எலும்பு ஒட்டி இலை |
எலும்பு ஒட்டி இலை BONE FRACTURE HERB
கொஞ்ச நாட்களுக்கு
முன்னால் நான் எலும்பு ஒட்டி மரம் என்ற ஒரு தகவலை வெளியிட்டிருந்தேன். அப்போது சில நண்பர்கள் “எலும்பு ஒட்டி இலை என்று இருக்காமே.. அதைப் பற்றி சொல்லுங்கள்.. அதன் படத்தை வெளியிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
பொதுப்பெயர் & தாவரவியல் பெயர் (COMMON NAME & BOTANICAL NAME)
மேலே இருப்பதுதான்
எலும்பு ஒட்டி இலை. இதன் தாவரவியல் பெயர் ஆர்மோகார்பம் செல்லாய்டஸ் (ORMOCARPUM CELLOIDES)என்பது. இதன் பொதுப்பெயர் சவுத் இந்தியன்
கேட்டர்பில்லர் புஷ் (SOUTH INDIAN
CATERPILLAR BUSH) என்பது.
எலும்புகள் பலவீனமாக உள்ளவர்கள் (STRENGTHEN THE WEEK BONES)
எலும்புகள் பலவீனமாக உள்ளவர்கள் இதன் இலைகளை அரைத்து பாலுடன்
சேர்த்து சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்டால் இதன் இலைச்சாந்தினை கட்டுப்போட்டால்
முறிந்த எலும்பு விரைவாகக் கூடிவிடும்.
பல மொழிப்பெயர்கள் (VERNACULAR NAMES)
தமிழில் இதன் பெயர் எலும்புஒட்டி (ELUMBU OTTI) மலையாளத்தில் காட்டுமுரினா (KATTUMURINA) தெலுங்கில் அடவிமுனகா சமஸ்கிருதத்தில் கனனாஷேகரா (KANANASHEKARA).
இதில் சந்தேகம் ஏதும் இருந்தால் அன்பு கூர்ந்து கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கேள்விகளைப் பதிவிடுங்கள்.
GNANASURIA BAHAVAN D
No comments:
Post a Comment