Friday, June 16, 2023

APPLE OF SODOM 24. வெள்ளெருக்கு

 

வெள்ளெருக்கு தெய்வீக மூலிகை

வெள்ளை எருக்கு சிறிய மரம்.  பெரிய செடி. கேன்சர் கட்டிகள்> தொழுநோய்> இதய நோய்கள்> உட்பட எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் மரம்.  கோயில்களில் தல விருட்சமாக இருக்கும் புனிதமான மரம்.  உலகத்தின் பல பகுதிகளிலும் பரவி இருக்கும் மரம்.  மொத்தத்தில் மிக முக்கியமான மூலிகை மரம். இதன் வேரில் வினயகர் செய்து வீட்டில் வைப்பது விசேஷம்.

தாவரவியல் பெயர்: கேலோடிராப்பிஸ் புரொசீரா (CALOTROPIS PROCEERA)

தாவரக் குடும்பம் பெயர்: அஸ்கிலிபியேடேசி (ASCLEPIADACEAE)

பொதுப் பெயர்கள்: ரப்பர் புஷ்> ஆப்பிள் ஆப் சோடோம்> பிரென்ச் காட்டன்> சோடோம் ஆப்பிள் (RUBBER BUSH, APPLE OF SODOM, FRENCH COTTON, SODOM APPLE)

தாயகம்: இந்தியா மற்றும் இதர நாடுகள்

வெண்ணெருக்கு மரத்தின் பிற மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

இந்தி: ஆக்> முடர் (AAK, MUDAR)

கன்iடா: பிலி ஆக்கா> பிலி ஆக்கடா கிடா (PILI AKKA, PILI AKADA KIDA)

மலையாளம்: எரிக்கு> எருக்கு (ERIKKU, ERUKKU)

மராத்தி: மந்தரா> ருய் (MANTHARA, RUI)

நேப்பாளி: சீட்டோ ஆங்க் (SITO ANK)

சுமஸ்கிருதம்: ஆதித்ய புஷ்;பிகா> அலர்க்கா> சிரபர்னா> மந்தரா (ADITYA PUSHPIKA, ALARKKA, SIRABARNA, MANTHARA)

தமிழ்: வெள்ளை எருக்கு (VELLAI ERUKKU)

தெலுங்கு: எர்ரஜிpல்லேடு> ஜிpல்லேடு> மந்தராமு (ERRAJILLEDU, JILLEDU, MANDRAMU)

மூலிகை மரம்.

வெள்ளெருக்கு ஒரு தெய்வீக மூலிகை, அது புதையல், ரத்தினங்கள், மற்றும் சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் இந்த வெள்ளெருக்கு முளைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.   

ருக்கில் இரண்டுவகை

ருக்கில் இரண்டுவகை உண்டு.  ஒன்று நீல நிறத்தில் பூக்கும்  நீலஎருக்கு> இன்னொன்று வெள்ளை நிறத்தில் பூக்கும் வெள்ளெருக்குவெள்ளெருக்கு  என்பது ரொம்பவும் விசேஷமானது.  ஆனால் அறிவியல் பூர்வமாக இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார்கள்.  இரண்டுமே அற்புதமான மூலிகைகள் தான்.

பிள்ளையாருக்குப் பிடித்தமான பூ    

பிள்ளையாருக்குப் பிடித்தமானது எருக்கம் பூ மாலை.  நான் சிறுவனாக இருந்தபோது> பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் சமயம் எனக்கு ஒதுக்கப்பட்டவை இரண்டு வேலைகள்.  ஓன்று பிள்ளையார் சிலை வாங்கிவருதல்> இரண்டாவது எருக்கம் பூக்கள் பறித்துக் கொண்டு வருவது.  விநாயகருக்கு எருக்கம் பூ மாலை தயாரிப்பதில் நீல எருக்கன்> வெள்ளெருக்கன் என்று வித்தியாசம் பார்க்க மாட்டோம்.

ஒரகடம் வெள்ளெருக்கு வினாயகர் கோவில்

வெள்ளெருக்கு வேரில் வினாயகர் சிலை செய்து வீட்டில் வைப்பது ரொம்ப விசேஷம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் ஒன்று உள்ளது, இந்த கோவில் எதிரில் வெள்ளெருக்கு விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்கிறார்களாம்,

வெள்ளெருக்கு செய்யும் மரவேர் நன்கு முற்றி இருக்க வேண்டுமாம், அந்த வேர் வடக்கு திசையில் செல்லும் வேராக இருக்க வேண்டுமாம். அந்த வேர்களில் செய்தால்தான் அந்த சிலைக்கு சிறப்பு என்கிறார்கள்.

பிள்ளையார் சதுர்த்தி பொம்மைகள்    

பாத்துடா எருக்கம் பூ பறிக்கும் போது பால் கண்ணுலப் பட்டுடப்போவுது.. வருஷா வருஷம் என் அம்மா பிள்ளையார் சதுர்த்தி அன்று தரும் அன்புக் கட்டளை. பிள்ளயார் சதுர்த்தி வந்தால் அந்தக் குரல் எனக்கு மட்டும் கேட்கும். இன்றும் கேட்கும்,  

களிமண்ணில் பிள்ளையார் செய்யும் இடத்தில் பிள்ளையார் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நமது பிள்ளையாருக்காகக் காத்திருப்பது திரும்பி வராத சந்தோஷம்..  

எந்த பொருளைக் கொண்டு பிள்ளையார் செய்கிறோமோ அதன் படி பலன்களும் வேறுபடும்.  ஆவை கீழ்கண்டவாறு வேறுபடும் என்கிறார்கள்.

களி மண்ணில் செய்தால் நல்ல பதவி கிடைக்கும்> புற்று மண்ணில் செய்தால் தொழிலில் லாபம் கிட்டும்> உப்பில் செய்தால் வாழ்க்கையில் நிம்மதி பெறலாம். கல்லில் செய்தால் எதிலும் வெற்றி பெறலாம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்தால் சகல விதமான சௌபாக்கியங்களும் பெறலாம்> வெல்லத்தில் விநாயகர் பிடித்தால் வளம் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும்> வெள்ளெருக்கு வேரில் விநாயகர் செய்தால் செல்வம் செழிக்கும்.

இது தமிழ் கலாச்சாரத்தில் காலம் காலமாக நீடிக்கும் நம்பிக்கை. வினாயகர் சிலை செய்வது. களிமண்ணில்  பிள்ளையார் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். பிள்ளையரைத் தொடர்ந்து எம் ஜி ஆர், சிவாஜி சிலைகள் கூட செய்திருக்கிறேன்.

காலில் முள் குத்தி அது உடைந்துபோனால் அடுத்து நாங்கள் தேடுவது எருக்கம்பால்.அப்போது செருப்பு போடும் பழக்கம் சராசரி மக்களிடையே அதிகம் இல்லை.  அதனால் காலில் முள்குத்துவது என்பது அடிக்கடி நடக்கும் கிராமிய விபத்து. யாராச்சும் செறுப்பு போட்டு வந்தால் வித்யாசமாய் பார்ப்போம்.

முள் உடைந்து போனால்தான் பிரச்சினை.  முள் குத்திய இடத்தில் எருக்கம் பால் அடித்தால் இரண்டொரு நாளில் அந்த இடம் மட்டும் பழுத்து முள்ளை சுலமாக எடுக்க உதவும். 

எனக்குத் தெரிந்த அந்த நாட்களில் வயதான ஒரு ஆட்டுக்காரர் எப்போதும் ஒரு உயரமான தோல் செருப்பு போட்டிருப்பார்.  வர் எப்படிப்பட்ட முள்ளிலும் அசராமல் நடந்துபோய் ஆடுகளை விரட்டுவார். அவரை எப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவர் மாடி செருப்பை கவனிப்பேன். அந்த காலத்திலேயே ஹை ஹீல் அணிந்த ஆட்டுக்காரர்.   

திருகோவில்களின் தலவிருட்சம்

வெள்ளெருக்கு ஒரு புனிதமான மரமும் கூட.  திருஎருக்கத்தம்புலியூர்> திருக்கனாட்டுமுள்ளுர் ஆகிய திருகோவில்களின் தலவிருட்சமாக உள்ளது.  பிள்ளையார் கோவில்கள் மற்றும் சிவன் கோயில்களிலும் எருக்கம் பூக்கள் அர்ச்சனை செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

திருஎருக்கத்தம்புலியூர் கோயில் கடலூர் மாவட்டத்தில் ராஜேந்திரப் பட்டினம் என்ற ஊரில் உள்ளது.  இது ஸ்ரீமுஷ்;ணம் அருகே அமைந்த ஊர். ஸ்ரீமுஷ்;ணம் சிதம்பரம் அருகே அமைந்த ஊர்.     

சங்க இலக்கியத்திலும் எருக்கு பல இடங்களில் உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளது.  குறுமுகழ் எருக்காவ் கண்ணி என நற்றிணையிலும் குவியினார் எருக்கு என கபிலரும் புல்லெருக்கங் கண்ணி என தொல்காப்பியமும் எருக்கு பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மருத்துவ குணங்கள்      

சுவாச குடோரி மாத்திரை> எருக்கம் பூவின் தயாரித்ததுதான். சளி> இருமல்> மூச்சிறைப்பு பேன்றவற்றிற்கு இதனை மருத்தாகத் தருகிறார்கள்.    

வயிற்றுப் போக்கு வயிற்றுக் கடுப்பு> உடல்வலி> குடற்புழுக்கள்> மண்ணீரல் தொடர்பான பிரச்சினைகள்> வயிற்றுவலி> இதயம் தொடர்பான பிரச்சினைகள்> நிமோனியா> காய்ச்சல்> மஞ்சள் காமாலை> யானைக்கால்> தொழுநோய்> தோலில் ஏற்படும் சரும நோய்கள்> கீல்வாதம்> மூட்டுவலி> இருமல்> ஆண்மைப் பெருக்கி> விஷக்கடி> கக்குவான் இருமல்> மாதவிக்கு தொடர்பான பிரச்சினைகள்> உயர் ரத்த அழுத்தம்> ஆஸ்துமா> வெர்டிகோ> வலிப்பு நோய் இப்படி எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் சக்தி உடைத்து எருக்கு.         

எருக்கின் வேர்கள்> தண்டுப்பகுதி> பட்டை> பால்> பூக்கள் அனைத்தும் பரந்துபட்ட அளவில் பலவிதமான நோய்களை குணப்படுத்த மருந்தாக உபயோகமாகிறது.  எருக்கு பரவி இருக்கும் பல நாடுகளிலும் இது பயன்படுத்தப் பட்டு வருகிறது.

வில்> அம்பு> ஈட்டி> என்று போர்க்கருவிகளுடன் வாழ்ந்த சமயங்களில்  எருக்கு தண்டின் நார்தான் வில்லுக்கான நான் செய்ய பயன்பட்டது.  அம்பு மற்றும் ஈட்டிகளில் நஞ்சு தோய்ப்பதற்கு பதிலாக எருக்கம்பாலில்  நனைத்து பயன்படுத்தினார்கள்.

கொசுறு

வட திருமுல்லைவாயிலில் மாசிலாமணீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னதியில் மிகவும் பெரிய இரண்டு வெள்ளெருக்கு தூண்கள் இருக்கிறதாம், நீங்கள் யாராச்சும் பார்த்திருக்கிறீர்களா ? பார்த்துவிட்டு சொல்லுங்கள் !

TO READ FURTHER

WWW.TA.M.WIKIPEDIA.ORG / VELLERUKKU VINAYAGAR SILAIKAL

WWW.CES.PLANET.PROJECT.ORG”CALOTROPIS PROCERA”

WWW.RESEARCHGATE.NET / CHEMICAL CONSTITUENTS AND USES OF CALOTROPIS PROCERA

WWW.FEEDIPEDIA.ORG/ CALOTROPIS PROCERA

WWW.SCIENCEDIRECT.COM / CALOTROPIS GIGANTEA – AN OVERVIEW (728 WORDS)

PLEASE POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN D (ATHOR)

99999999999999999999999999999

 

 

       

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...