Wednesday, June 21, 2023

BLUE ATLAS CEDAR PYRAMIDS' TIMBER 92. பிரமிடுகளில் பயன்படுத்திய மரம் புளு அட்லஸ் செடார்

பிரமிடுகளில் பயன்படுத்திய 
புளு அட்லஸ் செடார்


பேரரசன் சாலமன்  அரண்மனை கட்டுவதற்கு பயன்படுத்திய மரம்,  கிப்து பிமிடுகளில் வைக்க மம்மி என்னும் இறந்த உடல்களை பாடம் செய்வதற்கு பயன்பட்ட மரம், பல்வேறு அழகு சாதப் பொருட்கள் செய்ய. நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் செய்ய எண்ணெய் தரும் மரம், குளிர்ப் பிரதேசங்களில் காடுகளை உருவாக்கப் பயன்படும் மரம், இந்த புளூ அட்லஸ் செடார் மரம்.

தமிழ்ப்பெயர்: புளூ அட்லஸ் செடார், (BLUE ATLAS CEDAR)

பொதுப் பெயர்கள்: அட்லஸ் செடார்> புளூ அட்லஸ் செடார் (ATLAS CEDAR> BLUE ATLAS CEDAR)

தாவரவியல் பெயர்: செட்ரஸ் அட்லாண்டிகா (CEDRUS ATLANTICA)

தாவரக்குடும்பம் பெயர்: பைனேசி (PINACEAE)

தாயகம்: வட ஆப்ரிக்காவிற்குச் சொந்தமானது> இந்த புளு அட்லஸ் செடார் மரம்.

பிரமிடு மாதிரி தலை          

40 மீட்டர் உயரமும் 2 மீட்டர் விடடமும் உடையதாக> மிக்க குறைவான கிளைகளுடன்> குட்டையாக மேல் நோக்கி வளரக்கூடியதாக> நுனிகள் மேல் தோக்கி வளைந்தும்> மரத்தின் தலைப்பகுதி பிரமிடு போலவும் (PYRAMIDAL CROWN) இருக்கும். 

இலைகள் வெளிர்  நிறமாகவும்> பசுமையாகவும்> 2.5 செ.மீ நீளமுடையதாகவும்> 19 முதல் 28 இலைகளைச் கொண்ட திருகலுடன் கூடிய வட்ட வடிவில் இருக்கும்.

கூம்பு வடிவ காய்கள்   

ஜூPன் முதல் செப்டெம்பர் வரையான மாதங்களில் பூக்கும்.  இதன் காய்கள் கூம்பு வடிவத்தில் (CONES) உருளை போல 5 முதல் 7 செ.மீ. நீளமாகவும்.  4 செ.மீ அகன்றும் உருவாகும்.  இந்த கூம்புகள் இளம் காவி நிறத்தில் உருவாகும். 

இவை செப்டெம்பர் அக்டோபர் மாதத்தில் முதிர்ந்து விதைகளை உருவாக்கும்.  விதைகள் 12 மி.மீ. நீளமும்> 12.மி.மீ   நீள சிறகுடனும் காணப்படும்.

அட்லஸ் மலைத் தொடர் மரம்    

இந்த செடார் மரங்கள் பெரும்பாலும் அதிகம் இருப்பது அட்லஸ் மலைத் தொடரில் என்பதால்> இந்த மரம் செட்ரஸ் அட்லாண்டிகா என்றும் புளு அட்லஸ் செடார் என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த அட்லஸ் மலைத் தொடர் சுமார் 2500 கி.மீ தொலைவுக்கு வடமேற்கு ஆப்ரிக்காவில் மொராக்கோ> ல்ஜீPரியா மற்றும் துனீசியா ஆகிய   நாடுகளில் விரிந்து பரந்துள்ளது.    

உலக அளவில்> இந்த செடார் மரங்களில் மொத்த பரப்பளவு 163000 எக்டர்.  இதில் சுமார் 80 சதவிகித செடார் மரங்கள் இருப்பது> மத்திய அட்லஸ் மலைத் தொடரில்.

1927 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மத்திய அட்லஸ் பகுதியில் இருந்த செடார் மரங்களின் பரப்பு மட்டும் 150000 எக்டர்.

