Wednesday, June 21, 2023

AMERICAN MAGNOLIA TREE 79. மணிப்பூரில் ஊத்தாம்பல் அமெரிக்கவில் மக்னோலியா

 

மக்னோலியா எனும்
ஊத்தாம்பல்

அமெரிக்காவின் டல்லஸ் நகரில், பொர்ட்வொர்த் (PORTWORTH) என்னும் பகுதியில் அற்புதமான ஒரு தாவரவியல் பூங்காவில், ஜானு பாகுவான இரண்டு மக்னோலியா மரங்களைப் பார்த்தேன்.  இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த மரங்கள் காணப்படுகின்றன,  குறீப்பாக மணிப்பூர் மாநிலத்தில் அதிகம் காணப்படுகின்றன,  மணிப்பூரில் இதன் பெயர் ஊத்தாம்பல், வெள்ளைக் கமலம் போல இதன் பூக்கள் மதிக்கப்படுவதால், மணிப்பூர் மக்கள் இதனை கோயில்களில் பூஜைக்குப் பயன்படுத்துகிறார்கள், வட அமெரிக்காவில் மூன்றுவகை மக்னோலியா புழக்கத்தில் உள்ளன, இந்த மூன்று மரவகைகளும் வணிகரீதியில் முக்கியமானவை. மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலும் அழகு மரங்களாக வளர்க்கப்படுகின்றன.

தமிழ்ப்பெயர்: மக்னோலியா (MAGNOLIA)

பொதுப் பெயர்கள்: எவர் கிரீன் மக்னோலியா, சதர்ன் மக்னோலியா, பிக் வாரெல், புல் பே, வார்; பிளவர்டு மக்னோலியா (EVER GREEN MAGNOLIA, SOUTHERN MAGNOLIA, BIG LAUREL, FULL BAY, LARGE FLOWERED MAGNOLIA)

தாவரவியல் பெயர்: மக்னோலியா கிராண்டிபுளோரா (MAGNOLIA GRANDIFLORA)

தாவரக்குடும்பம் பெயர்: மேக்னோலியேசி (MAGNOLIACEAE)

தாயகம்: வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதி

மக்னோலியா மரத்தின் பிறமொழிப்பெயர்கள்

அசாமிஸ் - டூலி சம்பா (DULEE CHAMPA)

இந்தி: ஹிம் சம்பா (HIM CHAMPA)

கன்னடா: தொட்டா பில்லி சம்பகி (DODA BILLI SAMPAGE)

மராத்தி: கவட்டி சாபோ (KAVATI  CHAFO)

மிசிசிப்பி,  மற்றும் லூசியானாவின் அரசு மரங்கள்    

வட அமெரிக்காவில் டெக்ஸ், புளோரிடா,  கரோலினா ஆகிமாநிலங்களைச் சொந்த மண்ணாகக் கொண்டது,  பெரிய மரம்,  90 அடி உயரம் வரை வளரும்> ஒரு அடிவரை விட்டம் உடைய பெரிய பூக்களாகப் பூக்கும்.

வணிகரீதியில் பயன்படுத்தும் அளவுக்கு உறுதியான> கடினமாக> உபயோகமான மரங்களைத் தரும், உலகம் முழுவதும் மித வெப்பமான பகுதிகளில் பரவியுள்ள மரம்.  இந்த மேக்னோலியா, மிசிசிப்பி> மற்றும் லூசியானாவின் அரசு மரம்> என்னும் பெருமைக்கு உரியது. 

கவர்ச்சிகரமான பசுமையான பளபளப்பான இலைகள் மற்றும் வாசனை உடைய மிகப் பெரிய கண்ணைக் கவரும் இதன் பூக்களுக்காகவும் இந்த மரங்களை வட அமெரிக்காவின் பல மாநிலங்களில் வளர்க்கிறார்கள்.

மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலும் மேக்னோலியா மரங்கள் அழகு மரங்களாக வளர்க்கப்படுகின்றன.  குறிப்பாக கடலோரங்களில், அலைகள் வீசும் மண்பரப்பில் கூட நடுவதற்காக இந்த மரங்களை சிபாரிசு செய்கிறார்கள்.  ஒரளவு வளர்ந்த மரங்கள்,  சுமராக வட்சியைத் தாங்கும் தன்மை உடையன.

மூன்றுவகை மக்னோலியா மரங்கள்

வட அமெரிக்காவில் மூன்றுவகை மக்னோலியா மரங்கள் புழக்கத்தில் உள்ளன.  அவை சதர்ன் மக்னோலியா எனும் மக்னோலியா கிராண்டிபுளோரா (MAGNOLIA GRANDIFLORA) ஸ்வீட்பே எனும் மக்னோலியா விர்ஜீனியானா (MAGNOLIA VIRGINIANA) மற்றும் குகூம்பர் ட்ரீ எனும் மக்னோலியா அக்யூமினேட்டா (MAGNOLIA ACUMINATA).  இந்த மூன்று மரவகைகளும் வணிகரீதியில் முக்கியமானவை.

இந்தியாவில் மக்னோலியா மரங்கள்

இந்தியாவில் பல மாநிலங்களில் பல இடங்களில் பூங்காக்கள்> பெருந்தோட்டங்களில் மக்னோலியா மரங்கள் காணப்படுகின்றன.  மணிப்பூர் மாநிலத்தில் அதிகம் காணப்படுகின்றன.  மணிப்பூரில் ஊத்தாம்பல் (OOTTAMBAL) என்று அழைக்கிறார்கள். 

ஊத்தாம்பல் என்றால் மரத்தாமரை (TREE LOTUS) என்று பொருள்.  ஹிம் சம்பா (HIM CHAMPA) என்பது ஹிந்தியில் மக்னோலியா, தமிழ்நாட்டில் அநேகமாய் ஊட்டி கொடைக்கானலில் இந்த மரங்கள் இருக்க வாய்ப்பு உண்டு.  வெள்ளைக் கமலம் போல இதன் பூக்கள் மதிக்கப்படுவதால்,  மணிப்பூர் மக்கள் இதனை கோயில்களில் பூஜைக்குப் பயன்படுத்துகிறார்கள்.

கவர்ச்சிகரமான இலைகள்

பெரிய, அகன்ற, நீளமான, இலைகள் இந்த மரங்களுக்குக் கூடுதல் அழகு தரும் அம்சம்.  மெத்து மெத்தென்று தோல்போல மெழுகுக் கோட்டிங் கொடுத்ததுபோல, அடர் பசுமை நிறத்தில்,  கொஞ்சம் மஞ்சள்,  ஆரஞ்சு,  மற்றும் சிவப்பு நிறம் கலந்தது மாதிரியான இலைகள். 

வரும் 365 நாளும் இலை உதிர்ந்து மீண்டும் துளிர்க்கும்> எப்போதும் கொப்பும் குலையுமாய் காட்சி தரும் மரம்.  மரத்தடியில் மருந்துக்குக் கூட ஒரு புல்லைக்கூட வளர விடாதுகாரணம் மரத்தின் அடிப்பகுதி எப்போதும் உதிரும் இலைகளால் மூடப்பட்டு இருக்கும்.      

ல்லஸ் நகரில், பொர்ட்வொர்த் என்னும் பகுதியில் அற்புதமான ஒரு தாவரவியல் பூங்காவில், ஜானு பாகுவான இரண்டு மக்னோலியா மரங்களைப் பார்த்தேன்.  அந்த இரண்டு மரங்களே ஒரு சிறுவனம்போல காட்சி தந்தது.

மக்னோலியா பூக்கள்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள் என்று சரஸ்வதிப்பாட்டு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்ததுதான் என் நினைவுக்கு வந்தது, மக்னோலியா பூக்களைப் பார்த்தபோது.  டல்ஸ், அடிசன், பிளானோ, போர்ட்வொர்த் ஆகிய நகரங்களில் எல்லாம் மக்னோலியா மரங்களை பார்க்க முடிந்தது.  பூக்கும் சமயங்களில் மரத்தைச் சுற்றிலும் அதிஅற்புதமான வாசம் வீசும்.  மே மாதம் முதல் அக்டோபர் வரையான மாதங்களில் பூத்து காய்க்கும்.

மணிப்புரி: ஊத்தாம்பல்

இந்தியாவில் அருணாச்சலப்பிரதேஷ், பீஹார், ஜார்கெண்ட், கர்நாடகா, மத்தியிப்பிரதேசம்,  மகாராஷ்ட்ரா,  மேகாலயா, மிசோரம்,  தமிழ்நாடு,  திரிபுரா, உத்தரப்பிரதேசம், உக்ரகாண்ட், மற்றும் வெஸ்ட்பெங்கால் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது இந்த மக்னோலியா மரங்கள்.

கிளைத்துண்டுகளை நடலாம்.

முழுக்கவும் முதிராத கிளைகளை  4 முதல் 6 அங்குலத் துண்டுகளாக நறுக்கி அவற்றை நட்டு புதிய மக்னோலியா கன்றுகளை உருவாக்கலாம்.

FOR FURTHER EADING

WWW.EN.M.WIKIPEDIA.ORG  / MAGNOLIA GRANDIFLORA

WWW.FLOWERSOFINDIA.NET  / MAGNOLIA GRANDIFLORA

WWW.DISCOVERLIFE.ORG  / MAGNOLIA GRANDIFLORA

WWW.PLANTS.CES.NESU.EDU  / MAGNOLIA GRANDIFLORA – NORTH CAROLINA XTENSION GARDNER

WWW.THESPRUCE.COM  / MAGNOLIA GRANDIFLORA (SOUTHERN MAGNOLIA TREES)

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

             

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...