காமதேவனின் மலர் அம்புகளில் ஒன்று அசோகம் |
(ASHOKA
MARAM)
தாவரவியல்
பெயர்: சராகா அசோகா (SARACA ASOCA)
தாவரக்
குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)
தாயகம்:
இந்தியா (INDIA)
பொதுப்பெயர்: சாரோலெஸ்
ட்ரீ (SORROWLESS
TREE)
அசோக
மரம் குறிப்பாக பெண்கள் சம்மந்தமான அல்லது பெண்களுக்கு வரும் நோய்களை
குணப்படுத்துகின்ற ஒரு மூலிகை மரம்.
இலைகளும்,
பூக்களும் அழகாய் அமைந்த சிறுமரம். ஐந்து மீட்டர் உயரம் வரை வளரும்.
எப்போதும் இலை தழையுடன் இருக்கும், பசுமை மாறா மரம். பிப்ரவரி
முதல் எப்ரல் மாதம் வரை மூன்று மாதங்கள் மரம் முழுக்க பூக்களாய் தென்படும். ‘பளிச்’ சென்ற
மஞ்சள் நிறத்தில் பூக்கும் இதன் பூக்கள், ரத்தச் சிவப்பாக நிறம் மாறி, பின்னர்
உதிரும்.
இமையமலையின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியின் மலையடி வாரம், வடஇந்தியாவின் சமவெளிப் பகுதிகள், மும்பைக்கு அருகில் மேற்குக் கடலோரப் பகுதிகள், ஆகிய இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசோக மரங்கள் பரவியுள்ளன. தென் இந்தியாவில் அசோக மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
நிறைய
பேர் பைன் மரங்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கும், நெட்டிலிங்கம்
மரங்களைத்தான் ‘அசோகமரம்’ என்று சொல்லுகிறார்கள். அந்த
மரத்தின் தாவரவியல் பெயர், ‘பாலியால்தியா லாங்கிபோலியா’ என்பது.
உண்மையான
அசோகமரம் இதுதான். இந்த மரத்தடியில்தான்
சீதா பிராட்டியர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
‘கண்டேன் சீதையை’ என்று முதன்முதலாக அனுமன் சீதா பிராட்டியாரை பார்த்தது இந்த
மரத்தடியில்தான். இந்த மரத்தின் தாவரவியல்
பெயர் சராகா அசோகா என்பது.
அசோகமரம்
புனிதமான மரமாகக் கருதப்படுகிறது. இந்தியா,
இலங்கை மற்றும் நேப்பாளம் ஆகியவற்றில் எல்லாமே அசோக மரம் தெய்வீகமான
மரமாக வணங்கப்பெறுகின்றது. அசோக மரம்
சாமானியர்களின் மரம் அல்ல. கோவில் வளாகங்கள் மற்றும் அரண்மனைத் தோட்டங்களில்
வளர்க்கப்பட்டது.
இந்து
கடவுள்களில் அன்பு மற்றும் காதல் ஆகியவற்றுக்கானவர் காமதேவன் என்னும்
மன்மதன். மன்மதன் மலர்க்கணை உடையவன். அவனுடைய மலர்க்கணை என்பது ஐந்துவகையான
மலர்களைக் குறிக்கும். அந்த ஐந்து
மலர்க்கணைகளில் ஒன்று இந்த அசோக மரத்தின் மலர்கள்.
மன்மதனின்
ஐந்து கணைகளில் இருக்கும் ஐந்து பூக்களில் ஒன்று அசோக மலர். மீதமுள்ள நான்கு தெரியுமா ? காமதேவனின்
வில் கரும்பால் ஆனது. வில்லின் நாண்
தேனீக்களால் ஆனது. அம்புகள் ஐந்தும் ஐந்து பூக்கள். அவை, தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும்
நீலத் தாமரை.
‘அசோக
மரம்’ என்றால் சோகம் அல்லது கவலை போக்கும் மரம் என்று பொருள். சமஸ்கிருதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 16
பெயர்கள் உள்ளன இந்த மரத்திற்கு.
அசோக
மரத்தின் பல மொழிப் பெயர்கள்.
தமிழ்:
அசோக மரம், பின்டி (ASOKA
MARAM, PINTI)
சமஸ்கிருதம்:
அசோகா, சீத்தா அசோகா, அங்கனப் பிரியா, (ASOKA,
SITA ASOKA, ANGANPRIYA )
பர்மிஸ்:
தாவ்காபோ, தாவ்கா (TAVCABO,
TAVCA)
இந்தி:
சீத்தா அசோகா, வண்ட் இசித்ரா (SITA
ASOKA, ICITHRA)
ஆசாமிஸ்:
அசோக் (ASOK)
பெங்காலி:
ஒவுக் (OVUK)
மலையாளம்:
அசோகம் (ASOKAM)
தெலுங்கு:
அசோகாமு, வஞ்சுலாமு (ASOKAMU,
VANJULAAMU)
குஐராத்தி:
ஆசோபலாவ் (AZOSAPALAV)
தாய்:
சோக்கானம் (SOKANAM)
சிங்களம்:
டயரட்மால், டய ரட் டெம்பலா (TAYARATMOL,
TAYA RAT TEMPALA)
கன்னடா:
ஆச்செங்கி, அஷாங்கி, கெங்கலிமாரா (ACHENGI,
ASHANGI, GENGALIMARA)
மலாய்:
கப்பிஸ், டெங்கலான் (GAPPIS,
TEGALON)
அசோக
மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட
ஆயுர்வேத
மருந்துகள்
அகோகா அரிஷ்டம், அசோகா கிரிபிடா, சந்தநாடி தைலம், நயோகுரோதாதி கஷாயம் - இவை அனைத்தும் பிரபலமான ஆயுர்வேத மருந்துகள்: அசோக மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டவை.
மாதவிடாய்
தொடர்பான பிரச்சினைகள், மிகுதியான ரத்தப் போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்து ‘அசோகரிஸ்டம்’.
மாதவிடாயின்
போது ஏற்படும் வலி, குருதிப் போக்கு, ரத்தச் சோகை ஆகியவற்றை சரி செய்யும் மருந்து அசோக கிரிட்டா.
மூக்கில்
ரத்தம் கசிதல், மயக்கம், மஞ்சள் காமாலை, நகச்சுத்தி ஆகியவற்றை சுகப்படுத்தும், அசோகா
சந்தநாடி தைலம்.
மாதவிடாயின்
போது ஏற்படும் மிகையான ரத்தப்போக்கு, உடல் பருமனாதல் போன்றவற்றை
குணப்படுத்துவதில் சிறந்தது, அசோகா நயோகுரோதாதி கஷாயம்.
பெண்களின் கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகளை
தீர்க்கும்
பொதுவாக
பெண்களின் பிரச்சினைகளாக இருக்கும்,
கருப்பையில் உருவாகும் நார்க்கட்டிகள், மிகக்
குறைவாக ஏற்படும் மாதவிடாய், மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வலி, பெண்
உறுப்பில் ஏற்படும் வெள்ளைப் படுதல், பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்ற
அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில் பலவித மருந்துகள் செய்ய
கச்சாப்பொருளாக விளங்குகிறது, அசோகமரம்.
அசோக
மரங்களை உருவாக்க சிறந்தது, அதன் கிளைகளை வெட்டி நடுவதுதான்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அசோக மரங்களில் விதைகள் சரிவர பிடிப்பதில்லை. கேரள மாதிலத்தின் வனத்துறை ஆராய்ச்சியாளர்கள்,
மே, ஜூன்
மாதங்களில் கிளைகளை நட சிபாரிசு செய்கிறார்கள்.
2005-06 ம்
ஆண்டில் மட்டும் சுமார் 2550 டன் அசோகமரம் பட்டைகளை, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதற்காக
மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
கேரள
வனத்துறை அசோகமரம் பயிரிடுவதற்காக உள்ளுர் விவசாயிகளை ஊக்குவிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளது.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment