Tuesday, June 20, 2023

AMERICAN MORO BLOOD ORANGE 76. அமெரிக்காவின் ரத்தச் சிவப்பு மோரோ பிளட் ஆரஞ்சு

 

அமெரிக்காவின் 
மோரோ பிளட் ஆரஞ்சு

உலகம் முழுவதும் சாகுபடி செய்யும் பத்து ஆரஞ்சு வகைகளில் ஒன்று மோரோ பிளட் ஆரஞ்சு, பழத்தின் இனிப்பு பிரமாதமாக இருக்கும். அதை விட இதன் ம் வித்தியாசமாக இருக்கும்,  ஆரஞ்சு வாசனை கமகக்கும்.  அத்தோடு ரேஷ்ப்பெரியின் வாசனையும் சேர்ந்து வீசும்.  சாதாரணமாக ஆரஞ்சு சாற்றில் ஒரு சிறு கசப்பு இருக்கும்.  அந்தத் கசப்பு இந்த ரகத்தில் கொஞ்சம் தூக்கலாக இருக்கும், சிவப்பாய் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாண மார்கெட்டில் மவுசு அதிகம் இருப்பது போல சிவப்பாய் இருப்பதால் ஆரஞ்சு மார்கெட்டில் மோரோ பிளட் ஆரஞ்சக்கு நல்ல விலை கிடைக்கிறது

தமிழ்ப்பெயர்: மோரோ பிளட் ஆரஞ்சு (MORO BLOOD ORANGE)

பொதுப் பெயர்: மோரோ பிளட் ஆரஞ்சு (MORO BLOOD ORANGE)

தாவரவியல் பெயர்: சிட்ரஸ் சைனென்சிஸ் (CITRUS  SINENSIS)

தாவரக் குடும்பம் பெயர்: ரூட்டேசி (RUTACEAE)

தாயகம்: சதர்ன் மெடிட்டரேனியன் (SOUTHERN MEDITERANEAN)    

உலக அளவில் அதிகம் ஆரஞ்சு ற்பத்தி செய்யும் நாடு பிரேசில்.  அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.  உலகம் முழுவதும் சாகுபடி செய்யும் பத்து ஆரஞ்சு வகைகளில் ஒன்று மோரோ பிளட் ஆரஞ்சு.   

டல்லஸ் நகரில் போர்ட்வொர்த் தாவரவியல் பூங்காவி;ல் நுழைந்ததும் நான் பார்த்தது மோரோ பிளட் ஆரஞ்சு மரம்தான்பிளட் ஆரஞ்சு என்பது எனக்கு ரொம்பவும் புதியதாக இருந்தது.  ஆரஞ்சில் நமக்குத் தெரிந்தவை ஒன்று சாதா ஆரஞ்சு.  இன்னொன்று மேண்டரின் ஆரஞ்சு என்பது. 

அதனை கமலா ஆரஞ்சு என்று சொல்லுவார்கள்.  ஆங்கிலத்தில் அது லூஸ் ஜாக்கட் ஆரஞ்ச்.  சாதா ஆரஞ்சு தோலை உறிப்பது ரொம்ப கஷ்டம்.  ஆனால் லூஸ்ஜாக்கட் .ஆரஞ்சு பெயருக்குத் தகுந்படி கையை வைத்தால் போதும், தானாய் கழன்று வந்துவிடும்.   

எங்கள் தோட்டத்தில் ஒரு வகை ஆரஞ்சு இருந்தது.  பழங்கள் நெல்லிக்காயை விட கொஞ்சம் சிறியது.  சுண்டைக்காயைவிட கொஞ்சம் பெரியது.  ஆனால் பழங்கள் மேல்பக்கமும் அடிப்பக்கமும் தட்டையாக இருக்கும்.  அதுவும் ஆரஞ்சுதான்.  ஆனால் வாயில் வைத்தால் உடல் நடுங்கும்படியான புளிப்பு. 

ஐஸ் போட்டால் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாறும் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையும் போட்டுவிட்டால் ஜூஸ் அற்புதமாய் இருக்கும்.  இந்த மரம் ஐந்தாறு ஆண்டுகளில் 5 அடிக்குமேல் வளராமல் நின்று எக்கச்சக்கமாகக் காய்த்தது.  யார் ண் பட்டதோ கொஞ்ச நாளில் அடித் தூரோடு காய்ந்துவிட்டது.

இந்த நாரத்தை வகை மரங்களே இப்படித்தான், எப்போது காயும் எப்போது காயாது என்று சொல்ல முடியாது. சொல்லாமல் கொள்ளாமல் அடி முதல் நுனிவரை காய்ந்து போகும். கிண்டி கிளறிப் பார்த்தால் ஏதாவது ஒரு வைரஸ் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கும்.

உலகின் முக்கிய ஆரஞ்சு வகைகள்

உலக மெங்கும் சாகுபடி செய்யும் முக்கியமான பத்து ஆரஞ்சு வகைகள் மோரே பிளட் ஆரஞ்சு வகையும் ஒன்று. அந்த பத்து ஆரஞ்சு வகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.  வேலன்சியா, மாண்டரின்,  நேவல்ஆரஞ்சு, பிளட்ஆரஞ்சு, சத்சுமாஆரஞ்சு, செவிலிஆரஞ்சு, கிளிமென்டைன் ஆரஞ்சு, ஹேம்லின்ஆரஞ்சு,  பைன்ஆப்பிள் ஆரஞ்சு, மற்றும் ஜாஃபா ஆரஞ்சு (VALENCIA, MANDARIN, NAVEL ORANGE, BLOOD ORANGE, SATSUMA ORANGE, SEVELLE ORANGE, CLEMENTINE ORANCE, HAMLIN ORANGE, PINEAPPLE ORANGE & JAFFA ORANGE)

பிளட் ரெட் ஆரஞ்சு வகை

ஆரஞ்சு பழங்களின் மேல் தோல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.  சில வகை பசுமையாக்கூட இருக்கின்றன.  ஆனால் பெரும்பாலும் ஆரஞ்சுதான்.  தோல் சிலவற்றில் மெல்லியதாக இருக்கும்.  சிலவற்றில் அது டிமனாக இருக்கும். சில வகைகளில் பழத்துடன் தோல் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்கும். 

சிலவற்றில் சுலபமாய் உறிக்கலாம்.  கமலா ஆரஞ்சு வகைகளில் சொல்லவே வேண்டாம்.  பழங்களின் சுளைகள் பெரும்பாலும் மஞ்சளாக, அடர்த்தியான மஞ்சளாக, இளமஞ்சளாக, லேசாக சிவந்தமாதிரியும் இருக்கும். 

இது ரகங்களுக்கு எற்ற மாதிரி வேறுபடும்.  ஆனால் பிளட் ஆரஞ்சு வகையில் பிஞ்சுகளும், காய்களும் பசுமையாகவும், தோல் ஆரஞ்சு நிறமாகவும், சுளைகள் மட்டும் ரத்தச் சிவப்பில் சிலவற்றில் ஊதா நிறம் கலந்தும், சில கருஞ்சிவப்பு எனவும், பலவகையாக இருக்கும்.

இயற்கையாக உருவான ரகம்  

அமெரிக்காவில் டெக்சஸ் மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் ரத்தச் சிவப்பு ஆரஞ்சு வகைகளைப் பயிர் செய்கிறார்கள். இதன் பூர்வீகம் தெற்குதீவு மெடிட்டரேனியன் பகுதியின் (SOUTHERN MEDITARANEAN AREA) சிசிலி இயற்கையான சடுதி மாற்றத்தால் (NATURAL MUTATION) உருவான ரகம் இது.

ஒட்டு ரகமும் கூட (HYBRID) இந்தாலியின் டொரோகோ ஆரஞ்சு (TOROCCO ORANGE) ரகமும் ஸ்பெயின்ன் சேன்குய்நெல்லோ ஆரஞ்சு (SANGUINELLO  ORANGE) ரகமும் சேர உருவான ரகம் இது. பழத்தின் சுளைகளின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் இதில் இருக்கும் அதிகப்படியான அந்தோசயனின் எனும் நிறமிகள் (ANTHOCYANINS).

இந்த ஆந்தோசயனின் இதர பழவகை மற்றும் பூக்களில் இருக்கும்.  பொதுவாக நராரத்தைகளில் இது இருக்காது.  ஆரஞ்சு வகைகளில் இதில்தான் அதிகமான விட்டமின் சி உள்ளது.  ஆன்டி ஆக்சி டெண்ட்களும் அபரிதமாக உள்ளது.   

மெடிட்டரேனியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவுதான் சிசிலி.  இத்தாலி நாட்டின் தனி அதிகாரம் பெற்ற ஒரு பகுதி (AUTONOMOS REGION) சிசிலி.  ஐரோப்பாவில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் மிகவும் உயரமான எரிமலையின் பெயர்.  மவுண்ட் எட்னாஅது இங்குதான் உள்ளது.

ஆரஞ்சு அதிகம் உற்பத்தி செய்யும் நாடு பிரேசில்.     உலகில் ஆரஞ்சு அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள், பிரேசில், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா,.  ஆரஞ்சு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில், இரண்டாம் இடத்தில் இருப்பது அமெரிக்கா. மூன்றாவது இடத்தில் இருப்பது  சைனா. 

நாம்  நான்காம் இடத்தில் இருக்கிறோம்.  இந்தியாவின் பிரபலமான ஆரஞ்சு ரகம் நாக்பூர் ஆரஞ்சு.  இந்தியாவின் ஆரஞ்சு நகரம் (ORANGE CITY OF INDIA) நாக்பூர்.  அமெரிக்காவின் ஆரஞ்சு மாநிலங்கள்

ஆரஞ்சு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஆரஞ்சு நகரங்கள் என்பவை கலிபோர்னியா, புளோரிடா மற்றும் அரிசோனா.  ஆனால் மோரோபிளட் ஆரஞ்சு ரகங்கள் இத்தாலி நாட்டில்தான் வியாபார ரீதியில் பயிர் செய்கிறார்கள்.  அதற்கு அடுத்ததாகச் செய்யும் இடங்கள் கலிபோர்னியா மற்றும் டெக்சஸ்.

மோரோ பிளட் என்ற பெயர்

இந்த மெடிட்ரரேனியன் பகுதி எட்டாம் நூற்றாண்டில் மூர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.  அந்த ஆதிக்கம்தான் அந்த பெயர்தான் இன்று பிளட் ஆரஞ்சு ரகத்திற்கும் நீண்டுள்ளது.

 “மோரோ ஆரஞ்சு சுவை எப்படி இருக்கும்?

பழத்தின் இனிப்பு பிரமாதமாக இருக்கும். அதை விட மம் வித்தியாசமாக இருக்கும்.  ஆரஞ்சு வாசனை கமகமக்கும்.  அத்தோடு ரேஷ்ப் பெரியின் வாசனையும் சேர்ந்து வீசும்.  சாதாரணமாக ஆரஞ்சு சாற்றில் ஒரு சிறு கசப்பு இருக்கும்.  அந்த கசப்பு இந்த ரகத்தில் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். 

இன்னொன்று இதில் ஆந்தோசயனின் அதிகம் இருப்பதால், ஆன்டி ஆக்சிடெண்ட்டும் அதிகம் இருக்கும்.  சிவப்பு நிறம் இருக்கும் பழங்கள் மற்றும் காற்கறிகளில் இந்த ஆந்தோசயனின் கண்டிப்பாய்.  இருக்கும்.  உதாரணம் கத்தரிக்காய் மற்றும் சிவப்பு முட்டைக்கோசு.  இது தவிர மோரோ வில் போலேட், கால்சியம் மற்றும் தயமின் (FOLATE, CALCIUM, & THIAMIN) ஆகிய தாது உப்புக்களும் இதில் அதிகம் உள்ளது.   

சிவப்புக்குக் கிடைக்கும் மவுசு

சிவப்பாய் இருப்பதால் மார்கெட்டில் மோரோபிளட் ஆரஞ்சுக்கு நல்ல விலை கிடைக்கிறது.  மாம்பழங்கள்.  பப்பாளி பழங்கள் சிவப்பாய் இருந்தால் நல்ல விலைக்குப் போகிறது.  கொய்யாவில் கூட செந்தசைக் கொய்யாவுக்கு மவுசு அதிகம்.  அவ்வளவு ஏன் ? சிவப்பாய் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட கல்யாண மார்கெட்டில் மவுசு அதிகம் ! அது போலத்தான் மோரோபிளட் ஆரஞ்சும் !

REFERENCES:

WWW.SPECIALTYPRODUCE.COM/MORO BLOOD ORANGES

WWW.EN.M.WIKIPEDIA.ORG “MORO BLOOD ORANGE

WWW.CHRUSIARIETY.UCR.EDU/ MORO BLOOD ORANGE

WWW.THE INDIANVEGAN. BLIGSPOT.COM/ THE EARTH OF INDIA –ALL ABOUT ORANGES IN INDIA.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

        

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...