Tuesday, June 13, 2023

AN INFORMAL MEETING IN PINTADAS BRAZIL - பிரேசில் பின்ட்டடாஸ் நகரில் சிரபுஞ்சி பற்றிய விவாதம்

பின்ட்டடாஸ், பிரேசில்

 

பிரேஸில் நாட்டின் இந்த வடகிழக்கு பகுதியில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை சுமார் 600 மில்லிதான். இந்தியாவின் சராசரி 1250 மில்லி. பதினோராயிரத்து 444  மில்லி மீட்டர் மழையை ஒரு ஆண்டில் சராசரியாகப் பெறும் சிரபுஞ்சி நம் நாட்டில்தான் உள்ளது.

5. பிரேசில்  நாட்டில் சிரபுஞ்சி பற்றிய விவாதம்

888888888888888888888888888888888888888888888888888

2012—ஆம் ஆண்டு

இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் அனுபவமுள்ள 30 பேர் அடங்கிய ஒரு குழு பயிற்சிபெற பிரேசில் நாட்டிற்கு சென்றது. அந்த குழுவில் நானும் இருந்தேன்.

இந்திய அரசின் ஒரு அங்கமான நபார்டு வங்கி இதனை ஏற்பாடு செய்திருந்தது. வேர்ல்ட் ரிசோர்ஸ் சென்டர்   என்ற பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சசி நிறுவனம் இதே பயிற்சியை அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது.

அந்த பயிற்சி நடைபெற்றபோது ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும்.

சேவ் பவுலோ மாநிலத்தில் பின்ட்டடாஸ் என்ற நகரில் முதல் நாள் பயிற்சி நடந்தது. அன்று மாலை ஒரு கலந்துரையாடல் நடந்தது.

அந்த கருத்து பரிமாற்ற நிகழ்வில், பிரேஸில் நாட்டின் வேல்ட்  ரிசோர்ஸ் சென்டஐ சேர்ந்த பயிற்றுநர்கள் நபார்டு வங்கியின் அலுவலர்கள் மற்றும் பயிற்சிக்காக சென்றிருந்த நாங்களும் பங்கு பெற்றிருந்தோம்.

இதில் முக்கால்வாசி பேர் விவசாயம், வேளாண்மைப் பொறியியல் மற்றும் சமூகவியல் துறையில் பட்டதாரிகளாகவும் அந்தந்த துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

ஓவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை வழங்கினர். எனது முறை வந்தது. நான் எனது கருத்தை ஒரு புள்ளி விவரத்தோடு சொன்னேன். நான் சொன்ன புள்ளி விவரங்களை தவறு என்று எங்களுடன் வந்திருந்த பயிற்சியாளர் ஒருவர் அதனை தள்ளுபடி செய்தார்.

அது சரியானதுதான் என்று நான் விளக்கம் கூறியும் அவர் அதை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது. வேறு யாரும் அதுபற்றி எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

      எனக்கும் அவருக்குமான வாக்குவாதமாக மாற அந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வு, அத்துடன் முடிவுக்கு வர, நாங்கள் இரவு சாப்பாட்டிற்கு சென்றோம்.

      நான் என்ன புள்ளி விவரம் சொன்னேன் அவர் ஏன் மறுப்பு தெரிவித்தார் ? என்று சொல்வதற்கு முன்னால் இந்தப் பயிற்சியைப் பற்றி சில விவரங்களை உங்களுக்கு சொல்ல வேண்டும்.

      நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் அனுபவம் பெற்றவர்கள்தான் இந்த பயிற்சியில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னேன்.

      இயற்கை வளங்களில் முக்கியமாக நிலம், நீர், வனவளம், பயிர்வளம், கால்நடைவளம் இவற்றை பாதுகாத்து, பராமரித்து மேம்படுத்தி மக்களின் சமூக கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுதான் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம். இதனை நபார்டு வங்கி, அரசு அல்லாத நிறுவனங்களுடன் இணைந்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.     

பிரேஸில் நாட்டில்  டபிள்யூ. ஆர். ஐ.ன் உதவியுடன் இதனை சிறப்பாக செய்கிறார்கள். இந்த அனுபவங்களை பெறத்தான் நாங்கள் அந்தப் பயிற்சிக்கு சென்றோம்.

      முக்கியமாக மழைநீரை அறுவடை செய்து பயன்படுத்துவது குறித்த பயிற்சி இது.

இந்த பயிற்சி பெற நாங்கள் சென்றது பிரேஸில் நாட்டின் வடகிழக்குப் பகுதி. இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை மிக சொற்பம். இந்தியாவில் கிடைக்கும் ஆண்டு சராசரிமழையில் தோராயமாக பாதி. 

இப்போது கருத்து பரிமாற்ற நிகழ்ச்சி, எப்படி கருத்து விவாத மேடையானது…? என்று சொல்கிறேன். அப்படி நான் என்னதான் சொன்னேன்…?

      நான் சொன்னது இதுதான்.

பிரேஸில் நாட்டின் இந்த வடகிழக்கு பகுதியில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை சுமார் 600 மில்லிதான். இந்தியாவின் சராசரி 1250 மில்லி. பதினோராயிரத்து 444  மில்லி மீட்டர் மழையை ஒரு ஆண்டில் சராசரியாகப் பெறும் சிரபுஞ்சி நம் நாட்டில்தான் உள்ளது.

பிரேசில் நாட்டினரைப்போல மழைநீரை சேமித்துப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினால், தண்ணீர் பிரச்சினையே நம் நாட்டில் தட்டுப்படாது

சிரபுஞ்சியில் கிடைப்பதாக நீங்கள் சொன்ன மழை அளவு மிக அதிகம். தவறான புள்ளி விவரம். இதபேன்ற புள்ளிவிவரங்களை சரியாக சொல்ல வேண்டும்என்றார் என் புள்ளிவிவரத்திற்கு எதிராகக் கொடி பிடித்தவர்.

அன்று இரவே என்னுடன் இருந்த சில நண்பர்களுக்கு நான் சொன்ன புள்ளிவிவரங்கள்  சரி’  என்று நிரூபித்தேன். எனக்கு உதவியது கூகிள். இன்டர்நெட் மற்றும் வலைத்தளத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மாதா பிதா கூகிள் தெய்வம் என்று ஒரு நண்பர் சொன்னது சரிதான்.

      நான் சொல்ல விரும்பியது புள்ளிவிவரங்கள் அல்ல. அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு செய்தி.

      அது, இந்தியாவில் நாம் பெறும்  மழைகுறைவல்ல என்பதுதான்.

      என் புள்ளிவிவரத்தை தள்ளுபடி செய்த நண்பரும் நானும் கிட்டத்தட்ட 12 நாட்கள் ஒன்றாகத்தான் இருந்தோம். ஒரு நாளும் இதுபற்றி அவரும் பேசவில்லை. நானும் கேட்கவில்லை.

      அந்தப்பயிற்சி முடிந்து அந்த நண்பரிடம் கைகுலுக்கி விடைபெறும் போது பிரெமிள் அவர்களின் கவிதை ஒன்று என் ஞாபகத்தில் வந்தது.

      ராமச் சந்திரனா…?  என்று கேட்டேன்.

      ஆம்…   என்றார்.

      ஏந்த ராமச்சந்திரன்…? என்று

      நானும் கேட்கவில்லை…..அவரும் சொல்லவில்லை

சியபுஞ்சியில் கிடைக்கும் மழையளவு உங்களுக்கு நம்பும்படியாக உள்ளதா ?

PLEASE POST A COMMENT ON THIS ARTICLE AND ITS CONTENT AND ITS PRESENTATION. REGARDS. GNANASURIA BAHAVAN  D (AUTHOR)

8888888888888888888888888888888888888888

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...