Tuesday, June 20, 2023

ANACACHO ORCHID AMERICAN ORNAMENT TREE 75. அமெரிக்க அனாகேச்சோ ஆர்கிட் ஒரு ஆத்திமரம்

 

அமெரிக்க அனாகேச்சோ
ஒரு ஆத்தி மரம்

அமெரிக்காவில்போர்ட்வொர்த்என்ற இட்த்தில் இருக்கும் பூங்கா ஒன்றில் சுற்றி வரும்போது ஒரு மரம் மட்டும் தெரிந்த மரம் போல தெரிந்தது. தலை இல்லாத பச்சை நிற பட்டாம்பூச்சிகள் இறக்கைகளுடன் அந்த மரத்தில் உட்கார்ந்திருப்பதுபோலத் தெரிந்தன அதன் இலைகள். பின்னர்தான் தெரிந்தது. அது நம்ம ஊர் ஆத்தி மரத்தின் ஒண்ணுவிட்ட சகோதரி என்றுபெயர் அனாகேச்சோஆர்கிட்.

தாவரவியல் பெயர்: பாஹினியா லூனாரியாய்டஸ் ;(BAUHINIA LUNARIOIDES)

தாவரக் குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)

தாயகம்: டெக்சஸ் - யு.எஸ்.எ (TEXAS - USA)

பொதுப் பெயர்கள்: டெக்கஸ் புளும், அனாகேச்சோ ஆர்கிட் ட்ரீ, சிகுவாகுவான் ஆர்கிட் ஷ்ரப், ஒயிட் ஆர்கிட் ட்ரீ (TEXUS PLUME, ANACACHO ORCHID TREE, CHIHUAHUAN ORCHID SHRUB, WHITE ORCHID TREE)

ங்கு ஆத்தி இங்கு ஆர்கிட் மரம்

     அமெரிக்க  ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மரம் இது. ஆனால் கூட நமக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அறிமுகமான மரம்தான் இது.  ஆத்தி மரம், ந்தாரை, இறுவாட்சி என பல பெயர்களில் அழைக்கப்படும் மரவகை இதுதான். 

ஆத்திச்சூடி மரம்

இந்த மரத்தின் பெயரைத்தான் ஒளவையார் ஆத்திச் சூடி என தனது நூலுக்கு பெயர் சூட்டினார்.

     மெரிக்காவில் தென்மேற்குப் பகுதிகளில் குறிப்பாக டெக்ஸ் மாநிலப் பகுதிகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன.  வீடுகளிலும், பொது இடங்களிலும் அழகுக்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன. 

8 முதல் 12 அடி உயரம் வரை உயரமான வளரும்.  6 முதல் 10 அடி அகலத்திற்கு பந்து வளரும்.

பட்டாம்பூச்சி இலைகள்

     இதன் இலைகள் ஒவ்வொன்றும், சிறகு விரித்தபடி உட்கார்ந்திருக்கும், பட்டாம்பூச்சிபோல இருக்கும்.  அவ்வளவு அழகான இலைகள்.  இதன் பூக்கள் பார்க்க ஆர்கிட் பூக்கள் போல இருக்கும். 

இவை துளிர்விடும் பருவத்தில் பூக்கத் தொடங்கி கோடைப் பருவம் வரைத் தொடரும்.  பூக்கள் வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் பூக்கும்.  இதன் பூக்கள் அதிகப்படியான பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்களைக் கவரும்.

 

வடிகால் வசதி

     இந்த மரங்களை நடுவதற்கு நல்ல வடிகால் வசதி வேண்டும்.  முழுமையான சூரிய வெளிச்சம் வேண்டும்.  அல்லது லேசான நிழல் இருந்தாலும் தாங்கி வளரும். 

காற்று  நேரடியாக, வேகமாக வீசும் திசைகளில் இந்த மரங்கள் நடுவதைத் தவிர்க்க வேண்டும்.  காரணம், இந்த மரங்களின் இலைகள் எளிதாக முறிந்துவிடக் கூடியவை.

மான்கள் மேயாதது

இந்த மரங்களுக்கு கூடுதலான பராமரிப்புகள் தேவைப்படாது.  கவாத்துகூட அதிகம் தேவைப்படாது.  முக்கியமாக வறட்சியைத் தாங்கும்.  அதிக நீர்ப்பாசனம் கூட தேவைப்படாது.  இன்னொன்று மான்களால் மேயப்படாதது.

சுக்காம்பாறை மண்

     பரவலான மண் வகைகளில் வளரும்.  பாறைகள் நிறைந்த மண்> சுக்காம்பாறை நிறைந்த மண், மணறசாரி மண், நடுத்தரமான இருமண்பாடு மண் ஆகிவற்றிலும் நன்கு வளரும்.

     பாஹினியா என்னும் தாவர வகையில் சுமார் 250 வகைக்கும் மேற்பட்ட செடி கொடிகள் மற்றும் மரங்கள் உள்ளன.  அவற்றில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த,  பெரிய பூக்களை உடைய மரங்கள் எல்லாம் இங்கு அறிமுகம் ஆகி உள்ளன. 

டெக்காஸ் முதல் புளோரிடா வரை

இவை டெக்காஸ் முதல் புளோரிடா வரை உள்ள கடலோரப் பகுதிகளில் எல்லாம் இந்த மரங்கள் உள்ளன. 

மேலும் இவை கலிபோர்னியா, மெக்ஸிகோ, கரிபியன், மெடிட்டரேனியன் ஆகிய பகுதிகளிலும் இந்த வகை மரங்கள் பரவியுள்ளன.

அனாகேச்சோ என்றால் சுண்ணாம்பு

     இந்த தாவர இனத்தில் அனாகேச்சோ ஆர்கிட் மரம் மட்டும்தான் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சொந்தமானது.  னாகேச்சோ என்பது சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த மலைப் பகுதி.

இங்கு உள்ள டெவிலஸ் வெது என்ற ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள சுண்ணம்புப்பாறை நிறைந்த சரிவுககளிலும் இந்த ஆர்கிட் மரங்கள் காணப்படுகின்றன.   

இந்த மரத்திற்கு பட்டா டி வாசா (PATA D VACA)  என்பது இன்னொரு பெயர்.  அதற்கு அர்த்தம் மாட்டுக்குளம்பு மரம் (COW HOOF TREE) என்பது.  நம்ம ஊரில் இதனை கேமல் புட் ட்ரீ (CAMEL FOOT TREE) என்றும் சொல்லுகிறோம்.

      அனாகேச்சோ ஆர்கிட் மரங்கள் சுண்ணாம்புப் பாறைகள் சுமாராக இருக்கும் நிலவாகுகளில் நன்றாக வளரும் மரம்.  ஆனால் முக்கியமாக இதற்கு நல்ல வடிகால் வசதி வேண்டும். 

இந்தப் பகுதிகளில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையை தாங்கும் மரமாக உள்ளது.  ஆனால் இன்னும் கூடுதலான வடக்குப் பகுதியில் கருமையான குளிர்ச்சியை இந்த மரங்கள் தாக்குப் பிடிக்காது.

அழகு மரத்தின் சாமுத்ரிகா லட்சணங்கள்

     வீடுகளுக்கும், பொதுக்கட்டிட முகப்பு, சாலை ஒரங்கள் அனைத்திற்கும் பொருத்தமான ஒரு அழகு மரம் வேண்டும்.  அதற்கு என்னென்ன சாமுத்ரிகா லட்சஙை;கள் இருக்க வேண்டும் ?

     பூக்கள் அழகாய் இருக்க வேண்டும்.  இலைகள் அழகாய் இருக்க வேண்டும்.  கிளைகள் அழகாய் இருக்க வேண்டும்.  மரத்தின் பட்டைகள் அழகாய் இருக்க வேண்டும்.  மரத்தின் தலைப்பகுதி (CROWN)  அழகாய் இருக்க வேண்டும் தலைப்பதி தாழத் தவழும் மரமாய் (UNDER STORY TREE) இருக்க வேண்டும்.  பல அடிமரம் கொண்ட மரமாய் (MULTISTEMMED TREE)  இருக்க வேண்டும்.

     என்னென்ன குணங்கள் இருக்க கூடாது ?  திக இடத்தைப் பிடிக்கக் கூடாது.  அதிகக் குப்பைப் போடக் கூடாது. (இலைகளை பட்டைகளை மானாவாரியாக உதிர்க்க்க் கூடாது).   அதிக ண்ணீர் கேட்கக் கூடாது.  அதிகமான பராமரிப்பு வேலைகளை வேண்டக் கூடாது. அதிக செலவு வைக்கக் கூடாது.

     இதன் அடிப்படையில் 5 வகையான மரங்களை சிறந்த அழகு மரங்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.  அவை டாக்வுட் ட்ரீ, சேஸ்ட் ட்ரீ(நொச்சி) தஸ்டி பிளாக் ஹைபரீனம், அமெரிக்கன் ஸ்மோக் ட்ரீ மற்றும் அனாச்கோ ஆர்கிட் (ஆத்தி மரம்).

பூமியை யோசி ! மரங்களை நேசி !

FOR FURTHER READING

WWW.HOU22.COM-“BAUHINIA LUNARIOIDES’ –

WWW.EN.WIKIPEDIA.ORG – “BAUHINIA LUNARIOIDES”

WWW.WILDFLOWER.ORG- PLANT DATA BASE- BAUHINIA LUNARIOIDES’.

WWW.NSPOT.ORG ‘ANACACHO ORCHID TREE, A GREAT LANDSCAPE PLANT

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...