இளமை ஆக்கும் மூலிகை கடுக்காய் |
(KADUKKAI,
MYROBALAN, TERMINALIA CHEBULA, COMBRETACEAE)
தாவரவியல் பெயர் :
டெர்மினேலியா செபுலா (TERMINALIA
CHEBULA)
பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : (MYROBALAN)
தாவரக்குடும்பம்
: காம்பிரெட்டேசி (COMBRETACEAE)
‘காலை
இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை
கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும்
பாலனாமே’
கடுக்காய்பற்றி
சித்தர்கள் கடலளவு எழுதி இருக்கிறார்கள். அதில் மாதிரிக்கு ஒரு பாடல்தான் இது.
‘காலை
வெறும் வயிற்றில் இஞ்சி, நண் பகலில் சுக்கு, இரவில்
கடுக்காய் என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் கிழவனும் குமரனாகலாம்’ என்பதுதான்
பாடலின் பொருள்.
எந்த ஒரு
பழத்திற்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு. சுவைகளில் ஆறு விதமான சுவைகள் உண்டு.
சில
கனிகள் இனிக்கும், சில புளிக்கும், சில இனித்துக் கொண்டே புளிக்கும். ஆனால் கடுக்காயில் உப்புச்சுவை
தவிர்த்து மற்ற எல்லா சுவையும் உடையது கடுக்காய் மட்டுமே. இதில் மட்டும்தான்
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு கசப்பு ஆகிய ஐந்து சுவைகளும் உள்ளன.
திரிபலா
சூரணம்
ஆயுர்வேதம்,
சித்த மருத்துவம் உட்பட அனைத்து வைத்திய முறைகளிலும்
கடுக்காய்க்கென்று ஒரு சிறப்பான இடம் உண்டு. அதிலும் குறிப்பாக திரிபலா சூரணம்
மகவும் பிரபலமானது. கடுக்காயுடன் தான்றிக்காயும் நெல்லிக்காயும் சேர்ந்ததுதான்
திரிபலா. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே திரி என்றால் மூன்று. தமிழில் அதற்கு
இன்னொரு அர்த்தமும் உண்டு. ஆனால் இந்த திரி எப்படி அங்கு போனது ?
இந்தியா
மற்றும் பர்மா ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மூலிகை மரம் இது. இந்திய மருத்துவ
முறைகளில் இது எவ்வளவு முக்கியமானது என்று நமக்கு தெரியும். அதே அளவு அல்லது
இன்னும் கூடுதலான அளவு திபேத் மற்றும் சீன நாடுகளில் மருத்துவ முறைகளில்
பயனாகிறது. இதனை அங்கு ஹரிடாக்கி கனி (HARITAKI) என்றும் ஹி சி
ஹெர்ப் (HI ZI HERB) என்றும்
அழைக்கிறார்கள்.
சீனாவிற்கு
போனது
சீனாவை
டேங் வமிச அரசு ஆட்சி (TANG
DYNASTY) செய்த காலகட்டத்தில் கடுக்காய் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அங்கு குவாங்டாங், யுன்னான், குவாங்சி (GUWANDONG,
UNNAN, GUANGZI) ஆகிய இடங்களில் அதிகம் இந்த மரங்களை வைத்திருக்கிறார்கள்.
வடிவம்,
நிறம், பெறப்படும் இடம், இவற்றை வைத்து கடுக்காயை ஏழு தரமாகப்
பிரிக்கிறார்கள். இந்த தர வரிசைப்படிதான் மார்கெட்டில் விலை கிடைக்கும். ஏறத்தாழ
உருண்டை வடிவிலான கடுக்காயை விஜயா என்கிறார்கள். அதுதான் முதல் தரம்.
விஜயா,
ரோகினி, படானா, அம்ரித்தா, அபயா, ஜிவந்தி, செட்டக்கி போன்றவைதான் இந்த ஏழு வகைக் கடுக்காய்கள். இனி நாட்டு
மருந்துக் கடைக்குப்போய் இந்தப் பெயர்களைச் சொல்லி கலாய்க்கலாம்.
கடுக்காயின்
பலமொழிப் பெயர்கள்:
தமிழ்:
கடுக்காய் (KADUKKAI)
இந்தி:
ஹர்ரா (HARRA)
மலையாளம்:
கட்டுக்கா (KATTUKKA)
கன்னடம்:
ஹல்லி (HALLI)
சமஸ்கிருதம்:
ஜீவப்பிரியா (JIVAPRIYA)
மராத்தி:
ஹிராத் (HIRADH)
பெங்காலி:
ஹரிடாக்கி (KADUKKAI)
ஒரியா:
ஹரிதா (HARIDHA)
தெலுங்கு:
நல்ல ஹரிக்கா (NALLA
HARIKKA)
அசாமிஸ்:
ஹிலிக்கா (HILIKKA)
கொங்கணி:
ஆர்டோ (ORDO)
மரத்தின்
வகை : 20 முதல் 25 மீட்டர்
வரை உயரமாக வளரும் மூலிகை மரம்.
திபெத்தில்
சஞ்சீவி மூலிகை
திபெத்திய
மருத்துவத்தின் ஆணிவேரே கடுக்காய்தான். Nதுநீர், பழச்சாறு,
எண்ணெய், கூந்தல் தைலம், சருமப்பராரிப்பு, புற்றுநோய், கர்ப்பப் பையில் ஏற்படும் நார்க்கட்டிகள், சக்கரைநோய்
உடல் எடை குறைப்பு சிகிச்சை, சரும வெண் தேமல் நோய் போன்ற பலவற்றிற்கும் திபெத்தின் சஞ்சீவி மூலிகை
கடுக்காய்தான்.
மாட்டு
வண்டிகள்
தழை,
விளை நிலங்களுக்கு தழை உரமாகும். கால்நடைகளுக்கு தீவனமாகும். பூக்கள், பச்சைகலந்த
வெண்ணிறத்தில், பளிச்சென்று மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும் மூலிகை மரம்.
மாட்டு
வண்டிகள், உத்திரங்கள், கம்பங்கள், முட்டுக் கட்டைகள், பந்தல் கால்கள், தூண்கள், கட்டிட சாமான்கள் செய்யவும் காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும் மரம்.
இந்தியா,
தெற்கு ஆசியா, நேபாளம், தென்மேற்கு சைனா, ஸ்ரீலங்கா, மலேசியா, வியட்நாம், ஆகிய பகுதிகளுக்கு சொந்தமானது கடுக்காய்.
இமயமலையின்
கீழ்ப்பகுதியில் ராவி முதல் கீழ்த்திசையில் மேற்கு வங்காளம் முதல் அசாம் வரையிலும்
வட இந்தியாவின் வனப்பகுதிகள், தமிழ்நாடு, மைசூர், மற்றும் மும்பை பகுதிகளிலும் பரவலாக உள்ளன கடுக்காய் மரங்கள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment