ஆலை இல்லா ஊரில் இலுப்பைப் பூ சக்கரை |
“ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சக்கரை” – என்பது தமிழ்ப் பழமொழி. இலுப்பை
மரம், ஒரு கிராமிய
மரம், இந்திய கலாச்சாரத்துடன்
விட்டகுறை தொட்டகுறை உள்ள மரம், இந்தியக் காடுகளின் வி.ஐ.பி. மரம். இலுப்பையிலிருந்து பலவிதமான மருந்துகளை தயார் செய்கிறார்கள். பேட்ரோல்> டீசல் போன்ற
எண்ணெய்களுக்கு மாற்றான> சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான ‘மூலிகை டீசல்’ எண்ணெயை இலுப்பையிலிருந்து தயாரிக்க முடியும். “ சால் ” விதைகளுக்கு அடுத்த படியாக அதிக வகுமானம் தருவது இலுப்பைப் பூக்கள்தான். எதிர்காலத்தில்>
இலுப்பைப் பூக்களிலிருந்து> பூச்சாறு> கான்சென்ட்ரேட்ஸ்> பேக்கரி> மிட்டாய்> பானங்கள் போன்றவை தயாரிக்க வாய்ப்புகள் பிரகாசம். ஆனால் இலுப்பை
மரங்கள் வேண்டும்.
பொதுப்பெயர்: மகுவா, பட்டர் ட்ரீ (MAHUA, BUTTER
TREE)
தாவரவியல் பெயர்: மதுகா லாங்கிபோவியா (MADHUCA LONGIFOLIA)
தாவரக்குடுப்பம் பெயர்: சப்போட்டேசி (SAPOTACEAE)
தாயகம்: இந்தியா
பல மொழிப் பெயர்கள் .
தமிழ்: இலுப்பை
இந்தி: டிட்டினம்> நாட்டி இலுப்பை> மோஹா> மகுவா> மதுரகம் (TITTINUM, NATTIILUPPAI, MOHA, MAHUA, MADURGAM)
மராத்தி: மஹா (MAHA
பெங்காலி;: பான்மகுவா (PANMAHUA)
குஐராத்தி: மகுடா (MAHUDA)
கன்னடா: டாடிப்பி (DADDIPPI)
மலையாளம்: ஈரிப்பாப்பு (IRRIPAPPU)
சமஸ்கிருதம்: அடவிமதுகா (ADAVIMADDHUCA)
தெலுங்கு: அடவிப்பா (ADAVIPPA).
“ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சக்கரை” - இந்தத் தமிழ்ப் பழமொழிக்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும். ஆனால்கூட இந்த பூக்களை சாப்பிட்டவங்களுக்கு இன்னும் ஆழமாகப் புரியும். உலர்ந்த பூக்களை சாப்பிடலாம். நன்றாய் இனிக்கும்.; ஒன்றிரண்டு சாப்பிடலாம். அதற்கு மேல் குமட்டும். கூடவே சாப்பிடத் தூண்டும்படியான ஒரு மணம் வீசும். இது என் சொந்த அனுபவம்.
பன்னீர் சொம்புகள் மாதிரி பூ
என்னுடைய அரைநிஜார் வயசில் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பெரிய> உயரமான> தலை விரித்த, பகலில் கிளிகளும், இரவில் வவ்வால்களும் கொட்டமடிக்கும்படியான இலுப்பை மரம் இருந்தது. விடியற்காலையில் அந்த மரத்தின் அடியில் நடக்க கால்கள் கூசும்.
காரணம்> இரவில் பூக்கும் அத்தனை பூக்களும் மரத்தடியில் கொட்டிக் கிடக்கும். வெளிரான மஞ்சள் நிறப் பட்டு நிறத்தில்> பன்னீர் சொம்புகள் மாதிரி. பூக்களின் மீது கால் வைத்து நடக்க> உயிர்க்கொலை
செய்வது மாதிரி சங்கடமாய் இருக்கும்.
அந்த இலுப்பை மரத்தில்> எப்போதும் குறைந்தபட்சம் ஒரு டஜன் கிளிகள்> பருத்த கிளைகளில் நடை பழகிக்
கொண்டிருக்கும். சும்மா இருக்காது ‘கீச் கீச்’ சென கத்திக் கொண்டே
இருக்கும். இலுப்பை மரத்தில் இருந்த
பொந்துகளில் ஏகப்பட்ட கிளிகள் குடும்பம் குடும்பமாக வசித்து வந்தன.
சஞ்சீவி மூலிகை கொண்டு வரும் பருந்துகள்
அதன் உச்சிக் கிளையில் ஒரு பருந்துக் கூடு கூட இருந்தது. அந்த பருந்து குஞ்சு பொரிக்கும்போது> குஞ்சுகளின் கால்களை
ஒரு சிறு கம்பியினால் கட்டி வைத்துவிட வேண்டும்.
அப்போது அதை அவிழ்க்க சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரும். நம்பிக்கை
சஞ்சிவி மூலிகை வந்ததும் கருடன் குஞ்சுகளின் கால்களில் கட்டிய கம்பிகள் தெறித்து விழுந்து விடும். அந்த சஞ்சீவி மூலிகை மட்டும் அந்த கூட்டிலேயே
கிடக்கும். அதனை நாம் எடுத்து
பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்பிக்கை
பத்திரப்படுத்திக் கொள்ளுவது என்றால், அந்த மூலிகை கிடைத்ததும், நமது தொடையில் ஒரு கத்தியால் கிழித்து அதில் இந்த மூலிகையை வைத்து,
காயத்தின் இரு பக்கமும் கையை வைத்து மூடினால் காயம் இருந்த இடம்
தெரியாமல் மூடிக்கொள்ளும். நம்பிக்கை.
அப்புறம் என்ன நாம் நினைத்தாலும் அது நடக்கும். சஞ்சீவி மூலிகை கையில்
இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் பறந்து கூடப் போகலாம். பிறர் கண்ணுக்கு தெரியாமல் நாம் விரும்பும்போது மறைந்து போகலாம், எல்லாம் இந்த சஞ்சீவி மூலிகையின் சக்தி.
சிறு வயதில் எனக்கு சொல்லப்பட்ட கதை.
இதற்காக அந்த இலுப்பை மரத்தில் பலமுறை ஏறி தேடுதல் வேட்டை
நடத்தும் போதெல்லாம் காக்கைகள் கூட்டமாக பறந்து வந்து எங்களை விரட்டும், காரணம் அந்த மரத்தில் ஐந்தாறு காக்காய் கூண்டுகளும் இருந்தன.
அந்த சஞ்சீவி மூலிகைக்காக இலுப்பை மரத்தை சுற்றி வந்ததெல்லாம் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. இன்னும் அந்த புலவனூரில் அந்த இலுப்பை மரம்
இருக்குமா ? பலாப்பழ நகரம் பண்ருட்டிக்கு போகும் வழியில், இருக்கும் பெண்ணையாற்றங்கரை
கிராமம் புலவனூர். இன்றும்
என் கனவுகளில் வந்து போகும் ஊர்.
இந்தியக் காடுகளின் வி.ஐ.பி. மரம்
இந்தியக் காடுகளின் வி.ஐ.பி. மரம். இலுப்பை. வேகமாய் வளரும். அதிகபட்சம் 20 மீட்டர் வளரும். கூடுமானவரை எப்போதும் பசுமையாக இருக்கும். மேற்கு வங்காளம்> சத்தீஷ்;கர்>
ஜார்கண்ட்> உத்தரப்பிரதேசம்> பீஹார்> மகாராஷ்;ட்ரா>
தெலிங்கானா> மத்தியப்பிரதேசம்> கேரளா> குஐராத்> ஒரிசா> தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு உள்ளூர் மரம்.
இப்போது, கிராமங்களில் அதிகம் இலுப்பை மரங்களைப் பார்க்க முடிவதில்லை. எங்கோ ஒன்று இருக்கலாம். காடுகளின் உட்புறம் இருக்கலாம்.
இலுப்பைப் பழங்கள் சின்ன சைஸ் சப்போட்டா மாதிரி இருக்கும். ஆனால்
இலுப்பை ஏறத்தாழ கூம்புபோல இருக்கும்.
பெரிய விதைகள். கொட்டைகள். அதுவும் சப்போட்டா கொட்டைகள் போலவே இருக்கும். இரண்டும் ஒரே குடும்பம். காயாக இருக்கும்போது பறித்தால் இரண்டிலும்
பால் வடியும்.
கோயில்களுக்கு விளக்காகும் இலுப்பை நெய்
நான் பள்ளிக்கூட சிறுவனாக இருந்தபோதுகூட இலுப்பை எண்ணெயில்தான் அநேக கோயில் விளக்குகள் எரிந்தன. இலுப்பை எண்ணெய்க்கு அந்தகாலத்துப் பெயர் இலுப்பைநெய். இலுப்பை விதைகளை சேகரித்து ஆண்டுக்கொரு முறை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து சேமித்து வைத்துக் கொள்வார்கள். அப்புறம்
கோயில்களில் எரியும்.
‘இலுப்பைப் பூக்களிலிருந்து சக்கரை தயாரித்தார்களா?’ என்று தெரியவில்லை. அதிலிருந்து ஒரு
வகை மது> அதாவது ஒருவகை சாராயம் தயாரித்து உபயோகப்படுத்தினார்கள் என்று நான் படித்திருக்கிறேன்.
இலுப்பைப் பூ சாராயம்
சத்தீஷ்;கர்> ஒரிசா> ஜார்கெண்ட்> ஆந்திரப்பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்;ட்ராவில் வசித்த பழங்குடி மக்கள் இலுப்பைப் பூக்களிலிருந்து ஒரு
வகையான சாராயம் தயாரித்து குடித்திருக்கிறார்கள். தண்ணீர் மாதிரியே தென்படுமாம் பார்க்க. இலுப்பை சாராயத்தில் இதன் பூக்களின் இனியவாடை தூக்கலாக இருக்குமாம்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இலுப்பைப் பூக்களில் பிரத்தியேகமான ‘ஜாம்’ தயார் செய்கிறார்கள். இதற்காக அந்த
கிராமத்தில் ஒரு தனிப்பட்ட கூட்டுறவு சங்கம் அங்கு “ ஜாம்ஜாம் “ என்று செயல்படுகிறதாம்.
பீஹார் மாநிலத்தில் சிவான் (SIWAN) என்னும் மாவட்டத்தில்
பல கிராமங்களில் இலுப்பை மரங்கள் நிறைய உள்ளன.
அந்தப் பூக்களை பெருமளவில் சேகரித்து>
அவற்றை உலர்த்தி மாவாக்கி பல வகையான் ரொட்டிகளை தயாரிக்கிறார்கள்.
மருந்துகள் மற்றும் இலுப்பை டீசல்
இந்தியப் பழங்குடிகள் துறை> இலுப்பையிலிருந்து பலவிதமான மருந்துகளை தயார் செய்கிறார்கள். இதன் மூலம்>
தோல் நோய்கள்> மூட்டுப்பிடிப்பு> தலைவலி> மலச்சிக்கல்> மூலம்> ஆகியவற்றை குணப்படுத்துகிறார்கள்.
பேட்ரோல்> டீசல் போன்ற எண்ணெய்களுக்கு மாற்றான>
சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான ‘மூலிகை டீசல்’ எண்ணெயும் இலுப்பையிலிருந்து தயாரிக்க முடியும் என்கின்றன ஆராய்ச்சிகள். .
மரங்கள் அல்லாத வனப் பொருட்கள்> இலை, தழை, பூக்கள், காய்கள், கனிகள் பட்டைகள், கட்டைகள், கொட்டைகள், எண்ணெய், வேர், ஆகியவை தரும் வருமானம் குறித்த ஆய்வு ஒன்று நடைபெற்றது.
சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு பேருதவி
அதில் சால் விதைகளுக்கு அடுத்த படியாக அதிக வருமானம் தருவது இலுப்பைப் பூக்கள்தான் என்று
கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல
அவற்றை மதிப்புக் கூட்டுவது மூலம் பலமடங்கு இந்த வருமானத்தை அதிகரிக்க முடியும்
என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. காடுகளில் வாமும் பழங்குடி
மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கும் அது பேருதவியாக இருக்கும்.
கொட்டைகளிலிருந்து எண்ணெய் எடுத்தபின் இதன் பிண்ணாக்கு
அத்தனையும்> கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படும்.
பட்டாம் பூச்சிகள் வரும்
மேலாக பரவி வளரும் இதன் வேர்கள் மண் அரிமானம் தடுக்கும். பரந்து வளரும் இதன் கிளைகள் பரந்து பட்ட
பரப்பிற்கு நிழல் தரும். தரிசு
நிலங்களிலும் கடினமான மண்கண்டம் உடைய செம்பொரை நிலங்களிலும் வளர்ந்து பசுமை
பரப்பும்.
தமிழ் நாட்டில் அருகிவரும், அழிந்து வரும் மரங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து
மரங்களில் இலுப்பை ஒரு இடத்தை கண்டிப்பாய் பிடிக்கும்.
இதனை சாலை ஓரங்களிலும், வயல் ஒரங்களிலும் பெருந்தோட்டங்களிலும், சிறு காடுகள் வளர்ப்பிலும், நலிவுற்ற காடுகளை மீட்டெடுப்பிலும் இலுப்பை மரங்களை நட்டுப் பாதுகாக்க வேண்டும்.
இதன் பூக்கள்> மற்றும் பழங்கள்> ஏராளமான பறவைகள்> பட்டாம் பூச்சிகள்> தேனீக்கள்> போன்றவற்றை கவர்ந்திழுக்கும்.
ஆனால் தற்போது> உணவாக> தீவனமாக> மற்றும் மது தயாரிக்க மட்டுமே பயன்படுகிறது: அதுவும் மிகக் குறைவான அளவே.
வாய்ப்புகள் பிரகாசம்.
எதிர்காலத்தில்>
இலுப்பைப் பூக்களிலிருந்து> பூச்சாறு> கான்சென்ட்ரேட்ஸ்> பேக்கரி> மிட்டாய் பானங்கள்
தயாரிப்பு. பூக்கூழ் அதிலிருந்து சாஸ்> ஜாம்> ஜெல்லி> என வாய்ப்புகள் பிரகாசம்.
WWW.EN.M.WIKIPEDIA.ORG / MADHUCA LONGIFOLIA
WWW.FEEDIPEDIA.ORG / MAHUA - MADHUCA LONGIFOLIA
WWW.FLOWERSOFINDIA.NET / MADHUCA LONGIFOLIA VAR. LATIFOLIA
WWW.INDIANBIODIVERSITY.ORG / MADHUCA LONGIFOLIA LATIFOLIA
WWW.PFAF.ORG / MADHUCA LONGIFOLIA BUTTER TREE
WWW.TROPICAL.THEFERNS.INFO/ MADHUCA LONGIFOLIA – Useful Tropical Plants
PLEASE
PST A COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)
9999999999999999999999999999
No comments:
Post a Comment