ஏற்றுமதிக்கு சரிப்படுமா ? |
சர்வதேச அளவில் டிராகன் பழப்பயிர் சாகுபடியில்
வியட்னாமை அடுத்து துரிதகதியில் சீனா முன்னேறி வருகிறது. டிராகன் பழங்களின் ஊட்டச்சத்துக்கள், அதன் மருத்துவப்
பயன்கள், சிரமமில்லாத சாகுபடி முறை, நல்ல
விலை, விற்பனைக்கான வாய்ப்பு இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு
டிராகன் பழப்பயிர் சாகுபடியில் சீனா எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை படம் பிடிக்கிறது
இந்தப் பதிவு.
சீனாவின் டிராகன்பழ ரகங்கள் (DRAGON FRUIT VARITIES IN CHINA)
1. வட கிழக்கு சீனாவில் சாகுபடி செய்யும் டிராகன் பழங்கள் ஆகஸ்ட் மாத வக்கில்
அறுவடைக்கு வரும்.
2. இங்கு ‘ரெட்கிரைஸ்டல்’ எனும் டிராகன்
பழ ரகம் அதிகம் சாகுபடி ஆகிறது. இதன் பழங்கள் 300 முதல் 350 கிராம் வரை எடை இருக்கும். இதன் பழத்தசை சிவப்பு நிறமாக இருக்கும்.
3. ‘ரெட்கிரைஸ்டல் (RED CRYSTAL)’ ரகத்தின் பழங்கள் மிருதுவாகவும்,
இனிப்புடனும், சாறு நிறைந்ததாகவும் இருக்கும்.
4. 2019
ம் ஆண்டு லி காங் என்பவர் தனது சோதனைத் தளையில் 6 டிராகன் பழ ரகங்களை தேர்வு செய்து தனது பண்ணையில் நடவு செய்தார்.
5. லி காங் தனது சோதனைத் தளையில் ஒரு புதிய ரகத்தை அறிமுகம் செய்துள்ளார்.
அது மஞ்சள் வெள்ளை ரகம். இது முள்ளில்லாத டிராகன்
பழ ரகம்.
சீனாவின் டிராகன் பழங்கள் இறக்குமதி (DRAGON FRUIT IMPORT)
1. அனேகமாக உலகிலேயே அதிக அளவு டிராகன்
பழங்களை சாப்பிடுபவர்கள் சீனாக்கார்ர்கள்தான். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
2. காரணம் வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும்
அதிகபட்சமான பழங்களை சீனாதான் வாங்குகிறது, இறக்குமதி
செய்கிறது.
3. அதுமட்டுமில்லாமல் சீனாவில் மிகப்பெரிய அளவில் டிராகன் பழங்களின் சாகுபடியையும் தொடங்கி இருக்கிறார்கள்.
சீனாவுக்கு வியட்நாம் ஏற்றுமதி (VIETNAM’S EXPORT)
1.வியட்நாமிலிருந்து மொத்தம் ஒன்பது
வகையான பழங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
2. அவை டிராகன் பழங்கள், வாட்டர்மெலான், லிச்சி, வாழை, மா, பலா, ரம்புட்டான், லாங்கென்ஸ், மற்றும் மங்குஸ்தான்.
சீனாவில் டிராகன் பழப்பயிர் (DRAGON FRUIT CROP
CULTIVATION)
1. 2020 ஆம் ஆண்டு
கணக்குப்படி,
சீனாவில் மொத்தம் 35,555 எக்டர் நிலப்பரப்பில் டிராகன் பழப்
பயிரை சாகுபடி செய்திருந்தார்கள்.
2. சீனாவில் குவாங்சீ மற்றும் குவாங்
டாங் (Guangxi &
Guangdong) ஆகிய மாநிலங்களில் தான்
அதிகமான அளவில் இந்த டிராகன் பழப்பயிரை சாகுபடி செய்கிறார்கள்.
3. கடந்த சில ஆண்டுகளுக்கு ஒப்பிட்டு
பார்க்கும்போது கிட்டத்தட்ட 10 மடங்கு டிராகன் பழ சாகுபடி அதிகரித்து உள்ளது.
4. 2021 ஆம் ஆண்டு
கணக்குப்படி சைனாவின் மொத்த டிராகன் பழப்பயிர் சாகுபடி நிலப்பரப்பு
67,000 எக்டர், மொத்தப் பழ உற்பத்தி 1.6 மில்லியன் டன்.
5. சீனாவில் உற்பத்தி
செய்யப்படும் டிராகன் பழங்கள் உற்பத்தியில் கிட்டத்தட்ட 70 சதவீத பழங்கள் குவாங்சி மற்றும்
குவாங்டாங் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
6. 2011 ஆம் ஆண்டு சீனாவில்
இருந்த டிராகன் பழப்பயிர் பரப்பு வெறும் 3400 எக்டர் மட்டுமே. 2018 ஆம் ஆண்டு இது 40 ஆயிரம் எக்டராக அதிகரித்தது. தற்போது இந்த சாகுபடிப் பரப்பு 67000 எக்டராக உய்ர்ந்துள்ளது
என்கிறார்கள்
7.வியட்நாம் நாட்டின்
தற்போதைய டிராகன் பழ பெயர் சாகுபடி பரப்பு 55 ஆயிரம் எக்டர் என்கிறது. அப்படி
என்றால் சைனா முந்திவிட்டதா ?
8.பழைய கணக்குப்படி பார்க்கும் பொழுது அநேகமாக சர்வதேச அளவில் இன்று வியட்நாமுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது நிலையில் இருந்தது சீனா.
7.சீனாவின்
தென்மேற்கு பகுதியில் இருக்கும் குவாங்சி மாநிலத்தில் மட்டும் 20 ஆயிரம் எக்டர் பரப்பில் டிராகன்
பழப்பயிர் சாகுபடி செய்து இருக்கிறார்கள்.
8. இந்த பகுதியில்
அவர்கள் ஒரு தைவான் நாட்டு டிராகன் பழ ரகத்தை சாகுபடி செய்கிறார்கள்.அந்த ரகத்தின்
பெயர் ருவான்சி
டஹாங் (Ruanzhi Dahong). இதன் பழங்கள் ஆழ்ந்த சிவப்பு நிறமாக இருக்குமாம்.
2011
ம் ஆண்டு வெறும் 3400 எக்டர் பரப்பில் மட்டுமே
டிராகன் பழப்பயிரை சாகுபடி செய்த சீனா இன்று 67000 எக்டர் பரப்பில்
அதனை விரிவுபடுத்தி உள்ளது, டிராகன் பழப்பயிர் சாகுபடியில் நாம்
சீனாவைவிட சுமார் 12 ஆண்டுகள் பின்னல் இருக்கிறோம், எப்படி என்று சொல்லுங்கள் பார்ப்போம், நான் சொல்லுவது
சரியா ?
GNANASURIA
BAHAVAN D, gsbahavan@gmail.com
No comments:
Post a Comment