Monday, June 12, 2023

CAPTIVATING MULTI COLOR FLOWERS OF KAYA TREE - மயிலின் தோகைப்பூ காயாமரம்

 

காயா பூமரம் - IRON WOOD
MEMECEYLON   UMBELLATUM 



காயாவின் பூக்கள், கருமை, ஊதா , நீலம் என பல வண்ணங்களில் பளிச்சிடும் ; கோடையில் பூக்கும்  பச்சைப் பசேலென்ற இலைகளின் நடுவே இருக்கும்  மலர்களைப் பார்க்க மயிலின் தோகைபோல காட்சியளிக்கும்.  பூக்கள் காயாகி கனியான பின்னால் அவை ஊதாநிற மாணிக்கங்கள் போல இருக்கும்.

06. காயாமரம்

(IRON WOOD TREE)

888888888888888888888888888888888888888888 

சில மரங்களை கடவுளின் அம்சம் உடைய மரங்களாகப் பார்க்கிறோம். வேங்கைமரம் முருகப்பெருமானுக்கு உரிய மரம். வில்வம் சிவனுக்கு உரிய மரம். அதுபோல காயா மரம் கிருஷ்ணபரமாத்மாவுக்கு உரிய தெய்வீகமான மரம். சில கோவில்களில் காயாமர இலைகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

சங்க இலக்கியம் புகழும் பூ

காயா மரத்தின் பூக்கள் சங்க இலக்கியம் பரிபாடலில், கிருஷ்ணபரமாத்மாவின் உடல் அழகுக்கு உவமையாக சொல்லப்பட்டது என்ற பெருமைக்கு உரியது.

ஆயிரம்  விரித்த  அணங்குடை  அருந்தலை

தீ உமிழ்  நிறலொடு  முடிமிசை  அணவர

மாவுடை மலர் மார்பின்மைகில் வாள்வளை  மேனி,

சேய் உயர்  பணை மிசை  எழில் வேதம்  ஏந்திய

வாய்  வாங்கும்   வாளை நெஞ்சில்  ஒரு  குழை ஒருவனை ;   

எரிமலர்  சினை இய  கண்ணை ; பூவை

விரிமலர்  புரையும்  மேனியை மேனித்

திரு நெமிர்ந்து அமர்ந்த  மார்பினை ; மார்பில்

தெரிமணி  பிறங்கும்   பூணினை  மால்வரை

எரிதிரிந்தன்ன  பொன்புனை   உடுக்கையை

சேவல் அம்   கொடியோய்  ! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல்  உழந்தமை  கூறும்,

நாவில்  அந்தணர்  அருமறைப்  பொருளே

" (பரிபாடல்)

திருமாலே ! ஆயிரம் சிரம் உடைய ஆதிசேஷன் நீ ! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளாய்;   திருமகள் உன் மார்பில் உறைகிறாள்ஒற்றைக் காதணியும்;, கூரிய கலப்பையும், யானைக் கொடியும், வெண்சங்கு மேனியும் கொண்ட பலதேவனே !

தாமரையை விஞ்சும் உனது கண்கள். உன் நீல வண்ணத் திருமேனி காயா மலர் போல் அழகுக்கு அழகு சேர்க்கிறது; நீ அணிந்திருக்கும் பொன்னாடை நீல மலையின் மீது சுற்றிய, தீப்பிழம்பு போல காட்சி அளிக்கிறது’  இதுதான்  அந்தப் பாடலுக்கு அர்த்தம்.

பரிபாடல்

பரிபாடல்; சங்க இலக்கியங்களில் ஒன்று; எட்டுத்தெகை நூல்களுள் ஐந்தாவதாக அமைந்ததுசங்க  இலக்கியங்களில், பண்ணோடு பாடப்பட்ட ஒரே நூல்; 70 பாடல்களைக் கொண்டது; ஆனால் கிடைப்பவை 22 மட்டும்தான்.

காயாவின் பூக்கள், கருமை, ஊதா , நீலம் என பல வண்ணங்களில் பளிச்சிடும் ; கோடையில் பூக்கும்  பச்சைப் பசேலென்ற இலைகளின் நடுவே இருக்கும்  மலர்களைப் பார்க்க மயிலின் தோகைபோல காட்சியளிக்கும்.  பூக்கள் காயாகி கனியான பின்னால் அவை ஊதாநிற மாணிக்கங்கள் போல இருக்கும். 

காசா என்பதும், பூவை என்பதும், இதன் மாற்றுத் தமிழ்ப் பெயர்கள் ; காயா மரத்தின் ஆங்கிலப் பெயர் கார்ப்பா (KARPHA);  இலை உதிராத சிறு மரம் இது. காடுகள் அழிந்தாலும், காயா அழியாது  என்று சொல்வதுண்டு. அதனால் மாய்ந்து சாய்ந்துபோன காடுகளை சாயாவனமாக உருவாக்க காயா சிறந்த மரம் என்கிறார்கள்.

இனிக்கும் இலைகள்

இதன் இலைகளை முதலில் சுவைக்கும்போது இனிப்பாகஇருக்கும் அதுவே கொஞ்ச நேரத்தில் புளிப்பாக மாறிவிடும். ஜயண்ட் ஸ்குரல்ஸ் (GIANT SQUIRRELS) என்று அழைக்கப்படும் ஒரு வகை அணில்கள் இந்த இலைகளை விரும்பிச் சாப்பிடும். இலைகளில் கொஞ்சம் இனிப்பு ஜாஸ்தி.

காயாவின் தாவரவியல் பெயர், மெமிசிலான் அம்பலேட்டம் (MEMECEYLON   UMBELLATUM) ; மெலஸ்டோமேசி  என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

1.காயா மரத்தின் பலமொழிப் பெயர்கள்

1.1.பொதுப் பெயர்கள்: டெலக் ஏர் ட்ரீ, அயன் வுட் ட்ரீ (DELEK AIR TREE, IRONWOOD TREE)

1.1. தமிழ்: காயா, குர்ரிகாயா, அல்லி, அஞ்சனி, கசாய், காவா, பாண்டி காயா (KAYA, KURRI-KAYA, ALLI, ANJANI, KASAI, KAVA,PANDE-KAYA ) 

1.2. இந்தி: அஞ்சன், காயா, அல்லி (ANJAN, KAYA, ALLI) 

1.3. மராத்தி: அஞ்சன்லிம்பா, லோகண்டி ஜாட்(ANJAN, LIMBA, LOKANDI JHAD ) 

1.4. தெலுங்கு: மண்டி, லக்கோண்டி (MANDI, LAKHONDE) 

1.5. மலையாளம்: கஞ்சாவு, ஆனக்காயாவு, கல்யம், கனிலா, கனாலி, கன்னாவு, கஷாவு, நெட்டுஞ்செட்டி (KANJAVU, ANAKKAYAVU, KALYAM, KANILA, KANALEI, KANNAVU, KASHAVU, NETUNJETTI) 

1.6. ஒரியா: நெய்மாறு (NEYMARU) 

1.7. சிங்களம்: கோரா காஹா (KORA-KAHA) 

1.8. கன்னடா: அல்லி, அர்ச்சனா, அரச்சாரி, அரச்சாட்டி, ஆர்ச்செட்டி, ஹர்ச்சாரி, _லிசோப்பு, லிம்போடாலி, லக்கோண்டி, உடபல்லி, உடல்லி (ALLE, ARCHANA, ARACHARE, ARACHATE, ARCHETI, HARCHARI, HULI SOPPU, LIMBATTOLI, LAKHONDE, UDABALLI, UDALLE ) 

1.9. துளு: அலிமாறு, ஒல்லி கொடி (ALIMARU, VOLLE KODI) 

1.10. அசாமிஸ்: லால்டிமாரோபாங் (LALDIMAROPHANG)

1.11. கொங்கணி: கல்லியோ அங்க்ரியோ (KALLEO ANKRIO)

தும்பாரா பாய்கள் 

பவுத்த மதத்துறவிகள் ஒரு வித்தியாசமான மஞ்சள்நிற அங்கி அணிந்திருப்பார்கள். பார்த்திருக்கிறீர்களா ? அந்த மஞ்சள் சாயம் தந்தது இந்த காயா மரத்தின் இலைகள்தான். இப்போதெல்லாம். ஸ்ரீலங்காவில் தும்பாரா பாய்கள் விசேஷமானவை. பாரம்பரிய பெருமை மிக்கவை. நாணல் குச்சிகளில் செய்யப்படும்  தும்பாரா பாய்களுக்கு (DUMBARA MATS)சாயம் அடிக்கவும் காயா இலைகளை உபயோகிக்கிறார்கள். கவர்ச்சிகரமான வண்ணங்களில் தயாராகும் இந்தப் பாய்களை திரைச்சீலைகளாக போடுகிறார்கள். ஜன்னல்கள் மற்றும் வாசல்களை இவை அலங்கரிக்கின்றன. ஸ்ரீலங்காவின் கின்னரா இன மக்கள் (KINNARA) இந்த தும்பாரா பாய்களைத் தயாரிப்பதில் பாரம்பரிய நிபுணத்தவம் உடையவர்கள். கின்னாரா மக்கள்  வசிக்கும் இடம், கண்டியில் உள்ள தும்பாரா பள்ளத்தாக்கு (DUMBARA VALLEY).

இது ஒரு இந்திய மரம்.; இது காணப்படும் இடங்கள், தக்காண பீடபூமியின் கடலோரப் பகுதி, அந்தமான் தீவுகள், மற்றும் ஸ்ரீலங்கா. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் முழக்க பரவலாக இந்த மரங்களைப் பார்க்கலாம். 

இதன் மரங்கள் கட்டிடங்களுக்கான கட்டுமானச் சாமான்கள் செய்ய, படகுகள் கட்ட, கம்பங்கள், தூண்கள், கொட்டகைக் கம்புகள் மற்றும் மேஜை நாற்காலிகள் செய்ய ஏற்ற கடினமான மரங்கள் தரும். தண்ணீரில் போட்டால் மூழ்கும் அளவிற்கு கடினமான மரம். 

மாதவிடாய் பிரச்சினகளை சரி செய்யும்  

கி.மு.200 க்கும் முன்னாலிருந்து இந்தியாவில் பிரபலமான மருத்துவமாக இருந்து வருகிறது ஆயர்வேதம். இந்தியா இயற்கையாகவே இயற்கை வளங்களில் ஒரு பொக்கிஷம். மூலிகைகளின் புதையல். அவற்றைப் பயன்படுத்தி எல்லாவகையான நோய்களையும் குணப்படுத்தினார்கள். நுண்ணுயிர் நோய்களை குணப்படுத்தினார்கள். பூசண  நோய்களை குணப்படுத்தினார்கள். வைரஸ் நோய்களை குணப்படுத்தினார்கள்.

உலகம் முழுக்க இப்படிப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஏறத்தாழ 80 சதவிகித மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இதன் இலைகளில் உள்ள முக்கியமான பண்புகள், ஆன்ட்டி ஆக்சிடெண்ட் (ANTIOXIDANT), ஆன்ட்டி பங்கல் (ANTI FUNGAL)> மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் (ANTI BACTERIAL) அதற்கு உதவியாக இருக்கின்றன. ஆயினும்கூட இதற்கு முறையான ஆய்வுகள் தேவை என்று சொல்லுகிறார்கள்.

ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மாதவிடாயின்போது மிகுதியாக ரத்தப்போக்கு ஏற்படுதல்;(MENORRHAGEA), மிகவும் குறைவாக ரத்தப்போக்கு ஏற்படுதல்வெள்ளைப்படுதல்;(LEUCORRHEA), ஒழுங்கற்ற மாதவிடாய், தோல் சம்மந்தமான நோய்கள்போன்றவற்றை இதன் வேர்க்கஷாயம் மற்றும் இலைக் கஷாயம் குணப்படுத்து

நாசியை உறுத்தாத ரம்யாமான வாசனை கொண்டது மகிழம்பூ. இதன் பூக்கள், வெளிர் மஞ்சள் நிறமானது  வெகுநேரம் வரை பூக்கள்  புத்தம்புதுசாய் இருக்கும். பூக்கள் வாடி வதங்கிய பின்னாலும் பல நாட்கள்வரை வாசம் வீசிக்கொண்டே இருக்கும்.

Please post a comment, regards - GNANASURIA BAHAVAN D

88888888888888888888888

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...