கொக்குப்பழ மரம் அண்டுவன் |
அண்டுவன்
மரம், இதன் ஆங்கிலப்பெயர் கிரேன்பெர்ரி,
இவற்றை பூக்கள், காம்புகளுடன்
சேர்த்துப் பார்க்க கொக்குகள் போல தென்படுவதால் இது கொக்குப்பழம் (CRANE
BERRY) என பெயர் வைத்திருக்கிறார்கள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிரேன்பெரிகள் மிகவும் பிரபலம். அண்டுவன் மரத்தை இந்திய கிரேன்பெர்ரி என்று சொன்னால் கூட இதைப் புரிந்துகொள்ளுவது என்பது கொஞ்சம் சிரமம்தான். இந்த மரங்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
அண்டுவன் மரமும் மரத்தின்
பட்டைகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமாக பாம்புக்கடிக்கு விஷ முறிப்பானாக
பயன்படுத்துவதாகத் தெரிகிறது, இந்த பழங்களை இந்திய பழங்களில் சிறு களாப் பழங்களோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் கிரேன்பெரியின் விலையை களாபழங்களின் விலையோடு ஒப்பிட ஏணிவைத்தால்கூட எட்டாது,
அண்டுவன் மரமும் புதுசு ! பழமும் புதுசு ! ஆனால் வைத்தியம் பழசு
!
தமிழ்:
அண்டுவன், கலவு (ANDUVAN, KALAVU)
பொதுப்
பெயர்கள்: இண்டியன் கிரேன் பெரி (INDIAN
CRANBERRY)
தாவரவியல்
பெயர்: வேக்சினியம் லெஸ்னால்டி (VACCINIUM
LESCHENAULTII)
தாவரக்
குடும்பம் பெயர்: எரிகேசியோ (ERICACEAE)
தாயகம்:
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
பிற
மொழிப் பெயர்கள்
கன்னடம்:
அண்டுவன் (ANDUVAN)
மலையாளம்:
கேல மரம், கட்டாவு, கலாவு (KELA MARAM, KATTAVU, KALAVU)
தமிழில்
அண்டுவன் என்றும் கலவு என்றும் அழைக்கப்படும் சிறுமரம், அதிகபட்ச
உயரமாக 7 மீட்டர் வரை வளரும். பூக்கள் இலைக் கணுக்களிலும், கிளை நுனிகளிலும் பூக்கும். குடுவை
போன்று தோன்றும். பூக்கள் பெரும்பான்மையாக ஊதா நிறத்திலும், சமயங்களில்
வெண்மையாகவும் இருக்கும்,
எரிகேசி தாவர குடும்பம்
இது பூக்கும் தாவரங்களை உள்ளடக்கிய குடும்பம். இதனை ஹீத் அல்லது ஹீதர் குடும்பம் என்கிறார்கள்,
அதுமட்டுமல்ல மிகப்பெரிய குடும்பமும் கூட.
அமிலத் தன்மை வாய்ந்த சத்து குறைவான நிலங்களில் இந்த தாவரங்கள் வளரக்கூடியவை என்கிறார்கள். கிரேன்பெரி, புளூபெரி, ஹக்கில்பெரி, ரோடோடெண்ரான் ஆகியவை இந்த தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமான மரங்கள்.
பரவியிருக்கும்
இடங்கள்
இந்தியன்
‘கிரேன்பெரி’ என்று அழைக்கப்படும், இதன் பழங்கள், மெதுவாக, உருண்டையாக பல விதைகளை உடையதாக இருக்கும்.
இந்த
மரங்கள், தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் பர்மா, ஸ்ரீலங்கா
ஆகிய இடங்களில் உள்ளன. உயரமான மலைப்பகுதிகளில் 1600 முதம் 2000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் நங்கு வளரும். இதனை தமிழகத்திற்கு புதிய அறிமுகம் என்று சொல்லுகிறார்கள். இந்த மரங்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
மருத்துவப்
பயன்கள்
அண்டுவன்
மரமும் மரத்தின் பட்டைகளும் ஆயுர்வேத
மருத்துவத்தில் பிரபலமாக பாம்புக்கடிக்கு விஷ முறிப்பானாக
பயன்படுத்துகிறார்கள். இண்டியன்
கிரேன்பெரி என சொல்லப்பட்டாலும் அமெரிக்க
ஐரோப்பிய நாடுகளில் உள்ளவை, போல பிரபலமான பழவகை
அல்ல. ஆனால் இது ஒரு முக்கியமான மூலிகை
மரம் என்பது மட்டும் தெரிகிறது.
“கிரேன்
பெரி” பழங்கள்
கிரேன்
பெரி பழங்கள் வட அமெரிக்காவின் பிரபலமான பழவகை. ஆரோக்கியத்திற்கு
உரிய பழமாகக் கருதப்படுகிறது. ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்த பழம் என்று சொல்லுகிறார்கள்.
வட
அமெரிக்காவுக்கு சொந்தமான கிரேன் பெரி சிறுமரங்களின் தாவரவியல் பெயர்
வேக்சீனியம் மேக்ரோகார்ப்பான் (VACCINIUM MACROCARPON) என்பது. ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் கிரேன் பெரியின் தாவரவியல்
பெயர். வேக்சீனியம் ஆக்சிகாக்கஸ் (VACCINIUM OXYCOCCOS).
2016 ல் மொத்த உலக உற்பத்தியில் 98 சதவிகித உற்பத்தியைச் செய்யும் நாடுகள்,
வட அமெரிக்கா, கனடா மற்றும் சைல்.
கிரேன்
பெரி யின், ஜூஸ், ஜாம், புதிய பழங்கள் மற்றும் உலர் பழங்களாக விற்பனையாகின்றன. இதன் பூக்கள், காம்புகளுடன்
சேர்த்துப் பார்க்க கொக்குகள் போல தென்படுவதால் இது கொக்குப்பழம் (CRANE BERRY) என
பெயர் வைத்திருக்கிறார்கள்.
இது
சதுப்புநிலப் பகுதிகளில் நன்கு வளருவதால் இதனை ஐரோப்பிய நாடுகளில் “பென்
பெரி” என்றும் (BEN
BERRY) அழைக்கிறார்கள். “பென்’
என்றால் சேறும் சகதியுமான சதுப்பு நிலம் என்று அர்த்தம்.
இதன்
பழங்கள் மற்றும் இலைச்சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி வயிற்றுப்போக்கு, வயிற்றுக்
கடுப்பு, சக்கரை நோய், குடற்புண், உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் அழற்சிகள் (INFLAMATION)
ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.
இதன்
இலைகள் மற்றும் பழங்களில், ஆண்டி ஆக்சிடென்டுகள் உட்பட , பல்வேறு மருத்துவப் பண்புகள் உள்ளன, என
ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதன்
மரங்கள் நீண்டநாள் உழைக்கக் கூடியவை என்ற குறிப்புகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் பயன்கள் பற்றிய தெளிவான விரிவான விவரங்கள்
இல்லை.
வேண்டுகோள்
அன்பின் இனிய விருத்தாசலம் பகுதி நண்பர்களே ! தமிழ் நாட்டின் கிரேன்பெர்ரியாக அறிமுகம் ஆகி இருக்கும் இந்த கோணகரம் எங்கே இருக்கு
? தேடிப்பிடியுங்க !
FOR FURTHER READING
WWW.SLFLORA.BLOGSPOT.COM -“INDIAN
CRANBERRY- VACCINIUM LESCHENAULTII
WWW.REVOLVY.COM /”CRAN
BERRY” - VACCINIUM LESCHENAULTII
WWW.SCIENCEDIRECT.COM /EVALUATION
OF ANTIOXIDANT, ANTI-INFLAMMATORY, AND ANTIULCER PROPERTIES OF VACCINIUM
LESCHENAULTII WWW.INDIABIODIVERSITY.ORG
/ VACCINIUM LESCHENAULTII
A
REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment