வில்வ மரம் வழிபாட்டுக்கு உரிய மரம். நிறைய சிவன் கோவில்களில் ஸ்தல விருட்சமாக
வீற்றிருக்கிறது. கூவிளம், கூவிளை, மாதுரம் ஆகியவை வில்வத்தின் சங்க காலத்திய தமிழ்ப் பெயர்கள். வில்வ மரத்தின் இலை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவப் பண்புகள் உடையவை. வில்வ மரத்தில் மொத்தம் 21 வகைள் உள்ளன. வீட்டில் வில்வமரம் வளர்த்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். நூற்றியெட்டு சிவத்தலங்களை தரிசித்த பலன் கிடைக்கும்: ஆயிரம்
பேருக்கு அன்னதானம் செய்த பலனும் சேர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை பரவலாக
உள்ளது.
பொதுப் பெயர்கள்: பேல், பெங்கால் குயின்ஸ், கோல்டன் ஆப்பள், ஜேப்பனீஸ் பிட்டர் ஆரஞ்சு, ஸ்டோன் ஆப்பிள், வுட் ஆப்பிள் (BAEL, BENGAL QUINCE, GOLDEN
APPLE, JAPANESE BITTER ORANGE, STONE APPLE, WOOD APPLE)
தாவரவியல் பெயர்: ஏஜில் மர்மிலாஸ் (AEGLE
MARMELOS)
தாவரக் குடும்பம்: ரூட்டேசி (RUTACEAE)
தாயகம்: இந்தியா
வில்வ மரத்தின் பலமொழிப் பெயர்கள்
தமிழ்: வில்வம், கூவிளம், கூவிளை, மதுரம் (VILVAM, KOOVILAM, KOOVILAI,
MADURAM)
இந்தி: பேல் (BAEL))
மராத்தி: பெலாச்சி சாட் (BELAACHE CAD)
பெங்காலி: பெல்பத்தர் கா பெய்ட் (BELPATTHAR KA PAID)
குஐராத்தி: பில்லு (BILLU)
கன்னடா: பெல்லாடி கன்னு (BELLADI HANNU)
கொங்கணி;: கோரகாமிலி (GORAKAMILI)
மலையாளம்: கூலம் (KOOLAM)
மராத்தி: பேல் (BEL)
ஒடியா: பேலா (BAELA)
உருது: பேல் (BAEL)
இந்தோனேசியா: மஜா (MAJA)
தாய்: மாடும் (MATUM)
அரனடாக்: சபார்ஜலி (SAFARJALE)
சிங்களம்: பெலி (BELI)
இந்தியாவில் வில்வ மரம் வழிபாட்டுக்கு உரிய மரமாக உள்ளது. சிவனுக்கு உரிய மரமாக வணங்கப் படுகிறது. நிறைய சிவன் கோவில்களில் ஸ்தல விருட்சமாக
வீற்றிருக்கிறது. வில்வம் இலைகள் பூஜைக்கு உரியவை.
எந்தெந்த நாட்களில் வில்வம் இலைகளைப் பறிக்கலாம் என்ற நியதிகள் உண்டு. ஒரு
முறை பறித்த இலைகளை பின்னர் துடைத்து வைத்துக் கூட பூஜைகளில் பயன்படுத்துவார்கள். கூவிளம், கூவிளை, மாதுரம் ஆகியவை வில்வத்தின் கங்க காலத்திய
தமிழ்ப் பெயர்கள்.
வில்வ மரத்தின் இலை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவப் பண்புகள் உடையவை.
திருவண்ணமலையில் மகா வில்வம்
வில்வ மரத்தில் மொத்தம் 21 வகைள் உள்ளது.
இதில் முக்கியமாக மூன்றிலை வில்வம், ஐந்திலை வில்வம் என இரண்டு வகை,
உண்டு. எங்கள் மியோவாக்கி மாதிரி தெக்குப்பட்டு வனத்தில் உள்ளது. மகாவில்வம் மற்றும் அதன்ற இலை
வில்வம் பற்றி விசேஷமாகச் சொல்லுகிறார்கள்.
மகாவில்வம், மரங்கள் திருவண்ணாமலை அருணாச்சாலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது என்கிறார்கள்.
பெரும்பாலான சிவன் கோவில்களில் வில்வம்
இலைகள்தான் விசேஷமான பிரசாதம்.
வில்வம் லட்சுமி தேவியின் கரங்களில் தோன்றியதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் விஷ்ணு கோவில்களிலும் இதற்கு வழிபாடு
அனுசரிப்பது உண்டு.
நூற்றியெட்டு சிவத்தலங்களை தரிசித்த பலன்
வீட்டில் வில்வமரம் வளர்ப்பது மிகப்பெரிய
பாக்கியம். அப்படி வில்வமரம்
வளர்ப்பதால் அஸ்வமேதயாகம் செய்த பலன் அவர்களுக்குக்
கிடைக்கும். நூற்றியெட்டு சிவத்தலங்களை தரிசித்த பலன் கிடைக்கும்: ஆயிரம்
பேருக்கு அன்னதானம் செய்த பலனும் சேர்ந்து கிடைக்கும்.
வில்வ மரம் லட்சுமி வாசம் செய்யும் இடம், கிளைகள் வேதங்கள், இலைகள் சிவனின் ரூபம்: வேர்கள்
ஆழ்வார்களுக்கு சமானம் எனப் போற்றப்படுகிறது.
சிவன் பார்வதியுடன் விளையாடிய குரங்கு
ஒரு சமயம் சிவபெருமான், பார்வதியுடன் ஒரு வில்வ மரத்தடியில்
அமர்ந்திருந்தார். மரத்தில் இருந்த
குரங்கு, வில்வம் இலைகளைப் பறித்து இருவர் மீதும் எறிந்து
கொண்டிருந்தது. “ பார்வதி தேவி குரங்கின் மிது கோபப்பட, ‘கோபப்படாதே அது வில்வம் இலைகளால் நம்மை ஆசிர் வகிக்கிறது ” என்று சொல்லி சமாதானப்படுத்தி அந்தக் குரங்கை
ஆசிர்வதித்தார். அந்த குரங்குதான் கரூரை ஆண்ட சோழமன்னன், மாந்ததா என்ற மன்னனுக்கு மகனாகப்
பிறந்தான்.
அவன்தான் கருரை அரசாண்ட சோழ மன்னன்
முசுந்தன். அவன் சிவன் தனக்குச் செய்த
பேருதவியை மறவாமல் கரூர் பாசுபதேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் பல செய்தான்
முசுந்தன். ஆக சிவன் கோவில்களில் செய்யும்
வில்வ இலை வழிபாட்டை தொடங்கி வைத்தவன் முசுந்தந்தான்,
ஸ்ரீலங்கா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வில்வம் பரவலாக உள்ளன. இந்துக்களின் புனிதமான மரம்.
ஐந்திதிலை வில்வம்
இலை உதிர்க்கும் மரம் வில்வம்: 13 மீட்டர் வரை உயரமாக வளரும். தொங்கும் கிளைகளை உடையது. இலைகள் மூவிலைக் கொத்தாக இருக்கும். ஐந்திதிலைக் கொத்தான வில்வம் மரங்களும் இருக்கின்றன.
பூக்கள் வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறமாக, மயக்கும் மணத்துடன் பூக்கும்- பழங்கள் 5 முதல் 12 செ.மீ விட்டம் உடையதாக, மேல்தோடு கடினமான ஒடுபோல இருக்கும்.
பூவிலிருத்து பழமாக 11 மாதங்கள் ஆகும்.
வில்வம் பரவலான மண்வகைகளில், வளரும்.
வேறு மரங்கள் வளர முடியாத இடங்களிலும், வில்வம் வளரும். 5 முதல் 10 வரை கார அமில நிலை, “பி எச்” உள்ள மண்ணிலும் வளரும். தேங்கி
நிற்கும் தண்ணீரையும் தாங்கி வளரும்.
பழங்களை அப்படியே சாப்பிடலாம்
கனித்த பழங்களை அப்படியே சாப்பிடலாம். அதனை உலர்த்தி மாவாக்கியும், மிட்டாய் போன்ற இனிப்புகளை தயார் செய்தும்,
பலவிதமான லெமனேட் போன்ற பானங்கள் செய்தும் சாப்பிடலாம்.
ரிக்வேதத்தில் வில்வம்
இந்துக்களின் வேதம் ரிக்வேதத்தில், வில்வம், லட்சுமி வாசம் செய்யும் புனிதத்தலம் என
குறிப்பிடுகிறது. 1028 பாடல்களையும் (HYMNS) 10,600 வசனங்களையும் கொண்டது ரிக்வேதம். இது 10 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
உலகின் மிகப் பழமையான வேதம்.
வில்வம் மாதிரி பிரபலமான மரங்கள், பூக்கள், பழங்களை வைத்து போலியான பொருட்களை உற்பத்தி செய்து ஏமாற்றி பணம்
சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். இது
பற்றி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மணலை கயிறாய் திரிக்கலாம்
‘இந்த லேகியம் சாப்பிட்டால் மணலை கயிறாய்
திரிக்கலாம்: வானத்தை வில்லாய் வளைக்கலாம்’ என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள். பால் எது நீர் எது, என்று பகுத்துப்பார்த்து வாழவில்லை என்றால் இந்த உலகம் நம்மை முழுசாய் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.
அமெரிக்காவில் ஒரு நிறுவனம் வில்வம் மரத்தின்
பெயரைச் சொல்லி ஏமாற்ற நினைத்தது. ஆனால் 2016 ல் அதனை கையும் களவுமாகப் பிடித்து கோட்டுக்
கூண்டில் ஏற்றிவிட்டார்கள்.
அந்த கம்பெனிக்காக சட்டம் விரித்த விலையில் கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் கையில்
விலங்குகள் மாட்டிக் கொண்டனவாம்.
வில்வம் பழத்துடன் விவாகம்
‘நீயூவார்’ (NEWAR) நேப்பாளத்தில் வாழும் பாரம்பரியமான சமூகம். அவர்கள் இளம் பெண்களுக்கு ‘வில்வம் பழத்துடன்’ திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உள்ளது. அதன் பின்னர் ஒரு மாப்பிள்ளை பார்த்து அந்தப் பெண்ணுக்கு திருமணம் நட்த்துவார்கள்.
உண்மையாக அது அவளுக்கு நடக்கும் இரண்டாவது
திருமணம். அவளுக்கு திருமணம் முடிந்த பிறகு அந்த வில்வம் பழம் உடையாதவரை, அவள் கணவன் இறந்தால் கூட அவள் விதவையாகக் கருதப்பட
மாட்டாள்.
வில்வம் பழத்தை விஷ்ணுவின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் இந்த நேப்பாளி
சமூகத்தினர். ஆதனால்தான் வில்வம் பழத்தை ‘திவ்ய புருவுன்’ (DAIVYA
PURUSHAN) என்று அழைக்கிறார்கள்.
இந்த வித்தியாசமான கலாச்சார பழக்கத்தை அந்த
நியூவார் சமூக மக்கள் இன்று வரை கடைபிடித்து வருகிறார்கள். இதனை
அவர்கள் ‘பேல் மேரேஜ்’
(BAEL
MARRIAGE) என்று அழைக்கிறார்கள்.
10 விதமான மருத்துவப் பயன்கள்
உடல் ஆரோக்கியம் தொடர்பாக 10 விதமான பயன்கள் வில்வ மரத்தால் நமக்கும்
கிடைக்கிறது.
வில்வம் எறும்புருக்கி நோயை குணப்படுத்துகிறது. பெண்களின் கருப்பை சம்மந்தமான பிரச்சினைகளை தீர்க்கிறது. சிறுநீராக கேளாறுகளை சரி செய்கிறது. சக்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
ஹெப்படைட்டிஸ், வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல், குடற்புண், மூலம் போன்றவற்றையும் குணப்படுத்த வில்வம் இலை. பட்டை, பூக்கள், மற்றும் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மூல நோயை குணப்படுத்துகிறது. குடற்புண்களை குணமாக்குகிறது.
பொதுவாக இலைகளை வலி நிவாரணியாக, மதத்தை இதயநோய்களை குணப்படுத்தவும், பூக்கள் வயிற்றுப்போக்கை சரி செய்யவும்
பயன்படுத்துகிறார்கள்
தகுதியான டாக்டரின் சிபாரிசு
ஊட்டச்சத்து நிரம்பியதாக சத்துப் பற்றாக்குறையையும் சரி செய்கிறது.
வில்வமிட்டாய், வில்வஸ்குவாஷ், வில்வடாஃபி, வில்வமாவு (அ) வில்வப்பொடி போன்ற பல்வேறு உணவுப் பொருட்களையும்
உற்பத்தி செய்ய உதவுகிறது.
வில்வம், பழம், சாறு ஆகியவற்றை சாப்பிடும்போது சில விதிமுறைகளையும்
கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் இதனை சாப்பிடக் கூடாது. சக்கரை நோய் இருப்பவர்கள் சக்கரை அளவு தெரிந்து
சாப்பிட வேண்டும். அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும்:
வயிற்றுக் கேளாறு வரும். சர்ஜரி செய்து கொண்டவர்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
ஒரு தகுதியான டாக்டரின் சிபாரிசு
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட மருத்துவ முறைகளை
ஒரு தகுதியான டாக்டரின் சிபாரிசுப்படி
மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
FOR FURTHER READING
WWW.INDIABIODIVERSITY.ORG
/ AEGLE MARMELOS
WWW.EN.M.WIKIPEDIA.ORG/ AEGLE
MARMELOS
WWW.FLOWERSOFINDIA.NET/
AEGLE MARMELOS
WWW.RESEARCHGATE.NET
/ NAMES OF AEGLE MARMELOS IN DIFFERENT LANGUAGES.
WWW.VIKASPEDIA.IN
/ AEGLE MARMELOS
PLEASE
POST A COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)
9999999999999999999999999999
No comments:
Post a Comment