Tuesday, June 20, 2023

AMERICA'S CRAPE MYRTLE IS INDIAN TREE 74. அமெரிக்காவில் இந்தியாவின் பவளக்குறிஞ்சி

 

அமெரிக்காவில்
பவளக்குறிஞ்சி


அமெரிக்காவில் கிரேப் மிர்டில்
, அங்கிங்கெனதாபடி அழகுக்காக வளர்க்கப் பட்டிருக்கும் மரம்> கலிபோர்னியா> அரிசோனா மற்றம் நெவாடா மாநிலங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளிலும் வளருவதற்கு பொருத்தமான மரமாகக் கண்டறிந்துள்ளனர், இந்தியாவில் இதன் பெயர் பூமருது, அழகான பூமரம், உறுதியான மரக்கட்டை தரும் மரம், இதற்கு இந்தியாவின் பெருமிதம் (PROUD OF INDIA)  என்ற பொதுப் பெயரும் உண்டு. அமெரிக்காவில் இதன் பெயர் கிரேப் மிர்டில்.

தமிழ்ப்பெயர்: கிரேப் பிர்டில், பூமரம், பவளக்குரிஞ்சி (CRAPE MIRTLE, PAVALAKURINJI)

பொதுப் பெயர்கள்: கிரேப் மிர்டிள் (CRAPE MYRTLE) 

தாவரவியல் பெயர்: லெகர்ஸ்ட்ரோமியா இண்டிகா (LAGERSTOEMIA INDICA)

தாவரக் குடும்பம்பெர்: லித்ரேசி (LYTHRACEAE)

தாயகம்: இந்தியா, சைனா, ஐப்பான், மற்றும் கொரியா

பிறமொழிப் பெயர்கள்

இந்தி: சாவனி, சலோனா, சவானி (SAVANI, SALONA, SAVAANI)

மணிப்புரி: ஜரோல் (JAROL)

மராத்தி: தாய்த்தி (DHAITHI)

நேப்பாளி:அசாரி (ASARI)

சமஸ்கிருதம்: சித்தேஸ்வரா (SITHESWARA)

தெலுங்கு: சைனா கொரண்டா (CHINA GORANTA)

பெங்காலி: ஜாருல் (JARUL)    

டல்லஸ், அடிசன், பிளானோ, இப்படி இந்த சுற்று வட்டாரங்களில் அங்கிங்கெனதாபடி அழகுக்காக வளர்க்கப் பட்டிருக்கும் மரம் இந்த கிரேப் மிர்டில்.

அழகு படுத்தும் மரம்    

வீடுகள்,  அலுவலகங்கள்,  வியாபாரத் தலங்கள், சாலைகள்,  நெடுஞ்சாலைகள் இப்படி எல்லா இடங்களையும் அழகு படுத்திக் கொண்டிருக்கும் மரம் கிரேப் மிர்டில். 

ட்டெனப் பார்த்தால் இதன் பூக்கள்> அதன் நிறம் போகைன் வில்லாவை ஞாபகப்படுத்தும்.

     கிரேப் மிர்டில் என்று இங்கு அழைக்கிறார்கள். 

    

இந்தியாவின் பெருமிதம்

தன் தாவரவியல் பெயரைத் தெரிந்து கொண்டபோது.  னக்கு ஆச்சரியமாக இருந்தது.  காரணம் அது நம்ம ஊர் சரக்கு. 

அதனால்தான் அது லெகஸ்ட்ரோமியா இண்டிகா.  இதற்கு பிரவுட் ஆப் இண்டியா (PROUD OF INDIA) இந்தியாவின் பெருமிதம் என்ற பொதுப் பெயரும் உண்டு. 

இதனை தமிழி;ல் பூமருது என அழைக்கிறார்கள்.

அழகான பூக்கள்   

நான் முதன்முதலாக ஒரு தனியார் நர்சரியில் மூன்று நான்கடி அளவில் வளர்ந்த மரத்தைத்தான் முதலில் பார்த்தேன்.  அதன் பூக்களைப் பார்த்து அசந்து போனேன்.  அவ்வளவு அழகானப் பூக்கள்.   

இந்தியாவில் நான் வளர்ந்த மரங்களைப் பார்த்ததில்லை.  இங்கிருக்கும் மரங்கள் எல்லாமே 10 அல்லது 15 ஆண்டு மரங்களாக இருக்கும்.  இங்கு இந்த மரங்களைப் பார்க்கும் போது, தன் அம்சங்கள் அனைத்தும் அழகானவை.

வாடாமல்லி நிறப் பூச்சரங்கள்    

ஓன்று இந்த மரங்கள் ஐந்தாறு அடிமரங்களாக வளர்வது> இரண்டாவது மொழுமொழுவென இருக்கும் மரத்தின் மேற்புறம்> மூன்;றாவது சரம் சரமாக பளிச் சென்ற வாடாமல்லி நிறத்தில் பூக்கும் பூச்சரங்கள், நான்காவது> அதிகமான இடத்தைப் பிடித்துக் கொள்ளாமல் சிக்கனமாக வளர்ந்து அழகு தருவது.    

பட்டை உதிரும் மரம்

இந்த மரத்தின் பட்டை ஆண்டுக்கு ஒரு முறை முழுசாக உதிர்ந்து போகும்.  இதன் இலைகளும்  குளிர் காலத்தில் முழுமையாக உதிர்ந்து போகும். 

துளிர்விடும் காலத்தில் மீண்டும்> தாமிர நிறத்தில் இருக்கும் இதன் கிளைகளில்  இலைகள் துளிர்க்கும். 

வட்ட டிவமாக அல்லது கோள வடிவி;ல் கரும்பச்சை நிற இலைகள்> மஞ்சள்> ஆரஞ்சு மற்றம் சிவப்பு நிறமாக மாறும்.

பல நிறப்பூக்கள்   

வேவ்வேறு மரங்களில்> வெவ்வேறு நிறங்களில் பூக்கும்.  வெள்ளை> ஊதா> சிவப்பு என பல நிறங்களில் இந்த மரங்கள் பூக்கின்றன.    

கிரேப் மிர்;ட்டில் மரங்கள்> பனிப்பொழிவைத் தாங்கும்.  இதற்கு நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும்.  நல்ல சூழலில் ஏறத்தாழ 20 அடி உயரம் வரை வளரும்.

வடிகால் வசதி வேண்டும்.  வளர்ந்த மரங்கள் வறட்சியைத் தாங்கும்.  கோடை காலத்தில் தேவைக்கு ற்ப பாசனம் தர வேண்டும்.

ஒட்டு ரகங்கள்    

லெகஸ்ட்ரோமியாவின் என்னும் இரண்டு ரகங்களையும் ஒட்டுச் சேர்த்து 20 வீரிய ஒட்டு ரகங்களை ருவாக்கி இருக்கிறார்கள்.

இதனை அமெரிக்காவின் விவசாயத்துறை செய்துள்ளது.  வாஷிங்pடன்னில் உள்ள யுஎஸ்  நேஷனல் ஆர்பரிட்டம் (NATIONAL ARBORETUM) என்றும் அரசுத்துறை செயல்படுத்துகிறது.

சென்னை மாதிரிதான் டல்லஸ்    

சென்னை மாதிரிதாம்பா டல்லஸ் கிளைமேட்  என்று அடிக்கடி சொல்லுவான் என் மகன்.  இது போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளுக்கு ஏற்ற மரமாக அமெரிக்கர்கள் தெரித்தெடுத்துள்ளனர், என்று நினைக்கிறேன். 

அதனால்தான் திரும்பிய பக்கம் எல்லாம்.  நம்மூர் மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அது மட்டுமல்லாமல் புதிய வீரிய ஒட்டு ரகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தென் பகுதியின் அடையாளம்    

இந்த வீரிய ஒட்டு மரங்கள் அனைத்திற்கும் அமெரிக்காவின் பழங்குடி மக்களின்  பெயர்களை வைத்துள்ளார்கள்

அது மட்டுமல்ல, தட்ப வெப்பச் சூழல் பொருத்தமாக உள்ள பல மாநிலங்களிலும், பூங்காக்கள், சாலைகள் மற்றம் இதர இடங்களிலும் இந் கிரேப் மிரிட்டில் மரங்களை நட்டு வருகிறார்கள். 

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின், தென்பகுதியின் அடையாளமாகிவிட்டது நம்ம ஊர் பூமருது என்னும் கிரேப் மிர்ட்டில்.    

பிரபலமாகி வரும் கிரேப் மிர்டில்

சவுத் அட்லாண்டிக் ஸ்டெட்ஸ், மத்திய அட்லாண்டிக் மாநிலங்கள், மசாசூசெட்ஸ் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், என எல்லா இடங்களிலும்> கிரேப் மிரிட்டில் தற்போது பிரபலமாகி வருகிறது. 

அதுமட்டுமல்ல, கலிபோர்னியா, அரிசோனா மற்றம் நெவாடா மாநிலங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளிலும் வளருவதற்கு பொருத்தமான மரமாக இதனைக் கண்டறிந்துள்ளனர்.    

கிரேப் மர்டர்

பாலைவனப் பகுதிகளில் இந்த மரங்களை உருவாக்க வேண்டுமானால், இளம் செடிகளுக்கு நிழலும் கூடுதலான பாசனமும் கொடுக்க வேண்டும்.   

இந்த மரங்கள் கோடைப் பருவத்தில் நன்கு பூக்க வேண்டும் என்றால் குளிர் காலத்தில் கடுமையாக கவாத்து செய்ய வேண்டும்இப்படி ஒரு கடுமையான கவாத்திற்கு உள்ளாதால் இதனை இங்கு கிரேப் மர்டர் (CRAPE MURDER) என்கிறார்கள்.

யு எஸ் நேஷனல் ஆர்பொரிட்டம்

மிகுதியான குளிர்ச்சி உள்ள மாநிலங்களில் கூட வளரும் வகையில், புதிய ஒட்டு கிரேப் மிர்டில் மரவகைகளை யுஎஸ் நேனல் ஆப்பரிட்டம் (NATIONAL ARBORETAM) உருவாக்கி உள்ளது. 

ஆக குளிர்ச்சியான பகுதிகள், வெப்பமான பகுதிகள் என அனைத்து மாநிலங்களிலும் கிரேப் மிர்டில் மரங்களை நடமுடியும்.

தொடர்ந்து அதிக நாட்கள் பூக்கும்    

கிரேப் மிர்டில்> ஒர் ஆண்டில் அதிக நாட்கள் பூத்துக் கொண்டிருக்கும்.  60 முதல் 120 நாட்கள் தொடர்ந்து பூக்களைப் பார்க்கலாம்.  பல வண்ணங்களில் பூக்களைப் பார்க்கலாம். 

நிறைய பூக்களைக் கொண்ட பெரிய பூங்கொத்துக்களை உருவாக்கும்.  அதிகபட்சமாக 40 அடியைத் தாண்டாது.  ஒரே பருவக்காலத்தில் செடிகள் வளர்ந்து மரமாகிவிடும் வேகமாக வளரும்.

வேர்ச் செடிகள்

வேர்ச்செடிகளை நிறைய உருவாக்கும்.  ஆனால் புதிய மரங்களை உருவாக்குவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.  வேர்ச் செடிகளை அப்புறப்படுத்த தனிமரங்களை பராமரிக்கலாம்.  அடிசன் மற்றும் டல்லஸ் முழுக்க அப்படித்தான் செய்திருக்கிறார்கள்

FOR FURTHER READING

WWW.EN.WIKIPEDIA.ORG-“LAGANSTROEMIA INDICA’

WWW.MTSSOURI BOTANICAL GARDEN.ORG-“LAGASTOEMIA INDIA”

WWW.HORTUFI.EDU/TREE -“LASASTROEMIA INDICA’

WWW.FLORIDATA.COM-“LAGERSTROEMIA INDIACA”

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

            

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...