அயோவா மாநில அரசு மரம் பர் ஒக் மரம் |
பர் ஓக் மரம், அமெரிக்க மரம், அயோவா மாநிலத்தின் அரசு மரம். தரைகள் மேவ, பெட்டிகள் செய்ய,
வேலிக்கால்களாக பயன்படுத்த, பழங்குடி மக்களின்
சிறுசிறு உடல் உபாதைகளை நீக்கும், காட்டு விலங்குகளின் பசி போக்கும்,
குறிப்பாக கரடிகள், மான்கள்.
முள்ளம்பன்றிகள், காட்டு மாடுகள் போன்றவைகளுக்கு தனது அகார்ன்கள், இலைகள், பட்டைகள் மற்றும் இளம் தளிர்களை தாராளமாகக்
கொடுக்கும், காட்டுத்தீக்கு
பயப்படாத முரட்டுப் பட்டைகளைக்
கொண்ட மரம்.
தமிழ்ப்பெயர்: பர்
ஓக் மரம் (BUR OAK)
பொதுப் பெயர்கள்: பர் ஒக், மோசிகப் ஒயிட் ஒக், புளூ ஒக், பர்லி ஒக் (BUR
OAK, MOSSYCUP WHITE OAK, BLUE OAK, BURLY OAK)
தாவரவியல் பெயர்: கொர்கஸ் மேக்ரோகார்ப்பா (QUERCUS
MACROCARPA)
தாவரக் குடும்பம் பெயர்: பேகேசி (FAGACEAE)
தாயகம்: வட அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் மற்றும் கனடாவின் கிழக்கு மற்றம்
மத்தியப் பகுதிகளை சொந்த மண்ணாகக் கொண்டது இந்த பர் ஒக் மரம்.
அயோவா மாநிலத்தின் அரசு மரம் இந்த பர் ஓக்
மரம், அமெரிக்காவின்
மையப்பகுதியில் அமைந்துள்ளது இந்த மாநிலம். இந்த மரம் தரைகள்
மேவ, பெட்டிகள் செய்ய, வேலிக்கால்களாக பயன்படுத்த,
பயனாகிறது. உடலில் ஏற்படும் காயங்கள், புண்கள். வயிற்றுப்போக்கு ஆகிய, பழங்குடி மக்களின் சிறுசிறு உடல் உபாதைகளை நீக்க உதவுகிறது,
விலங்குகளின் பசி போக்கும்
காட்டு விலங்குகளின் பசி போக்கும் மரம், குறிப்பாக கரடிகள்,
மான்கள்.
முள்ளம்பன்றிகள், காட்டு மாடுகள் போன்றவைகளுக்கு தனது
அகார்ன்கள் எனும் விதைக்கனிகள்,
இலைகள், பட்டைகள் மற்றும் இளம் தளிர்களை தீவனமாகக் கொடுத்து உதவும் மரம் இது.
அட்லாண்டிக் கடலோரம்
வட அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் பரவியுள்ளன. அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில்
நியூபுரூன்ஸ்விக் முதல் வட
கரோலினா வரை,மேற்கில் ஆல்பெர்டா வரை, கிழக்குப்
பகுதியில் மோன்டானா, வியோமிங், நியூமெக்சிகோ, மிசிசிப்பி மிசௌரி மற்றும் ஒஹையோ பள்ளத்தாக்குகள், மற்றும்
கிரேட்லேக்ஸ் (GREAT
LAKES) பகுதிகளிலும் பரவியுள்ளது.
கிரேட் லேக்ஸ் என்பதைவிட அமெரிக்காவின் எட்டு மாநிலங்கள் மற்றும் கனடாவின் ஒண்டாரியோ மாநிலம் என்று சொல்ல்லாம்.
வட அமெரிக்காவின் கிரேட் லேக்ஸ் மாநிலங்கள், என்பவை,
இல்லிநாய்ஸ்> இண்டியானா, மிச்சிகன், மினிசோட்டா, நியூயார்க், ஒஹையோ, பெனிசில்வேனியா மற்றும் விஸ்கான்சின்.
இலை உதிர்க்கும் மரங்கள்
பர்ஒக் மரம் இலை உதிர்க்கும் மரம், அதாவது அவை எல்லாம் ஊசியிலை மரங்கள் அல்ல
என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நானூறு வயசு மரங்கள்
அதிகபட்ச உயரமாக 150 அடி உயரம் கூட வளரும் மரம். பிரம்மாண்டமான மரம். சாதாரணமாக
ஒக் மரங்கள் 200 முதல் 300 ஆண்டுகள் இருக்கும் ஆனால் 400 ஆண்டுகள் வயதுடைய மரங்களை நிறையவே பார்க்கலாம்.
மெல்ல வளரும்
பர்ஓக் மரங்கள் மெல்ல வளரும் இயல்புடையவை. ஒர் ஆண்டில் ஒரு அடி வளர்ந்தால் பெரிய காரியம். ஒரு பர்ஒக் மரம் 20 அடி வளர்ந்திருந்தால் அதன் வயதைத் தோராயமாக 20 ஆண்டுகள் என்ற சொல்லிவிடலாம்.
முள்ளங்கி மாதிரி இலைகள்
பர்ஒக் மரத்தின் இலைகள் கரும்பச்சை நிறத்தில், அடிப்பக்கம்
சிறுத்து, நுனிப்பகுதி அகன்று, இலைகளின் ஒரங்கள், பல பிரிவுகளாக, தோராயமாக முள்ளங்கிச் செடியின் இலைகள் போல தென்படும்.
ஒக் மரத்தின் காய்கள்
பூக்கள், மஞ்சள் கலந்த பசுமை நிறச் சரங்களாக தோன்றும். ஒக்
மரத்தின் காய்கள் அழகாய் இருக்கும். இதனை அகார்ன் என்று சொல்லுகிறார்கள்.
கோப்பை மாதிரி அகார்ன்
இந்த அகார்ன்
காய்கள் உருவான பின்னால்,
அவை முதிர்ச்சி
அடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும். பழமான
அகார்ன்கள்; ஒவ்வொன்றிலும் ஒரு கொட்டை
இருக்கும். அகார்ன்கள் ஒன்று முதல் இரண்டு அங்குல அளவில், ஒரு சிறிய கோப்பை போலத் தோன்றும்.
குல்லா போட்ட நவாப்பு
டல்லஸ்’ன் அடிசன் பகுதியில் நான் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட்’ல் கூட எனக்கு முதன் முதலாக ‘ஹலோ’
சொன்னது, ‘பர் ஒக்’ மரத்தின் அக்கார்ன்கள்தான்.
இந்த அக்கார்ன்களுக்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர் ‘குல்லா போட்ட தவாப்பு’. அதன் படத்தைப் பார்த்தால் நான் வைத்திருக்கும் பெயர் எவ்;வளவுப் பொருத்தமானது என்று புரியும்.
விலங்குகளுக்கு உணவாகும்
அமெரிக்காவில் ஏகப்பட்ட ‘ஒக்’
மரங்கள் உள்ளன. ஆனாலும் ‘பர்ஒக்’
மரத்தின் ‘அகார்ன்’கள்தான் பெரியவை. அதனால்தான் இதற்கு ‘மேக்ரோகாக்ப்பா’
(QUERCUS MACROCARPA)
என
தாவரவியல் பெயர் சூட்டி உள்ளனர்.
கரடிகள் மான்கள்
காடுகளில் உள்ள வனவிலங்குகள், இதன் ‘அகார்ன்’களை உணவாகக் கொள்ளுகின்றன. குறிப்பாக கரடிகள், மான்கள். முள்ளம்பன்றிகள்> காட்டு மாடுகள் போன்றவை இந்த மரங்களின்
அகார்ன்கள், இலைகள், பட்டைகள் மற்றம் இளம் தளிர்களை தீவனமாக
சாப்பிடுகின்றன.
ஆற்றங்கரைகள் ஓடைக்கரைகள்
பர்ஒக் மரங்கள் பெரும்பாலும் காடுகளில் வளர்ந்துள்ளன. அதிலும் ஆற்றங்கரைகள், ஒடைக்கரைகள், ஈரச் செழிப்பான பகுதிகளிலும் தனி
மரங்களாகவும் வளர்ந்துள்ளன.
காட்டுத்தீ
பற்றி கவலைப்படாது
வனங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் ‘காட்டுத்தீ’ (FOREST FIRE) தொல்லை தொடர்கதைதான். சில மரங்கள்
இந்த காட்டுத்தீயினால் கடுமையாகப் பாதிக்கும்.
சில ஒரளவு தாங்கி வளரும். சில மீண்டும் ஓங்கி வளரும்.
வளர்ந்த ‘பர் ஒக்’
மரங்களை ‘காட்டுத்தீ’
தொட்டுக்கூட பார்க்காது. அதற்குக் காரணமாக இருப்பது, அந்த மரங்களின் முரட்டுப் பட்டைகள். தீ பற்றிக் கொள்ளாமல் இருக்க
இதன்
பட்டைகள் வேலியாக அமைந்துள்ளன.
மரம் அழுகல் பூசணம்
கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் வரை பிரச்சினை இல்லாமல்
வளருகின்றன இந்த ‘பர் ஒக்’
மரங்கள்.
வயதான ஒக் மரங்களை ஒரு வகை மரம்
அழுகல் பூசணம் (WOOD ROT FUNGUS) தாக்க ஆரம்பிக்கும். நிழல்களில் தாழ
இருக்கும் இலைகளைத் தாக்கி அவற்றை உலர வைக்கும்.
வயசாளி மரங்கள்
பர் ஒக் மரங்களின் வயது அதிகபட்சம் 400 ஆண்டுகள் எனப் பார்த்தோம். ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த மரங்கள் வயசாளி மரங்களாகி
விடுகின்றன.
கொஞ்சம் வேகமாக காற்று வீசினாலும் இந்த மரங்கள் முறிந்து போகின்றன. அடிக்கும் சிறுபுயலில் கூட வயசான மரங்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளுகின்றன.
நகரங்களில் பர்
ஓக் மரங்கள்
வனத்தில் இருந்த இந்த மரங்கள் இன்று நகரங்களில் நுழைந்துவிட்டன. அடிசன் நகரத்தில் பரவலாக இந்த ‘பர்ஒக்’
மரங்களைப் பார்க்க முடிகிறது. இவை எல்லாமே பெரிய பெரிய மரங்களாக
வளர்ந்துள்ளன. தோராயமாக அவற்றின் வயது 30 முதல் 40 ஆண்டுகள் இருக்கும்.
பர்ஒக் மாநிலப் பூங்கா
பர்ஒக் மரங்களுக்கென
ஒரு மாநிலப் பூங்கா ஒகையோ மாநிலத்தில்
அமைந்துள்ளது.
மிச்சிகன் மாநிலத்தில் ‘பர்ஒக்’
பெயரில் ஒரு கிராமமே அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல, அயோவா மாநிலத்தின் அரசு மரம் ‘பர்ஒக்’
தான்.
பர் ஓக் கவிதைகள்
‘ரிச்சர்ட் எபர்ஹார்ட்’
என்னும் உள்ளுர் கவிஞர் ஒருவர் ‘பர்ஒக்ஸ்’
என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை
வெளியிட்டுள்ளார்.
வட அமெரிக்க மக்களின் கலாச்சாரத்தோடு கைகோர்த்தபடி உள்ளன இந்த ‘பர் ஒக்’
மரங்கள், என்பதை சொல்லத்தான் இந்த செய்தி.
FOR
FURTHER READING
FOR
FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG
/ QUERCUS MACROCARPA
WWW.WILDFLOWER.ORG/
QUERCUS MACROCARPA
WWW.FS.FED.US/ QUERCUS MACROCARPA
WWW.SRS.FS.USDS.GOV/
QUERCUS MACROCARPA
WWW.LANDSCAPEPLANTS.OREGONSTATE.EDU/ QUERCUS MACROCARPA
A
REQUEST
I LOVE TO SEE
YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment