கடுமையான
பாலவனப் பயணம்
முழுமையாக
மூன்று நாட்கள் நான் மொஜாவ்
பாலைவனத்தில் பயணம் செய்தோம். அது மிகவும்,
கடுமையானதாக இருந்தது. “கையில்
தண்ணீர் இல்லாமல் பயணம் செய்யாதீர்கள்”. “பதினோரு
மணி முதல் மூன்று மணிவரை பயணம் செய்யாதீர்கள்”: வெய்யிலில் நடந்து
செல்லாதிர்” என்ற
எச்சரிக்கைப் பலகைகள்
சாலை நெடுக வைத்திருந்தார்கள்.
ஒரு லட்சத்து 24 ஆயிரம்
சதுர கிலோமீட்டர் பரந்திருக்கும் பாலைவனம் மொஜாவ். வட அமெரிக்காவின்
நாங்கு பாலைவனங்களில் ஒன்று. இந்த பாலைவனத்தில் ஏழு நாட்கள் நாங்கள்
தங்கி இருந்தோம்.
இந்த கட்டுரையில் இருபது பாலைவன மரங்களை அறிமுகம் செய்துள்ளேன். அந்த சில மரங்கள்பற்றிய சுருக்கமான விபரங்களைத் தந்துள்ளேன்.
ஐந்து மரங்கள்
ஒன்று சாஹில்லா எனும் பழங்குடிகளின் வாழ்வாதாரமாக இருந்த
ஜோஷுவா மரம். இரண்டு
நூறடிக்கும் மேலாக வளரும் பாவாடைப்பனை மரம். நெவாடா மா நிலத்தின்
அரசு மரம் பீனியன் பைன் மரம். மூன்று நாம் சீமைக்கருவை என்றழைக்கும்
மெஸ்கைட் மர்ம். நான்கு ஒரு காலத்தில் வில்அம்பு செய்த கலிஃபோர்னியா
ஜூனிபர் மரம். ஐந்து பழங்குடிகள் கடவுள் பொம்மை செய்யப் பயன்பட்ட
டெசர்ட் வில்லோ மரம். மேலும் சில்லரையாக சில மரங்கள் பற்றியும்
சொல்லி இருக்கிறேன்.
ஆச்சரியப்படும்படியான
ரோடுகள்
மொஜாவ் பாலைவனத்தில் ஆச்சரியப்படும்படியான சாலை வசதி இருந்தது. ஆனால் சாலைகள் மேடும் பள்ளமுமாக இருந்தது. நூற்றுக் கணக்கான அடி உயரத்திலிருந்து “கிடுகிடு” பள்ளத்தில்
இறங்க வேண்டி இருந்தது.
மேட்டில்
ஏறும்போது, ஏதிரே வரும் கார்களைப் பார்ப்பது கடினமாக இருந்தது. என்னுடைய மகன் தகவல் தொழில் நுட்பப் பொறியாளராக
இருந்தாலும் அற்புதமான காரோட்டி.
மணல் பிரதேசத்தில் விரியன் பாம்புகள்
பாலைவனத்தில்
பயணம் செய்யும் போது பார்க்கும்
இடங்கள் (VIEW POINTS) என்று இருக்கும். அங்கிருந்து முக்கியமான சிலவற்றைப் பார்க்க முடியும். அதுபோல
ஒரு வியூ பாய்ண்ட்டில் ஒர் எச்சரிக்கைப் பலகை இருந்தது. அதில் உயிருடன், நம்மை
தாக்கத் தயாராவது
போல ஒரு விரியன் பாம்பின் படம்.
“கண்ணாடிவிரியன்
பாம்புகள் இருக்கும் இடம் ஜாக்கிரதை” என போட்டிருந்தது. அதைப் பார்த்ததும்
என் மனைவி எனக்கு புத்திமதி சொன்னார். “கண்ட
செடியில போய் கையை
வைக்காதிங்க. இலையப் பாக்கறேன் செடியப்
பாக்கறேன்னு”.
விரியன்
பாம்புகள் பற்றி எங்களுக்கு அனுபவும் ஜாஸ்தி. காரணம்
தெக்குப்பட்டு கிராமத்தில்தான் நாங்கள் தங்கி இருக்கிறோம். அங்கு தினம் ஒரு விரியன் பாம்புகள் சிறியதும்
பெரியதுமாக வந்து விசாரித்துவிட்டுப் போகும்.
விரியன் பாம்புகளின்
விஷம் ரொம்பவும் வீரியமானது
நல்ல பாம்பின் விஷத்தைவிட அது 20 மடங்கு வீரியமான விஷம் கொண்டவை. “விதி முடிந்தால்தான் விரியன் கடிக்கும்”
என்பது
மொஜாவ் பாலைவன அடையாளம்
மொஜாவ் பாலைவனத்தில் முக்கியமான ஏழு மரங்களில் மிக முக்கியமான மரம் ஜோஷுவா மரம்.
இந்த மரம் மொஜாவ்
பாலைவனத்தின் அடையாளமும்
கூட. இந்த ஏழில் இரண்டு மரங்கள் பற்றி
நான் ஏற்கனவே எழுதி உள்ளேன். ஆனாலும்
சுருக்கமாக இந்த ஐந்து மரங்கள்
பற்றிப் பார்க்கலாம்.
1 ஜோஷுவா மரம் (JOSHUVA
TREE)
ஜோஷுவா மரம் |
இந்த
மரத்தின் தாவரவியல் பெயர் யூக்கா பிரேவிபோலியா (YUCCA
BREVEFOLIA). வட அமெரிக்காவில் கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, ஊட்டா
ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும்தான் இந்த மரங்கள் இருக்கின்றன. அதுவும் மொஜாவ் பாலைவனத்தில் மட்டும் இருக்கும் மரம். சாஹில்லா (CAHUILLA – AMERICAN NATIVES)
என்னும் அமெரிக்க பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மரம். சராசரியாக 50 அடி
உயரம் வளரும். இதன் வயது சுமார் 100
ஆண்டுகள்.
2. கலிபோர்னியா விசிறிப்பனை (CALIFORNIA FAN PALM)
இதற்கு
பாவாடைப் பனை என்னும் பெயரும்
உண்டு. இதன் தாவரவியல் பெயர் வாஷிங்டோனியா ஃபிலிபெரா (WASHINGTONIA
FILIFERA). பாலைவனங்களில் உள்ள ஒயாசிஸ் (OASIS)
என்னும் சோலைகளில் இந்த மரங்கள் வளர்ந்துள்ளன.
நூறு அடி உயரம்வரை வளரும் இந்த மரங்களின் வயது 250
ஆண்டுகள்.
3. பீனியன்
பைன் மரங்கள் (PINYON
PINE TREES)
இந்த
மரத்தின் தாவரவியல் பெயர் பைனஸ் எடுலிஸ் (PINUS
EDULIS). இதன் கொட்டைகள் அமெரிக்கப் பழங்குடி மக்களின் உணவாக இருந்தது.
இன்றும் கூட மெடிட்டரேனியன்
பகுதி சமையலில் ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. இந்த பீனியன்பைன்
மரத்தின் கொட்டைகள்.
இதன்
மரங்கள் பல நூறு ஆண்டுகளாக
வீடுகள் கட்ட மற்றும் விறகாகவும்
பயன்படுத்தி வந்துள்ளார்கள். பீனியன்
கொட்டைகளில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, தையமின், ரைபோபிளேவின்,
நயாசின் ஆகியவையும் கணிசமாக உள்ளது என்று சொல்லுகிறார்கள். நியூ மெக்சிகோ, நெவாடா
மாநிலங்கள் பீனியன் பைன் மரத்தை அரசு மரமாகக் கொண்டாடுகிறார்கள்.
4. சீமைக் கருவை மரம் (MESQUITE TREE)
நம்ம
ஊரில் சீமைக் கருவை என்று சொல்லும் மரம்தான்> இங்கு
பாலைவனங்களில் வளரும் “மெஸ்கைட்” என்னும்
மரங்கள். இங்கு இந்த “மெஸ்கைட்” மரவகையில்
மூன்று மரங்கள் உள்ளன. அவை ஹனி மெஸ்கைட், (HONEY
MESQUITE – PROSOPIS GLANDULOSA), ஸ்குரு பீன் மெஸ்கைட் (SCREW BEAN MESQUITE – PROSOPIS
PUBESCENS) மற்றும் வெல்வெட் மெஸ்கைட்(VELVET
MESQUITE - PROSOPIS). இந்த மரங்களோட நெற்றுக்கள்
மற்றும் விதைகள் பழங்குடி மக்களின் வாழ்வாதரமாக இருந்திருக்கு.
