Thursday, June 15, 2023

CARNATION OF INDIA 12. நந்தியார்வட்டை

 

பூஜைக்கு வந்த மலர்
நந்தியார்வட்டம்

நந்தியார்வட்டை, இந்தியா முழுவதும் பரவலாக பூஜைகளில் பயன்படுத்தும் பூமரம். அதிகபட்சமாக இரண்டு மீட்டர் வரை வளரும் சிறுமரம். பல நாடுகளில் பயன்படுத்தும் மூலிகை மரம்> இதன் அடி முதல் நுனி வரை  அனைத்து பாங்களையும் மருந்துகள் தயாரிக்க கொடையாகத் தரும் மரம்> வீட்டுத் தோட்டங்களுக்கென்றே சிறப்பு அவதாரம் எடுத்த  மரம்.    

பொதுப் பெயர்கள்: கார்னேன் ஆப் இந்தியா> கிரேப் ஜாஸ்மின்> மூன்பீம்> பின் வீல் ஃபிளவர், ஈஸ்ட் இண்டியா ரோஸ்பே, நீரோஸ் கிரவுன்   (CARNATION OF INDIA, CRAPE JASMINE, MOON BEAM,  PIN  WHEEL FLOWER, EAST INDIA ROSE BAY, NERO’S CROWN)

தாவரவியல் பெயர்: TABERNAEMONTANA DIVARICATA

தாவரக் குடும்பம் பெயர்: அப்போசயனேசி (APOCYNACEAE)

தாயகம்: தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் சைனா

பல மொழிப்பெயர்கள்:

தமிழ்: நந்தியார்வட்டை (NANDIARVATTAI)

இந்தி: சந்தினி> தகர் (CHANDINI, TAGAR)

கன்னடா: நந்திபட்டாலு (NANDI BATTALU)

குஐராத்தி: சாகர் (SAGAR)

மராத்தி: அனன்டா (ANANTA)

சமஸ்கிருதம்:  நந்தியாவர்தா (NANDHYAVARDHA)

தெலுங்கு: நந்திவர்தனம் (NANDHIVARDHANAM)

ஒரிதழ் அடுக்கும்> ரிதழ் அடுக்கும் கொண்ட வகைகள் உள்ளன.  ஒரிதழ் அடுக்குடைய பூக்களைத்தான் மருத்துவத்திற்கு பயன்படும் என்கிறார்கள்.  

நந்திபத்திரி> நந்தியாவர்த்தம் சுயோதனன்மாலை போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. 

பூஜைக்கான பூக்கள் தரும்

இந்தியா முழுவதும் பரவலாக> பூஜை புனஸ்காரங்களில் பயன்படுத்தும் பூ நந்தியார்வட்டை. கோவில்களில் வைக்கப்படும் பூமரங்களில் நந்தியர்வட்டையும் ஒன்று.  பல கோவில்களில் அந்த சந்தி எந்த நேரத்திலும் நடைபெறும் பூஜைகளில்> கண்டிப்பாய் இடம் பெறும் பூ   நந்தியார்வட்டை. 

இன்னொன்று ஆண்டு முழுவதும் பூக்கும்.  இலைகள் மற்றும் பூக்கள் இரண்டுமே பளிச்சென்று காட்சி தரும். பளிச்சென்ற பச்சை நிறத்தில் இலைகள் மற்றும் கொப்புகளை உடைத்தால் வெள்ளை நிறப்பால் பொங்கும்.  நந்தியார்ட்டை ஒரு குறுமரம்.  அதிகபட்சமாக இரண்டு மீட்டர் உயரம்> கோணல் மாணலான மரமாக வளரும் சிறுமரம்>

மூலிகை மரம்

நந்தியார் வட்டம் குறிப்பிடும்படியான மூலிகை மரம் பல நாடுகளில் தங்களது பாரம்பரிய வைத்திய முறைகளில் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.  குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மலாய் பீபூமி> இந்தோனேசியா மற்றும் இதர இடங்களிலும் மருத்துவ முறைகளில் இதனை இன்றும் உபயோகப் படுத்துகிறார்கள்.  நந்தியார்வட்டையின் வேர்> பட்டை> இலைகள்> பூக்கள் என அனைத்து பாகங்களும் மருந்துகள் தயாரிக்க உபயோகமாகிறது.  

கண்நோய்கள்> தீப்புண்கள் கட்டுப்பாடு> கேன்சர்> தோல் சம்மந்தமான   நோய்கள்> வயிற்றுப்போக்கு> போன்றவற்றை குணப்படுத்த நந்தியார்வட்டை பயன்படுகிறது.   

நந்தியார்வட்டையின் பாலை காயங்களின் மீது புண்களின் மீது தடவி குணப்படுத்தலாம்.  

பூக்களை கசக்கி அதிலிருந்து எடுக்கும் சாற்றினை சொட்டு மருந்தாக கண்களில் விட கண் நோய்கள் சுகப்படும்.   

நந்தியார்வட்டையின் இலைச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நெற்றியில் தடவ கண்வலி குணமாகும்.

தோலின் மீது ஏற்படும் சொறி சிpரங்குகள் போன்றவற்றில் நந்தியார் வட்டையின் பூக்களின் சாற்றினைத் தடவி வர அவை அனைத்தும் விரைந்து குணமாகும்.  

குறைவாக சிறுநீர் போகும் நோய்

நந்தியார்வட்டை குடிநீரை 10 மில்லி அளவில் ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் குறைவாக சிறுநீர் போகும் நோய் (OLIGURI DISEASE) குணமாகும்.  இதற்கு 50 கிராம் நந்தியார்வட்டை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.  அத்துடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள்.  பின்னர் அதனை குளிர வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்துங்கள்.   

வயிற்றில் உள்ள அஸ்காரிஸ் புழுத் தொல்லைக்கு நந்தியார்வட்டை வேரினை எடுத்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.  தேவையான அளவு அதனை இடித்து அரைத்து பசைபோல் ஆக்கிக் கொன்ளுங்கள்.  இந்த நந்தியார்வட்டை வேர்ப்பசையை ஒரு நாளைக்கு ஒரு முறை மூன்று கிராம் சாப்பிட அஸ்காரிஸ் புழுக்கள் தொல்லை தீரும். 

தமிழ் இலக்கியத்தில் கூட இதன் மருத்துவ குணங்கள் பற்றி சொல்லும் பாடல்கள் உள்ளன.

      காசம் படலங் கரும்பாவைத்

       தோமெனப்

       பேசு விழி நோய் கடமைப் பேர்ப்பதன்றி

       யோசை தரு

       தந்தி போலே தெறிந்துச் சாறுமண்டை

       நோயகற்று

       நந்தியா வட்டப் பூ நன்று   

கண் சம்மந்தமான நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டது நந்தியார்வட்டப் பூ என்கிறது இந்தப் பாடல்.   

கண் சம்மந்தமான நோய்கள்

சிலருக்கு எப்போதும் கண்எரிச்சல் இருக்கும்.  அப்படிப்பட்ட கண்எரிச்சலுக்கு இதன் பூக்கள் நல்ல மருந்து.  கண்களை மூடிக்கொண்டு> இமைகளுக்கு மேலாக இதன் பூக்கள் படுமாறு சிறிது  நேரம் ஒத்தடம் கொடுத்தால் கண்எரிச்சல்> சூடு ஆகியவை காணாமல் போகும்.

கண்சதை வளர்ச்சி 

நந்தியார்வட்டைப் பூ 50 கிராம் களாப்பூக்கள் 50 கிராம் இரண்டையும் ஒரு பாட்டிலில் போட்டு அதில் நல்லெண்ணெயை ஊற்றி 20 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.  பின்னர் எண்ணெயை மட்டும் வடித்து தனியாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

காலை மாலை இருவேளையும் ஒரு துளி என கண்களில் விட்டு வந்தால் கண் சதை வளர்ச்சி கண்படல நோய் பார்வை மந்தம் போன்ற கண்நோய்கள் குணமாகும்.   

செவ்வரி ஓடிய கண்கள்

சிலர் எப்போதும் சிந்த கண்களுடன் இருப்பார்கள்.  அப்படி செவ்வரி ஒடிய கண்களுக்கு நந்தியா வட்டைப் பூக்கள் சரியான மருந்து.  இதன் பூச்சாற்றினை சமபங்கு தாய்ப்பால் சேர்த்து ஒரிறு துளிகள் கண்களில் விட கண்சிவப்பு மாயமாக மறையும்.  

வயிற்று உபாதைகள்

நந்தியாவட்டை வேர்க்கஷாயம் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கடுப்புக்கு நல்ல மருந்து.  வயிற்றில் இருக்கும் புழுக்களை வெளியேற்றும்.  இதன் வேரை வாயில் வைத்து மென்று துப்பிவிட பல்வலி குணம் ஆகும். 

இந்த மருத்துவ முறைகளை எல்லாம் ஒரு மருத்துவரின் சிபாரிசுப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  இவை அனைத்து பல்வேறு புத்தகங்களில் வலைத்தங்களில் திரட்டப் பட்ட செய்திகள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

புதிய மரங்களை உருவாக்க

நமது பகுதிகளில்> புதி மரங்களை உருவாக்குவதற்கு ஒரே வழி> கிளைக்குச்சிகளை சுமார் ஒரு அடி நீளமுள்ள குச்சிகளாக வெட்டி மேட்டுப்பாத்திகளில் நட்டு செடியாக தழைத்த பின்னால் எடுத்து வேறு இடங்களில் நடலாம்.  புதியன் போட்டும் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  நமது தட்ப வெப்ப சூழலில் நந்தியார்வட்டை விதை பிடிப்பதில்லை.   

வீட்டில் முகப்பில் வாசலின் பக்கங்களில் ன்னலோரம் நடுவதற்கு ஏற்ற மரம்.  அதிலும் குறிப்பாத இடவசதி நெருக்கடியான நகர்ப்புறங்களில் நடுவதற்கு ஏற்ற மரம்.  நகரத்தின் வாகனப்புகை, எரி பொருள் நாற்றம்> வாகனச்சத்தம்> வெயில்> பனி> மழை போன்ற இயற்கை நிகழ்வுகள்> அத்தனையும் வடிகட்டி> சுத்தமான சூழலை மட்டுமே நமக்குத் தரும் அற்புதமான மரம்  நந்தியார்வட்டை. 

TO READ FURTHER:

WWW.EN.M.WIKIPEDIA.ORG – TABERNAEMONTANA DIVARICATA  

WWW.TROPICALTHEFERNS.INFO – TABERNAEMONTANA DIVARICATA - USEFUL TROPICAL PLANTS  

WWW.FLOWERSOFINDIA.NET – CRAPE JASMINE- TABERNAEMONTANA DIVARICATA   

WWW.GBIF.ORG – TABERNAEMONTANA DIVARICATA   

WWW.NPARKS.GOV.GOV.SG – TABERNAEMONTANA DIVARICATA   

 99999999999999999999999999999

       

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...