Thursday, June 29, 2023

ANAIPPULI ALIAS BAOBAB AFRICAN WONDER TREE 154. உலகின் அதிசய மரம் ஆனைப்புளி

 

உலகின் அதிசய மரம்
ஆனைப்புளி 


(ANAIPULI MARAM, BAOBAB TREE, ADANSONIA DIGITATA, MALVACEAE)

தாவரவியல் பெயர்: அடன்சோனியா டிஜிட்டேட்டா (ADANSONIA DIGITATA)

தாவரக்குடும்பம்: மால்வேசியே (MALVACEAE)

பொதுப்பெயர்: பேவோபாப் (BAOBAB)

தாயகம்: மடகாஸ்கர் (ஆஃப்ரிக்கா)

பேவோபாப் பழங்களில் ஜாம், ஜெல்லி, ஜூஸ் என்று தயாரித்து வெளுத்துக் கட்டுகிறார்கள்இலைகளை கீரையாக சமைக்கின்றனர். பழங்களை உலர்த்தி  பொடியாக்கி டின்களில் அடைத்து காசு பண்ணுகிறார்கள். கரும்பு சாற்றுடன்  சேர்த்து பீர்  தயாரித்து தாகம் தணிக்கிறர்கள்.  ஐஸ் கிரீம் செய்கிறார்கள். மரத்தை குடைந்துவிட்டு அதில் தண்ணீர் தொட்டி, டீக்கடை, டிஃபன் கடை, பெட்டிகடை, தானியங்களை கொட்டிவைத்து குதிர்இறந்து போனவர்களை நல்லடக்கம் செய்ய என்று பலவிதமாக பயன்படுகிறது, பேவோபாப் மரம்.

பல தொழில் செய்யவும்  பேவோபாப்  பயன்படுவதால் இதனை ஒரு தொழில் மரம்  (INDUSTRIAL TREE)என்று அழைக்கிறார்கள். 

பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: ஆனைப்புளி மரம், பப்ரப்புளி (ANAIPULI, PAPARAPULI)

இந்தி: கோரக் இம்ளி (KORAK IMLI)

குஜராத்தி: புக்கா, (BUKKA)

தெலுங்கு: பிரம்மாலிகா (BRAMMALIKA)

பெங்காலி;: கதகச்சி (KATHAKACHI)

சமஸ்கிருதம்:சர்ப்பதந்தி (SARPATHANTHI)

உலகின் அதிசயமான மரம் எது என்றால், கண்ணை  மூடிக்கொண்டு  சொல்லலாம் 'பேவோபாப்". ஆங்கிலத்தில் மங்கி பிரட் ட்ரீ’  (MONKEY BREAD TREE).

தமிழில் 'ஆனைப்புளி" சொந்த ஊர் மடகாஸ்கார் தீவு.  ஆப்பிரிக்க கண்டத்தைச்  சேர்ந்தது.

சட்டென்று பார்த்தால்  மரத்தைப் பிடுங்கி யாரோ தலைகீழாக நட்டது போல் தெரியும்.  மோட்டாவான உடம்பில் மெல்லீசான கைகால்களுடன்  நிற்கும் மனிதன் போலத் தோன்றும்; அகலமான  அடிமரம்; ஒல்லிக் குச்சான் கிளைகள். அதிகபட்சமாக 100 அடி உயரம் வளரும். அடிமர விட்டம் 30 அடியைத் தாண்டும். மார்பளவில் மரத்தின் சுற்;றளவு 112 அடியை மிஞ்சும். வயது 5000  ஆண்டுகள்.

பேய் ஒன்று ஆனைப்புளி மரத்தைப் பிடுங்கி தலைகீழாக நட்டுவிட்டதால்தான், இலையுதிர் காலத்தில் இவை தலைகீழாக நிற்பதாகவே தோன்றுகிறது என ஒரு அரேபியக்கதை சொல்லுகிறது.

பலசமயம் பஞ்சாயத்துக்களில் கட்டிவைத்த தண்ணீத் தொட்டி  மாதிரியும் தோன்றும் மரம். இந்த பேவோபாப் மரத்தின் மையப்பகுதி சில ஆண்டுகளில் உளுத்து உதிர்த்து தண்ணீர்த் தொட்டி மாதிரி  ஆகிவிடும். ஆனால் மரங்கள் சாகாது

தண்ணீர் தொட்டியாக

மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் இந்த விசாலமான மரத்தொட்டிக்குள் சேகரமாகும்அதிகபட்சமாக ஒரு மரத் தொட்டிக்குள்  ஒரு லட்சத்து இருபதினாயிரம் லிட்டர் வரை தண்ணீர் சேகரம் ஆகுமாம்.

ஆப்பிரிக்காவின் வறண்ட பாலைவனங்களின் தாகமுள்ள பறவைகளும், கோடைக் காலத்தில்  எங்கே  பேவோபாப் மரங்கள் ..? என்று தேடுமாம் ..!  சுற்றுலா செல்லும் பயணிகள் கூட பேவோபாப் மரத் தொட்டிகளில் தாக சாந்தி செய்து கொண்டும்   தண்ணீர் எடுத்துக் கொண்டும் செல்வார்களாம்.

டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் வைக்கலாம்

கிராமப்புற மக்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரில் உள்ள மரங்களில் தானியங்களை கொட்டி வைக்கிறார்கள்பேவோ பாப்  மரங்கள் ரெடிமேட் தானியசேமிப்பு தொம்பைகள். அதுமட்டுமல்ல இறந்தவர்களை இந்த மரப் பொந்துகளில் வைத்து  அடக்கம் செய்வதும் உண்டு.  இயற்கை முறை நல்லடக்கம். நூறு  சதம் ஆர்கானிக் ..!

இப்போது பேவோபாப்  மரங்களை குடைந்துவிட்டு பெட்டிக் கடைகள் வைக்கிறார்கள்ஹோட்டல் நடத்துகிறார்கள்அவ்வளவு ஏன் 'டாய்;லெட்" வைத்துள்ளார்கள். மேலே கூரை போட்டு குடியும் குடித்தனமுமாக வசிக்கிறார்கள்.

ஒரு மரத்தைக் குடைந்து கூரை போட்டால் அது வீடாகும். இரண்டாவது மரத்தில் தண்ணீர் தேக்கத் தொட்டிமூன்றாவது  மரத்தில் தானிய சேமிக்க கிடங்கு. நான்காவது மரத்தில்  அட்டாச்சுடு பாத்ரூம் கம் டாய்லட். ஆறாவது மரத்தில் டிப்பர்ட்மெணட் ஸ்டோர். கடைசி காலத்தில் சுய நல்லடக்கத்திற்கு  ஒரு மரம். மொத்தத்தில் ஐந்தாறு மரங்கள் இருந்தால் போதும்.

'பேர் சொல்லா  மரம்."

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தொண்டி செல்லும் வழியில் ஒரு பெரிய பேவோபாப்  மரத்தைப்  பார்த்து பயந்தே போனேன்யாரும் இல்லாத அத்துவானக்  காடு அது. உள்ளுர்க்காரர் ஒருவர் அங்கு  வரும்வரைக்  காத்திருந்தேன். வந்ததும் கேட்டேன்.

வித்தியாசமா இருக்கே ! இந்த மரத்தின் பெயர் என்னங்க ..என்றேன்.  அவர் சொன்னார் . 'பேர் சொல்லா  மரம்."  இதற்கு அவர் சொல்லாமலே  இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டேன்.

எனது குருநாதர்களில் ஒருவரான  பி.எஸ். மணி எழுதிய 'வளம் தரும் மரங்கள் "படிக்கும்வரை அது பேவோபாப் என்று எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து சென்னை ' அக்ரி ஹார்ட்டிகல்ச்சர்  சொசைட்டி" யில்  இரண்டு இளம் மரங்களைப் பார்த்தேன்.

பிள்ளையார் மூஞ்சி மரம்

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் பாண்டிச்சேரியில் ஒரு மரத்தைப் பார்த்தேன். அந்தப்பக்கம் வந்த ஒருவரிடம்  கேட்டேன் . இது என்ன மரங்க ..?  “இது பிள்ளையார் மூஞ்சி மரங்க”  என்றார். அங்கு தினமும் பேவோபாப்  மரத்திற்கு பூஜை புனஸ்காரம் என்று தடபுடலாய் நடந்து வருகிறது. நானும் தொட்டு கும்பிட்டுவிட்டு, 'பிள்ளையாரப்பா  காப்பாத்துப்பா "  என்று வேண்டிக் கொண்டு வந்தேன்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...