ஐரோப்பியாவை ஆட்சி செய்யும் பிரேசில் ரோஸ்வுட் |
பிரேசில் ரோஸ்வுட், ஆயிரம் ஆண்டுகளாக ஐரோப்பிய
மரவாடிகளை அரசாட்சி செய்யும் மரம், பல நூறு ஆண்டுகளாக காற்றிசை
மற்றும் நரம்பிசைக் கருவிகள் செய்ய இசைவு தரும்
மரம், கரையான்கள் தொட்டு[ப் பார்க்க அஞ்சும்
மரம், பிரேசில் நாட்டில் ஆனைவிலை குதிரை விலைக்குப் போகும் மரம்.
தமிழ்ப்பெயர்: பிரேசில்
ரோஸ்வுட் (BRAZIL ROSE WOOD)
பொதுப் பெயர்கள்: பாஹியா ரோஸ்வுட், ஜக்ரந்தா டா பாஹியா,. பிரேசிலியன் ரோஸ்வுட், ரியோ
ரோஸ்வுட், பியானோ வுட், . காவியுனா, கிரானா, . ஜக்ரந்தா உனா (BAHIA ROSE WOOD, JACRANDA DA BAHIA, BRAZILIAN ROSE
WOOD, RIO ROSE WOOD, JACRANDA DO BRAZIL 11. PIANO WOOD, CAVIUNA, GRAUNA, JACRANDA
UNA)
தாவரவியல் பெயர்: டால்பெர்ஜியா நைஜ்ரா
(DALBERGIA NIGRA)
தாவரக் குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAC)
தாயகம்: ஆப்ரிக்கா, வெஸ்ட் ஆப்ரிக்கா, காங்கோ, அங்கோலா
இசைக் கருவிகள்
சுமார் ஆயிரம் ஆண்டுகளாக> ஐரோப்பிய “டிம்பர் மார்கெட்” ஐ அரசாட்சி செய்யும்
மரம். மற்றும் 19 ம் நூற்றாண்டு
முழுக்க, தரமான பொருட்கள் செய்ய என்றால் அடுத்து அவர்கள் தேடுவது, ‘பிரேசில் ரோஸ்வுட்’ தான். பல நூறு ஆண்டுகளாக இசைக் கருவிகள் செய்ய
பயன்படுத்தியது இந்த பிரேசில் ரோஸ்வுட்தான்.
மரவண்டுகள்> கறையான் போன்றவை தொட்டுக்கூட பார்க்க முடியாத மரம். பியானோ கட்டைகள், புல்லாங்குழல், பசூன்கள் ;(BASOONS) என்னும் இசைக்கருவிகள்
செய்ய பொருத்தமான மரம்.
ரியோ டி ஜெனிரோ
பிரேசில் நாட்டில் பாஹியா பகுதியின் சொந்த
மண்ணுக்கு உரிய மரம் என்கிறார்கள். ரியோ
டி ஜெனிரோ உட்பட மூன்று நான்கு மாநிலங்களுக்கு சொந்த மரம் என்றும்
சொல்லுகிறார்கள். பாஹியா, எஸ்பிரிட்டோ சேன்டோ, மினாஸ் ஜெராய்ஸ், ரியோ டி ஜெனிரோ, மற்றும் சாவ் பவ்லோ
ஆகிய இடங்கள். இந்த ரோஸ் வுட் மரங்களின்
பூர்விகமான இடங்கள்.
அழிந்து வரும் மரங்கள்
சர்வதேச அளவில் இந்த மரங்கள் ‘அழிந்து
வரும் மரங்கள்’ என்ற பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளது. இதனை ‘சைட்ஸ்’ (CITES) என்றும்
நிறுவனம். முடிவு செய்துள்ளது ‘சைட்ஸ்’ என்றால் ‘கன்வென்ஷன் ஆன்
இன்டர்நேஷனல் டிரேட் இன் என்டேன்ஜர்டு ஸ்பீசிஸ்” (CONVENTION ON INTERNATIONAL TRADE IN ENDANGERED SPECIES) என்று அர்த்தம்.
அதிகபட்சமான
வியாபாரம்
1992 ம் ஆண்டு ‘சைட்ஸ்’ நிறுவனம் இந்த முடிவை
எடுத்துள்ளது. இதற்கு இரண்டு மூன்று
காரணங்கள் முக்கியமானவை. அதிகபட்சமான
வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதும்> விதைகள் அதிக அளவில் எலிகள்.
அணில்கள் போன்றவற்றால் அழிக்கப் பட்டதும்தான்
இதற்கான காரணங்கள்.
புல்லாங்குழல்கள்
கிட்டார், பியானோ போன்ற இசைக் கருவிகள் செய்ய, அதற்கான உதிரி பாகங்கள் செய்ய, மரச்சாமான்களை அலங்கரிக்க அல்லது அழகுபடுத்துவதற்கான வீனீர் மரத்தகடுகள் செய்ய, பசூன்கள், புல்லாங்குழல்கள் போன்ற இசைக் கருவிகள் செய்ய (WOOD WIND INSTRUMENTS), கட்டிடங்களில் தரைகள் அமைக்க>
என்று பலவகைகளிலும் இந்த மரங்கள் உபயோகமாகின்றன.
மரங்கள் உறுதியாவை எடை மிகுந்தவை:
மரவேலைகளை இந்த மரத்தில் சுலபமாகச் செய்யலாம். மரங்கள் நீண்ட நாட்கள் உழைக்கும். இதன் மரத்தில் வேலை பார்க்கும்போது> ரோஜா பூ வாசனை மணக்கும். மரங்கள் 30 முதல் 40 மீட்டர் உயரம் வரை
வளரும். மரத்தின் குறுக்களவு அதிகபட்சமாக 3 முதல் 4 அடி இருக்குமாறு பருக்கும்.
காற்றுக் கருவிகள்
புசூன்கள், புல்லாங்குழல்கள், நாதஸ்வரங்கள், கிளாரிநட்டுகள் போன்றவை, எல்லாமே காற்றின் மூலம் இசைக்கும் கருவிகள். பசூன்கள் வாசிப்பவர்களுக்கு ‘பசூனிஸ்ட்’ என்று பெயர். இந்த கருவிகளைச் செய்ய இந்த மரம்
பயனாகிறது.
மலிவான மரங்கள்
இந்த இசைக் கருவிகளைச் செய்ய சில சமயம்> மலிவான மரங்களைக் கூட பயன்படுத்துகிறார்கள். அவை ‘பிரேசிலியன் ரோஸ்வுட்’ மட்டுமின்றி, மேப்பிள், சைகாமோர் மேப்பிள் மற்றும் சுகர் மேப்பிள் ஆகியவை.
மினி புல்லாங்குழல்
இந்த காற்றிசைக் கருவிகளில் மிகவும் பழமையானது மற்றம் பிரபலமானது, புல்லாங்குழல்கள்தான். சர்வதேச அளவில் காற்றிசைக் கருவிகள்
மிகவும் சிறியது பிக்காலோ (PICCOLO), இத்தாலிய மொழியில் ‘பிக்காலோ” என்றால் “மினிபுல்லாங்குழல்” என்று
அர்த்தம்.
பிக்காலோ என்பது ஒரு புல்லாங்குழலில் பாதியளவுதான்
இருக்கும், புல்லாங்குழல்
வாசிப்பவர்கள் சுலபமாக பிக்காலோ வாசிக்க முடியும்..
குறுங்குழல் எனும் முகவீணை
தமிழ்நாட்டில் குறுங்குழல் என்றும் ‘முகவீணை’ என்னும் கருவிதான் மிகவும்
சிறியது. தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக்
கலைகளில் இன்றும் கூட இந்த மூகவிணையை பயன்படுத்துகிறார்கள்.
தற்போது உலோகத்தில் செய்யப்படும் இந்தக் கருவி பழங்காலத்தில் ஆச்சா மரத்தால் செய்வார்கள், இதனை நாதசுவரத்தின் ஆதி வடிவம் என்று சொல்லுகிறார்கள்.
ஏழு முதல் எட்டு துளைகள் கொண்ட ஒண்ணரை அடி நீளம்
கொண்ட இக்கருவியின் இசை நாயனத்தின் ஒசையைவிட உச்ச நிலை அதிர்வை உடையது.
எனது சின்ன வயசில், துரோபதை அம்மன் கோயிலில் வருஷா
வருஷம் நடக்கும் பதினெட்டு நாள் தெருக்கூத்தில்,
கழுத்து நரம்பு புடைக்க முகவீணை வாசிக்கும் கூத்துக் கலைஞர்களைப் பலமுறை
பார்த்திருக்கிறேன்.
அந்த முகவீணை வாசிப்பை இப்போது நினைத்தாலும்
உடல் சிலிர்க்கிறது, சோகக்
காட்சிகளில் வாசிக்கும் முகவீணை வாசிப்பு அப்படியே மனசை உருக்கி திரவமாய் ஓட வைத்துவிடும்
ரோஜாப்பூ” வாசனை வீசும்
உலகப்பிரசித்தி பெற்ற தேக்கு, ரோஸ்வுட், மகோகனி போன்ற மரங்களுக்கு சமமானது,
பிரேசிலியன் ரோஸ்வுட்.
மரத்தில் வேலை செய்யும்போது “ரோஜாப்பூ” வாசனை துடிக்கும். அநேகமாய் எல்லா ‘ரோஸ்வுட்” மரங்களிலும் வேலை
செய்யும்போது. அநேகமாய் இந்த ரோஜாப்பூ
வாசனை வீசும் எனத் தோன்றுகிறது.
இந்த மரங்கள் நன்கு வளர நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும்.
வறட்சியான சூழல் ஏற்றது.
வறட்சியைத் தாங்கி
வளரும், காற்று மண்டலத்தில் இருக்கும் தழைச் சந்தை மண்ணில் ஈர்த்து சேமித்து வைக்கும்.
சதுப்பு நிலம் வேண்டும்
விதைகள் மூலம் புதிய மரங்களை உருவாக்கலாம். நூறு விதைகள் விதைத்தால் 80 விதைகள் வரை சுலபமாய் முளைக்கும்.
விதைத்த 10 முதல் 20 நாட்களில் எல்லா விதைகளும் வெ;றறிகரமாக முளைக்கும்.
விதைகளை 12 முதல் 24 மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் உறவைத்து விதைப்பதால் அதன்
முளைப்புத்திறனை வேகப்படுத்தலாம்.
இந்த மரங்கள் வளர ஆழமான மண்கண்டம் வேண்டும். அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க
வேண்டும். ஈரப்பசை மிகுந்த சதுப்பு
நிலமாக இருக்க வேண்டும்.
அருகிவரும் மரங்கள்
பிரேசில் நாட்டில் மிக வேகமாக அருகிவரும் அழிந்து வரும் அசாதாரண மரங்களில் ஒன்று இந்த
ரோஸ்வுட் மரம். அதற்கு
முக்கியக் காரணங்களாக இருப்பவை ஐந்து.
பிரேசில் நாட்டில் அதிக விலைக்குப் போவது.
காலனி ஆதிக்கம் தொடங்கிய காலம் முதல் வெட்டப்பட்டு வியாபாரமானது இரண்டு.
மிக வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு வருவது மூன்று.
மிகக் குறைவாக நடை பெறும் காடுகள் மீட்பு முயற்சி நான்கு.
இதன் விதைகளை முளைக்க விடாமல் தின்று தீர்க்கும் எலிகள்> அணில்கள் ஆகியவை, ஐந்து.
வேண்டுகோள்
வேகமாக அழித்துவரும் மரங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ‘சைட்ஸ்’ என்னும் அமைப்பு இந்த
‘பிரேசிலியன் ரோஸ்வுட்’ மரத்தை அழிந்துவரும் மரமாக (ENDANGERED TREE SPECIES) 1998 ம் ஆண்டு அறிவித்துள்ளது.
அருகிவரும் மரம் எனத் தெரிந்தால், மரக் காதலர்கள் அவற்றை தங்களின்
நடவுத் திட்டத்தில் மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நான் அவர்களை வேண்டுகிறேன்.
FOR FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG –‘DALBERGIA
NIGRA’.
WWW.IUCNREDLIST.ORG –‘DALBERGIA
NIGRA’.
WWW.SR.WIKIPEDIA.ORG-‘DALDERGIA NIGRA’.
WWW.WOODDATABASE.COM-‘BRAZILIAN ROSE WOOD.
WWW.WOOD – DATABASE.COM-
“BRAZILIAN ROSE WOOD”.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO
OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO
POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ
THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR
COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment