ஈஸ்டன் ரெட் செடார் கிறிஸ்த்மஸ் மரம் |
ஈஸ்டன் ரெட் செடார், 975 ஆண்டுகள் வயதுடைய மரம், பழங்குடி மக்களுக்கு வில் - அம்புகள் செய்து பயன்படுத்த யுத்தகளத்தில் மொத்த குத்தகையாய் இருந்த மரம், வட அமெரிக்காவில் மிசௌரி, ஒக்கலஹாமா, அர்க்கன்சாஸ் ஆகிய இடங்களில் கிறிஸ்மஸ் மரமாகப் பயன்படுத்தும் மரம், இந்த மர எண்ணெய் உடல் உபாதைகளை குணப்படுத்த உதவும்.
தமிழ்ப்பெயர்:ஈஸ்டெர்ன் ரெட் செடார் (EASTERN
RED CEDAR)
பொதுப்
பெயர்கள்: ரெட் செடார், ஈஸ்டெர்ன் ரெட் செடார், விர்ஜீனியன் ஜூனிபர்,
ஈஸ்டர்ன் ஜூனிபர்,
ரெட் ஜூனிபர்,
பென்சில் செடார், அரோமேடிக் செடார் (RED
CEDAR, EASTERN RED CEDAR, VIRGINIAN JUNIPER, EASTERH JUNIPER, RED JUNIPER,
PENCIL CEDAR, AROMATIC CEDAR)
தாவரவியல்
பெயர்: ஜூனிபெரஸ்
விர்ஜீனியானா (JUNIPERUS
VIRGINIANA)
தாவரக்குடும்பவம்
பெயர்: குப்ரசேசி (CUPPERASACEAE)
தாயகம்:
வட அமெரிக்கா
வில் -
அம்புகள் செய்த மரம்
ஈஸ்டெர்ன்
ரெட் செடார், ஒரு பசுமை மாறாத ஊசியிலை மரம்.
அதிகபட்சமாக இவை வளரும் உயரம் 89 அடி.
அதிகபட்சமாக, 975
ஆண்டுகள் வயதுடைய மரம். ஆண்பெண்
மரங்கள் தனித்தனியானவை. பழங்குடி மக்களுக்கு வில் - அம்புகள் செய்து பயன்படுத்த யுத்தகளத்தில் மொத்த குத்தகையாய் இருந்த மரம்.
அழகிய
ஊதா நிறம் மூதல் செங்காவி நிறமுடைய இதன் வயிரப் பகுதி மரங்களை (HEAART WOOD TIMBER)
பென்சில் உட்பட பல்வேறு மரச்சாமான்கள் செய்ய பயன்பட்ட மரம். இதன் கட்டைகள், குச்சிகள்
மற்றும் ஒருவகை எண்ணெயை (JUNIPER
OIL) வடித்து எடுக்கிறார்கள்.
இந்த எண்ணெய் பல்வேறு
உடல் உபாதைகளைப் போக்க பயன்படுகிறது.
சுற்றுச் சூழலுக்கு நட்பான மரம்.
வட
அமெரிக்காவில் மிசௌரி, ஒக்கலஹாமா, அர்க்கன்சாஸ் ஆகிய இடங்களில் கிறிஸ்மஸ் மரமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
இந்த
மரங்கள், வறட்சியைத் தாங்கும், வறண்ட மண்ணில் கூட வளரும், ஆழம் குறைந்த பாறைகள் நிறைந்த மண்ணில்
வளரும். மண் அரிமானத்தைத் தடுக்கும்,
காற்றில் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்தும். சுற்றுச் சூழலுக்கு மிகுந்த நட்பாக இருக்கும் மரம்.
செடார்
மரங்களின் மரஎண்ணெய்
இந்த
மரங்களிலிருந்து எடுக்கும் மர எண்ணெய் (CEDAR WOOD ESSENTIAL OIL)
பலவிதமாக உபயோகமாகிறது. பல்வேறுவிதமான
உடல் உபாதைகளை குணப்படுத்த இதனைப்
பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக மூட்டுவலி,
நுரையீரல் சம்மந்தமான நோய்கள், இருமல்,
தலைப் பொடுகு, சொறி சிரங்கு, தோலில் ஏற்படும் புண்கள், அனைத்தையும்
குணப்படுத்த மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
செடார்
மரங்களின் மரஎண்ணெய் பல மரங்களிலிருந்து எடுத்து வாசனைத்திரவிய தொழில்களில் (PERFUMARY INDUSTRY) பயன்படுத்துகிறார்கள். இந்த மரஎண்ணெய்களைப் பயன்படுத்தி, சோப்புகள்,
ஷாம்புகள், ஆப்டர் ஷேவ் லோஷன்கள்,
ஆண்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் (MENS FRAGRANCES),
நாற்றம் நீக்கிகள் (DEODORANTS),
ஏர் பிரெஷ்னர்ஸ்,
தரை சுத்தப்படுத்திகள் (FLOOR
POLISHERS), கிருமி நாசினிகள்
(DESINFECTANTS),
மற்றும் “சேனிட்டேஷன்”
தொடர்பான உபகரணங்கள், போன்றவை தயாரிக்க இந்த எண்ணெய் பயனாகிறது.
இந்த
ஈஸ்டர்ன் ரெட் செடார் மரத்தின் இலைகள், குச்சிகள் ஆகியவற்றிலிருந்து ‘ஜூனிபர் எண்ணெய்’ எடுக்கிறார்கள். டென்னிசியின்
மத்தியப் பகுதி, வடக்கு அலபாமா மற்றும் கென்டக்கியின்
தென் பகுதிகளில் “இந்த ஜூனிபர்
எண்ணெய்” எடுக்கும் பணி பரவலாக நடைபெற்று வருகிறது. குளிர்ப்
பருவங்களில் இதனைச் செய்கிறார்கள்.
அமெரிக்காவின் வனத்துறை இதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறது.
உண்மையான
செடார் மரம் இல்லை
இவை தவிர
உணவுப் பொருட்கள், குளிர் பானங்களில் மணமூட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள்.
“ஜூனிபர்”
என்றும் தாவரவகை அனைத்தும் ஊசியிலைகளை உடையவை. சுமார் 50 முதல் 67 வகையான
தாவர இனங்கள் இதில் உள்ளன. ஆர்டிக் முதல்
தென் ஆப்ரிக்காவரை, ஐத்ராபாத்,
பாகிஸ்தான் கிழக்கு
முதல் திபேத்தின் கிழக்குப் பகுதிவரை, மத்திய அமெரிக்காவின் மலைப்பகுதிகளில்
இந்தவகை மரங்கள் பரவியுள்ளன. தென்கிழக்கு
திபேத்து மற்றும் வடக்கு இமாலயன்
பகுதியில்தான், இந்த ஜூனியர்
மரவகைகள், மிக உயரமான இடங்களில் வனங்களாகப் பரவியுள்ளன.
இவற்றில்
சில ஜூனிபர் மரங்களுக்குத்தான் ‘செடார்’
என்னும் பொதுப் பெயர்
உண்டு. அவற்றுள் ஒன்றுதான் இந்த ஜூனிபெரஸ் விர்ஜீனியானா
என்னும் ‘ரெட்செடார்’. ஆனால்
இது உண்மையான செடார் மரம் இல்லை எனச் சொல்லுகிறார்கள்.
சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பழங்குடிகள், இந்த
மரங்களை உணவுப்பொருளாக, எரி பொருளாக, உடல் உபாதைகளை சரி செய்வதற்கான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தி
வத்திருக்கிறார்கள்.
சக்கரை
நோய்க்கான மருந்தாக, பெண்களுக்கான கருத்தடைச் சாதனமாக, ஆஸ்துமாவை
குணப்படுத்த, குழந்தைப்பேற்றினை துரிதப்படுத்த, கில்வாதம், வலிப்பு நோய், சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றிற்கெல்லாம் தீர்வாக பாரம்பரியமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
நவஜோ பழங்குடிகளும் செடார் மரங்களும்
நவஜோ பழங்குடிகள் (NAVAJO
– NATIVE AMERICANS) இந்த செடார் மரங்களை
வெகுவாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். நவஜோ பழங்குடி
மக்களின் குடியரசு அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. வட அமெரிக்காவின்
பழங்குடி மக்களில் செரோக்கி இந்தியர்களுக்கு (CHEROKEE INDIANS)
அடுத்தபடியாக குறிப்பிடக் கூடிய இனம் நவஜோ பழங்குடிகள். தற்போதுள்ள
அரிசோனா மற்றும் நியூமெக்சிகோ ஆகிய மாநிலங்களில்
இவர்கள் ஒருகாலத்தில் பரவி
இருந்தார்கள்.
FOR FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG
– “JUNIPERUS VIRGINIANA”
WWW.WILDFLOWER.ORG/
JUNIPERUS VIRGINIANA (EASTERN RED CEDAR) NATIVE PLANTS OF NORTH AMERICA
WWW.WIKIBUGWOOD.ORG/
JUNIPERUS VIRGINIANA
WWW.CONIFERS.ORG / JUNIPERUS VIRGINIANA (EASTERN
RED CEDAR)
WWW.GOBOTANY.NATIVEPLANTTRUST.ORG / JUNIPERUS VIRGINIANA (EASTERN
RED CEDAR)
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS
USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW
MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE
READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE
YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment