Wednesday, June 21, 2023

CALIFORNIA PETTICOAT PALM 80. கலிஃபோர்னியா பாவாடப்பனை

கலிஃபோர்னியாவின்
பாவாடைப்பனை


பாவாடப்பனை, ஒவ்வொன்றும் பாவாடை கட்டிக்கொண்டு நிற்பது மாதிரியே தெரியும், இதன் பழங்களை  பறித்து அப்படியே சாப்பிடலாம்.  சமைத்தும் சாப்பிடலாம். ஒரு காலத்தில் பாலைவன ஜீவன்களாக இருந்த இந்த மரங்கள் பெருநகர வாசிகளாகி விட்டன, அமெரிக்காவின் பெருநகரம் லாஸ்ஏஞ்செல்சின் பிரதான சாலைகளில் எல்லாம் அழகுபடுத்துபவை இந்த பாவாடை மரங்கள்தான்.

தமிழ்ப்பெயர்:

பொதுப் பெயர்கள்: டெசர்ட் பேன் பாம், கலிபோர்னியா பேன் பாம், கலிபோர்னியா பாம், பெட்டிகோட் பாம், (DESERT FAN PALM, CALIFORNIA FAN PALM, CALIFORNIA PALM, PETTI COAT PALM, AMERICAN COTTON PALM, ARIZONA FAN PALM)

தாவரவியல் பெயர்: வாஷிங்டோனியா ஃபிலிபெரா (WASHITONIA FILIFERA)

தாவரக்குடும்பம் பெயர்: அரிகேசி (ARICACEAE)

தாயகம்: வட அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதிகள் மற்றும் பஜா கலிபோர்னியா (SOUTH WESTERN UNITED STATES AND BAJA CALI FORNIA)

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது பெட்டிகோட் பாம் என்னும் கலிபோர்னியாவின் விசிறிப் பனை மரம்.  இதைப்பற்றி தெரிந்து கொள்ளுவதற்கு  முன்னர் பொதுவாக பனை மரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். 

உலகத்தில் மொத்தம் 2500 வகையான பனைமரங்கள் இருக்கு.  அதில் பதினோரு வகை வட அமெரிக்காவில் இருக்கு.  அவற்றில் ஒன்றுதான் இந்த பாவாடைப்பனை எனும் கலிபோர்னியா விசிறி பனை மரம்.  இதன் மட்டைகள் விசிறிபோல இருப்பதால் இதன் பெயர் விசிறிப்பனை.  இந்தப் பனைக்கு சொந்த மண் கலிபோர்னியா.

கலிபோர்னியா அமெரிக்காவின் பெரிய விவசாய பூமி

அமெரிக்காவில் பசுபிக் பகுதியில் உள்ள மாநிலம் கலிபோர்னியா.  திக விவசாய உற்பத்தி செய்யும் மாநிலமும் இதுதான்.  லகின் பெரிய மரங்கள் என்பது கலிபோர்னியாவின் செம்மரங்கள்தான்.  அதன் பெயர் செக்கோயா மரங்கள்.  சினிமா உலகின் தலைமைப் பீடம் என்று சொல்லும் ஹாலிவுட் இங்குதான் உள்ளது.  மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம்.  லாஸ் ஏஞ்சல்ஸ் இருப்பதும் இங்குதான்.  சர்வதேச புகழ்பெற்ற நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கவர்னராக இருந்ததும் இங்கு தான்.

இந்தியாவிற்கு பனைமரம் என்றால் தமிழ்நாடு> அமெரிக்காவிற்கு கலிபோர்னியா

இந்தியாவில் பனைமரம் என்றால் அதற்கு உரியது தமிழ்நாடு.  அப்படி அமெரிக்காவிற்கு கலிபோர்னியா.  எனது அமெரிக்கப் பயணத்தில் மூன்று நாட்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்ல் தாங்கி இருந்தேன்.  அங்கு பனை மரங்கள் இல்லாத ஒரு இடத்தைக் கூட நான் பார்க்கவில்லை.  இங்கு நான்கு வகைப் பனை மரங்கள் இருக்கின்றன. 

லாஸ் ஏஞ்செல்ஸ் சிட்டி பனை மரங்கள்

சென்னை மவுண்ட் ரோடில் இரண்டு பக்கமும் பனை மரங்கள் நட்டு வைத்தால் எப்படி இருக்கும் ? அப்படித் தான் லாஸ்ஏஞ்செல்சில் முக்கிய சாலைகளில் வரிசைகட்டி அழகுபடுத்துபவை எல்லாம் பனை மரங்கள்தான்.

லாஸ் ஏஞ்செல்சை அழகுபடுத்தும் நான்கு வகைப் பனைகள்

நான்கு வகை பனைமரங்கள்

இங்கு நகரங்களில் பரவலாக நான்கு வகையான பனைமரங்கள் அழகுக்காக நட்டிருக்கிறார்கள்.  உயர உயரமான பனைமரங்கள்.  ஒன்று கலிபோர்னியா விசிறிப்பனை.  இரண்டாவது மெக்சிகோவிற்கு சொந்தமான மெக்சிகன் விசிறிப் பனை, மூன்றாவது ஸ்பெயின் தேசத்தின் கேனரி தீவின் டேட் பாம், நான்காவது அதிகம் காணப்படும் தென் அமெரிக்காவின் குயின்பாம் (MEDICAN FAN PALM, CANARY  ISLAND,  DATE PALM, AND QUEEN PALM). 

இந்த நான்கில் கலிபோர்னியா பனையுடன் நெருக்கமான உறவுள்ளது மெக்சிகன் விசிறிப்பனை.  இதன் தாவரவியல் பெயர் வாஷிங்டோனியா ரொபஸ்டா (WASHINGTONIA ROBUSTA).

பாலைவனங்களின் செல்லப்பனை (PALM  FOR DESERTS)

இந்த மரங்கள் 100 அடி உயரம் வளரும்.  250 ஆண்டுகள் உயிருடன் இருக்கும்.  பாலை வனங்களில் சோலைவனங்கள் எனும் ஒயாசிஸ் களில் இந்த மரங்கள் வளர்ந்துள்ளன.  கொலரோடோ பாலைவனம், மொஜாவ் பாலைவனம், சோனோரான் பாலைவனம், டெத்வேலி என்னும் மரணப் பள்ளத்தாக்கு மற்றம் புளோரிடா, வாய்ன் விர்ஜிpன் தீவுகள் இங்கெல்லாம் இந்த மரங்கள் அதிகம் இருக்கின்றன.

மரங்களின் வயது 250 ஆண்டுகள்

இந்த பனம்பழங்களை  பறித்து அப்படியே சாப்பிடலாம்.  சமைத்தும் சாப்பிடலாம்.  அமெரிக்கப் பழங்குடிகள் இதில் பலவிதமான உணவுப் பொருட்களை தயாரித்து சாப்பிட்டார்கள். 

இதன் பழங்கள் அரை அங்குல அளவுதான் இருக்கும்.  பழங்களில் சதைப்பற்றும் மெல்லியதாக இருக்கும்.  கொட்டை பெரிதாக இருக்கும்.  இதன் பழங்கள் விதைகள் மற்றும் இலைகள்தான் அவர்களுக்கு பஞ்சகால உணவு. 

ஆனால் நவீன நாகரீக உலகில் இவை நகரங்களில் குடியேறிவிட்டன.  பாரம்பரியமான பாலைவனங்களை உதறிவிட்டு சாலைகளுக்கு வந்துவிட்டன.  இன்று நகரங்களை அலங்கரிக்கும் புதுப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன.

அதிகாரிகள் தேடும் மரங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வனத்துறை வல்லுநர்கள்> பனைக்கு பதிலாக ஒக் மற்றும் சைகாமோர் மரங்களை நடப் பிரியப்படுகிறார்கள்.  கேட்டால் காய்ந்து உதிரும் பனைமட்டைகளை பொறுக்கி எடுப்பதற்கு பாடாய்பட வேண்டி உள்ளது என்று அலுத்துக்கொள்ளுகிறார்கள்.

மட்டை பொறுக்க ஆகும் செலவு

லாஸ் ஏஞ்சால்ஸ் நகரில் மட்டை பொறுக்க மட்டும் ஆண்டுக்கு நான்கு லட்சம் டாலர் செலவாகிறது என்று கையைப் பிசைகிறார்கள் இந்த பணக்கார நாட்டின் அரசு அதிகாரிகள்.  பனைமரமாக இருந்தாலும் காசு பணம் செலவு செய்யாமல் காரியம் கைகூடுமா ?

பனை மரங்களின் அழகே அழகு. 

என்னதான் சொன்னாலும் சாலைகளில் பனை மரங்கள் வரிசை கட்டி நிற்பதன் அழகே அழகு.  மற்ற மரங்களைப்போல பனைமரங்கள் காற்றை சுத்தம் செய்யவில்லை.  குளிர்ச்சி தரவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

இப்படி எதாச்சும் காரணம் சொல்லி இந்த அழகுப் பனைகளை மீண்டும் பாலை வனத்திற்குன் ஒதுக்கித் தள்ளி விடுவார்களோ ? பனை மரங்களுக்கு பரிந்து பேசுவார் பாரினில் யாருமே இல்லையா என்று  நினைத்தேன்.

கொசுறு

நல்லவேளை தமிழ்நாட்டில் மு.. ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு மூலையில் முடக்கி வைத்திருந்த  பனைமரத்தை முன்வரிசைக்கு கொண்டு வந்துள்ளார். அனுமதி இல்லாமல் பனை மரங்களை, வீட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், அவற்றை வெட்டினால் அவஸ்தைக்கு  உள்ளாக நேரிடும் என அரசு அறிவித்துள்ளது.

FOR FURTHER READING

WWW.EN.M.WIKIPEDIA.ORG / WASHINGTONIA FILIFERA

WWW.LAASSOBSECT.ORG/ A BRIEF HISTORY OF PALM TRFES IN CALIFORNIA.

WWW.SUNSET.COM/  ICONIC PALM TREES FOR HOME GARDENS.

WWW.SESERTUSA.COM / CALIFORNIA FONPALM.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

    

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...