அந்த காலத்தில் ஐரோப்பிய இளைஞர்களை அந்த வாசனை எண்ணெய் வளைத்துப் போட்டது. முடிதிருத்தும் தொழிலாளி, மசாகர் எண்ணெய் கம்பெனி முதலாளி ஆனார்.

அதன் பின்னர், 1888 ல் இந்தமகாசர்தலைமுடி எண்ணைக்கு ரவ்லேண்ட் அண்ட் சன்ஸ்என்ற பெயரில் பேடண்ட் வழங்கப்பட்டது.

கொசுறு

மகாசர் எண்ணெயின் மகத்துவம் பற்றி உலகப்புகழ்மிக்க கவிப்பெருமகனார் பைரன் கூட தனது கவிதைகளில் எழுதி இருக்கிறாராம்.

கிரேக்க நாட்டின் சுதந்திரப் போரில் தனது 36-வது வயதில் போர் வீரனாக மரித்தாலும் என்றும் புகழ்மிக்க கவிஞனாக உயர்ந்திருக்கும் ஆங்கிலக் கவிஞர் பைரன் தனது கவிதைகளில் கருமுகை எண்ணெய்யின் மகத்துவம் பற்றி எழுதி இருப்பது ஆச்சரியமான செய்தி.

FOR FURTHER READING

WWW.EN.M.WIKIPEDIA.COM – CANANGA ODORATA

WWW.HINDAWI.COM – TRADITIONAL USES, PHYTO CHEMISTRY, AND BIO ACTIVES OF CANANGA ODORATA

WWW.TROPICAL.THEFERNS.INFO - CANANGA ODORATA – USEFUL TROPICAL PLANTS

WWW.CABI.ORG - CANANGA ODORATA (YALANG YALANG)

WWW.SCIENCEDIRECT.COM - CANANGA ODORATA – AN OVERVIEW

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...