Wednesday, June 21, 2023

BIO-DIESEL BEAUTY CHINESE PISTACHE 97.பயோடீசல் தரும் சைனிஸ் பிஸ்டாச்சி அழகு மரம்

சைனிஸ் பிஸ்டாச்சி அழகு மரம்


சைனிஸ் பிஸ்டாச்சி மரம், 
 முந்திரிகொட்டை மரத்தின் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது, பிரபலமான அழகான சாலை மரம், சீனாவில் விதைகள் மூலம் பயோடீசல் தரும் மரம், மேஜை நாற்காலி செய்ய மரக்கட்டையும் மஞ்சள் வண்ண சாயமும் தரும் மரம்,  நினைவாற்றலை இழக்கச் செய்யும் அல்சீமியர் நோய்  உட்பட பல நோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகள் தயாரிக்க,  உதவும் மரம்.

தமிழ்ப்பெயர்: சைனிஸ் பிஸ்டாச்சி மரம் (CHINESE PISTACHE TREE)

பொதுப் பெயர்கள்: சைனிஸ் பிஸ்டாச்சி, கிரீன் அல்மாண்ட், மேஸ்டிக் ட்ரீ பிஸ்டாச்சியோ, பிஸ்டாச்சியோ நட் ட்ரீ (CHINESE PISTACHE, GREEN ALMOND, MASTIC TREE, PISTACHIO, PISTACHIO NUT TREE

தாவரவியல் பெயர்: பிஸ்டாசியா சைனென்சிஸ் (PISTACIA CHINENSIS)

தாவரக் குடும்பம் பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)

தாயகம்: மத்திய மற்றும் மேற்கு சைனா

அல்சீமியர் நோய்

அல்சீமியர் நோய், ஆஸ்துமா, வலிப்பு நோய், வயிற்றுப்போக்கு, சக்கரை நோய், இப்படி பலநோய்களை குணப்படுத்தும் சக்தி உடையது சைனிஸ் பிஸ்டாச்சி மரம்.

இந்த நோய்களில் அல்சீமியர் நோய்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். இது பரம்பரையாக வரலாம், வாழ்க்கை முறைகளாலும் வரலாம், அல்லது சுற்றுப்புற சூழல் காரணங்களாலும் வரலாம்.

நடுவில கொஞ்சம் பக்கத்தை காணும்

குறிப்பாக மூளையின் திசுக்கள் பாதிப்படைவதால் ஏற்படும், புரியும்படியாக சொல்வதென்றால்நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்பிரச்சினைதான், முக்கியமாக மறதி, மறதி, மறதி ! இதுதான் அல்சீமியர் நோய் !

சாலை மற்றும் சோலை மரம்

சீனா, டைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சொந்த மண்ணாகக் கொண்ட மரம் இந்த பிஸ்டாச்சி மரம்.  சிறிய இலை உதிர்க்கும் மரம். 

நிறம் மாறும் இலைகளை உடைய மரம்.  இதன் பழங்களும் அப்படியே, பச்சை, சிவப்பு, நீலம் என பல வண்ணங்களில் மாறி மாறி காய்க்கும் மரம். 

சாலைகளை அழகு படுத்த, நிழலுக்காக, தோட்டங்கள், பூங்காக்கள், வீடுகள் மற்றும் கட்டிட முப்புகளை அழகுபடுத்த, அலங்கரிக்க உதவும் மரம்.

வேம்பு மாதிரி    

அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில், டல்ஸ். நகரத்திற்கு வந்து சேர்ந்ததும் நான் பார்த்து மயங்கி முதல் மரம் இதுதான்.  இதன் இலைகள் தூரத்தில் இருந்து பார்க்க நம்ம வேப்ப மரம் மாதிரியே இருந்தது.

மரத்தின் அருகில் சென்று ஒரு இணுக்கு இலைகளைப் பறித்தேன்.  வேம்பு இலை மாதிரி இருந்தாலும் அது வேம்பு இல்லை எனத் தெரிந்தது.  வேம்பு இலைகளின் வாசம் இதில் இல்லை.

போர்ட்வொர்த் நகர பூங்கா

சில நாட்கள் கழித்து போர்ட்வொர்த் நகரத்தில் இருக்கும் தாவரவியல் பூங்காவிற்கு போனேன்.  அங்கு போன பின்னால்தான் இது சீனாவின் பிஸ்டாச்சியா மரம் என்றும் தெரிந்து கொண்டேன். அங்கு எல்லா மரங்களுக்கும் பெயர்ப்பலகை இருந்தது.   

தினம் தினம், வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் அந்த மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வேன்.  ஒரு நாள் பார்க்கிறேன்>  கொத்துக் கொத்தாகக் காய்கள்.  பட்டாணி மாதிரி காய்கள்> ஏகப்பட்ட பட்டாணி காய்கள்.

ஆனால் அளவில் சிறிய பச்சைப் பட்டாணி.  சிpல நாட்களில் அவை காவி நிறமாக மாறின.  ஒரிறு நாட்களில் அவை நல்ல சிவப்பாக மாறின.  சில நீல வண்ணத்தில் மாறின.

இப்போது ஒரே குலையில் பச்சை, சிவப்பு, காவி மற்றும் நீல வண்ணக் காய்கள். பச்சை சிவப்பு காவி கூட சரி, நீல நிறம் ? வித்தியாசமாய் இருந்தது. ஆச்சரியம் !  

இலைகளும் நிறம் மாறும்.    

இப்போது அந்த மரம் பச்சைப்பசேல் என பசுமை மாறா மரம் மாதிரி இருக்கிறது.  வேம்புமரம் மாதிரி கிளைகள்.  தழையும் தாம்புமாக இருக்கிறது.  ஆனால் இலை உதிர் காலத்திற்குள் இந்த இலைகள் எல்லாமே நிறம் மாறுமாம்.  மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று நிறம் மாறுமாம். இந்த பருவத்தை ஃபால் பருவம் (FALL SEASON). இதுதான் இலைகள் உதிரும் பருவம் என்பது.

மரங்களை திட்டமிட்டு நடுகிறார்கள்    

சிறிய சாலை ஒரங்களில், மற்றும் நெடுஞ்சாலைகளில், குடியிருப்புகளில்> கடை கண்ணிகளில், என்னென்ன மரங்களை நடலாம், என தீர்மானித்து நட்டிருக்கிறார்கள்.

எந்த நாட்டு மரமாக இருந்தாலும் அவை பொருத்தமானவைகளா ? எனப் பார்க்கிறார்கள்.  அவை அழகானவைகளா ? எனப் பார்க்கிறார்கள்.  அழகு மரங்களா ? மொத்த வடிவத்தில் அழகு மரங்களா ? எனப் பார்த்துப் பார்த்து நட்டிருக்கிறார்கள்.

நடுத்தரமான மற்றும் சிறிய மரங்கள்      

20 முதல் 30 அடி உயரம் வளரும் நடுத்தரமான மரம்.  முழுமையான சூரிய வெளிச்சம் தேவைப்படும் மரம். வட்சியைத் தாங்கி வளரும் மரம்.  பூக்கள் ஏப்ரல் மாத வாக்கில் பூக்கும் மரம்

ஆனால் அவை பற்றி குறிப்பிடும்படி சொல்வதற்கெஎதுவும் இல்லை எனத் தெரிகிறது. இந்த பிஸ்டாச்சியா மரங்கள் என்றால் அவறறின் இலைகளும்> பழங்களும்தான் வர் ஜாலம் காட்டும். வகை வகையாய் அழகு சேர்க்கும்.

வானையா? வாடையா     

இதன் இலைகள்பற்றி எழுதும் தாவரவியலாளர்கள் வாசனை உள்ள இலைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.  நான் பார்த்வரை இதன் இலைகளில் வாடை வருகிறது.  வாசனை வரவில்லை. 

வாசனை வரும் ரகங்கள் தனியாக உள்ளதா ? னத் தெரியவில்லை. இன்னும் ஆழமாக தோண்டித் துருவ வேண்டும்.

வறட்சியைத் தாங்கி வளரும்   

இந்த மரம் வறட்சியைத் தாங்கி வளரும், கடினமான களிமண்> நடுத்தரமான இருமண்பாட்டு மண், லேசான மணல்சாரி மண்,  என பரவலான மண் வகைகளிலும் சிரமமின்றி வளரும். 

லேசான அமிலத்தன்மை முதல் மிகையான உப்பு நிலத்திலும் வளரும்.  ஆனால் கடலோரத்தில் முரண்டு பண்ணும்.

உள்ளுர் மரங்களுக்கு உதவாது     

கலிபோர்னியா மாநிலத்தில் இதனை உள்ளுர் மரங்களை வளர விடாத மரம் என்று கைப் படுத்தி உள்ளார்கள்.  இப்படிப்பட்ட மரங்களை இன்வாசிவ் ஸ்பீசிஸ் (INVASIVE SPECIES) என்று சொல்லுகிறார்கள்.

பொதுவாக இப்படிப்பட்ட மரங்கள் வேகமான வளரும்.  வேக மாகப் பரவும். அக்கம் பக்கத்து மரங்களை அனுசரித்துப் போகாது.

இந்த மரங்களை, இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரங்கள் எண்று நான் சொல்லுவேன். அல்லது ஒண்டவந்த பிடாரி.

சீனாவில் பயோடீசல்

பிஸ்டாச்சி மரங்கள் ஏகப்பட்ட பழங்களை உற்பத்தி செய்யும்.  பிஞ்சுகள் பச்சை நிறமாக  இருக்கும்> பின்னர் சிவப்பு நிறமாக மாறும்>  கனிந்த பழங்கள் நீல நிறமாக மாறும்>  ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதை இருக்கும்.

சீனாவில் பிஸ்டாச்சி மரங்களின் விதைகளில் பயோடீசல் தயாரிக்கிறார்கள்.

மரச் சாமன்களும் மஞ்சள் சாயமும்

இதன் மரத்தில் மரவேலைகள் செய்கிறார்கள்.  மேஜை நாற்காலி செய்கிறார்கள்.  இதர தட்டுமுட்டுச் சாமான்கள் செய்கிறார்கள்.  இந்த மரக் கட்டைகளிலிருந்து மஞ்சள்நிற சாயம் தயாரிக்கிறார்கள்.   

பருப்பில்லாமல் கல்யாணமா என்னும் பழமொழி போல சீனாக்காரர்கள் பிஸ்டாச்சியா இல்லாதப் பூங்காக்களா? என்கிறார்கள்.

FOR FURTHER READING

WWW.MISSOURI BOTANICAL GARDEN.ORG – PISTACIA CHINENSIS

WWW.SELECTREE.CALPILAY.EDU - URBAN FOREST ECO SYSTEMS INSTITUTE – “CHINESE PISTACHE

WWW.EN.WIKIPEDIA.ORG – PISTACIA CHINENSIS

WWW.PLANTS.CES.NCSU.EDU/   PISTACIA CHINENSIS

WWW.PFAF.ORG/ PISTACIA CHINENSIS

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...