இந்த
சீமைக் கருவை மரம் மகோகனி மரத்திற்கு சமமான தரமுடையது. இழைப்பு மற்றும் கடைசல் வேலைகள் செய்ய ஏற்றதாக
இருக்கிறது. உறுதியான, கடினமான
இந்த மரங்களில் எல்லாவிதமான மரச்சாமான்களையும் செய்யலாம்.
இதன்
நெற்றுக்களின் மாவு மெஸ்கைட் மீல் (MESQUITE
MEAL), “நூறு
சதவிகிதம் “ஆர்கானிக்” என்று
விற்பனை செய்கிறார்கள். மெஸ்கைட் மீல்
சாப்பிட்டால் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச்
சத்தினை குறைத்துவிடும் என்கிறார்கள். அர்ஜெண்டினாவில் தயார் செய்யப்படும் ‘மெஸ்கைட்
மீல்” அவுன்ஸ் கணக்கில் அதிக விலையில் விற்பனை
ஆகிறது.
5.கலிபோர்னியா ஜூPனிபர் (CALIFORNIA JUNIPER)
இந்த
மரத்தினை டெசெர்ட்
ஒயிட் செடார் (DESERT
WHITE CEDAR) என்றும் சொல்லுகிறார்கள்.
இதன் தாவரவியப் பெயர் ஜூனிபெரஸ்
கலிபோர்னியா (JUNIPERUS
CALIFORNIA). கலிபோர்னியாவிலிருந்து
நெவாடா மற்றும் அரிசோனா செல்லும் வழியில் குறிப்பாக அரிசோனா செல்லும் வழியில்
குறிப்பாக மலைச் சரிவுகளில் நான் பல மரங்களைப் பார்த்தேன்.
இந்த
மரம், இருந்தால் அந்தப் பகுதியில் ஜோஷ்வா
மரமும் இருக்கும் என்கிறார்கள். இதன்
மரங்கள் நேராக நிமிர்ந்து வளராமல் வளைந்தும்,
நெளிந்தும் புதர்களாகவும் அதிகமான கொடி போன்ற சிம்புகளாகவும், வயதான முதிர்ந்த மரங்கள் நவீன ஒவியங்கள்
போலவும் தோற்றம் தருகின்றன.
மரங்கள்
கிறிஸ்மஸ் மரங்களாகப்
பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கப்
பழங்குடிகள் இதன் பழங்களை சாப்பிடுகிறார்கள். ஒரு காலத்தில் இந்த மரங்களில்
வில் அம்பு போன்ற ஆயுதங்கள் செய்தார்கள். இந்த
மரங்களை பயன்படுத்த 100 முதல் 300 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்.
அந்த
அளவில் நின்று நிதானமாக வளருமாம். சராசரியாக மரங்கள் 3 முதல் 15 அடி வளரும். எவ்வளவு வேகமாக
வளர்ந்தாலும் 40 அடியைத் தாண்டாது. ஒர்
ஆண்டில் நான்கு அங்குலத்திற்கு மேல் வளராது.
வளர்கிற மரங்களை பார்த்தால் யாரோ அதன் தலையைப் பிடித்து திருகி வைத்தைப்போல, யாரோ அதன் கையைப்பிடித்து முறுக்கியதைப்போல, யாரோ அதன் பட்டைகளை உறித்து விட்டதைப்போலத் தென்படும். நாம் இதனை ஜூனிபர் மரங்கள் என்கிறோம். ஆனால் இவற்றை உள்ளூர்வாசிகள் “செடார் மரங்கள்” என்று சொல்லுகிறார்கள்.
6.காட்டன் வுட் (COTTON WOOD)
காட்டன்
வுட் மரத்தின் தாவரவியல் பெயர் பாப்புலஸ் பிரிமான்டில் (POPULUS
FREMONTII). வில்லோ (WILLOW) தாவரவகையைச்
சேர்ந்தது> நல்ல சூழ்நிலையில், நல்ல மண்ணில், நல்ல நீர் வசதியுடன், நல்ல
வெளிச்சத்தின் உதவியுடன் வளர்ந்தால் அதிகபட்சமாக 35 மீட்டர்
உயரம் வரை வளரும்.
