Friday, June 30, 2023

BHIMA A NEW TISSUECULTURE BAMBOO 172.புதிய திசுவளர்ப்பு மூங்கில் பீமா

 

திசுவளர்ப்பு மூங்கில் 
பீமா


மூங்கில்  பீமா 
பேம்பூசா பல்கூவா 


(BHIMA MUNGIL, BALCOOVA BAMBOO, BAMBUSA BALCOOVA, POACEAE)

தாவரவியல் பெயர்: பேம்பூசா பல்கூவா (BAMBUSA BALCOOVA)

தாவர குடும்பம்: போவோசியே (POACEAE)

பொதுப்பெயர்/ ஆங்கிலப்பெயர்: பல்கூவா பேம்பூ (BALCOOVA BAMBOO)

தாயகம்: இந்தியா, இந்தோசைனா

இந்திய துணைக் கண்டத்தில் பீமாஎன்ற ஒரு புதிய திசுவளர்ப்பு மூங்கில் ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி டாக்டர் பாரதி அவர்கள் இந்த புதிய பீமா பல்கூவா ரகத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.

டாக்டர் பாரதி அவர்களிடம் பேசிய போது மூங்கில் பற்றிய ஆச்சரியமான செய்திகளை எல்லாம் கூறினார். இவருடைய திசு வளர்ப்பு ஆய்வுக் கூடம் தமிழ் நாட்டில் ஓசூரில் உள்ளது.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மூங்கில் கன்றுகள்

இந்த ஆய்வுக் கூடம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் திசு வளர்ப்புக் கன்றுகளை உற்பத்தி செய்கிறது. உலகிலேயே ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மூங்கில் கன்றுகளை உற்பத்தி செய்யும் திசு வளர்ப்பு ஆய்வுக்கூடம் இதுதான் என்பதைக் கேட்க ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது.

உயர்தர ஆடைகள் உற்பத்திக்கு உதவும் மூங்கில்

இந்த பீமா மூங்கில் ரகத்தில் உற்பத்தி செய்யப்புடும் நூலைக் கொண்டு உயர்தர பருத்தி மற்றும் லினன் ஆடைகளை உற்பத்தி செய்ய முடியும். இது டெக்ஸ்டைல் தொழில் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூங்கில் ரகம், பேம்பூசா பல்கூவா (BAMBUSA BALCOOVA)  என்னும் இந்திய மூங்கில் வகையிலிருந்து  உருவாக்கப்பட்டுள்ளது.  

பீமா மூங்கில் ஒரு ராட்சச மூங்கில்

முள்ளில்லாதது பூக்காதது, வேகமாக வளரும் தன்மை உடையது, அதிக மகசூல் தரும் ரகம். ஓர் ஆண்டில் ஒரு ஏக்கரில் 1000 கன்றுகள் நட்டால் 40 டன் மகசூல் கிடைக்கும். 2500 கன்றுகள் நட்டால் 100 டன் கிடைக்கும்.

பல்கூவா ஒரு ராட்சச மூங்கில் (GIANT BAMBOO).  உயரம் அதிக பட்சம் 25 மீட்டா வளரும்தடிமன் 15 செ.மீ. உடையது. வறட்சியைத் தாங்கும். குறைவான மழையிலும் வளரும். ஒரு ஏக்கரில் 40 டன் மர மகசூல் தரும். இந்த வகை பூக்கும், ஆனால் விதை பிடிக்காது.

இது கொத்து மூங்கில் (CLUMPING BAMBOO). வணிக ரீதியல் பல்கூவா மூங்கில் தோட்டம் அமைப்பது சமீபத்தில் ஆப்ரிக்காவில் பிரபலம் அடைந்துள்ளது.  பல்கூவா 1600 ம் ஆண்டு வாக்கில் அங்கு அறிமுகம் ஆனது. இதனை பெரும் பரப்பில் பயிரிட முயற்சிகள் செய்து வருகிறார்கள். 

பல்கூவா மூங்கிலின் பலமொழி பெயர்கள்

தமிழ்: பீமா மூங்கில், பல்கூவா மூங்கில், பராக் மூங்கில் (BHIMA MUNGIL, BALCOOVA MUNGLE, PARAK MUNGLE)

பெங்காலி: பல்கூ பென்ஸ் (BALKU BANS)

அஸாமிஸ்: பலுக்கா (BHALUKA) 

கெமில்லி ரெமெலோ (CAEMELLI REMELO) மற்றும் ஈகோ பிளானெட் பேம்பூ (ECO PLANET BAMBOO) ஆகிய முன்னோடி மூங்கில் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்கூவா மூங்கில் தோட்டம் அமைப்பில் வெற்றிகரமாக இறங்கி உள்ளன.

ஆப்பிரிக்காவும், இ சி டி சி (E C D C) பொன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் வேளாண்மை மற்றும் அரசுத்துறையில் பல்கூவா மூங்கிலின் அவசியத் தேவையை உணர்ந்துள்ளன.

ஆனாலும் பல்கூவா மூங்கில் கன்றுகளை பெருமளவு உற்பத்தி செய்வது டாக்டர் பாரதி அவர்களின் ஓசூர் திசு வளர்ப்பு ஆய்வுக் கூடம்தான் என்பது ஆச்சரியமான செய்தி.

உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூங்கில் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது டாக்டர் பாரதியின் பீமா மூங்கில்.

சில மூங்கில் வகைகள் பூ பூத்தாலும் விதை பிடிப்பதில்லை. அதற்குக் கீழே சில உதாரணங்கள்.

1. பேம்பூசா வல்காரிஸ் (BAMBUSA VULGARIS)

2. பேம்பூசா பல்கூவா (BAMBUSA BALCOOVA)

3. டெண்ட்ரோகலாமஸ் ஸ்டாக்சி (DENDROCALAMUS STOCKSII)

விதை பிடிக்காததில் என்ன விசேஷம் என்று கேட்கத் தோன்றும். அதில் விசேஷம் உண்டு. விதை பிடித்தால் மூங்கிலின் கதை முடிந்தது என்று அர்த்தம். அதனால் பேம்புசா பல்கூவா மூங்கில் வகை பூத்தாலும் மரங்கள் சாவதில்லை என்கிறார் டாக்டர் பாரதி.

சிலர் லக்கி பேம்பூ பற்றி கேட்கிறார்கள்.

லக்கி பேம்பூ (LUCKY BAMBOO) என்ற பெயரில் விற்பனை உலகம் பூராவும் விறபனை ஆகிறது. வீட்டில் ஆபிசில் எங்கு வைத்தாலும் அதிர்ஷ்டம் என்கிறார்கள். கிப்ட் தரும் பொருட்களில் முக்கியமான பொருளாக உள்ளது இது. அது அதிர்ஷ்டமா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் அது  உண்மையில் மூங்கில் அல்ல. அஸ்பராகேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

இருட்டில் வளரும் செடி இது. தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் மழைக்காடுகளில் வளரும் செடி. ஆனால் இந்தச் செடிகள் சைனா மற்றும் டைவான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

THE FIRST BOOK ON 100 TAMIL RIVERS - நூறு தமிழ் ஆறுகள் பற்றிய புதிய நூல்

நூறு தமிழ் ஆறுகள்  புதிய நூல்  எழுதியவர்  பூமி ஞானசூரியன் STORY OF 100 RIVERS நூலின் 15  சிறப்புகள் 1. தமிழகத்தின் 100 ஆறுகளை பதிவு செ...