Friday, June 30, 2023

BAMBOO GLOBALLY FAST-GROWING TREE 171. மூங்கில் இலை மேலே..


மூங்கில் இலை மேலே.. 
தூங்கும் பனி நீரே..




 (MOONGIL, BAMBOO, DENDROCALAMUS STRICTUS, BAMBUSA ARUNDINACEAE, POACEAE )

 தாவரவியல் பெயா:டெண்ட்ரோகலாமஸ் ஸ்ட்ரிக்டஸ், பேம்பூசா அருண்டினேசி  (DENDROCALAMUS STRICTUS, BAMBUSA ARUNDINACEAE)

பொதுப் பெயர் / ஆங்கிலப் பெயர்:  பேம்பூ  (BAMBOO)

தாவரக்குடும்பம்: போவோசியே  (POACEAE)

உலகிலேயே அதிக வேகமாய் வளரும் மரம் எது தெரியுமா ? அதுவும் 24 மணி நேரத்தில் 36 இஞ்ச் அல்வது 91 செ.மீ. வளரும் மரம் ? அதாவது ஒரு மணி நேரத்தில் 4 செ.மீ. வளரும் மரம் ? ஒவ்வொரு 90 செகண்டுக்கும் ஒரு மில்லி வளரும் மரம் ? இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்,மூங்கில் !

மூங்கிலில் மொத்தம் இருப்பவை 1400 இனங்கள். மத்திய கிழக்கு ஆப்ரிக்காவில் கிரேட் லேக்ஸ்  (GREAT LAKES) என்று ஒரு பகுதி;. அங்கு மூங்கிலை வியாபார ரீதியாக பயிர் செய்கிறார்கள்.

வட அமெரிக்காவில் பல தனியார் கம்பெனிகள் மூங்கில் வியாபாரத்தில் அசத்துகின்றன. பில்லோடேக்கிஸ் நைஜ்ரா, பில்லோடேக்கிஸ் எடுலிஸ்  (PHYLLOTACHYS NIGRA, PHYLLOTACHYS EDULIS) ஆகிய மூங்கில் வகைகளை இந்த கம்பெனிகள் சகுபடி செய்கின்றன.

உலகிலேயே மூங்கிலுக்கென்று ஒரு நகரம் உள்ளது தெரியுமா ? சீனாவில்தான்  இருக்கிறது  ஆங்கிலத்தில் பேம்பூ டவுன். அதன் உண்மையான பெயர் ஆஞ்சி டவுன்.  அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது ? காரணம் அங்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் எக்டர் நிலப் பரப்பில் மூங்கில் தோப்புகள் உள்ளன. அதில் 40 வகையான மூங்கில்களை வைத்திருக்கிறார்கள். அதுதான் உலகின் மூங்கில் நகரம்.

பொதுவாக மூங்கில் வகைகள் எத்தனை ஆண்டுகளில் பூக்கும் தெரியுமா ? 65 முதல் 120 ஆண்டுகள் ஆகும். நிறைய பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. 130 ஆண்டுகள் கழித்துப் பூக்கும் வகையும் உண்டு. அதன் பெயர் பில்லோஸ்டேக்கிஸ் பேம்புசாய்டஸ்  (PHYLLOTACHYS BAMBUSOIDES)

சில வகை மூங்கில்; 30 முதல் 35 வருஷத்திலும் பூக்கும். உதாரணம் மெலோகேன்னா பேம்புசாய்டஸ்  (MELOCANNA BAMBUSOIDES)

மூங்கில் பூத்தால் பஞ்சம் வரும். இது பரவலான நம்பிக்கை. மூங்கில் பூத்தால் ஏகப்பட்ட மூங்கில்அரிசி உற்பத்தி ஆகும். இதை அதிகபட்சமாக சாப்பிடுபவை எலிகள்தான். மூங்கில் அரிசியில் ஆண்மை பெருக்கும் சக்தி அபரிதமாய் உள்ளதாம். இதனால் எலிகள் எண்ணிக்கையில் அதிகம் பெருகும். இப்படிப் பெருகிய எலிகள் பெருமளவில் பயிர்களை சேதம் செய்யும். அதன் விளைவாக  பற்றாக்குiறுயும் பஞ்சமும் ஏற்படும். இப்படித்தான் மூங்கில் பூக்கள் பஞ்சத்திற்கு காரணமாகின்றன.

இதன் விளைவாக சில தீவிரவாத இயக்கங்கள் கூட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தோன்றின என்றுகூட நான் படித்திருக்கிறேன். ஆச்சரியமான செய்தி !

பல ஆண்டுகளுக்கு முன்னால் டேராடுனுக்கு சென்றிருந்தேன். அங்கு வன ஆராய்ச்சி நிலையத்தில் ஐம்பது அறுபதுக்கும் மேற்பட்ட மூங்கில் வகைகளைப் பார்த்ததாக ஞாபகம்.

மூங்கிலின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: கல் மூங்கில், பொந்து மூங்கில் (KAL MOONGIL, PONTHU MOONGIL)

இந்தி: பான்ஸ்  (BONS)

மலையாளம்: முளா  (MULA)

தெலுங்கு: போங்கு வெதுரு  (BONGU VEDURU)

கன்னடம்: பிடிரு  (BIDIRU)

சமஸ்கிருதம்: அமுப்பா  (AMUPHA)

மணிப்புரி: சனிபி  (SANIBI)

மராத்தி: பேம்பூ  (BAMBOO)

பெங்காலி: பம்சா  (BAMSA)

ஒரியா: மகர் பன்ஸ்  (MAGAR BANS)

கொங்கணி: வாசோ  (VASSO)

உருது: பான்ஸ்  (BAANS)

குஜராத்தி: பன்ஸ்  (BANS)

மிசோ: டுர் சிங்  (TUR SINGH)

நேப்பாளி: கான்ஸ்  (KAUNS)

உலகின் மிக வேகமாக வளரும் மரம்

மரம்: உலகில் மிக வேகமாக வளரும் மரம். பசுமையான இலைகளுடன் சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும்

அலங்கார மரம். காகிதம் தயாரிக்க மரக்குழம்பு தரும். கூடைகள் தடுப்பு சுவர் தட்டிகள், வீடுகட்ட நிலைத் தூண்கள் மற்றும் புல்லாங்குழல் செய்யலாம்.  மூங்கில் மரத்தின் பயன்கள் பற்றி சொல்வதானால் தனியாக ஒரு புத்தகமே எழுத வேண்டும்..               

தமிழ் நாட்டின் மூங்கில் நகரம்

இன்னொரு ரகசியம் சொல்லுகிறேன். நம்ம தமிழ்நாட்டிலும் ஒரு மூங்கில் நகரம் உருவாகியுள்ளது, அது தெரியுமா ? கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஹொசூர்தான் அது. காரணம் உலகிலேயே இன்று தினசரி அதிகபட்சமான மூங்கில் கன்றுகளை உற்பத்தி செய்வது ஹொசூர்தான். இங்கு உற்பத்தி ஆகும் மூங்கில, உலகம் முழுக்க போகிறது.

திசுவளர்ப்பு முறையில் மூங்கில் கன்றுகள்

திசுவளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த உலக சாதனையை மவுனமாக செய்து முடித்திருப்பவர் வேளாண்மை விஞ்ஞானி டாக்டர் பாரதி ஒரு விவசாயப் பட்டதாரி. அந்த மூங்கில் பேம்பூசா பல்கூவா  (BAMBUSA BALCOOVA) என்ற ராட்சச மூங்கில் இனத்தைச் சேர்ந்தது. அதற்கு பீமா(BIMA) என்று பெயர்; வைத்துள்ளார். இது பற்றி தனியாக ஒரு கட்டுரையில் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

கம்பருக்கு ஏற்றப்பாட்டு ரொம்பப் பிடிக்கும்.

ராமாயணத்தை எழுதிய கம்பருக்கு ஏற்றப்பாட்டு என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அந்த காலத்தில் ஏற்றம் இறைப்பவர்கள் பாட்டுப் பாடிக்கொண்டே ஏற்றம் இறைப்பார்கள். இறைக்கும் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாட்டு அது. அந்தப் பாடல்களுக்கு ஏற்றப்பாட்டு என்று பெயர். யார் ஏற்றப்பாட்டு பாடினாலும் நின்று கேட்டுவிட்டுப் போவது கம்பர் பெருமானின் வழக்கம்.

ஒரு நாள் ஏற்றக்காரன் ஒருவன் பாடிக்கொண்டே ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான். வயலில் தண்ணீர் பாய்ந்துகொண்டீருந்தது. கம்பரும் பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் தண்ணீர் பாய்ந்து முடிந்ததும் இறைப்பதையும் பாட்டையும் பாதியிலேயே நிறுத்தி விட்டான். பாடலில் மூங்கில் இலை மேலேஎன்று பாட்டின் அடியை நிறுத்தி இருந்தான.; அந்த வரியை அவன் எப்படி முடிப்பான்.

மூங்கில் இலை மேலேஎன்ன இருக்கும்  என்று யோசித்து யேசித்து கம்பருக்கு மண்டை காய்ந்துவிட்டது. கடைசியாக கம்பரே அவனிடம் போய் கேட்டார். மூங்கில் இலை மேலே அப்படி என்னதான் இருக்கு ?” என்றார்.

சிரித்துக்கொண்டே அந்த கவி ராஜன் சந்தேகத்தை அந்த ஏற்றக்காரன் நொடியில் தீர்த்து வைத்தான் மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே..என்று

ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு உண்டோஎன்று சொல்லி கம்பர் அந்த ஏற்றக்காரனை கைகூப்பி வணங்கினராம்.

மூங்கில் புல்வகையைச் சேர்ந்த்து. இதில் 1000 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. இதில் ஸ்மார் 1500 இன மூங்கில்கள் உலகம் முழுவதும் வளர்க்கப்படுகின்றன. 

இந்தியாவில் 156 வகையான மூங்கில்கள் பயிரிடப்படுகின்றன. மேற்கு வங்காளம், ஒரிச்சா, ஆந்திரப்பிரதேசம், மகராஷ்ட்டிரா ஆகியவை மூங்கில் அதிகம் உள்ள இந்திய மாநிலங்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்ய உதவுகிறது.

மூங்கில் மரங்கள் வீடுகட்ட, கைவினை பொருட்கள் செய்ய, காகிதம் செய்ய மரக்கூழ் தயரிக்க, ஐந்து ஆண்டுகளில் அறுவடை செய்ய ஏற்ற விவசாயமாக, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, மேசைகள், தட்டுக்கள், பாய்கள், தீப்பெட்டி தொழிலுக்கு, ஊதுவத்தி தொழிலுக்கு  உதவ, கட்டிடங்களில் தரை போட, சாரங்கள் கட்ட, பாலங்கள் அமைக்க, படகுகள் கட்டுமரத் தோணிகள் செய்ய, இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்களுக்கு அடிபடையாக உள்ளது.

மூங்கில் அரிசியும் மூங்கில் முளையும்

மூங்கில் முளை என்னும் மூங்கில் குருத்தை சமைத்தால் கோழிகறி மாதிரி சுவையாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள். மூங்கில் குருத்து தொடர்பான தொழில்கள் பெருகி வருகின்றன என்று சொல்லுகிறார்கள்.

மூங்கில் குருத்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பல மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டுகிறது தாய்லாந்து நாடு.

பெண்களுக்கான உடல் உபாதைகளை தீர்க்கும்.

மூங்கில் கணுக்களில் உள்ள டபாசீர், அல்லது பேன்ஸ் லோசன் என்னும் தாவர ரசாயனங்கள் ஆஸ்துமா, இருமல் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை தீர்க்கும் மருந்து என்று சொல்லுகிறார்கள்.

சிறந்த கால்னடைத்தீவனம்

கால்நடைகள், குதிரைகள், மற்றும் யானைகளுக்கு மூங்கில் இலைகள் சிறந்த தீவனமாக உள்ளது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...