ஆல்ப் மலை செடார் மரங்கள் 

மொரோக்காவில் இருக்கும் மொத்த செடார் மர பரப்பளவில் ஆல்ப் மலைகளில் இருப்பவை மட்டும் 15 சதம்  என சொல்லுகிறது ஒரு புள்ளி விவரம்.    

அட்லஸ் செடார் மரம்> லெபானன் செடார் மரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது.  லேபானன் செடார் என்பது பற்றி பைபிள்  பழைய ஏற்பாட்டில்  இதுபற்றி குறிப்படப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல பேரரசன் சாலமன்ன் அரண்மனை இந்த செடார் மரங்களில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

அல்ஜீரியா செடார்   

அட்லஸ் செடார் என்று சொன்னால் அது அட்லஸ் மலைச்சாரலுக்கு உரியது என்று அர்த்தம்.  அதிலும் குறிப்பாக அல்ஜீPரியா நாட்டின் அட்லஸ் மலைக்குச் சொந்தமான செடார் மரம் என்று அர்த்தம்.

செடார் மர எண்ணெய்    

மொரோக்கோவிலிருந்து உற்பத்தி ஆகி வெளிவரும்.  இயற்கை தாவர எண்ணெய் (ESSENTIAL OIL) அத்தனையும் இந்த அட்லஸ் மரச் சில்லுகள் மற்றும் மரத்துகள்களில் (WOOD CHIPS & SAW DUSTS)  தயாரிக்கப்பட்டதுதான்.   

இறந்த உடல்களை பாடம் செய்யலாம்

கிப்து நாட்டில் பிமிடுகளில் வைப்பதற்கான மம்மி என்றும் இறந்த உடல்களை பாடம் செய்வதற்காக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்தி வந்துள்ளார்கள், என்பது ஆச்சரியமான செய்தி.

மருந்துப் பொருட்கள்   

இந்த அட்லஸ் செடார் எண்ணெய் பல்வேறு அழகு சாதப் பொருட்கள் (COSMETICS) செய்யப் பயன்படுத்துவதோடு,  சில நோய்களை குணப்படுத்தும் மருந்துப் பொருட்களையும் செய்கிறார்கள்.

சொறி,  படை, தடிப்புத் தோல் அழற்சி எனும் சொரியாசிஸ்> மற்றும் தோலில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தவும் பயனாகிறது. இந்த அட்லஸ் செடார் எண்ணெய்.   

இவை மட்டுமின்றி, பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகள், உடல் பருமனால், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள்,  மூட்டுவலி,  மூட்டுப் பிடிப்பு,  மூட்டுவாதம்,  சுவாசம் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட உடல் உபாதைகளையும் சரி செய்வதற்காக அட்லஸ் செடார் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள்.   

சிவப்பழகு கிரீம்கள்  

சோப்புகள்,  ஷாம்புகள்,  முகம் மற்றும் சருமப் பூச்சாக,  சிவப்பழகு கிரீம்கள் போன்றவை தயாரிக்க இந்த அட்லஸ் செடார் எண்ணெய் உபயோகமாகிறது.   

பூச்சி விரட்டிகள்

வீட்டுத் தொல்லைகளான கொசு, மூட்டைப்பூச்சி கரப்பான் போன்றவற்றை விரட்டும் பூச்சி விரட்டிகள் (INSECT REPELLENT) செய்யவும் பயன்படுகிறது.

கொசுறு

அட்லஸ் செடார் எண்ணெய் போலவே நம்ம ஊர் ஹிமாலயன் செடார் எண்ணெயும் தயார் செய்து பயன் படுத்துகிறார்கள்.

FOR FURTHER READING

WWW.CONIFERS.ORG - “CEDRUS ATLANTICA”

WWW.ARTICLES.MERCOLA.COM – ATLAS CEDAR OIL – ESSENTIAL  OIL.

WWW.EN.WIKIPEDIA.ORG.”CEDRUS ATLANTICA”

WWW.AROMAWEB.COM “ATLAS CEDAR WOOD ESSENTIAL OIL USES & BENEFITS.

WWW.MISSOURIBOTANICALGARDEN.ORG – “CEDRUS ATLANTICA – PLANT PHENOL

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

   

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...