Saturday, June 17, 2023

COASTAL SHE OAK 26. சவுக்குமரம்

 

பந்தல்மரம் சவுக்கு மரம்

பொதுப் பெயர்கள்: கோஸ்ட் ஷி ஒக், பீச் கேசுவரினா, பீச் ஒக், பீச் பைன்விஷ்;லிங் ட்ரீ, ஹார்ஸ் டெய்ல் ஷி ஓக், ஹார்ஸ் டெய்ல் பீஃப் வுட், ஹார்ஸ் டெய்ல் ட்ரீ, ஆஸ்ட்ரேலியன் பைன், பிலாலோ ட்ரீ, அகோஹோ (COAST-SHE OAK, BEACH CASUARINA, BEACH OAK, BEACH PINE, WHISILING TREE, HORSE TAIL SHE OAK,, HORSE TAIL BEEF WOOD, HORSE TAIL TREE, AUSTRALIAN PINE, FILAO TREE, AGOHO)

தாவரவியல் பெயர்: கேசுவரினா ஈக்குவசெட்டிபோலியா (CASUARINA EQUISETIFOLIA)

தாவரகுடும்பம்: கேசுவரினேசி (CASUARINACEAE)

தாயகம்: தென் கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா, பசிஃபிக் தீவுகள்.

சவுக்கு மரத்தின் பல மொழிப் பெயர்கள்.

தமிழ்: சவுக்கு (SAVUKKU)

இந்தி: ங்லிசாரு (JUNGLISARU)>

மராத்தி: சுரு (SURU)

பெங்காலி: பிலாட்டி-ஜாவ் (BELATI JHAU)

கன்னடா: சுருகிமரா (SURIGI MARA)

மலையாளம்: சாம்பிராணி (SAMPIRANI)

தெலுங்கு: சாருகுடா (SARUGUDA)

உருது: புகோ (JAHBUKO)

கொங்கணி: பிரம்கி சரோ (PHIRAMGI SARO)

சவுக்கு ஒரு பசுமை மாறா மரம்

சவுக்கு ஒரு பசுமை மாறா மரம்.   மரம் நூறடிக்கும் மேலாக உயரமாக வளரும். கிளைகள் சிம்புகளாக வளரும். சிம்புகளை போர்த்தியபடி வளரும் ஊசிபோன்ற இதன் இலைகள். ஒவ்வொரு சிம்பும் ஒரு குதிரைவால் மாதிரி இருக்கும். இதன் காய்கள் பைன்மர கோன்கள் போல இருக்கும். இதில் எண்ணற்ற விதைகள் இருக்கும்

சவுக்கு மரத்தின் தாயகம்> எனப் பார்த்தால் ஒரு நீண்டப் பட்டியல் போட வேண்டி இருக்கும்.  அவை பர்மா, வியட்நாம், மலேஷியா, பிரென்ச் பாலினேசியா, மடகாஸ்கர்,  நியூ காலிடோனியா, வானாட்டு, ஆஸ்திரேலியா, புரூனே, மடகாஸ்கர்,  வட அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா, ஆகிய பகுதிகளில் சவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புனோரிடா, ஆப்ரிக்கா, மற்றும் பிரேசில் போன்ற இடங்களில் சவுக்கு என்று சொன்னால்  காத தூரம் ஓடுகிறார்கள். தானாக, வேகமாக யார் ஒத்தாசையும் இன்றி பரவி வளரும் மரம் (INVASIVE SPECIES) என்றால்  பயப்படுகிறார்கள்.  நாம் சீமைருவையைப் பார்த்து பயப்படுவது மாதிரி. 

பந்தல் மரங்கள்

சவுக்கு பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்  இப்படி சொல்லலாம். அது ஒரு பந்தல் கால் ஸ்பெசலிஸ்ட், பந்தல் போட வேண்டும் என்றால், அவர்கள் உச்சரிக்கும் முதல் வார்த்தை சவுக்கு. 

தமிழ்நாட்டைப் பொருந்தவரை பந்தல் என்றால் நான்கு மரங்களை விரல் நீட்டலாம்.  அவை சவுக்கு, தைல மரம்> மூங்கில் மற்றும் சூபாபுல்.

இதில் முல் சாய்ஸ் மூங்கில், ஆனால் விலை மூங்கில் மாதிரியே ரொம்ப உயரம்,  இரண்டாவது தைல மரம் விலைகம்மி, ஆனால் சீரான அளவில்,  உயரத்தில் கிடைக்காது. 

சூபாபுல் அது நிறைய கிடைக்காது, இன்னொன்று இது இன்னும் அவ்வளவாக அறிமுகம் ஆகவில்லை

அடுத்த படியாக இருப்பது சவுக்கு மட்டும்தான்.  சீரான உயரம், சீரான பருமன், சீரான விலை எல்லாவற்றிற்கும் சவுகரிமானது சவுக்கு மட்டும் தான்.

விசிலடிக்கும் மரம்

சவுக்கு மரத்திற்கு ஆங்கிலப் பெயர் அல்லது பொதுப்பெயர் விஷ்லிங் பைன்மிழில் விசில் அடிக்கும் பைன் மரம்.  சவுக்கு மரத் தோப்புக்குள்  நுழையாதவர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது. 

பைன் மரம் என்றால் ஊசி இலை மரம்அதாவது இலைகள் சி மாதிரி இருக்கும்.  சவுக்கு மரம்  உண்மையிலேயே பைன் மரம் இல்லைதான்.  ஆனால் பைன் மாதிரியான பண்புகள் கொண்டவை

இலைகள் சி மாதிரி.  பூமியைப் பார்த்தபடி தொங்கும் கிளைகள்.  கூம்பு வடிவ கனிகள்.  பைன் மரக் கனிகளுக்கு ஆங்கிலத்தில் கோன் (CONE) என்று பெயர்.

சவுக்குக் காய்களும் அசப்பில் பைன்மரக் கோன் போலவே இருக்கும்.  மரத்தின் ஒட்டு மொத்த வடிவம்  நட்டு வைத்த கோன்ஐஸ் மாதிரி இருக்கும்.  இப்படி பைன்  மரத்தின் சாமுத்ரிகா லட்சணங்கள் அத்தனையும் சவுக்குக்கும் அச்சாக அசலாகப் பொருந்தி வரும்.

சிற்பி அம்மி கொத்;த வரமாட்டான்

சிற்பம் செதுக்கும் சிற்பி அம்மி கொத்;த வரமாட்டான் என்று சினிமா பாடல் எழுதுவது பற்றி தனது கருத்தைச் சொன்னார் கவிக்கோ அப்துல் ரகுமான் ஒருமுறை.  அதுபோல சவுக்கு மரத்தைச் தேடி எந்த வேலை தெரிந்த தச்சனும் வரமாட்டான்> என்து சொல்லுகிறார்கள். 

அது போன்ற வேலைகளுக்கு எல்லாம் சவுக்கு மரம்தான்  உத்தரவாதம்

உடனடி பந்தல் கால்களாக> உடனடி கொடிக்கம்பங்களாக உபயோகிக்கலாம்.  மற்றபடி முழுக்க முழுக்க விறகாகப் பயன்படும். 

தினத்தந்தி சிந்துபாத்

ஒரு முப்பது நாற்பது ஆண்டுளுக்கு முன்னால் ஹோட்ல் நாஸ்தாக்தடை> டீக்கடை என்று எங்கு போனாலும் மூன்று விஷயங்களை கண்டிப்பாய்ப் பார்க்கலாம். 

ஒன்று அடுப்பெரிக்க ரெடியாய் உடைத்து வைக்கப்பட்டிருக்கும் சவுக்குக் ட்டைகள்.

இரண்டு மூன்று அழுக்கு பெஞ்சுகள்.  

பெஞ்சுக்கு ஒன்றிரண்டாய் ஈரத்தில் நனைத்தும் நனையாமலும் இறைந்து கிடக்கும் தினத்தந்தி பேப்பர் பக்கங்கள். தினத்தந்தியின் படக்கதையில் வந்த சிந்துபாத்தின் உயரமான தலைப்பாகை இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.

சவுக்கு மரத்தின் தாயகம்

இலவசத்துக்கு மரியாதை இல்லை

இலவசமாய் அல்லது மலிவாக எது வந்தாலும் தந்தாலும் அதற்கு மரியாதை இருக்காது. தங்கத்தை தந்தால் கூட அது பங்கப்பட்டுவிடும்.

இப்படிப்பட்ட மரங்களை> தாவரங்களை எப்படி வணிக ரீதியில் அல்லது ஆக்கப் பூர்வமாக பயன்படுத்துவது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.  அப்படிப் பயன்படுத்த முடியும். 

தாரணமாக சில ஆராய்ச்சிகளை என்னால் சொல்ல முடியும்.  பார்த்தீனியம் களைச் செடியை பயிருக்கு இடும் உரமாக மாற்றம் செய்ய தொழில்நுட்பம் ரெடி ! வேங்காயத் தாமரைச் செடிகளை பயன்படுத்தி டம்ளர்>  மற்றும் பிளேட்டுகள் செய்யும் தொழில் நுட்பம் ரெடி!

    உபயோகம் இல்லாதவை என்று மரங்களில் நாம் எதையும் விரல் நீட்ட முடியாது.

குதிரைவால் மரம்

இதன் தாவரவில் பெயரில்.  கேசுவரினா ஈகுவசெட்டிபோலியா வில் ஈக்வசெட்டம்  என்றால் லத்தீன் மொழியில் குதிரை முடி (HORSE HAIR) என்று அர்த்தம்.  சவுக்கு மரத்தின் கிளைகள் பார்க்க அசப்பில் குதிரைவால் மாதிரியே இருக்கும். குதிரைவால் மரம் (HORSE TAIL TREE) என்றே இதற்கு ஒரு பெயரும் உண்டு.

சிரமம் இல்லாமல் கொஞ்சம் காசு பார்க்கலாம்

முக்கியமாக சவுக்கு என்றால் ஈடு இணையற்ற விறகு என்று அர்த்தம்.  அதேபோல கடலோரத்தில் வளர்க்க ஏற்ற அழகான மரம்.  வாய் தீவுகளில்> நல்ல மண்ணரிப்பை பாதுகாக்கும் மரமாக மற்றும் சிறத்த காற்றுத் தடுக்கும் மரமாகவும் பயன்படத்துகிறார்கள்.   நகள்ப்புறங்களில் அழகு மரங்களாக வளர்க்கிறார்கள்.

அதிகபட்சமான விவசாயம் பார்த்து ஒய்ந்துபோன நிலங்களை ட்டமேற்ற சவுக்கு நடுகிறார்கள்.  அந்த நிலங்களுக்கு ஒய்வுதர சவுக்கு நடுகிறார்கள்.  மிகுந்த சிரமம் இல்லாமல் கொஞ்சம் காசு பார்க்க சவுக்கு நடுகிறார்கள். 

இப்போது தமிழ்நாட்டில் கூட விவசாயம் கட்டுப்படி ஆகவில்லை> அதனால் சவுக்கு போடுகிறேன் ன்கிறார்கள்.  இப்படி விசாயத்திலிருந்து ய்வுபெற நினைப்பவர்கள் தற்காலிகமாக மரசாகுபடி என ஒதுங்குகிறார்கள். 

கையில காசு வாயில தோசை

குறிப்பாக திருவள்ளுர் மாவட்டத்தில் கொஞ்சம் மணற்சாரியான நிலப்பகுதிகளில் இப்போது சவுக்குதான் சக்கைப்போடு போடுகிறது என்கிறார்கள்.  வளர்ந்து அறுவடை செய்யும் சவுக்கு மரங்களை விற்பனை செய்வதில் பிரச்சினை  எதும் இல்லை. 

தோட்டத்திற்கே வந்து மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.  அதேபோல விரும்புபவர்களுக்கு> அவர்களே ஆளு அம்பு சேனை வைத்து அவர்களே நட்டுக் கொடுக்கிறார்கள். ரெடிமேட் விவசாயம் ! கையில காசு வாயில தோசை கலாச்சாரம் !

கடலோரங்களில் மண் அரிப்பு என்பது மிக முக்கியமான பிரச்சினை.  இங்கு மணல் மேடுகளை காப்பாற்றுவது ஒரு முக்கியமான வேலை.  இதற்கு ஒரு வரமாக இருப்பவை சவுக்கு மரங்கள்.

நன்றி கணியன் பூங்குன்றனார்

சுனாமிக்குப் பிறகு நிறைய அளவில் கடலோர மணல் திட்டுக்களில் சவுக்குத் தோட்புகள் அமைந்துள்ளன.  மிகவும் குறுகிய கால அளவில் மரத்தோப்புகள்  அமைக்க ஏற்ற மரம் சவுக்கு மரம் மட்டும்தான்.  அதற்கு இருக்கும் ஒரே டிஸ்கு வாலிபிகேவுன்> அது ஒரு சீமை சரக்கு ! யாதும் ஊரே யாவரும் கேளிர் !  நன்றி கணியன் பூங்குன்றனார்.

சவுக்கு தோப்பில் படிக்கலாம்

காற்று மவுனமாய்ப் பேசும்> சாந்தமாய்ச் சிரிக்கும்> கோமாய் சீறும்> நாயாய் ஊளையிடும்> பேயாய் த்தும்>வை எல்லாமே காற்றின் மொழிகள். இதைக் கற்றுக்கொள்ள தினமும் அரைமணி நேரம் சவுக்குத் தோப்பில் சிவனே என்று அமர்ந்து காற்றின் மொழிகளைப் படிக்க வேண்டும். அற்புதமாய் இருக்கும்.

மர விதையும் மசால் வடையும்

ஒரு கிலோ சவுக்கு விதையின் விலை ரூபாய் 25 ஆயிரமாம்>  இண்டியாமார்ட் ஆன்லைனில் வாங்கலாம். வலைத் தளத்தில் மேய்ந்தால் மர விதையிலிருந்து> மசால் வடை வரை வாங்கலாம்.

ஈரலை பாதுகாக்கும்

இந்த மரத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏகப்பட்ட மருத்துவப் பண்புகள் உள்ளன.  அவை நோய்களை உண்டாக்கும் நுண்றுயிர்களைக் கட்டுப்படுத்துதல்> நீரிழிவு நோயினைத் கட்டுப் படுத்துதல்> ஈரலை பாதிக்கும் நோய்களிலிருந்து பாதுகாப்பது மற்றும் வாயுத் தொல்லையை சரி செய்தல். 

இவை தவிர உடலுக்கு று விளைவிக்கும் ரேடிகல்ஸ் என்பவற்றை வெளியேற்றும் வேலையைச் செய்யும் ன்டிஆக்ஸிடெண்ட்டுகள் இதில் நிரம்ப உள்ளன.

சவுக்கு மரங்கள் ஃபிராங்கியா ஆக்டினொமைசீட்எனும் பாக்டீரியாவுடன் இணைந்து சூழலில் இருக்கும் நைட்ரஜனைஇது மண்ணில் நிலைப்படுத்துகிறது

WWW.EN.M.WIKIPEDIA/ CASUARINA EQUSETIFOLIA

WWW.WIKI.BUGWOOD.ORG / CASUARINA EQUSETIFOLIA

WWW.WORLDAGROFORESTRY.ORG/ CASUARINA EQUSETIFOLIA

WWW.FLOWERSOFINDIA.NET/ WHISTLING PINE - CASUARINA EQUSETIFOLIA

WWW.SCIENCEDIRECT.COM/ CASUARINA EQUSETIFOLIA – AN OVERVIEW

WWW.INDIANBIODIVERSITY.ORG/ CASUARINA EQUSETIFOLIA /SPECIES

PLEASE POST YOUR COMMENTS, REARDS- GNANASURIA BAHAVAN D (AUTHOR)

999999999999999999999999999999999

         

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...