கருச்சிதைவைத் தடுக்கும் மூலிகை மரம் அரசு |
(ARASA
MARAM, PIPAL TREE, FICUS RELIGIOSA, MORACEAE, INDIAN TREE)
தாவரவியல்
பெயர் : பைகஸ் ரெலிஜியோசா (FICUS RELIGIOSA)
பொதுப்பெயர்
ஃ ஆங்கிலப் பெயர் :
பீப்பல் ட்ரீ, ஹோலி பிக் ட்ரீ, போ ட்ரீ, சேக்ரட் பிக் ட்ரீ (PIPAL
TREE, HOLY FIG TREE, BOW TREE, SACRED FIG TREE)
தாவரக்குடும்பம்
: மோரேசி (MORACEAE)
இளவரசனாக
இருந்த சித்தார்த்தரை, ஞானம் தந்து கவுதம புத்தராக மாற்றியது என்னும் பெருமைக்குரிய
ஞானவிருட்சம், அரசமரம்.
இந்து
மதம், புத்த மதம், ஜைனமதம் ஆகிய மூன்று மதங்களாலும் புனிதமான வழிபடும் தெய்வீக மரம். ‘நான் அரச
மரம் போன்றவன் என்று கீருஷ்ணபரமாத்மாவே தனது
பகவத்கீதையில் சொல்லப்பட்ட பெருமைக்குரிய மரம்.
திருவாடுதுறை
மற்றும் திருப்பரிதி நியமத்
திருத்தலங்களுக்கு தலவிருட்சமாக விளங்கும் மரம் இது. தமிழ் நாட்டில் சிவன், அம்மன்
கோயில், விஷ்ணு, முருகன், விநாயகர், ஆஞ்சிநேயர், அய்யப்பன் ஆகிய தெய்வங்களின் 75
கொயில்களில் அரசமரம் தலவிருக்ஷமாக இருப்பதாக இரா. பஞ்சவர்ணம் தனது நூலில்
பட்டியலிட்டுள்ளார்.
மருத்துவர்கள்
அரச மரத்தை ஆயுர்வேத மரம் என்கிறார்கள்.
இதன்
மரப்பட்டை (அ) வேர் (அ) பழங்களிலிருந்து
எடுத்த பால் 5 முதல் 6 துளிகளுடன் தேன் மற்றும் நெய் சேர்த்து சாப்பிட்டுவர பெண்களின்
மலட்டுத் தன்மை குணமாகும்.
மரம் (அ)
வேரின் படடைகளிலிருந்து தயார் செய்த வடிநீர் 50 முதல் 60
மில்லியை குடித்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டுவலி குணமாகும்.
அரசன்
தளிர் மற்றும் ஆலம் தளிரை சேர்த்து அரைத்து பசைபோலாக்கி தடவ முகத்தில் உள்ள
பருக்கள் குணமாகும்.
50 முதல் 60 மில்லி
அரசம்பட்டைக் குடிநீரை அருந்திவர சக்கரை நோய் கட்டுப்படும். அரசம் பழத்தை
உலரவைத்து பொடி செய்து அத்துடன் தேனைக் குழைத்துச் சாப்பிட இருமல் குணமாகும்.
பட்டையிலிருந்து
தயாரித்த வடிநீரை குடித்துவர தோல் சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்துவதுடன்
ரத்தத்தையும் சுத்திகரிக்கும்.
கருவுற்றத்
தாய்மார்களுக்கு இந்தப் பட்டை வடிநீரைத் தருவதன் மூலம் கருப்பைத் தசைகளை
வலுப்படுத்துவதுடன் கருச்சிதைவு ஏற்படாமலும் தடுக்கும்.
பட்டை
வடிநீரை இளஞ்சூட்டுடன் வாய்க் கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண்களைக்
குணப்படுத்தலாம்.
பல
மொழிப் பெயர்கள்:;
தமிழ்: அரச மரம் (ARASAMARAM)
கன்னடம்:
அரளி மரா, அஸ்வத்த மரா (ARALI MARA, ASWATHTHA MARA)
மலையாளம்:
அரயால், பிப்பாலம் (ARAYAL, PIPALAM)
இந்தி:
அஸ்வத்தா (ASWATHA)
அசாமிஸ்:
அஹாட் (AHAD)
பெங்காலி:
அஸ்பத்தா (ASBATHA)
கொங்கணி:
அஸ்வதா பிம்பலா (ASWATHA PIMBALA)
மிசோ:
ஹிமா வங்க் (HIMA VANK)
நேப்பாளி:
பிபால் (PIPAL)
ஒரியா:
ஆஸ்டா (ASTA)
சமஸ்கிருதம்: அஸ்வத்தா, பிப்பலா,
போதி விருக்ஷா, பிலக்ஷா (ASWATHA, PIPALA, BODHI VRIKSHA, BILAKSHA)
தெலுங்கு:
பீப்பலமு,
ராவிசேட்டு (PIPPALAMU, RAVICETTU)
மரத்தின் வகை :
பெரிய மரம்
மரத்தின்
பயன்கள் :
இலைகள்:
பளபளப்பான பச்சை நிறத்தில் இதய வடிவில் தோற்றம் தரும். இதன் நரம்புகள் கூட
அழகானவை.
பட்டை
: டேனின் நிறைந்தது தோல் பதனிடலாம்.
பூக்கள்
: பிபரவரி மாத வாக்கில் பூத்து
தேனீக்களுக்கு தேன் தரும் மரம்.
காய்கள்
பசுமையாக இருக்கும். கோடையில் காய்க்கத் தொடங்கி மழைக் காலத்தில் கருப்பு
நிறத்தில் பழங்களாக மாறும்.
வளரும்
சூழல் : வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப
மண்டலப் பகுதிகள்;,நிறைய சூரிய ஒளி வேண்டும்.
மரத்தின் தாயகம் : இந்தியா
ஏற்ற மண்
: பரவலான மண்வகை, ஏழு
க்கும் குறைவான கார அமில நிலை உடைய மணணில் நன்கு வளரும்.
நடவுப்
பொருள் : விதை, நாற்று, வேர்க் குச்சி.
மரத்தின்
உயரம் : 20
முதல் 25 மீட்டர் உயரமும் 2 முதல் 3 மீட்டர்
விட்டமும் உடைய மரமாக வளரும்.
அரசமரம்
மிக நீண்ட வயதுடையது. கிறிஸ்து பிறப்பதற்கு 288
ஆண்டுகளுக்கு முன்னால் நடப்பட்ட மரம் இன்னும் உயிருடன் இலங்கையில் வளர்ந்து
கொண்டுள்ளது என்று சொல்லுகிறார்கள்.
இந்துக்களும்
புத்த மதத்தினரும் இதனை புனித மரமாகக் கருதுவதால் கோவில்களிலும் புத்தமத
ஆலயங்களிலும் அரச மரங்களை அதிகம் பார்க்கலாம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment