Monday, June 12, 2023

CLEOPATRA WORSHIPPED EARTHWORMS பேரழகு கிளியோபாட்றாவும் சீரழகு மண்புழுக்களும்



பதிவு: 4

அழகாக இருக்கும் பெண்கள், இயல்பாகவே கொஞ்சம் தலைக்கனம் உடையவர்களாக இருப்பது இயல்பு.  பேரழகியாக இருப்பவர்களுக்கு இந்தத் தலைக்கனம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.  அப்படிப்பட்ட பெண்களுக்கு பின்னால் பெரிய கிளியோபாட்றான்னு நினைப்பு என்று இளைஞர்கள் வம்பிழுப்பது வாடிக்கை.

இயற்கை விவசாயம் பற்றிய கட்டுரைக்கும் பேரழகி கிளியோப்பாட்றாவுக்கும் என்ன தொடர்பு ? அதனைத் தெரிந்து கொள்ளுவதற்கு முன்னால் யார் இந்த கிளியோபாட்றா அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? கொஞ்சம் பின்னால்> கட்டுரையின் ஈற்றுப்பகுதியல்  தெரிந்துகொள்ளலாம்.

மண்புழுக்களை கடத்தினால் மரணதண்டனை (EARTHWORMS TRAFFICKERS ARE HANGED)

கிளியோபாட்றா எகிப்து நாட்டின் போரசியாக இருந்தபோது> அந்த மக்கள் மண்புழுக்களை நாட்டின் வளத்திற்குரிய கடவுளாக மதித்து வணங்கி வந்தார்கள். மண்புழுக்களை கடத்தினால் மரணதண்டனை என்ற சட்டம் அன்று அமுலில் இருந்தது.

அது தொடர்பான கற்பனையான ஒரு அரசவைக் காட்சியைப் இப்போது பார்க்கலாம்.

இடம்: எகிப்து நாட்டின் பேரரசி கிளியோபாட்றா அரசவையின் நீதிமன்றத்தில் கம்பீரமாக வீpற்றிருக்கிறாள். 

பாத்திரங்கள்: பேரரசி கிளியோபாட்றா> அரசவைத் தளபதிகள்> மந்திரிகள்> மற்றும் அரசப்பிரதிநிதிகள்> விசாரணைக் கைதி ஆர்க் மாண்டனி. 

நிலை: பேரரசி உட்பட அனைவரும் அமர்ந்திருக்க நீதிமன்ற விசாரணைத் தொடர்கிறது.

அரசப்பிரதானி: மகாராணி அவர்களே! இந்த குற்றவாளி  நமது மேற்கு பாலைவனத்தைச் சேர்ந்தவன்.  இவன் பெயர் ஆர்க் மாண்டனி;.  மன்னிக்கமுடியாத குற்றம் இழைத்திருக்கிறான் போரசி அவர்களே ! கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்குற்றம் இழைத்து வருகிறான்.

கிளியோபாட்றா: அப்படி என்ன தொடர் குற்றம் ? தொலைக்காட்சி தொடர் எழுதினானா ? வாட்ஸ்அப்பில் தொடர் கட்டுரை எழுதினானா ? என்ன குற்றம் என்று விளக்கமாகச் சொல்லுங்கள்.

அரசப்பிரதானி; அவன் செய்த குற்றத்தைச் சொன்னால் நீங்கள் அவனுக்கு மரண தண்டனைதான் அளிப்பீர்கள் மகாராணி !

கிளியோபாட்றா: அப்படி என்னதான் குற்றம் செய்தான் ?; களவு செய்தானா? உளவு பார்த்தானா? பாஸ்ட் ஃபுட்டில் பொலவு செய்தானா ? விளக்கமாக விளம்புங்கள்.

அரசப்பிரதானி: களவும் உளவும் பார்ப்பவர்களைக்கூட மன்னிக்கலாம் மேன்மைமிகு மகாராணி அவர்களே. இவன் செய்த முதல் குற்றம். மண்புழுக்களை கடத்தியது. இரண்டாவது குற்றம்> அந்த கடத்தலை இரு ஆண்டுகளாக தொடர்ந்து செய்தது.  மூன்றாவது குற்றம் பேரரசி> கடத்திய மண்புழுக்களை.  கோவில் சுண்டல் மாதிரி எல்லோருக்கும் கொடுத்தது. அதற்காகத்தான் நமது வீரர்கள் இவனை விரைந்து கைது செய்திருக்கிறார்கள்.

கிளியோபாட்றா: குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியாக கூண்டிலிருக்கும்> ஆர்க் மாண்டனி ! நீ செய்த குற்றங்கள்பற்றி விளக்கம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா ?

ஆர்க் மாண்டனி: மகாராணி கிளியோபாட்றா அவர்களே ! இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விச்சித்திரமானதுமல்ல. நான் புதுமையான மனிதனும் அல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வசாதாரணமாக தென்படக்கூடிய ஒரு ஜீவன்தான் நான்.

மண்புழுக்களை கடத்தினேன்..இரண்டு ஆண்டுகளாய் தொடர்ந்து கடத்தினேன். மண்புழுக்களை கோவில் சுண்டல்மாதிரி எல்லோருக்கும் விநியோகம் செய்தேன்.  இப்படியெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை.

நான் ஒரு விவசாயி. இந்த நாட்டிற்காக உணவு உற்பத்தி செய்யும் விவசாயி.

மண்புழுக்களை கடத்தினேன். எதற்காக ? நான் உற்பத்தி செய்யும் உணவு நஞ்சாக மாறிவிடக் கூடாது என்பதற்காக. அது தவறா ?

இரண்டு ஆண்டுகளாக மண்புழுக்களை தொடர்ந்து கடத்தினேன். எல்லா விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தை பரப்பவேண்டும் என்பதற்காக. அது தவறா ?

மண்பழுக்களை கோவில் சுண்டல்மாதிரி வினியோகம் செய்தேன்;;. ஏன் ? தெய்வீகமான மண்புழுக்களை தெருக்கடை வியாபாரமாக்கிவிடக் கூடாது என்பதற்காக. அது தவறா ?

உனக்கு என் இவ்வளவு அக்கறை ? எகிப்து நாட்டில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். ரசாயன உரங்களும்> ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும்> ரசாயன களைக்கொல்லி மருந்துகளும் போட்டு நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அசிங்கத்தை  சாப்பிட்டு அனைத்து இடங்களையும் சுத்தம் செய்கிறதே காகம்> அதைப்போல.

ரசாயன உரம் போடக் கூடாது என்பதற்காக இயற்கை உரமாக மண்புழு உரம் போடுகிறேன். அது தவறா ?

எதையும் கடையில் வாங்கினால் கனத்த காசு என்பதால் மண்புழு உரம் உரத்தை நானே தயாரிக்கிறேன். அது தவறா ?

மண்புழு உரம் தயரிப்பதற்காக மண்புழுக்களை நைல்நதி கரையிலிருந்து கடத்தவில்லை சேகரித்துக் கொண்டு வருகிறேன். அது தவறா ?

இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்காக எல்லா விவசாயிகளுக்கும்  கோவில் சுண்டல் மாதிரி அல்ல. பிரசாதம்மாதிரி விநியோகம் செய்தேன் அது தவறா ?

என்னை குற்றவாளி என்கிறார்களே> இந்த குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம்; பின்னோக்கி நடந்துப்பார்த்தால். இதில் வறண்டுபோன காட்டாறுகளும்> வத்திப்போன நாட்டாறுகளும்> வதங்கிப்போன வீட்டாறுகளும்  எத்தனை என்று  கணக்கு பார்க்க முடியாது. இந்த வழக்கில் தீர்ப்பு எழுதும் முன் தயவுசெய்து கேளுங்கள் என் சோகக் கதையை.

ஒரு காலத்தில் என்பயிர்களுக்கு உரம் போட்டேன். பூச்சிமருந்து போட்டேன். பூசணம் மருந்தும் போட்டேன். மற்றும் களைக்கொல்லிமருந்தும் கணக்கு வழக்கு இல்லாமல் போடடு என் ஆண்டாண்டுக்கால விவசாயத்தை அடிமுதல்நுனிவரை  நானே அழித்துவிட்டேன்.

இப்போது மண்புழுவால்> மண்புழு உரத்தால் என் விவசாயத்தை மீட்டெடுத்துவிட்டேன். எனது அனுபவத்தை என்னைச் சுற்றி உள்ள விவசாயிகள் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

இன்று விவசாயத்தின் சாகுபடிசெலவை குறைத்திருக்கிறோம்.

வருமானமும் லாபமும் அதிகரித்திருக்கிறோம்.

நிலவளம்  நீர்வளம்; கூட்டியிருக்கிறோம்.

உயிர்வளம் உன்னதம் அடைந்துள்ளது.

நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திருக்கிறோம்.

பாதுகாப்பான  சூழலை; அறிமுகம் செய்திருக்கிறோம்.

பருவக்கால மாற்றத்திற்கு பாதுகாப்பு வளையம் செய்திருக்கிறோம்.

ஏற்றுமதிக்கு வாய்பபினைக் கூட்டியிருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை விவசாயத்திற்கு

இனிய தொடக்கம் தந்துள்ளோம்.

மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய மகாராணி அவர்களே ! இவை எல்லாம் குற்றம் என்று கருதினால் தாங்கள் எனக்கு மரணதண்டனை கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் மகாராணி.

(ஒரு அரசப்பிரதானி எழுந்திருந்து குறுக்கிட்டுப் பேசுகிறார்);: மகாராணி. இடையில் பேசுவதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். தங்கள் தீர்ப்பை உடனடியாக வழங்கிவிடுங்கள். இல்லையென்றால் இவன் முழுசாக பராசக்தி வசனம் பேசுவான் என்று தோன்றுகிறது.

கிளியோபாட்றா: அவர் பேசியது பராசக்தி வசனமாக இருந்தாலும் அது பொருத்தமாகவே இருக்கிறது. நியாயம் அவர் பக்கம் இருக்கிறது.

பொதுவாகவே விவசாயிகள்> வணிக நோக்கம் இல்லாதவர்கள் என்பதை யாம் அறிவோம்;.  மேலும் அவன் பராசக்தி வசனம் பேசும்போதே அவன் நிரபராதி என்பதை புரிந்துகொண்டேன்.

ஆதலால், இந்த விவசாயியை விடுதலை செய்வதோடு.  நமது நாட்டில்  இயற்கை விவசாயத்தை பரப்புவதற்கு பொறுப்பு அதிகாரியாக  ஆர்க் மாண்டனியை இக்கணம் முதல் நியமிக்கிறேன்.

ஆர்க் மாண்டனியை முறையாக விசாரணை செய்யாது மரணதண்டனைக்கு சிபாரிசு செய்த  அரசு வீரருக்கு பெரியகுளம் ஒன்று ரகத்தின் புளியன் மிலாறுகொண்டு ஐம்பது கசையடி கொடுக்க வேண்டுமென தீர்ப்பளிக்கிறேன். 

சரித்திரத்தில் பேசப்படும் பேரழகி கிளியோபாட்றா எகிப்து நாட்டின் பேரசியாக இருந்தவர்.  தாலமிக் என்ற அரச பரம்பரையில் இவர் ஏழாவது கிளியோயோபாட்றா.  இவருக்கு நான்கு கணவன்மார்கள் இருந்தார்கள்.  இவர்களில் பிரபலமான இருவரில் ஒருவன் ஜுலியஸ்;சீசர்: இன்னொருத்தர் மார்க் ஆண்டனி.  இவர்கள் இரண்டுபேருமே பின்னர் ஷேக்ஸ்பியரின் நாடகப் பாத்திரங்கள் ஆனார்கள். இந்த நாடகம் உலகக் காவியம் ஆனது. கிளியோபாட்றா, ஜுலியஸ் சீசர், மார்க் ஆண்ட்டனி, அனைவருமே உலக அளவில் காவிய நாயகர்கள் ஆனார்கள்.

கிளியோபாட்றா எகிப்து நாட்டினைக் காப்பாற்ற தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தவர். பேரறிவும் பேராற்றலும் உடையவர்;; ஏழு மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர்;; வானியல் சோதிடம் எனும் பலகலைகளில் தேர்ச்சி பெற்ற சகலகலாவாணி. மண்புழுவைத் தனது விருப்ப தெய்வமாக வணங்கியவர்.

மண்புழுபற்றி வேறு அரிதான செய்திகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...