Tuesday, June 20, 2023

AMERICA'S SAMIYAR NOCHI AS ORNAMENT TREE 70. அமெரிக்காவில் சாமியார் நொச்சி மரம்

 

அமெரிக்காவில்
சாமியார் நொச்சி மரம்

இன்று அமெரிக்காவில் டல்லஸ் பெருநகரில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சென்றிருந்தேன்.  கிழக்கு டல்லஸ் பகுதியில் இந்தப் பூங்கா ஒயிட் ராக் லேக் என்னும் ஏரியின் கரையில் 66 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இந்த பூங்காவில்   நொச்சியை அழகு மரமாக வைத்திருக்கிறார்கள்.

தமிழ்ப்பெயர்: சாமியார் நொச்சி (NOCHI)

பொதுப் பெயர்கள்: வைட்டக்ஸ், சேஸ்ட் ட்ரீ, சேஸ்ட் பெர்ரி, ஆபிரஹாம்ஸ் பாம்,  மாங்க்ஸ் பெப்பர். (VITEX, CHASTE TREE,CHASTE BERRY, ABRAHAM’S BALAM, MONK’S PEPPER)

தாவரவியல் பெயர்: வைட்டஸ் அக்னஸ் கேஸ்டஸ் (VITEX AGNUS CASTUS)

தாவரக் குடும்பத்தின் பெயர்: லேமியேசி (LAMIACEAE)

தாயகம்: இந்தியா, சைனா

ஆர்பரீட்டம் தாவரவியல் தோட்டம்

சனி ஞாயிறு என்றால் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகிறது.  நான் பூங்கா என்று சொல்லும் இது ஒரு தாவரவியல் தோட்டம்.  அதிகாரப்பூர்வமாக அரசு வைத்திருக்கும் பெயர் ஆர்பரிட்டம் அண்ட் பொட்டானிகல் கார்டன்ஸ் (ARBORETUM CUM BOTANICAL GARDENS).

66 ஏக்கர் பரப்பு 

சுமார் மூன்று மணிநேரம் இந்த 66 ஏக்கர் நிலப்பரப்பிலும் சுற்றித் திரிந்து> ஒவ்வொரு மரமாக நேரில் சந்தித்துப் பேசி (மரங்களுடன்தான்) அங்கிருந்து விடை பெறும்போது.  இதற்கெல்லாம் ஒரு குடுப்பினை வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மனம் மகிழ்ச்சியாக இருந்தது.

புகைப்படங்களில் பார்த்த மரங்கள்

        இன்னும் கொஞ்ச நேரம் தாமதமாகப் போயிருந்தால் அங்கு கார் நிறுந்த இடம் கிடைத்திருக்காது என்று தோன்றியது.  புத்தகங்களில் வலைத்தளங்களில் புகைப்டமாக மட்டுமே பார்த்த மரங்களை எல்லாம் நிஐமாகப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அமெரிக்காவில் நொச்சி மரம்

     ஓக், சைகோமோர், சைப்ரஸ், பீச், மேப்பிள், மிர்ட்டின், பெர்சிமான்,  ரெட் வுட், செடார் இப்படி அத்தனை வகை மரங்களையும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தி;ல் பார்ப்பது என்பது நம்ப முடியாததாக இருந்தது.  இந்த மரங்கள் எல்லாவற்றிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தது ஒன்றுதான்.  அதுதான் நம்ம ஊர் நொச்சி மரம். 

ஒரு நடைபாதையின் இரண்டு புறத்திலும் அடர்த்தியாக இருந்தன.  கொஞ்சம் பெரிய மரங்களாக வளர்ந்திருந்தன.  அடி மரத்தூரைப் பார்த்து அவற்றை நொச்சி மரம் என்று கண்டுபிடிக்க முடியாது. 

அவை என்ன மரமாக இருக்கும் என்று தேடித் துழாவிய பின்னர்தான் அவை நொச்சி மரம் எனத் தெரிந்தது.  ஆனால் அது நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் மரம் இல்லை. 

வைட்டக்ஸ் அக்னஸ் கேஸ்டஸ்

நம்ம ஊர் நொச்சி மரத்தின் தாவரவியல் பெயர் வைட்டக்ஸ் நெகுண்டோ (VITEX NEGUNDO) என்பது.  ஆனால் டல்லஸ் நகர் ஆர்பரிட்டத்தில் இருக்கும் நொச்சியின் பெயர் வைட்டக்ஸ் அக்னஸ் கேஸ்டஸ் (VITEX AGNUS CASTUS) என்பது லேமியேசி (LAMIACEAE) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

     நொச்சி மரம் இந்தியா மற்றும் சீன நாட்டிற்குக் சொந்தமான மரம்.  இதன் பொதுப் பெயர்கள், சேஸ்ட் ஸ்ட்ரீ, லைலாக் சேஸ்ட் ட்ரீ, ஆப்ரஹாம் பாம், மாங்க்ஸ் பெப்பர், ஆகியவை.

     மெரிக்காவில் இதனை சிறந்த அழகுமரமாக சிபாரிசு செய்கிறார்கள்.  வீட்டுத் தோட்டங்களில், பூங்காங்காக்களில்,  குறிப்பாக வெப்பமான பகுதிகளில், நல்ல சூரிய வெளிச்சம் பெக் கூடிய,  வடிகால் வசதி உள்ள இடங்களில் எல்லாம் இதன் லேவண்டர் நிற பூக்கள் தரும்படியாக சிபாரிசு செய்கிறார்கள், இங்கிருக்கும் தோட்டக்கலை நிபுணர்கள்.

பிரம்மச்சாரியத்தைக் காப்பாற்ற உதவும்

  நொச்சி மரங்களுக்கு இன்னொரு பெயர் மாங்க்ஸ் பெப்பர்’. நொச்சிப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் சந்நியாசிகளுக்கு தங்கள் பிரம்மச்சாரியத்தைக் காப்பாற்ற உதவும் மரம் என்றுதான் அதற்கு அர்த்தமாம்.

மயிலின் விரல் இலைகள்

     இதன் இலைகள் சாம்பல் பூசியது மாதிரியான பசுமை நிறமாக இருக்கும்.  மயிலின் விரல்களைப்போல இதன் இலைகள் 3 முதல் 5 இலைகளின் கூட்டமைப்பாக இருக்கும்.

     வைட்டக்ஸ் அக்னஸ் கேஸ்டஸ் நொச்சி வகை தெற்கு ஐரோப்பா மற்றம் மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது என்றும் சொல்லுகிறார்கள்.

     நொச்சி உலகம் முழுவதுமே ஒரு மூலிகையாக பயன்படுத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது.  இதனை ஆங்கிலத்தில் அன்அப்ரோடிசியேக்ஸ் (ANAPHRODISIACS)  என்று சொல்லுகிறார்கள். 

சிற்றின்ப உனர்வுகளை குறைக்கும் தன்மையுடையது என்று பொருள்.  ஆண் பெண் என இருபாலரிடையேயும் இதனைப் பயன்படுத்த முடியும்.

     சிலர் இயல்பாகவே அதீதமான சிற்றின் உணர்வடையவர்களாக (HYPER SEXUAL HUMANS)  இருப்பார்கள். அவர்களால் பாலியல் ரீதியான குற்றங்கள் நிகழ்வது உண்டு.  அப்படிப்பட்ட ஆண் பெண் இருபாலரையும்,  நொச்சி மூலம் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லுகிறார்கள்.

     இந்த மரத்தின் அழகான அம்சங்கள் இதன் இலைகள் மற்றும் பூக்கள்.  வேலியோரங்களில்,  பாதை ஒரங்களில்,  தோட்டங்களில் அழகுக்காக நடலாம்.

நொச்சி மாத்திரைகள்

     நொச்சி, வைடக்ஸ்,  சேஸ்ட் ட்ரீ என்ற பெயர்களில் மாத்திரைகள் மற்றும் கேப்ஸ்யூல்களாக ஆன்லைன் மார்கெட்டுகளில் விற்பனைக்கு வந்து விட்டன.  விலை கூட.  ரொம்ப கிடையாது 100 கேப் சூல் 1300 ரூபாய் மட்டுமே.

பூமியை யோசி !  மரங்களை நேசி !

FOR FURTHER READING

WWW.AGGIE.HORTICUTURE.TAMV.EDU- HORTICULTURE UPDATE – TEXAS AGRI LIFE EXTENSION SERVICE .TEXAS-AXM UNIVERSITY, TEXAS. VITEX, OR CHASTE TREE) – VITEX AGNUS CASTUS

WWW.EN.M.WIKIPEDIA .ORG  “APHRODISIAC”

WWW.MISSOURI BOTANICAL GARDEN.ORG – VITEX AGNUS CASTUS. (503 words)

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...