ஒடைக்கரைகள்,
ஆற்றங்கரைகள், ஈரச்
செழிப்புடைய நிலங்கள் ஆகியவற்றில் வளரும்.
அமெரிக்காவில், கலிஃபோர்னியா,
நெவாடா, அரிசோனா, நியூமெக்சிகோ பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் இருக்கின்றன.
அமெரிக்காவின்
மேற்குப் பகுதி மற்றும் மெக்சிகோவில் வசித்த பழங்குடி மக்கள்> மரத்தின்
பல பகுதிகளை மருந்தாகவும், மரத்தில் இசைக்கருவிகள், இதர கருவிகள், மற்றும் கூடை முடைய இதனை பயன்படுத்தி உள்ளார்கள். அரிசோனா பகுதியில் வசித்த பழங்குடிகள் இந்த
மரத்தைப் புனிதமான மரமாகக் கருதினர். இதன்
வேர் மரங்களில் கடவுள் பொம்மைகளை செய்தார்கள்.
7. டெசர்ட் வில்லோ (DESERT WILLOW)
இதன்
தாவரவியல் பெயர் சீலோப்சிஸ் லீனியாரிஸ் (CHILOPSIS
LINEARIS):
முப்பது அடி உயரம் வளரும் சிறுமரம், இதன் ஊதா பூக்கள், வெளிர் ஊதா பூக்கள் கவர்ச்சிகர மானவை, இதன் அழகுப் பூக்களால் இவற்றை ஒரு அழகுமரமாகப் பயன்படுத்துகிறார்கள். 1930 ம் ஆண்டில், சிவிலியன் கன்சர்வேஷன்ன் கார்ப்ஸ்” என்னும் திட்டத்தின் மூலம் காற்றரிப்பைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் (SHELTER BEDS) செய்ய இந்த மரத்தைப் பயன்படுத்தினார்கள்.
அமெரிக்காவின்
முன்னாள் அதிபர் பிராங்க்ளின்
டிலானோ ரூஸ்வெல்ட் அறிமுகம் செய்த நீயூடில் (NEW DEAL)
என்றும் திட்டத்தின் பிரதான அங்கமாக செயல்பட்ட இளைஞர்களின் படைதான்” சிவிலியன்
கர்சர்வேஷன் கார்ப்ஸ் (CIVILIAN CONSERVATION CORPS) என்பது.
இது இளைஞர்களின் படை அல்லது இளைஞர்களின் ராணுவம் என்பது முழுக்க முழுக்க, இயற்கை
வளங்களை பாதுகாப்பதற்காக
அமைக்கப்பட்டது.
இதர பாலைவன மரவகைகள்
கீழ்கண்ட
மரவகைகளும் மொஜாவ் பாலைவனத்திற்கு உரிய
மரங்கள். ஆனால் குறைவான முக்கியத்துவம் உடையவை.
1. புளூ பேலோ வர்டி – செர்சிடியம்
புளோரிடம் (BLUE PALO VERDE - CERCIDIUM FLORIDUM)
2.டெசர்ட் அயன்வுட் - ஆல்நேயா டெசோட்டா (DESERT IRON WOOD – OL NEYA TESOTA)
3.கேட்கிளா அகேசியா – அகேசியா கிரெக்கி (CAT
CLAW – ACACIA GREGGI)
4.ஸ்மோக்ட்ரி
– டேலியா
ஸ்பினோசா (SMOKE
TREE – DALEA SPINOSA)
5.மெஸ்கைட் - புரசாபிஸ் ஸ்பீசிஸ் (MESQUITE TREE - PROSOPIS
SPECIESPP)
6.டெசர்ட் புரும் - பேச்சாரிஸ் சரோத்ராய்டஸ் (DESERT
BROOM - BOCCHARIS SAROTHROILDES)
7.நேட்லீப்
ஹேக்பெரி – செல்டிஸ்
ரெடிகுலேட்டா (NETLEAF HACK-BERRY – CELTIS
RETICULATA)
8.லிட்டில் லீஃப் சுமேக்
- ரூஸ் மைக்ரேபில்லா (LITTLE LEAF SUMAC - RHUS
MICROPHYLLA)
9.அரிசோனா வால்நட் ஜPக்லன்ஸ் மேஐர் (ARIZONA WALNUT – JUGLANS MAJOR)
10.வெல்வெட்
ஆஷ்; - ஃபிராசினஸ் வெலூட்டினா (VELVET ASH – FRAZINUS VELUTINA)
11.ஸ்பிலிட் லீஃப் பிரிக்கெல்புஷ் – பிரிக்கெல்லியா
லேசினியேட்டா (SPIT
LEAF BRICKEL BUSH – BRICKELLIA LACINIATA)
12.அரிசோனா காட்டன் டாப் கிராஸ் - டிஜிpட்டேரியா கலிபோர்னிகா (COTTON
TOP GRASS –DIGITARIA CALIFORNICA)
13.சவுத்
வெஸ்டர்ன் கண்டேலியா –
கண்டேலியா லைகாய்டஸ் (SOUTH WESTERN CONDELIA – CONDALLA
LYCOIDES)
மொஜாவ் பாலைவனம் (MOJAVE DESERT)
நான்
முதன் முதலாக பார்த்த பாலைவனம் இது. ஒரு
பாலைவனம் எப்படி இருக்கும் ? எந்த
அளவு விரிந்து பரந்திருக்கும். அதன்
நிலப்பரப்பு எப்படி இருக்கும்? அதில் எப்படிப்பட்ட மண்வகை இருக்கும் ? எப்படிப்பட்ட
மரங்கள் இருக்கும்? எப்படிப்பட்ட புதர் செடிகள் இருக்கும் ? எப்படிப்பட்ட
புற்கள் இருக்கும்? கற்கள் இருக்கும் ? காலை,
மாலை, நடுப்பகல், இரவு எப்படி இருக்கும் ?
இங்கு வீசும் காற்று, காயும் வெய்யில் - இவற்றை எல்லாம் எனக்கு சொல்லித் தந்தது மொஜாவ் பாலைவனம்.
வட
அமெரிக்காவின் மிகவும் வறண்ட பாலைவனம்
வட
அமெரிக்காவின் மிகுந்த வறட்சியான பாலைவனங்களி;ல் ஒன்று இது. நான்கு பெரிய
பாலைவனங்கள் இருக்கு இங்கு. கிரேட் பேசின்
பாலைவனம், மொஜாவ்
பாலைவனம்> சிகுகுவான் பாலைவனம், சொனோரான் பாலைவனம் (GREAT
BASIN, MOJAVE, SONORON DESERTS )- இந்த
நான்கு பாலைவனங்கள்தான் முக்கியமான பாலைவனங்கள்.
இதில் மிகப் பெரிய பாலைவனம், கிரேட் பேசின் டெசெர்ட்.
மொஜாவ் பாலைவனத்தின் பரப்பு எவ்வளவு தெரியுங்களா ?
ஒரு சதுர கி.மீ இரண்டு கிலோமீட்டர் இல்லை. ஒரு லட்சத்து 24 ஆயிரம்
சதுர கிலோ மீட்டர் - யோசித்துப் பாருங்கள்.
அதற்குப் பிறகுதான்
நான் யோசித்தேன்.
“வட
அமெரிக்காவில் எவ்வளவு பரப்பில் பாலைவனங்கள் இருக்கிறது ?
இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. தோராயமாக வட அமெரிக்காவில் 40 சதவிகித
நிலப்பரப்பில் இருக்கின்றன பாலைவனங்கள்.
இந்த மொஜாவ் பாலைவனத்தின்
பெரும்பகுதி கலிபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களில் பரவியுள்ளது. ஒரு சிறுபரப்பு அரிசோனா மற்றும் ஊட்டா மாநிலங்களிலும்
பரவியுள்ளது.
FOR
FURTHER READING
WWW.MOJAVEDESERT.NET “MOJAVE DESERT TREES”
WWW.DESERTUSA.COM / “PINYON PINE TREES”
WWW.MOJAVEDESERT.NET/”CALIFORNIA JUNIPOR”
WWW.EN.WIKIPEDIA.ORG/”POPULUS FREMONTI” (1191)
A
REQUEST
I LOVE TO SEE
YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment