அமெரிக்காவின் சக்கரை மரம் பிக் டூத் மேப்பிள் |
பிக்டூத் மேப்பிள் மரம், சிறிய மரம். உதிர்வுக்கு முன்னும் பின்னும் இலைகளின் நிறம் மாற்றும் அழகான மரம்.
மேப்பிள் சக்கரைச் சாறு வடித்து சக்கரை தயாரிக்க உதவும். மான்களால் மேயப்படாதது. டெக்சாஸ் பகுதியில், மரத்தில் சக்கரையா ? என்று நான் பார்த்து கேட்டு வாய் பிளந்த சக்கரை மரம்.
தமிழ்ப்பெயர்: பிக் டூத் மேப்பிள்
(BIG TOOTH MAPLE)
பொதுப் பெயர்கள்: பிக் டூத் மேப்பிள், உவால்டி பிக் டூத் மேப்பிள், சவுத் வெஸ்டர்ன் பிக்டூத் மேப்பிள், கேனியன் மேப்பிள்,
சவுத் வெஸ்டர்ன் பிக் டூத் மேப்பிள், கேனியன்
மேப்பிள், சபினல் மேப்பிள்,
வெஸ்டர்ன் சுகர் மேப்பிள் (BIG TOOTH MAPLE, UVALDE BIG TOOTH
MAPLE, SOUTH WESTERN BIG TOOTH MAPLE,
CANYAN MAPLE, SABINAL MAPLE,
WESTERN SUGAR MAPLE)
தாவரவியல் பெயர்: ஏசர் கிரேண்டிடெண்டேட்டம் (ACER GRANDIDENTATUM)
தாவரக் குடும்பம் பெயர்: எசரேசி (ACERACEAE)
தாயகம்: வட அமெரிக்கா
மேப்பிள் சக்கரை
பிக் டூத் மேப்பிள் ஒரு சிறிய மரம் 10 முதல் 15 அடி உயரம் வரை வளரும் மரம். உதிர்வுக்கு முன் நிறம்மாறும் இலைகளையுடைய
அழகான மரம். மேப்பிள் சக்கரை (MAPLE SUGAR) தயாரிக்க உதவும் மரம். நல்ல
விறகு மரம். மான்களால் மேயப்படாத மரமும் கூட.
இதன் பூக்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக இருக்கும். மார்ச்> ஏப்ரல்> மாதங்களில் பூக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். கொத்துக் கொத்தாக இலைகளோடு தொங்கிக்
கொண்டிருக்கும்.
தங்கநிற இலைகள்
மரங்களில் இலைகள் அடர்த்தியாக> பசுமையாக> பருத்தி இலைகளைப்போல> மூன்று முதல் ஐந்து விரல்களை உடைய உள்ளங்கைகள் போலத் தென்படும். பசிய இலைகள் உதிர்வதற்கு முன்னால் பளிச்சென்ற சிவப்பு> மற்றும் தங்க நிறத்தில் நிறம் மாறும்.
ஏசர் தாவர இனம்
ஏசர் தாவர இனத்தில் சுமார் 128 வகையான தாவரவகைகள் உள்ளன.
இவற்றில் பெரும்பான்மையானவை ஆசியாவைச் சேர்ந்தவை. மீதம் உள்ளவை, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா மற்றும்
வடஅமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.
பரவியிருக்கும் இடங்கள்
வடஅமெரிக்காவில் அரிசோனா, கொலரேடோ, இடாகோ, மோன்டானா, நியூமெச்சிகோ,
நெவாடா, டெக்சாஸ், ஊட்டா, வாஷிங்டன், வியோமிங் ஆகிய மாநிலங்களில் இந்த
மரங்கள் அதிகம் பரவியுள்ளன.
இந்த பிக்டூத்மேப்பிள் மரங்கள், பள்ளத்தாக்குகள், மலையடிவாரங்கள்>
மலைச் சரிவுகள், ஒடைக்கரைகள் ஆகிவற்றில் பரவலாக வளர்ந்திருக்கும்.
மேப்பிள் சுகர்
கடல் மட்டத்திலிருந்து 3000 முதல் 7000 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் பரவியுள்ளன.
மேப்பிள் மரங்களிலிருந்து பெறப்படும் சாற்றிலிருந்து சக்கரை தயார்
செய்கிறார்கள். இதற்கு ‘மேப்பிள் சுகர்’
என்று பெயர்.
மேப்பிள் மரங்களில்> சுகர் மேப்பிள்> ரெட் மேப்பிள், பிளாக் மேப்பிள் சில்வர் மேப்பிள்> பாக்ஸ் எல்டா இப்படி பல வகையான மேப்பிள் மரங்கள் உள்ளன.
கட்டை வேர்களில் சக்கரை
குளிர்ப்பருவங்களில் நன்கு வளர்ந்த மரங்கள், மரக்
கட்டைகளிலும்> வேர்ப்பகுதிகளிலும் ஸ்டார்ச்சை
சேமித்து வைக்கின்றன. இவை சக்கரையாக
மாறுகின்றன.
சாறாக திரவ வடிவத்தில் இருக்கும்.
இதனை மரங்களில் ஒட்டை போட்டு வடித்து எடுக்கலாம். நம்ம உரில் பனை மரங்களில் சாறு வடிப்பதைப்போல மேப்பிள்
மரங்களில் இதன் சாற்றை வடித்து எடுக்கிறார்கள்.
மேப்பிள் சாறு
சேகரிப்பு
இதுபோல மேப்பிள் சேகரிக்கும் பணி அமெரிக்கப் பழங்குடி மக்கள்
காலத்திலிருந்து> வடஅமெரிக்காவில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த மேப்பிள் சாற்றில் குறைந்தபட்சம் இரண்டு சதமாவது> சர்க்கரை இருக்க வேண்டும்.
சைகோமோர், வால்நட், ஹிக்கரி, மற்றும் பிர்ச் மரங்களிலிருந்தும் இதுபோன்ற சாற்றினை இறக்கலாம். ஆனால் மரத்திற்கு மரம் அதன் சுவை வேறுபடும்.
இதுபோல மேப்பிள்
சாற்றினை வடிக்க வேண்டும் என்றால்
குறைந்தபட்சம்> அந்த மரங்கள், 12 அங்குலம் குறுக்களவு கொண்டதாக இருக்க வேண்டும்.
கரும்பு சக்கரைக்கு பதில்
ஆனால் அந்த அளவுள்ள மரமாக வளர குறைந்தது 40 ஆண்டுகள் ஆகுமாம். இதுபோல
மேப்பிள் சாற்றினை சேமிக்க> தாமிரப் பாத்திரம் தவிர வேறு
உலோகங்களில் செய்த பாட்டில் அல்லது வாளிகளைப் பயன்படுத்தலாம்.
பிப்ரவரி> மார்ச் மாதங்களில்> 4 முதல் 6 வாரங்களில் மேப்பிள் சாற்றினை
சேகரிக்கலாம். இந்த சாற்றினை சக்கரைக்குப்
பதிலாகப் பயன்படுத்தலாம்.
அலக்சாண்டர் அறிமுகம் செய்தது
சொல்லப் போனால் மேப்பிள் சக்கரையில் கரும்பு
சக்கரையைவிட அதிக தாது உப்புக்கள் அதிகம் இருக்கின்றன.
கிறிஸ்து ஏசு பிறப்புக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக
இந்தியாவில் புழக்கத்தில் இருந்த கரும்பினை, ஆயிரம் ஆண்டுகளுக்கு
பின் அலக்சாண்டரின் படை வீர்ர்கள் தான் ஐரோப்பாவுக்குப் அறிமுகம் செய்தார்கள்.
மூன்று கேலன் சாறு
ஒரு நாளில் ஒரு மரத்திலிருந்து அதிகபட்சமாக மூன்று கேலன் சாற்றினை
சேகரிக்கலாம்.
ஒராண்டில் ஒரு மரத்திலிருந்து 10 முதல் 20 காலன் வரை மேப்பிள் சாறு வடிக்கலாம். ஒரு காலன் என்பது 3.78541174
லிட்டர், இந்திய கணக்குப்படி.
வடஅமெரிக்காவில் “வெர்மாண்ட்’
மாநிலத்தில்தான் அதிகமான மேப்பிள் சாறு உற்பத்தி செய்கிறார்கள். உலகின் மொத்த உற்பத்தியில் 6 சதம் மேப்பிள் சாறு இங்கு உற்பத்தி ஆகிறது.
பேன்கேக் மற்றும் ஓட்மீல்
பேன்கேக்ஸ்,
வாஃபிள் பிரேன்ச் டோஸ்ட், ஒட்மீல் ஆகியவை
தயாரிக்க இந்த மேப்பிள் சாற்றினைப் பயன்படுத்துகிறார்கள்.
வடஅமெரிக்காவில்,
வெர்மாண்ட் உட்பட நியூயார்த், மெயின், விஸ்கான்சின்,
ஒஹையோ, நியுஹாம்ப்ஷயர், , மிச்சிகன், பெனிசில்வேனியா, மாசாசூசெட்ஸ், கனெக்டிகட் ஆகிய மா நிலங்;களிலும், மேப்பிள் சாறு உற்பத்தி நடைபெறுகிறது.
எந்த இடங்களில் வளரும்?
ஈரக்கசிவுள்ள மண்கண்டம், சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த மண்>
மண்ற்சாரியான மண், மணற்சாரியான
இருமண்பாடான மண், மணல் கலந்த களிமண், போன்ற மண் வகைகளில்
இந்த பிக்டூத் மேப்பிள் மரம் நன்கு வளரும்.
பெரும்பாலும் விதைகள் மூலமாகவே புதிய மரக் கன்றுகளை உருவாக்கலாம்.
கனடாவில்
அதிக உற்பத்தி
இந்த மரங்களுக்கு அதிகமான நீர் தேவையில்லை. சுமாரான பாசனம் அளித்தால் போதுமானது. நல்ல சூரிய வெளிச்சம் தேவை. குளிர் மற்றும் வறட்சியான சூழலையும் தாங்கி
வளரும்.
உலகத்தின் மொத்த ‘மேப்பிள் சிரப்’
உற்பத்தியில் 71 சதம் கனடா உற்பத்தி செய்கிறது.
வீட்டுக்கு ஒரு பிக் டூத் மேப்பிள் வைத்தால்
சக்கரைக்கு ரேஷன் கடைக்கு போய் கால்கடுக்க நிற்க வேண்டாம் பாருங்கள்.
FOR
FURTHER READING
WWW.WILDFLOWER.ORG “BIG TOOTH MAPLE”
WWW.MISSOURIBOTANICALGARDEN.ORG
– “ACER SACCHARUM SUB SP.GRANDIDENDATUM”
WWW.PLANTS.USDA.GOV/CORE/PROFILE-“BIG TOOTH MAPLE”
WWW.SURVIVO
PEDIA.COM –“HOW TO EXTRACT MAPLE SAP FROM MAPLE TREES”
WWW.EN.WIKIPEDIA.ORG”MAPLE SUGAR”
A
REQUEST
I LOVE TO SEE
YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment